"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 3:01 pm

» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:53 pm

» மிக உயர்ந்த சிகரங்கள்
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:49 pm

» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:45 pm

» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:16 pm

» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:09 pm

» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:06 pm

» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:51 pm

» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:41 pm

» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:35 pm

» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:33 pm

» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:08 pm

» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:06 pm

» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:05 pm

» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:59 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 12:03 am

» நகைச்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:56 pm

» 5 வரி கதைகள் -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:52 pm

» அருவிகூட ஜதி இல்லாமல்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 10:06 pm

» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:17 pm

» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:16 pm

» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:13 pm

» மீண்டும், நீயா!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:12 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:04 pm

» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:03 pm

» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:01 pm

» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:59 pm

» ராஜமௌலி படம் சமந்தா பதில்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:56 pm

» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:31 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:30 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:27 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:25 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:23 pm

» வாழ்வின் நிஜங்கள் - கவிதை - கே.நடராஜன்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:22 pm

» காதல் கலாட்டா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:30 pm

» கலாய் கவிதை எழுதி பழக்கமில்லை, மன்னா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:30 pm

» வலை பாயுதே…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:29 pm

» ட்விட்டரில் ரசித்தவை…!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:28 pm

» கிரீடம் அணிந்த காய்…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:21 pm

» வெல்ல நிவாரண நிதி’ கேட்டு மனு கொடுத்திருக்கார்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:20 pm

» கிறுக்கல்கள்…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:19 pm

» ஏங்க….உப்புமா செய்யவா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:18 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பான் கார்டு பெறுவதின் நன்மைகள்

Go down

பான் கார்டு பெறுவதின் நன்மைகள்

Post by அ.இராமநாதன் on Mon May 19, 2014 8:15 am

"முதலீடு பற்றி சொல்வதெல்லாம் இருக்கட்டும்;
எந்த முதலீட்டுக்குப் போனாலும் பான் கார்டு
இருக்குதானு கேட்கறாங்களே என்ன பண்றது?
-
போற போக்கைப் பார்த்தால் ஒரு கிலோ அரிசி
வாங்கனும்னாக்கூட பான் கார்டு வேணும்னு
சொல்வாங்க போல இருக்கு. எதுக்கு இந்த பான்
கார்டு தொந்தரவு..?' என்று சலிப்போடு சொன்னார்
வாக்கிங் செல்லும் வழியில் சந்தித்த பெரியவர்
ஒருவர்.
-
"தெனாலிராமன்' வடிவேலு பாணியில் "எல்லாம்
நன்மைக்கே!' என்றேன்.
-
பிடிபிடியென்று பிடித்துக் கொண்டார் அந்தப்
பெரியவர், "எது சார் நன்மை? போனவாரம், என்
பையன் பேர்ல பணம் போட பேங்குக்கு போனேன்.
ஐம்பதாயிரம் ரூபா அவசரமா வேணும்னு
கேட்டிருந்தான். பிள்ளைக்கு என்ன அவசரமோனு
அடிச்சுப் புடிச்சு பேங்குக்கு போனா உங்க பான்
நம்பர் என்னன்னு கேட்கிறாங்க.
-
என் புள்ளைக்கு நான் பணம் அனுப்பறதுக்கு
எதுக்குங்க நம்பர் எல்லாம் சொல்லணும்? அதுவும்
ஒளிச்சு மறைச்சு நான் கொடுக்கப் போறதில்லை.
என் மகனோட பேங்க் அக்கவுண்ட்லதான் கட்ட
போறேன். அதுக்கு ஏன் இவ்வளவு கெடுபிடி?' என்று
அவர் கேட்டபோது, பான் கார்டு என்ற விஷயம்
அவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளை
உணர முடிந்தது.
-
பான் கார்டு பற்றி நம்மில் பலருக்கு இருக்கும்
புரிதல் இதுதான். அது ஏதோ நம்மைக் கண்
காணிப்பதற்காக அரசாங்கம் உருவாக்கி இருக்கும்
சிஸ்டம்; நம்முடைய பணப் பரிமாற்றங்களைக்
கண்காணித்து வரி பிடிக்க செய்யப்பட்டிருக்கும்
ஏற்பாடு என்பதுதான் பலருடைய மனதில் இருக்கும்
எண்ணம்.
-
உண்மை அதுதானே? நீங்கள் எந்த அடிப்படையில்
எல்லாம் நன்மைக்கேனு சொன்னீங்க...? என்று
கேட்கிறீர்களா! வாங்க உட்கார்ந்து டீடெய்லா
பேசலாம்.

பெரிவருக்குச் சொன்ன விஷயங்களை உங்களுக்கும்
சொல்கிறேன்.
-
தன் மகனுக்காக ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டச்
சென்ற அந்தப் பெரியவர் அந்தப் பணத்தை யாரிடம்
இருந்து திருடிக் கொண்டு வரவில்லை. பொய்யான
வழியில் சம்பாதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது
இது என் பணம் என்று சொல்வதில் அவருக்கு என்ன
தயக்கம் வேண்டியிருக்கிறது?

அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால்
அவரால் வெளிப்படையாக தைரியமாகச் சொல்ல
முடியும் என்கிறபோது அதைச் சொல்வதில் என்ன
கஷ்டம்?

சரி, இப்படி யோசித்துப் பாருங்கள். அந்தப் பெரியவர்
ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டி விடுகிறார். மகனும்
அந்தப் பணத்தை எடுத்து தன் தேவைக்குப் பயன்
படுத்திக் கொள்கிறார். இந்தச் சூழலில் மகன் மீது
ஓர் ஊழல் குற்றச்சாட்டு வருகிறது. அதாவது ஒரு
நபரிடம் இருந்து ஐம்பதாயிரம் ரூபாயை லஞ்சமாக
வாங்கிவிட்டார் என்று குற்றம் சாட்டப்படுகிறார்.

குற்றச்சாட்டைச் சொன்ன நபர், அந்த மகனுடைய
வங்கிக் கணக்கை பரிசோதித்துப் பாருங்கள் என்று
சொல்ல, வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் வரவு
வைக்கப்பட்ட விவரம் இருக்கிறது. உண்மையில்
அந்தப் பணம் அந்தப் பெரியவர் தன் மகனுக்காக
கொடுக்கப்பட்ட பணம். ஆனால் வங்கியைப்
பொறுத்த அளவில் யார் வேண்டுமானாலும் பணம்
கட்டலாம்.

சந்தேகம் வரக்கூடாது என்பதால் அப்பாவின்
பெயரில் அவர் ஊருக்கே போய் லஞ்சப் பணத்தை
வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்று
குற்றம் சாட்டியவர் சொன்னால் நம்பித்தான் ஆக
வேண்டும். இதுவே, பெரியவர் தன் பான் கார்டு
எண்ணுடன் டெபாசிட் செய்திருந்தால் அது ஓர்
ஆதாரமாக இருந்திருக்கும்.
-
இதைச் சொன்னதும் அந்தப் பெரியவர் ஆடிப்
போய்விட்டார். "இதில் இவ்ளோ விஷயம் இருக்கா?'
என்றார். "பான் கார்டை வாங்கிவிட்டால் ஆண்டு
தோறும் வருமான வரி கட்ட வேண்டி வந்துவிடுமே,
அதுதான் பயமாக இருக்கிறது' என்று சொல்பவர்களா
நீங்கள்? நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். பான்
கார்டுக்கும் வருமான வரிக்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
-
உங்களிடம் பான் கார்டு இருந்தால் நீங்கள் வரித்
தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை.
பான் கார்டு என்பது உங்களுடைய நிதி தொடர்பான
விஷயங்களை வரையறுத்துக் கொள்வதற்கான
ஏற்பாடுதான். அதனால் எல்லாருமே பான் கார்டு
வாங்கிக் கொள்வது நல்லது.
-
பான் கார்டு எல்லாருடைய வாழ்க்கையிலும்
முக்கியமான ஆதாரம். ஆமாம், நாங்கள் ரயில்வேயில்
பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்கு ஆதாரமாக
அதைத்தான் காட்டுவோம் என்கிறீர்களா? அ
-
அது ரயில்வே ஆதார அட்டை இல்லை. அதற்கான
பலன்களே வேறு! நிதி தொடர்பான தேவைகளுக்குப்
பயன்படுத்த வேண்டிய எண் அது.
-
மாத வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தால்
பரவாயில்லை. அது இல்லாமல் சேவைக்கான
பணத்தைப் பெறுபவராக இருந்தால் பணம் கொடுக்கும்
நிறுவனம் ட்டி.டி.எஸ் எனபபடும் அந்த
வருமானத்துக்கான வரியைப் பிடித்துக் கொள்ளும்
நடைமுறை இருக்கிறது.

-

அந்தத் தொகையை நம்முடைய கணக்கில் போட்டு
வைக்க வேண்டும். அதற்கு பான் கார்டு எண்தான்
உதவியாக இருக்கும். அப்படி பிடித்தம் செய்யப்பட்ட
தொகை எவ்வளவு என்பதை அறிய நமக்கு பான்
எண் அவசியம்.
-
இதோ வருமான வரி பற்றிய கருத்து வந்துவிட்டதே
என்று சொல்கிறீர்களா? உண்மைதான்! ஆனால்,
இது பெரிய அளவில் வருமானம் ஈட்டுபவர்களுக்கான
கருத்து. எவ்வளவு சம்பாதித்தாலும், வருமான வரிக்கு
பயந்து முறையாக கணக்கு காட்டாமல் சிலர்
இருப்பார்கள். அவர்களை வளைத்துக் கொண்டு
வருவதற்கான இந்த ஏற்பாடு. நிறுவனங்கள்
சம்பளமாகவோ சன்மானமாகவோ கொடுத்தால்
அதற்கான ட்டி.டி.எஸ். தொகையை பிடித்தம் செய்து
கட்டிவிட வேண்டும்.

சம்பளம் அல்லது சன்மானம் பெறுபவர் தன்
வருமான கணக்கைக் காட்டி அந்தத் தொகையை
திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
-
ஆக, எப்படியாக இருந்தாலும் பான் கார்டு வாங்க
வேண்டும் என்பது முடிவாகிவிட்டது.
-
----------------------
- சி. முருகேஷ் பாபு
நன்றி: குமுதம்

 

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: பான் கார்டு பெறுவதின் நன்மைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 19, 2014 3:12 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா நானும் இதுவரை பான் கார்டு எடுக்கல விரைவில் நானும் எடுத்துவிடுகிறேன்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum