"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 10:18 pm

» எண்ணம் போல் வாழ்க்கை...!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 10:04 pm

» எட்டாவது ஜென்மத்துல எவ கூட சேர்ந்து வாழப்போறீங்க..!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:28 pm

» வாட்ஸ் அப் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:24 pm

» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:22 pm

» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:21 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:20 pm

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:16 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:15 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:15 pm

» பொண்ணு வீட்ல கட்டாயம் வரும்...டவுட்டுகள்!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:14 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:13 pm

» * "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:12 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:11 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:10 pm

» வெறும் கேடயம் மட்டும் எடுத்து போர்க்களம் போறாரே..!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:08 pm

» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:07 pm

» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள்

Go down

அழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள் Empty அழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள்

Post by கணபதி on Fri Apr 26, 2013 3:59 pm

கீரைகளின் மருத்துவ பண்புகள்

அழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள். நமது உடல் நலத்தை பேணிக்காப்பதில் தானிய வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் கீரைகள் மிகச்சிறந்த இடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்புச்சத்தும் மிகக்குறைந்த இடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்பும் மிகக்குறைந்த அளவிலும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சத்தியை அளிக்கவல்ல வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. சீரண மண்டலம் சீராகச் செயல்படுவதற்குத் தேவையான நார்ச்சத்து கீரை வகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.

தண்டுக்கீரை:-
தண்டுக்கீரையில் செந்தண்டுக்கீரை, வெண்தண்டுக்கீரை என இரண்டு வகைகள் உள்ளன. செந்தண்டுக் கீரையானது உடல் வெப்பத்தைத் தணித்து ரத்தத்தைச் சுத்தி செய்வதுடன் சிறுநீர் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் பங்கு வகிக்கின்றது. வெண்தண்டுக் கீரையானது கொழுப்பைக் குறைக்கவும் தேவையற்ற சதையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகின்றது.

முளைக்கீரை:-
முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் ரத்தத்தை சுத்தி செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகின்றது. மேலும் பசியைத் தூண்டுவதிலும், மலச்சிக்கலைத் தீர்ப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது.

அரைக்கீரை:-
பிரசவித்த பெண்களுக்கு இக்கீரையானது ஒரு சிறந்த மருந்தாகும். பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றது. மேலும் தாய்ப்பாலுடன் கலந்து குழந்தையையும் வலுவூட்டுகிறது.

முருங்கைக்கீரை:-
இதில் வைட்டமின் 'ஏ' 'சி' மற்றும் இரும்பு முதலிய சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. தொடர்ந்து சாப்பிட்டு வர கண்கள் குளிர்ச்சியடைவதுடன், வைட்டமின் 'ஏ' பற்றாக்குறை தொடர்பான கண் நோய்கள் நீங்கி பார்வை தெளிவடையும்.

அகத்திக்கீரை:-
வாய், தொண்டை மற்றும் வயிற்றில் உண்டாகும் புண்களை குணப்படுத்துகின்றது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிப்பதிலும், உடல் சூட்டைத் தணிப்பதிலும் பெரிதும் பயன்படுகின்றது.

மணத்தக்காளி:-
வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் குடல்புண் கியவற்றை சிறந்தமுறையில் கட்டுப்படுகின்றது. மேலும் கர்ப்பபை சம்பந்தாமான நோய்களுக்கும், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை கியவற்றை நீக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

வெந்தயக்கீரை:-
சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் மிகச்சிறந்து நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு குணமாகும். மேலும் இக்கீரையானது சீரண சக்தியை அதிகரித்து பசியைத் தூண்டுகிறது.

தவசிக்கீரை:-
இக்கீரையில் ஏறக்குறைய அனைத்து வகையான வைட்டமின்களும் இருப்பதால் 'ம்ல்டி' வைட்டமின் கீரை' என அழைக்கப்படுகின்றது. இக்கீரையில் உள்ள மணிச்சத்து எலும்பு வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகின்றது. இரும்புச்சத்து ரத்தத்தை சுத்திகரித்து உடல் நலத்தைப் பேணிக் காக்கின்றது.

பசலைக்கீரை:-
ரத்த விருத்தியை உண்டாக்கி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கின்றது. கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கும், கால்களில் ஏற்படும் நீர் வீக்கம் மாறுவதற்கும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

கரிசலாங்கண்ணி:-
நல்லெண்ணைய் அல்லது தேங்காய் எண்ணைய்யுடன் கரிசலாங்கண்ணி சாற்றைச் சேர்த்து காய்ச்சப்பட்ட தைலத்தை தேய்த்து வர தலைமுடி கருமையாகும். தலைவலி நீங்கும்.

தூதுவளை:-
கசப்புத்தன்மையுடைய இக்கீரை கபத்தை நீக்கி சுவாச மண்டலத்தை தூய்மைப்படுத்துகின்றது. மார்புச்சளியை நீக்குவதில் மிகச்சிறந்து விளங்குகின்றது.

கொத்தமல்லி மற்றும் புதினா:-
ஜீரண சக்தியை அதிகரித்து பசியைத் தூண்டுகின்றன. கொத்தமல்லியானது தலை இறக்கம், வாந்தி, வயிற்றுமந்தம் போன்றவற்றை அகற்றும், புதினா வாய் நாற்றத்தை நீக்கும் தன்மையுடையது. எனவே குறைந்த செலவில் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகளை உணவில் சேர்த்து நோய் நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்.

வல்லாரை(Centella asiatica):
நினைவாற்றலை அதிகமாக்கும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை:
மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை:
பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கண்ணி:
இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்:
இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:
மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை:
பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை:
நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை(Fenugreek):
இருமல் குணமாகும்.

புதினா கீரை(Mint):
மசக்கை மயக்கம்,வாந்தி குணமாகும்.

அறுகீரை :
சளிக்காய்ச்சல்,டைபாய்டு குணமாகும்


சாந்தன்
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 64
Location : chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum