தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

+5
கலைநிலா
vinitha
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைவேந்தன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைவேந்தன் Fri Nov 25, 2011 12:38 am

நண்பர்களே...

நான் எழுதப்போகும் முதல் த்ரில்லர் கதை.. கன்னி முயற்சி.. எப்படி என்று தயங்காமல் கூறுங்கள்..!


கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 1


’’ ன்னங்க, நீங்க வெளியில போயிருந்தப்ப மகேந்திரன் வந்து இருந்தான். இன்னும் எத்தனை வருஷத்துக்கு கடனை திருப்பித் தராம இழுத்து அடிப்பார்னு கத்திட்டுப் போறான். ‘’

மனைவி மங்களத்தின் வரவேற்புரையில் மனம் வெறுத்தான் ராகவன். இது ஒன்றும் புதிதில்லை அவனுக்கு. மாதம் நான்கைந்து பேர் வீடு தேடி வந்து கடனைத் திருப்பிக்கேட்டு கத்திவிட்டுப் போவதும் வட்டியை வாங்கிப்போவதும் வழக்கமாகிப்போய் விட்டது.

வெயிலில் அலைந்து திரிந்து ஞாயிற்றுக் கிழமையின் சுகத்தைக் கூட அனுபவிக்க இயலாமல் ஒரு வங்கியின் லோன் மேனேஜரை வீட்டில் சந்தித்துப் பேசிவிட்டு களைத்துப்போய் வந்திருந்தான். எப்படியாவது குறிப்பிட்ட தொகையை லோன் போட்டுத் தருவதாக நம்பிக்கை தெரிவித்து அனுப்பி இருந்தார். உபசாரத்திற்குக் கூட ஒரு காபி குடிக்க விசாரிக்க வில்லை. அதைப் பெரிது படுத்தும் மன நிலையிலும் அவன் இல்லை. ஒருவர் சம்பளத்தில் குடும்பம் ஓட்டும் பலரது நிலைமை இது தான்.

சட்டென்று வங்கிக்கணக்கின் பாஸ்புக் அப்டேட் செய்து வரவேண்டும் என்ற நினைவு வந்தது. வங்கிக்கு திங்கள் விடுமுறை என்பதால் இன்றே சென்று வருவது நல்லது என்று நினைத்தான்.

கழட்டிய சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்ட ராகவன் பேங்க் பாஸ்புக்கை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மூன்றாம் மாடியில் இருந்து கீழிறங்கினான்.மூன்றுமாதக் குடியிருப்பின் மொட்டை மாடிக்குடியிருப்பில் மாத வாடகைக்கு குடியிருக்கும் 35 வயதான ராகவன் பிசிஏ முடித்து ஒரு நல்ல கம்பெனியில் ஓரளவு சம்பளத்தில் வேலையில் இருந்தாலும் அவனது குடும்பப் பொறுப்பின் - இரண்டு தங்கைகள் ஒரு தம்பி இவர்களைக் கரையேற்றும் முயற்சிகளின் - காரணமாக அளவுக்கதிகமாக கடன் வாங்கி இன்று அவஸ்தைப் பட்டுக்கொண்டு இருக்கிறான்.

கீழே பைக் பார்க்கிங் மிகவும் நெரிசலான ஒன்று. சென்னையின் புற நகர்ப்பகுதியில் அமையும் பல அடுக்குமாடிக் கட்டடங்களின் அவதி நிலை போல் தான் இதுவும். பைக்குகள் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொண்டு குறுகலான இடத்தில் ஒழுங்கற்று இருக்கும். இதற்கிடையில் கீழ்த்தளத்தில் கொரியர் மற்றும் ஜெராக்ஸ் கடையின் பழுது பட்ட ஜெராக்ஸ் மெஷின்கள் வேறு தாறுமாறாக போடப்பட்டு பார்க்கிங்குக்கு இருக்கும் குறைந்த இடத்தையும் ஆக்கிரமித்து நின்றன.

தனது பைக்கை எடுக்க முயன்ற போது அது மிகவும் சிக்கலாக மாட்டிக்கொண்டு இருப்பதை அறிந்தான். அடுத்திருந்த ஒரு பைக்கை முக்கி முயன்று ஒதுக்கி கொஞ்சம் இடைவெளி ஏற்படுத்தி தனது பைக்கை எடுகக் முயன்ற போது பழைய ஜெராக்ஸ் மெதின்களுக்கிடையில் சிக்கி இருந்த பழுப்பு நிறக்கவரின் சிதைந்த பகுதி பைக்கின் மட்கார்டில் சிக்கிக்கொண்டு இருந்ததை கவனித்தான். மெல்ல அதை கையால் அசைத்து நீக்க முயன்றபோது அது பழைய கொரியர் ஒன்றின் அழுத்தமான உறையின் ஒரு மூலை சிதைந்து மாட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டான்.

அதை வெளியில் எடுத்து கவரைப் பரிசோதித்த போது அதற்குள் சிடி போன்று கடினமாகத் தென்பட்டது. ஈரத்தில் சிதைந்து கலைந்திருந்த கவரில் இருந்த முகவரியைக் கவனமாக ஊகித்து படிக்க முயன்ற போது முகவரி இவ்வாறு இருந்தது.

க. நீலமேகம் எண் : 3/ 19, தெற்கு வீதி, கும்பகோணம்.

தேதி முதலானவை கலைந்து போயிருந்த நிலையில் மறுபக்கம் பார்த்ததில் பலமுறை டெலிவரி செய்ய முயன்று ‘ டோர் லாக்ட் ‘ முத்திரைகள் பதியப்பட்டு இருந்தன.

கேட்பாரற்று சிதிலமடைந்து விட்ட அந்த பழுப்பு நிற கவரைப்பிரித்துப் பார்த்த போது ஒரு கடிதமும் ஒரு சிடி பிளாஸ்டிக் பாக்ஸுடன் இருந்தது தெரிந்தது.

கடிதத்தைப் பிரித்து பார்த்த போது அது மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்ககத்திலிருந்து அனுப்பப் பட்ட கடிதமென்றும் ‘’ மாற்றுத்திறனாளிகள் - மறுவாழ்வு முறைகள் ‘’ என்னும் தலைப்பிலான ஒரு சிடி அத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதாக அரசாங்க விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி அரசாங்க எந்திர வார்த்தைகளுடன் எழுதப்பட்டு இருந்தது.

ராகவனுக்கு அதில் ஏதோ வினோதம் தட்டுப்பட்டது. என்னதான் இருக்கும் அந்த சிடியில் என்ற ஆர்வம் அவனுக்குள் எழுந்தது விதியின் வினோத விளையாட்டாகத்தான் இருந்திருக்க வேண்டும்.


துடிப்புகள்... தொடரும்..!


Last edited by கலைவேந்தன் on Sun Jul 22, 2012 1:24 am; edited 15 times in total
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 25, 2011 11:06 am

நல்லா இருக்கு கதை தொடருங்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைவேந்தன் Fri Nov 25, 2011 12:17 pm

நன்றி யூஜின்.. தினம் ஒரு அத்தியாயமாக தொடர்வேன். இன்றிரவு அடுத்த அத்தியாயம்.. சரியா..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 25, 2011 12:18 pm

கலைவேந்தன் wrote:நன்றி யூஜின்.. தினம் ஒரு அத்தியாயமாக தொடர்வேன். இன்றிரவு அடுத்த அத்தியாயம்.. சரியா..?
சரி அண்ணே எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by thaliranna Fri Nov 25, 2011 9:43 pm

[You must be registered and logged in to see this image.]தொடர வாழ்த்துக்கள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைவேந்தன் Fri Nov 25, 2011 9:49 pm

மிக்க நன்றி தளிர் அண்ணா..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைவேந்தன் Fri Nov 25, 2011 9:50 pm

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 2

மைச்சர் ஆற்காடு ஆறுமுகத்தின் ஒரே முகத்தில் எள்ளும் கொள்ளும் பொரிந்து கொண்டு இருந்தது. அன்று காலைமுதலாகவே அனைவருடனும் சிடுசிடுப்புடன் பேசியது கண்டு அவரது மனைவி விசாலத்துக்கு வியப்பும் பயமும் ஒரு சேர அலைக்கழித்தது.

ஏற்கனவே எழுபதை நெருங்கிக்கொண்டு இருந்த ஆ ஆறுமுகத்துக்கு இரத்த அழுத்தமும் சர்க்கரையின் அளவும் ஏகத்துக்கு எகிறி இருந்த நிலையில் இப்படி அதிகப்படியான சிடுசிடுப்பும் சுள்ளென்ற பேச்சும் ( காபி தயாரா இருக்குங்க.... அப்படியா...? என் தலையில் கொட்டு..) நிலைதவறிய நிதானமும் விசாலத்துக்கு சொல்லவொண்ணா பீதி அளித்தது.

இத்தனைக்கும் வசதிக்கும் சொத்துக்கும் ஒரு குறைவும் இல்லை.ஆளும் கட்சியின் அசைக்கமுடியாத பிரமுகரும் சீனியர் மந்திரியுமான ஆ ஆறுமுகத்துக்கு சென்ற இடமெல்லாம் செல்வம். தொட்டதெல்லாம் தோட்டம். சுட்டதெல்லாம் சொத்து. திரும்பின திசைஎங்கும் திருவின் ஆசி.

பல உறவினர்களின் பெயர்களில் பினாமி சொத்தும் மைத்துனன் முதல் மாமனாரின் சகலையின் மைத்துனனின் ஒன்று விட்ட சகோதரன் வரையிலும் எல்லார் பேரிலும் சொத்துகள் குவித்து இருந்தார்.

அரசாங்க அராஜக ஆளும் கட்சியின் தொண்டு கிழத் தலைவரும் எக்கச்சக்கமான திரு விளையாடல்களைச் செய்து வந்ததால் கேட்க ஆளில்லாமல் ஆ ஆறுமுகம் தறிகெட்டுப் பறந்ததில் சகல சுகபோகத்துக்கும் குறைவில்லை. கண் காட்டினாலே ஆளைச் சாய்த்துவிடும் ஆட்படைகள். இத்தனை இருந்தும் இன்று என்ன நேர்ந்தது அவருக்கென்று அனைவரும் வியந்து நின்றனர்.

மாடியிலிருந்து கீழிறங்கிய ஆறுமுகம் அங்கு தென்பட்ட வேலையாளிடம் ‘’ மாணிக்கம் வந்தானா ‘’ என்று 12 ஆவது முறையாகக் கேட்டார்..எங்கு போய் தொலைந்துவிட்டான் மாணிக்கம் என்று மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டார்.

மாணிக்கம் - ஆறுமுகத்தின் நிழலிலும் மேம்பட்டவன். நிழல் கூட இருட்டினில் கைவிட்டுவிடும் என்பதால் நிழலுக்கும் மேலானவன் தான்.

ஆறுமுகத்தின் அத்தனை விடயங்களும் ஏன் ஆறுமுகம் அறியாத விடயங்களும் மாணிக்கம் அறிவான். சொத்து விவரம் பங்குச்சந்தையில் அவரது முதலீட்டு விவரம். ஸ்விஸ் வங்கியில் அவரது பெயரில் இருக்கும் தொகையின் முழுவிவரம் ஆக அனைத்தையும் அறிவதோடல்லாமல் திறம்பட நிர்வகித்தும் வருகிறான்.நெய்யெடுக்கும் அவன் புறங்கை நக்காமல் இருக்க இயலுமா..? அதை ஆறுமுகமும் அறிவார். ஆனால் ஆறுமுகத்துக்கு அத்தகையவன் தேவைப்பட்டான். மிகப்பெரிய தனது ஊழல் சாம்ராஜ்ஜியத்தை இடிந்து விடாமல் காப்பாற்றி வரும் மாணிக்க்ம் என்னும் தளபதிக்கு கிடைகக் வேண்டிய ஊழியம் இது அல்லவா..?

இத்தனைக்கும் பி ஏ என்னும் பதவிக்காக மாதம் குறிப்பிட்ட கணிசமான சம்பளம் மாணிக்கத்துக்கு வழங்கப்படுகிறது. இது வெளியார் கண்ணில் மண் தூவுவது தான். மற்றபடி மாணிக்கம் தனக்குரிய ஊதியத்தை தானே எடுத்துக்கொள்வது ஆ ஆறுமுகத்துக்கும் நன்கு தெரியும்.

எல்லாமே ஒரு வித கருத்துமேவல் தானே..?

ஐயா மாணிக்கம் ஐயா வந்துட்டாருங்க என்று வேலைக்காரன் வந்து சொல்லும் முன் மாணிக்கம் உள்ளே வந்து ஆறுமுகத்தின் கால் தொட்டு வணங்கினான். இது அவனது வழக்கம். ஆறுமுகத்துக்கு இந்த பணிவு மிகவும் பிடிக்கும்.

வா மாணிக்கம் என்று காலையில் இருந்து இருந்த பரபரப்பின் சுவடறியாமல் அவனை வாஞ்சையுடன் வரவேற்ற ஆறுமுகம் வேலையாட்களிடம் ஒரு மணி நேரத்துக்கு யார் வந்தாலும் போன் வந்தாலும் நான் இல்லை என்று சொல்லிவிடு. என் அறைக்கு யாரையும் வர விட்டுவிடாதே என்று கட்டளையிட்டு விட்டு அமைதியாக நின்ற மாணிக்கத்தின் தோளை அணைத்து தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

வேலையாட்களுக்கு இது தெரிந்த விடயம் தான். மிக முக்கிய ஆலோசனையில் மாணிக்கமுடன் அறையில் நுழைந்தார் என்றால் அங்கே முதலமைச்சருக்கு கூட இடமில்லை என்பது அறைந்து வைக்கப்பட்ட மாற்ற முடியாத சட்டம்.

சவுண்ட் ப்ரூப் செய்யப்பட்ட அந்த அறைக்குள் சென்றதும் மாணிக்கத்தை ஷோஃபாவில் அமரச்செய்து தனது பர்சனல் லேப்டாப்பை ஆன் செய்து மாணிக்கத்துக்கு சில விடயங்களைக் காட்டினார்.

அதைக்கண்டதும் மாணிக்கம் பேயறைந்தாற் போலானான்.

குறிப்பு : கருத்து மேவல் ‍ = காம்ப்ரமைஸ்

துடிப்புகள் ... தொடரும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 25, 2011 11:44 pm

நல்லா இருக்கு அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by vinitha Sat Nov 26, 2011 12:02 am

சூப்பர்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைநிலா Sat Nov 26, 2011 12:48 am

இன்றைய சூழ்நிலைகளை
அடக்கி வாசிக்கும்
கதை...தொடருங்கள் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைவேந்தன் Sat Nov 26, 2011 8:31 pm

மிக்க நன்றி யூஜின் வினிதா மற்றும் கலை..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைவேந்தன் Sat Nov 26, 2011 8:33 pm

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 3

ந்த சிடியில் என்ன தான் இருக்கும் என்று உடனே பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் ராகவனது நெருக்கடிகளைச் சமாளிக்க அவசியமான வங்கிக்கணக்கு அப்டேஷன் முக்கியம் என்பதால் சிடி அடங்கிய அந்த கொரியர் கவரை தனது பைக்கில் பாக்ஸில் வைத்துவிட்டு அதை முடித்துவிட்டு வந்து மதிய உணவை உண்டபின் களைப்புடன் படுத்தான்.

பலவித குழப்பங்கள் மனதில் சுழன்றாலும் உண்ட களைப்பும் காலையிலிருந்து அலைந்ததால் உடல் சோர்வும் அயர்ந்து உறங்க வைத்தன.

ஒரு மணி நேரத்தில் விழித்தெழுந்த ராகவன் கணினியை ஆன் செய்து ஈமெயில் முதலானவற்றை சோதனை செய்த பின் தமிழில் தலை சிறந்த விவாதக்களமான முத்தமிழ் மன்றத்தில் சற்று நேரம் பார்வையிட்டுக்கொண்டு இருந்தவனுக்கு சட்டென்று தனது பைக்கில் வைக்கப்பட்டு இருந்த கொரியர் கவர் நினைவுக்கு வந்தது..!

அட.. இதை எப்படி மறந்துவிட்டேன் என்று தன்னைத்தானே நொந்த படி மூன்று மாடிகள் கீழிறங்கி தனது பைக்கின் பாக்ஸில் இருந்த கவரை எடுத்துக்கொண்டு மேலே வந்தவன் அந்த சிடி கவரைப்பிரித்து லேசாக ஈரப்பதம் பதிந்திருந்த சிடியை உலர்ந்த துணியால் நன்கு துடைத்துவிட்டு அதை கண்ணியில் செலுத்தினான்.

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்ககம் என்னும் அரசின் லோகோவுடன் மிக எளிமையாக வடிவமைக்கப் பட்ட விஷுவல் டிசைனுடன் பக்கங்கள் விரிந்தன. ஃப்ளாஷ் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட புள்ளி விவரங்களுடன் பல வித தகவல்கள் புள்ளி விவரங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகள் நிவாரணங்கள் முதலான அரசின் தற்பெருமைகள் அழகான பொய்களுடன் விரிந்தன. ஆளும் கட்சியின் கொட்டுப்பறையாக மிகச்சாதாரண நடைமுறை நடவடிககைகளைக்கூட மிகப்பெரிய சாதனைகளாக புள்ளிவிவரப் பொய்களுடன் புளுகப்பட்டு இருந்தன.

எப்படி இருந்தாலும் நாம் இந்த சிடியை வடிவமைத்திருந்தாலோ அல்லது நம் உடன் பிறவாதம்பி செல்வமுரளி வடிவமைத்திருந்தாலோ இன்னும் சிறப்பாக இந்த சிடி வந்திருக்கும் என்பதை எண்ணியவாறே மேற்கொண்டு பார்த்துக்கொண்டு போனான்.

நாள் பட்ட சிடி என்பதாலோ என்னவோ ஃப்ளாஷ் கோடிங் டெக்னிகல் பிரசண்ட்டேஷனுக்கு இடையில் ஹெச் டி எம் எல் கோளாறுகள் சில தென்பட்டன. அது போன்ற கோளாறுகள் வெளிப்பட்ட நேரத்தில் சில குறியீடுகளும் எண்களும் கீழ்க்கண்டவாறு விரிந்தன..









New Page 1




ABS CDE 080009379298489030 AA CBS FRMT MULTI SFHEORUUIN 52845038 CNTRY CDE
KEOAUAKDEJOAA 37944009-34949-2949--3930-3-3


 







ராகவன் ஜாவா டிகோடிங் மற்றும் எச்டி எம் எல் கோடிங் ஃபார்மட்டிங் ரைட்டிங் என்று சகலமும் அறிந்திருந்தாலும் சி டியின் இடையில் ஃப்ளாஷ் ப்ரசெண்டேஷன் தடைப்படுவதையும் இடை யிடையே ஓரிருமுறை இது போன்ற ஹெச்டிஎமெல் எர்ரர் மெசேஜ் வந்ததையும் கவனித்தும் அது எந்தக் காரணத்தால் என்பதை அறிய முயலவில்லை.

மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் விதமாக ரிசோர்ஸ் பர்சன்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற குறிப்பிடுகைகளும் குறியீடுகளும் இன்ஸ்ட்ரக்‌ஷன்களும் நிறைந்த மொத்தம் 45 நிமிடங்கள் ஓடிய அந்த சிடியின் இடையில் மாற்றுத்திறனாளிகளின் திறமையை வெளிக்கொணரும் வகையில் அதற்கான சிறப்புப்பள்ளிகள் செய்து வரும் பிரயத்தனங்கள் வீடியோ க்ளிப்புகளாக இணைக்கப்பட்டு இருந்தது. எதையோ எதிர்பார்த்து சிடியைத் துழாவிய ராகவன் கண்களுக்கு மிகச்சாதாரணமான அரசாங்க தற்பெருமை சிடியாகவே தென்பட்டது.

வேறெதுவும் புரியாத நிலையில் அந்த சிடியை வெளியே எடுத்தவன் அசுவாரசியமாக அந்த சிடியை திரும்பவும் கவரில் போட்டு கணினி மேசைக்குக் கீழே வைக்கப்பட்டு இருந்த சிடி கூடையில் போட்டான்.

மிகப்பெரிய அளப்பரிய புதையலை அலட்சியமாக எறிகிறோம் என்பதை அறியாத ராகவன் மீண்டும் முத்தமிழ் மன்றத்தில் ஔவையின் அழகான கவிதைகளில் ஆழ்ந்தான்..!

துடிப்புகள் தொடரும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by thaliranna Sat Nov 26, 2011 8:36 pm

[You must be registered and logged in to see this image.]விறுவிறுப்பாக செல்கிறது வாழ்த்துக்கள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கவி கவிதா Sat Nov 26, 2011 10:26 pm

அட போங்க நாளைக்கு வர காத்திருக்கணுமா .. ரொம்ப சுவாரசியமா போகுது. ராஜேஷ்குமார் கதை படிக்கர சுவாரஸ்யம்...

ரொம்ப நல்ல வருதுங்க கதை ... மிகப் பிடிதிருக்கிறது...

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைவேந்தன் Sat Nov 26, 2011 10:56 pm

மிக்க நன்றி தளிர் அண்ணா மற்றும் கவி கவிதா..

முழுக்கதை இதுவரை படிக்கனும்னு ஆசைப்பட்டா எனது தனித்தளம் சென்று படிக்கலாம்..

இங்கே தினம் ஒரு அத்தியாயமாக தருவதே என் விருப்பம்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 26, 2011 11:07 pm

கலக்குறீங்க அண்ணே பாராட்டுக்கள் தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 26, 2011 11:07 pm

கலக்குறீங்க அண்ணே பாராட்டுக்கள் தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கவி கவிதா Sat Nov 26, 2011 11:12 pm

="கலைவேந்தன்"
முழுக்கதை இதுவரை படிக்கனும்னு ஆசைப்பட்டா எனது தனித்தளம் சென்று படிக்கலாம்..

படித்துக் கொண்டு இருக்கிறேன்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by தங்கை கலை Sun Nov 27, 2011 9:36 pm

:héhé: :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 8:28 pm

மிக்க நன்றி நண்பர்களே.. இனி அடுத்த பகுதிக்கு போகலாமா..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 8:30 pm

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 4

மைச்சர் ஆற்காடு ஆறுமுகம் நிதானமாக மாணிக்கத்திடம் தனது பர்சனல் லேப்டாப்பைத் திறந்து காண்பித்த சில விடயங்கள் மாணிக்கத்துக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது.

ஆ ஆறுமுகத்துக்கு தனது ஸ்விஸ் வங்கிக்கணக்கில் இருக்கும் அப்டேஷனை அறியும் விதத்தை சிறுபிள்ளைக்கு போதிப்பதைப் போல கற்றுக்கொடுத்ததே மாணிக்கம் தான். அத்தனை எளிதான வேலையல்ல அது.

பல அடுக்குகளையும் சில சிக்கலான கேள்விகளையும் கேட்டு அதன் சரியான பதிலை அளித்தும் வாய்ஸ் ரெககனைசிங் மூலம் வெரிஃபை செய்தும் நிறைய இடியாப்ப அடுக்குகளுக்குப் பின் தான் தனது பெயரில் இருக்கும் கணக்கு வழக்கை காண்பிக்கும்.

இந்த செயல் முறை இருவருக்கு மட்டுமே அத்துபடி. எல்லாவற்றையும் நிர்வகிக்கும் மாணிக்கத்திற்கும் ஆறுமுகத்துக்கும் மட்டுமே தெரிந்த விடயங்கள் இவை.

ஒரு வேளை தனக்கு எதுவும் நேர்ந்தாலும் தமது பணத்தை தம் சந்ததியருக்கு பெற்றுத் தரும் பொறுப்பை மாணிக்கத்திடம் ஒப்படைத்து இருக்கிறார். இருபத்தைந்து சதவீதம் அதற்கான கட்டணமாக எடுத்துக்கொள்ளலாம் என்பதான ஒரு மறைமுக ஒப்பந்தம் கூட இருக்கிறது.

இப்போது ஆறுமுகம் மாணிக்கத்திடம் அர்த்த பூர்வமாக அதே சமயம் நிதானம் தவறாமல் பேசினார்.

‘’ என்ன தெரியுது மாணிக்கம் .. ? ‘’ - அவனது பிரமிப்பைக் கலைக்கும் விதமாக கேட்டார்.

‘’ ஐயா.. ஐயா.. நான் இதை செய்வேன்னு நீங்க நினைக்கிறீங்களா....? ‘’ - குரல் தழு தழுத்தது மாணிக்கத்துக்கு.

‘’ அடடா... இல்லடா மாணிக்கம்... இந்த உலகத்துல உன்னைத் தவிர யாரை நம்பப்போறேன்..? ஆனா திடீர்னு இப்படி 200 கோடி ரூபாய் நம்ம அக்கவுண்ட்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர் ஆகி இருக்கு.. என்ன ஏதுன்னு விவரம் தெரிஞ்சுக்க முடியலை.. நம்ம ரெண்டு பேரைத் தவிர இது சம்பந்தமா யாருக்கும் தெரியாது... தெரிஞ்ச மூனாவது ஆளைக்கூட... ‘’’ - இந்த இடத்தில் நிறுத்தினார் ஆறுமுகம். அவரது நினைவுகள் பின்னோக்கிச் சென்றதை அறிய முடிந்தது மாணிக்கத்துக்கு.

‘’ ஆமாம் .. ஐயா.. நீலமேகம்... ‘’ - என்ற வாறு இழுத்தான் மாணிக்கம்.

‘’ ஸ்ஸ்ஸ்... அதைப்பத்தி இப்ப ஏன் பேச்சு... இப்ப இது எப்படி எங்கே யாரால நடந்ததுன்னு கண்டு பிடிக்கனும்டா.. இல்லைன்னா இருக்கும் எலலா பணமும் இப்படி கைவிட்டு போயிடுமே... ‘’ - கவலை மற்றும் பதட்ட ரேகைகள் ஆறுமுகத்தின் முகத்தில் பரவின.

அவரது கவலைகள் முழுக்க முழுக்க நியாயமானதாக மாணிக்கத்துக்கு பட்டது. அவனுக்கே இது பற்றி ஒன்றும் யூகிக்க முடியவில்லை.

‘’ஐயா .. நீங்க வேறு யார் மேலாவது சந்தேகப்படறீங்களா..? ‘’ - மாணிக்கம் அவரது முகத்தைப் பார்த்து கேள்விக்குறியுடன் கேட்டான்.

‘’ இல்லடா மாணிக்கம்... உனக்கே தெரியும்... இது சம்பந்தமா என் மனைவி பிள்ளைகள் கிட்ட கூட ஒன்னுமே சொல்லாம வைச்சு இருக்கேன் தானே..? ‘’ - என்று கவலையுடன் கூறினார் ஆறுமுகம்.

’’ அப்படின்னா இது மாயமா இருக்கே ஐயா..இத்தனை பாதுகாப்பை மீறி .இது எப்படி சாத்தியம் ஐயா...? முதல்ல நம் வங்கிக்கணக்கு தெரியனும்..அப்படியே தெரிந்தாலும் அதை ஆபரேட் செய்யும் விதம் கோடிங் டி கோடிங் வாய்ஸ் ரெகக்னிஷன் இது எல்லாமே வேணும்... எப்படி எப்படி...? ’’- மாணிக்கம் வியந்தான்.

‘’ மாணிக்கம் ...இனி என்ன செய்யலாம்...? எதாவது செய்யனும்.. இலலைன்னா எல்லாம் நம்ம கையை விட்டு போயிடும்.. இப்போதைக்கு 200 கோடியோட நிக்கிது ... ‘’ - ஆறுமுகம் கவலை தோய்ந்த முகத்தை மாணிக்கத்தின் பக்கம் பார்த்துவிட்டு லேப்டாப்பை கவனித்தார்.

’’ ஆமாம் ஐயா... எடுத்தவன் நிறைய எடுக்காம 200 கோடி எடுத்து இருக்கான்.. இதுல இருந்து என்ன தெரியுதுன்னா... நம் அக்கவுண்ட்ல எவ்வளவு இருக்குன்னு தெரியாம முதல் வாய்ப்பை தவற விட்டா கோடிங் மாறிவிடும் லாக் ஆகிவிடும் என்னும் சூட்சுமம் புரிஞ்சு வைச்சு இருக்கான்..’’ - மாணிக்கம் டெக்னிகலாக யோசித்தது ஆறுமுகத்துக்கு வியப்பளித்தது.

‘’ உண்மைதான்.. ‘’ - ஒப்புக்கொண்டார் ஆறுமுகம்.

‘’ மேலும் அவன் மிக மிக சாமர்த்தியமாக இந்திய வங்கி எதிலும் மாற்றாமல் சிங்கப்பூர் வங்கியில் மாற்றி இருக்கான். அதுமட்டுமே தெரிய வருது. மற்றபடி வேறு எந்த விவரமும் நம்ம வங்கியும் காட்டாது .. இது நாம் ஆப்ரேட் செய்தது போல் தான் காண்பிக்கிறது. அப்படிஎன்றால் நம் சூட்சுமம் அறிந்த ஒருவன் மிக தெளிவாக திட்டமிட்டு செய்து இருககான்...’’ - மாணிக்கத்தின் அலசல் மிகத்தெளிவாக இருந்தது.

‘’ உண்மைதான் மாணிக்கம். நம்ம கண்ணுல மண்ணு தூவறான் ஒருத்தன் அப்படின்னா நம்மை பத்தி நிறைய விவரங்கள் தெரிஞ்சு வைச்சு இருககான். நம்ம ரெண்டு பேரு குரலையும் நகலெடுத்து இருக்கான். நம்ம கோடிங்கை நம்ம பாஸ்வேர்டை ஒன்னு விடாம சுட்டு இருக்கான்... ‘’ - விரக்தி மிகுந்த குரலில் ஆறுமுகம் கூறிவிட்டு ஷோஃபாவில் சாய்ந்தார் ஆறுமுகம்.

’’ ஐயா .. இது நம்மால் கண்டுபிடிக்க முடிகிற விடயம்னு தெரியலை. மிகத் திறமை வாய்ந்த நிபுணர் மூலமா இதைவிசாரிக்க சொல்லலாம் ஐயா.. ஆனால் அவங்க மிகவும் நம்பகமானவங்களா இருக்கனும்.. தப்பித் தவறி எதிர்க்கட்சிக்கு விஷயம் லீக் ஆனா நாம் இழப்பது பணம் மட்டும் இல்லை ஐயா... ‘’ - மாணிக்கத்தின் குரலில் இயலாமையின் குரோதம் தெரிய வந்தது.

’மாணிக்கம் சொல்வதில் இருந்த கசப்பான உண்மை ஆறுமுகத்தையும் கவலையில் தோய வைத்தது.

’’ எதாவது செய்டா மாணிக்கம்.. இனியும் இருப்பதெல்லாம் இழக்கும் முன்னால எதாச்சும் செய்யனும். எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. பர்சண்டேஜ் பேசிப்பாரு. எப்படியாச்சும் செய்டா எதாச்சும்...’’ - மாணிக்கத்தின் மேல் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இந்த பொறுப்பையும் அவனிடம் ஒப்படைக்க வைத்தது.

திருடனுக்கு தேள் கொட்டும் போது உரக்க கத்தி ஊரை எழுப்பவா முடியும்..?

’’ ஐயா... இந்த வேலைக்கு ரொம்ப நம்பகமான திறமைசாலியான ஆளுன்னு சொன்னா என்னைப்பொறுத்த வரை சென்னையின் லீடிங் டிடெக்டிவ் விக்னேஷ் தான் சரின்னு படுது ஐயா.. ‘’ - மாணிக்கம் உறுதியுடன் கூறினான்.

‘’ அப்படியா..? அவர் திறமைசாலியா..? வயசுல சின்னவர்னு கேள்விப்பட்டு இருக்கேனே...’’ - ஆறுமுகத்தின் முகத்தில் ஐயம் படர்ந்தது.

‘’ இல்லை ஐயா ... விக்னேஷ் கைவைக்கும் கேஸ் எதையும் வெற்றிகரமா முடிக்காமல் விடுவதில்லை.. அவர் பார்வைக்கு எதுவும் தப்புவதுமில்லைன்னு பேரு ஐயா... ‘’ - மாணிக்கம் உறுதி குறையாமல் கூறினான்.

‘’ சரிடா... என்னமோ செய்... ஆனா இதை சும்மா விடக்கூடாது... என்ன ஆனாலும் சரி.. ஆனா விஷயம் கமுக்கமா முடிக்கனும்... ‘’’ - சந்திப்பு முடிவடைந்தது என்பது போல் ஆறுமுகம் எழுந்தார்.

மாணிக்கம் துரிதமாக வெளியேறி விக்னேஷை சந்திக்க அண்ணாநகர் விரைந்தான்.

மாணிக்கம் விக்னேஷைச் சந்தித்தபோது விக்னேஷ் தனது அசிஸ்டண்ட் வசந்தியை கட்டி அணைத்துக்கொண்டு இருந்தான்...

துடிப்புகள் தொடரும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by தங்கை கலை Mon Nov 28, 2011 8:31 pm

கலைவேந்தன் wrote:மிக்க நன்றி நண்பர்களே.. இனி அடுத்த பகுதிக்கு போகலாமா..?

போகலாமே அண்ணா ...நானும் ரெடி கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 69767 கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 69767 மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 8:40 pm

[You must be registered and logged in to see this image.]நல்லா இருக்கு கலக்குறீங்க அண்ணே பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைவேந்தன் Tue Nov 29, 2011 10:46 pm

நன்றி கலை மற்றும் யூஜின்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by கலைவேந்தன் Tue Nov 29, 2011 10:48 pm

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 5

ராகவனுக்கு இருந்த பல பிரச்சினைகளில் அந்த சிடி பற்றி மறந்தே போனான். அந்த பேங்க் மேனேஜரை வங்கியில் சந்தித்து பர்சனல் லோன் ப்ரொசீஜர்களை கவனமாக கேட்டுப் பெற்றான். அவர் தனது வங்கியில் கணக்கு திறந்து அந்த அக்கவுண்ட் நம்பரைக் குறிப்பிடச் சொன்னார். எலலா ஃபார்மாலிட்டிகளையும் முடித்து விடைபெற்ற போது அந்த லோன் மேனேஜர் கூறியது கொஞ்சம் வருத்தம் அடையச்செய்தது அவனை.

‘’ என்னமோ ஸ்விஸ் பேங்க்ல அககவுண்ட் ஓபன் செய்தமாதிரி நினைச்சு சும்மா இருந்துடாதீங்க.. மினிமம் பேலன்ஸ் மெயிண்டெய்ன் செய்யனும். லோனுக்குள்ள ஒரு இ எம் ஐ தொகையாவது விட்டு வைக்கனும்.. ’’ - என்று அவர் சொன்ன விதத்தில் ஏழைகளுக்கு கிடைக்கும் மதிப்பு கூட கடன்காரர்களுக்குக் கிடைக்காது என்னும் வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டான்.

‘’ யோவ்.. ஓவரா பேசறே இல்ல...? இரு இரு ...எனக்கும் காலம் வரும்.. எதுனா மிராக்கிள் நடக்கும். எனக்கும் வெளிநாட்டு பேங்க்ல கோடிக்கணக்கா கிடக்கும்... அப்ப பாக்கிறேன்.. உன் மூஞ்சை எங்க கொண்டுபோய் வைச்சுப்பேன்னு..’’ - என்று சத்தமாகக் கத்தினான் மனதுக்குள்.

தலைவலியுடன் வீட்டுக்கு வந்த அவனை நேரம் காலம் தெரியாமல் ‘’ என்னங்க... பையனுக்கு அடுத்த வாரம் பர்த் டே வருது... ட்ரெஸ் எடுக்கவேண்டாமா ’’ - என்று மங்களம் கூறியது அவனது ஆவேசத்தை வெளித்தள்ளியே விட்டது.

’’ ஆமாம்... அது ரொம்ப முக்கியம்... உங்கப்பன் எனக்கு ஸ்விஸ் பேங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணி கோடிக்கணக்குல போட்டு வைச்சு இருக்கான் பாரு... போடி .. போய் உன் வேலையை கவனி.. எல்லாம் நடக்கும்..’’.- எரிந்து விழுந்துவிட்டு தன் அறைக்குள் சென்று கணினியைத் திறந்தான்.

மனம் சரியில்லாத போது அவன் கணினியைத் திறந்து நண்பர்களுடன் சாட் செய்வதும் முத்தமிழ் மன்றத்தில் சுப்ரமணியன் சேகர் பதிவுகளை கூர்ந்து கவனிப்பதும் வழக்கம்.கண்ணில் விளக்கெண்ணை போட்டுக்கொண்டு நுணுக்கமான விவரங்களைக்கூட விடாமல் அலசி புள்ளி விவரங்களுடன் பதிவு இடும் அவர் வழக்கம் இவனுக்கு மிகவும் பிடிக்கும். அவரைப் பார்த்தது இல்லை என்றாலும் மூக்கில் வந்து விழும் கண்ணாடியை தூக்கிவிட்டுக்கொண்டு அவர் கணிணியைப் பார்த்து பதிவு இடுவது போல கற்பனை செய்துபார்த்து சிரிப்பான்.

பார்த்துக்கொண்டே வந்தவன் சட்டென்று ஏ ஆர் ஆர் என்பவர் இட்டு இருந்த செய்திகளில் ஸ்விஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் இட்டு இருந்த அரசியல்வாதிகளின் விக்கிலீக்ஸ் பட்டியல் பதிவு அவனைக் கவர்ந்தது.

மிக சுவாரசியமாக பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு ஓரிடத்தில் கண்கள் குத்திட்டு நின்றன.

A ARUMUGAM 2800 CRORES ALTERNATE BANK ABS 1 MAIN ACCOUNT.

இந்த இடத்தைப் பார்த்ததும் ஏதோ ஒரு நினைவு சட்டென்று மூளையில் பிரகாசித்தது. எங்கோ ஒரு ஃப்ளாஷ் அடித்தது,.என்ன என்று மூளையைக் கசக்கிப்பிழியும் முன் அடுத்து கிருஷ் சிவா இட்டு இருந்த இந்த லிஸ்ட் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தைப் பார்த்ததும் குழப்பத்தை விட்டெறிந்தான் ராகவன்.

ஆயினும் அவனுள் எதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது. ஏபிஎஸ் ஏபிஎஸ் என்ற எழுத்துகள் தட்டாமாலை சுற்றி வந்தன..எங்கோ இவ்வெழுத்துகளைப் பார்த்த நினைவும் அது மூளையில் கொடுத்த துடிப்புகளும் அவனை குழம்பச்செய்தன..

ஒரு வேளை லோனுக்காக அப்ளை செய்த வங்கிக்கணக்காக இருக்குமோ என்று யோசித்தான். ஆனால் அது ஓபிஎஸ் அதாவது ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் அல்லவா..?

ஏபிஎஸ் ஓபிஎஸ் எஸ்ஓபி பிஓபி எஸ்பிஐ என்று அவனது மூளைக்குள் ஆங்கில எழுத்துகள் பட்டாம்பூச்சிகள் போல பறந்துகொண்டே இருந்தது.

மேற்கொண்டு முத்தமிழ் மன்றத்தில் மனம் லயிக்கவில்லை. கலைவேந்தன் என்பவர் எழுதிய படுத்தலான காதல் கவிதைகள் அவனது எரிச்சலை இன்னும் அதிகமாக்கின. இந்தாளு யாருக்காக கவிதை எழுதறான்..? இங்கே என்ன எலலாரும் தமிழ் இலக்கியம் படிச்சுட்டா இணையத்துக்கு வராங்க... சுத்தமா ஒன்னும் புரியாம அந்த காலத்து ஆதிக்கிரந்த தமிழில் என்னமோ புலம்பித்தள்றான்.. ராகவனது எரிச்சல் அந்த கவிஞனின் மேல் படர்ந்தது..

சரி.. கொஞ்சம் மாலைநேர வாக்குக்காவது போய் வரலாம் என்று கணிணியை அணைக்கப்போகும்முன் அவனது ஜிமெயிலில் வந்து கண்ணடித்த விளம்பரம் அவனைக் கவர்ந்தது.

ஸ்விஸ் வங்கியில் கணக்கு துவக்க வேண்டுமா எளிது எளிது எளிது என்று மிக எளிதாக அந்த எளிது மின்னிக்கொண்டு இருந்தது.

என்னதான் அதுல இருக்குன்னு பார்க்கலாமே என்று கிளிக்கியவன் கண்முன் வெளிநாட்டு ஏஜண்டின் விளம்பரம் அசுவாரசியமாக ஸ்விஸ் வங்கி கணக்கு துவக்குவது எப்படி என்று விலாவாரியாக மூளை சிதறிக் கொட்டிவிடும் போல் புள்ளி விவரங்களை அள்ளித்தெளித்துக் கொண்டே இருந்தது.

அப்போது தான் அந்த ஏபிஎஸ் அல்டர்நேடிவ் பேங்க் ஆஃப் ஸ்விட்சர்லாந்து என்னும் எழுத்து அவனது மூளையில் மீண்டும் ஒரு வெளிச்சத்தைக் கொணர்ந்தது.

ஆ.... ஐ காட் இட்... என்று மனதுக்குள் கத்தியவன் அவசரமாக அன்று அசுவாரசியமாக விட்டெறிந்த அந்த மாற்றுத்திறனாளிகள் இயக்கக விளம்பர சிடியைத் தேடி எடுத்து அதை கணினியில் செலுத்தினான்.

பார்த்துக்கொண்டே வந்தவன் அந்த எச் டி எம் எல் எர்ரர் கோடு வந்ததும் அதை பாஸ் செய்துவிட்டு அதை டிகோடிங் செய்ய முயன்றான்.









New Page 1




ABS CDE 080009379298489030 AA CBS FRMT MULTI SFHEORUUIN 52845038 CNTRY CDE
KEOAUAKDEJOAA 37944009-34949-2949--3930-3-3


 







என்ற அந்த சிடியின் கோடிங்குகளை டி கோட் செய்த போது கீழ்க்கண்ட விவரம் வந்தது.

ABS CDE 080009379298489030 AA CBS FRMT MULTI SFHEORUUIN 52845038 CNTRY CDE
KEOAUAKDEJOAA 37944009-34949-2949--3930-3-3

மூளையில் ஒரு அதிரடி மின்னல் உருவாக , அந்த ஏபிஎஸ் ஏ ஏ மற்றும் சி பிஎஸ் எழுத்துகள் ஒரு வைரச்சுரங்கத்தின் சாவிகளாக மாறி அவனைச்சுற்றி தட்டாமாலை ஆடிக்கொண்டு இருந்தது..!


துடிப்புகள் தொடரும்...
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16 Empty Re: கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum