"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இடைவெளியில் புயலாம்.......
by அ.இராமநாதன் Yesterday at 8:43 pm

» இல்லாமல்போன இடைவெளிகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:42 pm

» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி
by அ.இராமநாதன் Yesterday at 8:40 pm

» *இடைவெளி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:37 pm

» ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:35 pm

» ஒரு பக்க கதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 15, 2018 9:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Oct 14, 2018 7:00 pm

» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 7:44 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:28 pm

» டிப்ஸ் - மருத்துவம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:18 pm

» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:12 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 4:40 pm

» பிரியமானவனின் காதல் தருணங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 04, 2018 12:52 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Wed Oct 03, 2018 2:50 pm

» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
by அ.இராமநாதன் Mon Oct 01, 2018 12:05 am

» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:37 pm

» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:35 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:28 pm

» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:14 pm

» பல்சுவை களஞ்சியம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 7:02 pm

» பல்சுவை= தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:48 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:32 pm

» மொபைல் மனம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:30 pm

» வீல்ல்ல்ல்ல்ல்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:29 pm

» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:20 pm

» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்?
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:18 pm

» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:17 pm

» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:16 pm

» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 4:50 pm

» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:44 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:34 pm

» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...!!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:32 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:27 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Sat Sep 22, 2018 12:35 am

» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 10:56 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:56 pm

» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:54 pm

» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தூய்மை இந்தியா

Go down

தூய்மை இந்தியா

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 26, 2015 10:28 am

தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற...
-----------

ஒவ்வொருவரும் தனது வீட்டிலும், அலுவலகத்திலும் குப்பையைத் திரட்டி, சாலையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போடுவர். பிறகு, நகராட்சியால் குப்பை லாரியில் அவை எடுத்து செல்லப்படும். அந்தக் குப்பை எங்கு போகிறது, எப்படி சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்காமல் களையப்படுகின்றது என்பது பலருக்கும் தெரியாது.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்துள்ள "தூய்மை இந்தியா இயக்கம்' சந்திக்கும் தலையாயப் பிரச்னை, சேகரிக்கப்படும் குப் பையைக் கையாளுவதற்கானத் திட்டம் நாடு முழுவதிலும் அமல்படுத்தப்படவில்லை என்ற நிலைமையே ஆகும். தற்போது, பல நகரங்களிலும், கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட குப்பை, எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் எரிக்கப்படுகின்றன. கொட்டப்பட்ட குப்பை

யிலிருந்து கொசுக்கள் பெரிதளவில் பெருகி, தொற்று நோய் பரவுவதற்கு வழி ஏற்படுகிறது. பெரிதும் துர்நாற்றம் ஏற்பட்டு, சுகாதாரக் கேட்டிற்கு ஏதுவாகிறது. சென்னையில் பெரிதளவு குப்பை கொட்டப்படும் பெருங்குடி, கொடுங்கையூர் போன்ற இடங்களுக்குச் சென்று பார்த்தால் நன்கு புரியும்.

இந்தியா தூய்மை இயக்கத்தினை அறிவிப்பதற்கு முன், நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மாநகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்துகளிடம் குப்பையை சுகாதார ரீதியில் கையாளுவதற்குத் திட்டங்கள் உள்ளனவா? அதற்குத் தேவையான முதலீடு திட்டத்தை நிறைவேற்றத் தேவையான கால அவகாசம் போன்ற விவரங்களை மத்திய அரசு கேட்டு தெரிந்து கொண்டதா என்று தெரியவில்லை. நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தியா தூய்மை இயக்கத்தை மோடி அரசால் நல்லமுறையில் நிறைவேற்ற முடியாது.

நாடெங்கும் உள்ள நகரங்களிலும், கிராமங்களிலும், குப்பையைக் கையாளும் பணியைத் தொடங்காவிட்டால் தூய்மை இயக்கத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியாது என்பதே நிதர்சமான உண்மை. குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னையை அடுத்துள்ள பெருங்குடியில், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பல ஆண்டு

களாக பேசப்பட்டு வருகின்றது. இது குறித்து அறிய, மாநகராட்சி அலுவலர்களும், மேயர் மற்றும் கவுன்சிலர்களும் பல முறை வெளிநாடு சென்று வந்துள்ளனர். ஆனால், நடைமுறையில் எந்தவித செயல்பாடும், முன்னேற்றமும் தெரியவில்லை.

குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாயத்திற்கு உபயோகிக்கலாம். கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் குப்பையிலிருந்தும் கழிவு நீரிலிருந்தும் பல ரசாயன பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. கழிவு நீரிலிருந்து (ள்ப்ன்க்ஞ்ங்) ஆண்டிற்கு 50.000 டன் உற்பத்தி செய்யும் மெத்தனால் (ஙங்ற்ட்ஹய்ர்ப்) தொழிற்சாலை கனடா நாட்டில் இயங்கி வருகின்றது. இந்தியாவில் தற்போது ஆண்டொன்றிற்கு சுமார் 10 லட்சம் டன் மெத்தனால் நமது தேவைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. குப்பை மற்றும் கழிவு நீரிலிருந்து மெத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகளை பெரிதளவில் ஏற்படுத்தினால் நாடு பெரிதளவில் பயன்பெறும்.

கழிவு நீரிலிருந்து, கடற்பாசி விவசாயம் செய்யலாம். கடற்பாசி விளைவதற்குச் சுத்தமில்லாத கழிவு நீர் போதுமானது. வெளிநாட்டில் தற்போது கடற்பாசியிலிருந்து எண்ணெய் தயாரிக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் எத்தனால் போன்ற ரசாயனப் பொருள்கள் தயாரிக்கவும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

குப்பையையும் கழிவு நீரையும் கொண்டு பலவிதமான தொழிற்சாலைகள் ஏற்படுத்த மேலும் சாத்தியக்கூறுகள் பலவும் உள்ளன. இத்தகைய குப்பைகளைக் கையாளுவதில் நல்ல அணுகு முறையை அரசு தீர்மானித்து, அமல்படுத்துவது மிகவும் அவசியம். குப்பையை சேகரிப்பதிலும், அவற்றை தரம் பிரிப்பதிலும், அவற்றை சுகாதாரமுள்ள நன்மை தரக்

கூடிய முறையில் உபயோகிக்கவும், நமது நாட்டின் நிலைமைக்கு எற்ப திட்டம் அமல் செய்வது உடனடியான தேவை.

இத்தகைய விரிவான திட்டமில்லாமல் இந்தியா தூய்மை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று மோடி தொடங்கியுள்ள "இந்தியா தூய்மை திட்டம்' வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டியது, நாட்டு மக்களின் தலையாய கடமை.

நன்றி ;என்.எஸ். வெங்கட்டராமன், சென்னை.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தூய்மை இந்தியா

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 26, 2015 10:33 am

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கழிப்பறை வசதி 
-------------------------------
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, கிராம  புறங்களில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் 32 சதவீதம் அளவுக்கே கழிப்பறை வசதி உள்ளதாக புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன. கழிவறைகள் இல்லாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, 2019ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கழிப்பறை என்ற இலக்கை மத்திய  அரசு நிர்ணயித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகளை கட்டவும், இத்திட்டத்தை கண்காணிக்க உயர்மட்ட குழுவும் அமைக்கப்படுகிறது. 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கழிப்பறைகள் கட்டும் திட்டத்துக்கான கண்காணிப்பு பணி இன்று முதல் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  2019ம் ஆண்டில் காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதற்குள், ‘சுகாதாரமான இந்தியா’ என்ற குறிக்கோளுடன் அனைவருக்கும் கழிப்பறை  அமைக்க மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டு வருகிறது.

தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளது. கிராமப்புறங்களில் கழிவறை கட்டுவதற்கான நிதியுதவியை 10,000 ரூபாயில் இருந்து 12  ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கழிப்பறை கட்டுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசு முடிவு  செய்துள்ளது.

நன்றி ;தினகரன்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தூய்மை இந்தியா

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 26, 2015 10:37 am

தூய்மை இந்தியா’ திட்ட ஓராண்டு விளம்பர செலவு ரூ.94 கோடி
-------------
பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் விளம்பரத்துக்காக கடந்த ஓராண்டில் ரூ.94 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தெரியவந்துள்ளது

இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த சஞ்சய் சர்மா என்பவர் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014-15 நிதியாண்டில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விளம்பரம் மற்றும் பிரச்சாரத்துக்காக ரூ.2.15 கோடியை அரசு செலவிட்டுள்ளது. இதுபோல் அச்சு ஊடக விளம்பரத்துக்கு ரூ.70.8 லட்சமும், ஒலி மற்றும் காட்சி விளம்பரத்துக்கு ரூ.43.64 கோடியும், டிஏவிபி மூலம் தொலைக்கட்சி சேனல்களில் விளம்பரம் செய்ய ரூ.25.88 கோடியும், தூர்தர்ஷனுக்கு ரூ.16.99 கோடியும், வானொலிக்கு ரூ.5.42 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான நிதி மாவட்ட நிர்வாகம் மூலம் கிராம பஞ்சாயத்துகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சுகாதார திட்டம் மாநில அரசு பட்டியலுக்குட்பட்டது. எனவே, இதை செயல்படுத்த வேண்டியது மாநில அரசுதான். 

மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்டு வந்த நிர்மல் பாரத் அபியான் திட்டம்தான் இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு தொழிநுட்ப மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்துக்காக 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

Keywords: தூய்மை இந்தியா திட்டம், விளம்பரச் செலவு, மோடி அரசு, ஆர்டிஐ தகவல்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தூய்மை இந்தியா

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 26, 2015 10:40 am

கழிவறைகள், தூய்மை இந்தியா திட்டம் பெரு நிறுவனங்களுக்கானவையா?: 
----------------------

நாடாளுமன்ற ராஜ்யசபாவில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பெருநிறுவனங்களுக்கான பட்ஜெட் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் பள்ளிகளில் கட்டப்படும் கழிவறைகள் பெரு நிறுவனங்களுக்காகவா கட்டப்படுகின்றன? தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படை தூய்மையை பொதுமக்களுக்கு நாம் வழங்கவில்லையா? வீடு கட்டும் திட்டமும், ஜன் தன் யோஜனா திட்டமும் பெரு நிறுவனங்களுக்கான திட்டம் தானா? நாட்டில் உள்ள ஏழை மக்கள் நல்ல தரமான வாழ்க்கையை விரும்புகின்றனர். 

ஆகையால் தான் ஏழைகளுக்கு நல்ல வாழ்க்கை தர ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு காலத்தில் பா.ஜ.க.வை உயர் வகுப்பினருக்கான கட்சி என்று சிலர் கூறினர். ஆனால் எனது வளர்ச்சியை கண்டவுடன் அந்த எண்ணத்தை தற்போது அவர்கள் மாற்றிக்கொண்டனர். இது போன்ற கதைகள் இப்போது பழங்கதைகள் ஆகிவிட்டன. இன்றைய நிலையில் பா.ஜ.க. உயர் வகுப்பினருக்கான கட்சியல்ல என்றும், இந்தி மொழி பேசுபவர்களுக்கான கட்சியல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

என்னைக் கூட சிறைக்கு அனுப்புகிறோம் என்று 14 ஆண்டுகாலத்துக்கும் மேலாக மிரட்டியே வந்தனர். எதிர்கட்சிகளுடன் பேச்சு நடத்தி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு மாநில அரசும், ஒவ்வொரு பிரதமரும், ஒவ்வொரு அரசும் காரணம் என்று செங்கோட்டையில் நிகழ்த்திய உரையில் நான் தெளிவாக குறிப்பிட்டேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நன்றி; தினகரன்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தூய்மை இந்தியா

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 26, 2015 10:43 am

தூய்மை இந்தியா( தூசி இந்தியா)

--------------------
எங்காவது யாராவது ஒரு நிகழ்ச்சி நடத்தினால் உடனே அதை பின்பற்றுவது போல் காண்பித்துக் கொள்வதில் தான் நம் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்...ஆசை....அடடா..

அதைத் தான் என் பள்ளியும் செய்தது. அந்த அழகிய கொடுமையைக் கேளுங்களேன்

என் பள்ளி ஆயாக்களை வைத்து மிகக் கடுமையாக வேலை வாங்கி ஓரளவுக்குத் தூய்மையாகத்தான் இருக்கும். ( எங்களைப் போல் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவர்கள் தூய்மை கடைபிடிப்பது மிகப் பெரிய வல்லரசைக் கட்டி ஆள்வது போலத்தான்) சரி நிகழ்ச்சிக்கு வருவோம்

அன்று.....

அனைத்து ஆசிரியர்களும் ஒரு சிறிய பாலிதீன் கவரில் குப்பைகளைக் கொண்டு வந்தனர். அதைக் பார்த்ததும் எனக்குள் குழப்பமாக இருந்தது. ( பிரேயருக்கு முன்)

எப்போதும் தூய்மையான மைதானத்தில் நின்று பிரேயர் பாடும் நாங்கள் அன்று சிறிது குப்பைகளுக்குள் நின்று பாடினோம்.


வழக்கம் போல் அசெம்பளி ஆரம்பிக்கப்பட்டது. நமது பாரதப்பிரதமர் தூய்மை இந்தியா என்று சொல்லி இருக்கிறார். எனவே நாமும் தூய்மையாக இருக்க வேண்டும். நமது சுற்றுப்புறத்தை நாம் தூய்மையாக  வைத்துக் கொள்ள பாடுபட(? )வேண்டும் என்று ஒரு நீநீநீண்ண்ண்ண்ண்ண்ட பிரசங்கம் செய்தார். ( தூய்மைக்கும் அவர் பிரச்ங்கத்திற்கும் அவ்வப்போது சம்மந்தம் இருக்கிறார்போல் பார்த்துக் கொண்டார்.)

இப்போது நாம் தூய்மை செய்யப் போகிறோம் என்று சொல்லிவிட்டு.. மேலும் கொண்டுவந்திருந்த குப்பைகளை ஆங்காங்கே தூவி விட்டதோடு மாணவர்கள் சிலரை சாக்லேட்  சாப்பிட வைத்து அதையும் அங்கேயே போட வைத்தார்கள்

 (மற்ற நேரத்தில் தெரியாமல் ஒரு சிறு காகிதம் போட்டால் கூட” உங்களுக்கு யார் மீதும் இரக்கம் இல்லையா? ஒருவர் இதனை தூய்மை செய்ய என்ன பாடுபடுவார்?” என்று தேர்வு சமயங்களிலும் நிற்க வைத்து அட்வைசி நேரம் தின்பார்கள்.

ஆனால்  பல மாணவர்கள் முடிந்த அளவு தங்கள் பைகளில் இருந்த குப்பைகளைக் கொண்டு வந்து போட்டனர். பிறகு ஒரு ஆசிரியர் காபி குடித்து அங்கேயே பேப்பர் கோப்பைகளைப் போட்டார.

இப்படியாக போட்டவைகளை மாணவர்களே அள்ளினர். பல நிருபர்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் பணிபுரியும் அண்ணன்களும் சித்தப்பாக்களும் அதனை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மாணவிகளை  ” பாப்பா”  என விளித்து அப்படி பார்..இப்படித்திரும்பு...அங்கே பார்த்து நில் என்று பல்வேறு கட்டளைகளோடு...

மாணவ மணிகளும் எங்கே தனது புகைப்படம் அல்லது வீடியோவை தூய்மை இந்தியா திட்டம் அறிவித்த பிரதமர் மோடி அவர்களே கண்ணுற்று பாராட்டப் போவது போலவே “போஸ்” கொடுத்துக் கொண்டிருந்தனர்.  பல பேர் இரண்டு பீரியட் வீணானது குறித்து மகிழ்வுடன் காணப்பட்டனர். ஒரு மாணவன் கொரில்லாவிடமிருந்து தப்பித்தேன் என்று சப்தம் போட்டு சொல்லிக் கொண்டே  மகிழ்வாகக் காண்ப்பட்டான்.

( எங்கள் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்கள் அப்பா அம்மா வைத்த பெயர்தவிர இப்படியும் சில அன்பு வார்த்தைகளால் மாணவ மணிகளால் நாமகரணம் சூட்டப்பட்டு அன்போடு அழைக்கப்படுவார்கள் )

ஒரே ஒரு நன்மை மாணவர்கள் பலரில் தங்கள் பைகளை சுமந்து மட்டும் தான் வருவார்கள் அதனுள் என்ன இருக்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. அன்று அதைக் கண்டு” தெளிந்தனர்.”

ஏன் இந்த வேண்டாத வெட்டி வேலை?

(மீடியாக்கள் பல செய்திகளை இப்படித்தான் வெளியிடுகிறதோ?)

மறுநாள் அவ்ளோ பெரிய செய்தித்தாளில் ஒரு சிறிய (வள்ளுவரின் திருக்குறளை விடச் சிறிதாக ) செய்தி வந்ததால் இவர்கள் நாட்டுக்கோ அல்லது எங்களுக்கோ அறிவிக்க விரும்புவதும் தெரிவிக்க விரும்புவதும் என்ன?
 பொதுத் தேர்வுக்குத் தயாராகும் நிலையில் எங்களுக்கு இந்த நேரத்தை வீணடித்தது சரியா? ( படிக்க என்று நேரம் ஒதுக்கி விட்டு அந்த நேரத்தை இவர்களே பறித்துக் கொண்டார்களே)

இதையே நாங்கள் மட்டும்செய்திருந்தால் நீ எல்லாம் எதுக்கு ஸ்கூல் வரே????சே! வெட்டி தெண்டம் என்று திட்டும் இவர்களை யார் வெட்டி தெண்டம் என்று திட்டுவார்கள்?????

நன்றி சக்தி இன்னிசை
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தூய்மை இந்தியா

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 26, 2015 10:47 am

எது தூய்மை?: ஜெ.செல்வராஜ்
------------------------
தூய்மை இந்தியா, இந்தியாவில் எந்தவொரு திட்டமும் தலைகீழாகவே செயல்படுத்தப்படும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம். இந்தியா போன்றதொரு நாட்டில் ஆட்சியாளர்கள் பொதுவிட்த் தூய்மை பற்றி சிந்திப்பதே பெரிய விசயம் தான் . ஆனால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட விதமும் இதுவரை செயல்பட்ட விதமும் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. தெருவைச் சுத்தப்படுத்தினால் இந்தியா சுத்தமாகிவிடும் என்ற மாயத்தோற்றத்தையே தொடர்ந்து விளம்பரங்கள் மூலம் உருவாக்குகிறார்கள்.

தூய்மை இந்தியா திட்டத்தில் முதல் முன்னுரிமை கழிப்பிடங்களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். சென்னை போன்ற பெரிய நகரங்களில் கூட எல்லோருக்குமான சுகாதாரமான கழிப்பிட வசதியை அரசால் உறுதிசெய்ய முடியவில்லை. உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்று நாமெல்லாம் பெருமைப்படும் மெரினாவே அதிகாலையில் கழிப்பிடமாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கு போதுமான கழிப்பிடங்கள் சென்னையிலேயே இல்லாதபோது மற்ற நகரங்கள், கிராமங்களில் நிலைமை இன்னும் மோசம் தான். இதே நிலை தான் மற்ற மாநிலங்களிலும். எங்கேயாவது இருக்கும் பொது கழிப்பிடங்களும், கட்டண கழிப்பிடங்களும் சுத்தம் என்றால் என்ன என்று கேட்கின்றன? கழிப்பிடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும், மானியமும் கழிப்பிடங்களாக மாறுவதற்கு பதிலாக  அதிகாரிகளாலும் மக்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

கழிப்பிடமின்மையால் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுவது வேலைக்குச் செல்லும் பெண்களும்,பள்ளிக்குச் செல்லும் மாணவிகளும்தான்.மோடி அவர்களே, தெருவை கூட்டுவது போல போஸ் கொடுக்க பிரபலங்கள் என்று சொல்லப்படுபவர்களை அழைத்தீர்களே அதற்கு பதிலாக அவர்களை கழிப்பிடமில்லா அரசுப் பள்ளிகளில் ஆளுக்கொரு கழிப்பிடம் கட்டிக் கொடுக்கச் சொல்லியிருந்தால் எவ்வளவு

பயனுள்ளதாக இருந்திருக்கும். நீங்கள் எல்லோரும் போட்டோவிற்கு போஸ் கொடுத்தபடியே கூட்டி முடித்த தெருக்களில் மீண்டும் மீண்டும் குப்பைகளால் நிரப்பப் படுகின்றன. நீங்கள் கூட்டியதால் மட்டும் அந்தத் தெருக்கள் நிரந்தரமாக சுத்தமாகிவிடவில்லை. இந்திய மக்கள் எல்லோருக்குமான சுத்தமான, சுகாதாரமான கழிப்பிடங்களை  உறுதி செய்வதுடன் மனிதக் கழிவுகளை கையாள்வதில் மனிதர்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுத்து ஆக்கப்பூர்வமான முறைகளை செயல்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக கவனம் செலுத்த வேண்டியது கழிவு மேலாண்மை (Waste management) .கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்தாமல் சுத்தத்தைப் பற்றி பேசுவது  எவ்வளவு அபத்தம்? Reduce,Re-use,Recycle மற்றும் Restore இந்த நான்கு கூறுகளையும் உள்ளடக்கியதாக கழிவு மேலாண்மை அமைய வேண்டும்.

Reduce – குப்பைகளைக் குறைக்க வேண்டும். முதலில் இறக்குமதி செய்யப்படும் மலிவான பிளாஸ்டிக்காலான பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டும். பல்வேறு விதமான தொழிற்சாலைகளில் தயாராகும் பொருட்களில் எளிதில் மட்காத பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்கள் தான் தரமானது என்று மக்களை நம்ப வைத்துவிட்டார்கள் . பிளாஸ்டிக் பொருட்களை குறைப்பது நிச்சயம் சவாலானதுதான் . ஆனால் அரசு நினைத்தால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் .

Re-use – மறுபடி பயன்படுத்தக்கூடிய பொருட்களை அதிகமாக பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். பயன்படுத்தி தூக்கியெறியும் (Use and throw ) கலாச்சாரத்தை முடக்க வேண்டும். தெருக்களில் கொட்டப்படும் குப்பைகள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு இந்தக் கலாச்சாரம் தான் காரணம்.

Recycle – மறுசுழற்சிதான் கழிவு மேலாண்மையில் முக்கியப் பணி. கிராமங்கள்தான் இந்த விசயத்தில் எல்லோருக்கும் முன்னோடி. பிளாஸ்டிக் அறிமுகத்திற்கு முன்புவரை கிராமங்களில் குப்பைகள் பக்கத்து வீடுகளில் மாட்டுச் சாண சேகரிப்பிற்காக உருவாக்கப்பட்ட குழிகளில் சாணத்துடன் கொட்டப்பட்டு உரமாக விளைச்சல் நிலங்களில் தூவப்பட்டன. குப்பைகளிலிருந்து கண்ணாடி பாட்டில்கள் ,இரும்புகள் பிரித்தெடுக்கப்பட்டு பழைய இரும்புக்கடைகளில் போடப்பட்டன.அதனால் ,முன்பெல்லாம் கிராமங்களில் குப்பை என்று தனியாக எதுவும் இருந்ததில்லை . பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களின் வருகை இந்த பாரம்பரிய முறையைச் சிதைத்துவிட்டது.

எளிதில் மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனியாக பிரித்து மறுசுழற்சி செய்தாலே பாதி இந்தியா சுத்தமாகி விடும்.மட்கும் குப்பைகளை உரமாகவோ, உயிரி வாயு (bio gas ) வாகவோ மாற்றும் வகையில் திட்டம் செயல்படுத்த வேண்டும் . Biogas plant அமைக்க மானியம் கொடுக்கலாம் அல்லது ஒவ்வொரு தெருவிலும் அரசே Biogas plant அமைக்கலாம். இதன் மூலம் அதிகப்படியான குப்பைகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும். மட்காத குப்பைகளை தனியே பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பலாம். ஒவ்வொரு வார்டிலும் ஒரு மையம் அமைத்து பிளாஸ்டிக் பொருட்களை கிலோக் கணக்கில் மக்களிடமிருந்து பெற்று அதற்கு பணமும் கொடுக்கலாம்.

Restore – மீளுருவாக்கம் விசயத்தில் ஒட்டு மொத்த உலகநாடுகளே குற்றவாளிகள்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்ட இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதிலும் பணமாக்குவதிலும் காட்டும் ஆர்வத்தை வளங்களை மீண்டும் உருவாக்குவதில் யாருமே காட்டவில்லை. எந்த வளம் எங்கிருந்து எவ்வளவு எடுக்கப்பட்டதோ அந்த வளம் அதே அளவு அதே இடத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்யப்படாததால் இயற்கை சமநிலை பூமியெங்கும் பாதிக்கப்பட்டுள்ளது.

இயற்கையில் கழிவு என்பதே இல்லை. மனிதர்கள்தான் கழிவு என்பதை உருவாக்கி அதை சுத்தப்படுத்த வேறு மெனக்கெடுகிறோம். இயற்கையை நாம் ஒன்றும் காப்பாற்ற வேண்டியதில்லை. தன்னைக் காத்துக் கொள்ளும் பேராற்றல் இயற்கையிடம் இருக்கிறது. இயற்கை மீது நாம் கை வைக்காமல் (மணல் அள்ளுதல், மலையைக் குடைதல், காடுகளை அழித்தல் ,ஆலைக் கழிவுகளை கலத்தல்……) இருந்தாலே போதும். சுழற்சிதான் இயற்கையின் பலம். இந்த சுழற்சியில் நுண்ணுயிரிகள்தான் முக்கிய பங்காற்றுகின்றன. சில நுண்ணுயிரிகள் பல்வேறு விதமான உயிரினங்களில் நோயை ஏற்படுத்தினாலும் பல நுண்ணுயிரிகள்  எல்லா உயிரினங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன.

நன்மை தரும் நுண்ணுயிரிகளில் முக்கிய பங்குவகிப்பது மட்குண்ணிகள் தான். நாம் அனாவசியமாக தூக்கிப்போடும் பொருட்களையும்,இறந்து போன உயிரினங்களையும் ,கழிவுகளையும் மண்ணோடு மண்ணாக மட்கச் செய்யும் முக்கிய பணியை இந்த மட்குண்ணிகள் செய்கின்றன. பூமியின் கதாநாயகர்கள் இந்த மட்குண்ணிகள் தான். இந்த மட்குண்ணிகள் இல்லாத பூமியை ஒரு நொடி கூட கற்பனை செய்ய முடியவில்லை. இந்த நுண்ணுயிரிகளுக்கு முன்னால் மனிதனெல்லாம் ஒன்றுமேயில்லை. சுழற்சி இல்லாததுதான் மனிதனின் பலவீனம் .

எந்த உயிரினமும் தனது தேவைக்கு மீறிய எதையும் இயற்கையிடமிருந்து பெற முயல்வதில்லை மனிதனைத் தவிர. ஒரு பக்கம் பெருநிறுவனங்கள் மூலம் பலநூறு ஆண்டுகளாக சேர்த்துவைக்கப்பட்ட இயற்கையின் வளங்களை கொள்ளையடிக்க  அனுமதியளித்துவிட்டு மறுபக்கம் சுத்தத்தைப் பற்றி பேசுகிறார்கள். இயற்கையைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர்கள் தான் இங்கு ஆட்சி செய்கிறார்கள், சட்டம் இயற்றுகிறார்கள், பாடத்திட்டம் வகுக்கிறார்கள் ….

சுயஒழுக்கம், இந்தியாவில் எங்கு  தேடினாலும் கிடைக்காத பொருள். மற்றவர்களைப் பற்றி துளியும் கவலையில்லாமல்  தனக்கு வேண்டியதை குறுக்கு வழியில் அடையவே பெரும்பாலானோர் விரும்புகிறோம். எந்த இடத்திலும் நாம் வரிசையை பின்பற்றுவதேயில்லை. நமக்கு ஆயிரம் வேலை இருக்கலாம், அதே ஆயிரம் வேலை நமக்கு முன்னால் நிற்பவருக்கும் இருக்கும் என்று துளி கூட சிந்திக்க நாம் தயாரில்லை. குறுக்கு வழியில் தனக்கு வேண்டியதை திருட்டுத்தனமாக பெறுவதில் பெருமை வேறு. இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் நாம் குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடாமல் வீட்டிற்கு வெளியே ,தெருவில்,கழிவுநீர் வாய்க்கால்களில் (கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்படுவதற்கு நாம் அதில் போடும் குப்பைகளே முக்கிய காரணம்), பயணங்களின் போது சாலைகளில், நதியில்,கடலில்,காடுகளில் என்று  எந்த பிரக்ஞையும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் வீசியெறிகிறோம். இந்தியர்கள் சுய ஒழுக்கத்தைக் கற்காமல் இந்தியாவை ஒருபோதும் சுத்தப்படுத்திவிட முடியாது.

வளர்ச்சியின் பெயரால் இந்தியா ஏற்கனவே குப்பைத்தொட்டியாகத்தான் உள்ளது. மற்ற நாடுகளில் கையாளப் பயப்படும் சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் கழிவுகள் கப்பல்கள் மூலம் டன் கணக்கில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. தொழில்நுட்பத்தில் வளரச்சி பெற்ற நாடுகளே உடைப்பதற்கு அஞ்சும் அபாயக் கப்பல்கள் கழிவாக உடைப்பதற்காக இந்தியாவிற்கு வருகின்றன. ஆபத்து நிறைந்த இந்த வேலைகளில் பலியாவது அடிமட்டத் தொழிலாளர்கள்தான். இதில் பிரதமரான மோடி வளர்ச்சி பற்றியே பேசுகிறார். இன்னும் எவ்வளவு குப்பைகள் கொட்டப்படுமோ தெரியவில்லை.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக பெற்று அனைத்து விதமான நீர்நிலைகளையும் சிதைத்துக் கொண்டிருக்கும் பெருநிறுவனங்கள் வெளியேற்றுவதெல்லாம் கழிவு இல்லையா. அதைப் பற்றி யாரும் வாயே திறப்பதில்லை. விளம்பரத்தால் பிரதமர் ஆனதாக நம்பும் மோடி  அதே விளம்பரத்தால் இந்தியாவை சுத்தம் செய்து விடலாம் என நினைக்கிறார் போல.தற்போது மோடி பிரதமராக இருப்பதற்கு காங்கிரஸ் மீதான நீண்டகால வெறுப்பும் , மாற்றத்தை விரும்பிய மக்களின் மனநிலையும் தான் முக்கியக் காரணம் . மதவாதம் அல்ல.

மருந்துவிலை கட்டுப்பாட்டு கொள்கை நீக்கம் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்  முடக்கம் (தமிழகத்தில் 98 ஒன்றியங்களில் மட்டும் செயல்படுத்தப்பட இருப்பதால் 60 லட்சம் பேர் வேலையிழப்பார்கள் என்று சொல்கிறார்கள்) , மரபணுமாற்றம் செய்த பயிர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம், பாதுகாப்பு குறைபாடு மற்றும் மக்களுக்கு வீண் அலைச்சலைத் தரும் ஆதார் திட்டம் செயல்படுத்தல் என்று மோடி அரசு மக்களுக்கு பல சோதனைகளை செய்து வருகிறது . இன்னும் மக்களுக்கு என்னென்ன காத்திருக்கிறதோ தெரியவில்லை . யார் ஆட்சி செய்தாலும் பெருநிறுவனங்களுக்கு, மக்களை விட நிறைய சலுகைகள் கிடைக்கும் என்பது பொது விதியாய் போய்விட்ட்து .சாதாரண  மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மிகவும் குறைந்தபட்ச சலுகைகள் கூட பறிக்கப்படுவது வருத்தத்தைத் தருகிறது .

சர்க்கரை வியாதி இந்தியாவின் தேச வியாதியாக மாறி வருகிறது . புற்றுநோய் கால் பதிக்காத ஊரே இல்லை என்ற நிலை மாறி, கால் பதிக்காத வீடே இல்லை என்ற நிலையை நோக்கிச் செல்கிறது .உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. இதற்கு இந்திய அரசு என்ன பதில் வைத்திருக்கிறது? அனைவருக்குமான மருத்துவ வசதியை உறுதி செய்யவேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு இருக்கிறது . அமர்த்தியா   சென் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி குறிப்பிட்டு இருந்தார் .

மோடி, தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசுவதற்கும் பிரதமராக பேசுவதற்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிறது.

இந்துத்துவா சக்திகள் பாரதிய ஜனதா கட்சியின் பெரும்பான்மை ஆட்சியை  தவறாகப் பயன்படுத்துகின்றன . வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் அடையாளம் ;இந்தியாவின் பலம்.ஆனால், இந்துத்துவா சக்திகளின் செயல்பாடுகள் இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன . இதை கண்டும் காணாமலும் இருப்பது போல் இருக்கும் மோடிக்கும், பாரதிய ஜனதாவிற்கும் டெல்லியின் மக்கள் தங்கள் ஓட்டுகள் மூலம் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். மதவாதத்திற்கு எதிரான இந்திய மக்களின் மனநிலையை தலைநகர மக்கள் அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.

மோடி குடியரசு தின விழாவில் 10லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடை அணிந்ததைப் பற்றி ஊடகங்களையும் ,மக்களையும் பேச வைத்துவிட்டு திரைமறைவில் பல ஆண்டுகள் கிடப்பில் கிடந்த இந்தியாவிற்கும் ,இந்திய மக்களுக்கும் பாதகத்தை விளைவிக்கும் அணுமின்நிலைய விபத்து இழப்பீடு தொடர்பான ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டுள்ளார். இனி இந்தியாவில் அணுமின்நிலைய விபத்து ஏற்பட்டால் அதற்கு இந்திய அணுசக்தி கழகமே பொறுப்பேற்கும். உபகரணங்களை விற்பனை செய்த அமெரிக்க நிறுவனங்களை கேள்வி கேட்க முடியாது ;இழப்பீடும் கோர முடியாது.

மோடிஜி,  இப்ப தான் எங்களுக்கு ஒரு சந்தேகம் வருது. இந்த பக்கம் பகட்டாக தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்துவிட்டு அந்த பக்கம் அரசு சொத்துகளை கொஞ்சம் கொஞ்சமாக கார்பரேட் சொத்துகளாக மாற்றுகிறீர்களோ ? நீங்கள் வளர்ச்சி வளர்ச்சியென்று சொல்வது கார்பரேட்களின் வளர்ச்சியைத் தான் குறிக்கிறது. மறந்தும் கூட மோடியும் ,ஜேட்லியும் கிராமப் பொருளாதாரம் குறித்தோ கிராமத்தின் வளர்ச்சி குறித்தோ வாய் திறப்பதேயில்லை. இந்தியாவிலுள்ள கிராமங்களுக்கும் சேர்த்து தான் நீங்கள் பிரதமர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவைப் பொருத்தவரை உள்ளூர் பொருளாதாரம் தான் உலகப் பொருளாதாரம். கீழிலிருந்து மேல் நோக்கிய வளரச்சி தான் இந்தியாவிற்கு தேவை. மேலிருந்து கீழ் நோக்காத வளர்ச்சி தேவையில்லை.

மாறுபட்ட நில அமைப்புகளும் ,மாறுபட்ட வாழ்க்கை முறைகளும் , மாறுபட்ட நம்பிக்கைகளும் இருக்கும் தேசத்துக்கு ஒற்றைத் தன்மையான வளர்ச்சித் திட்டங்கள் என்ன பலனளிக்கும்?
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தூய்மை இந்தியா

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 26, 2015 10:58 am

‘தூய்மை இந்தியா’ சாத்தியமில்லாதது!
------------------------------
‘தூய்மை இந்தியா’ சாத்தியமில்லாதது!

மகாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி, மத்திய அரசு துவக்கிய, ‘தூய்மை இந்தியா’ திட்டம், வெறும்
அறிவிப்புகளால் மட்டும் வெற்றி அடையாது. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது, கடவுளிடம் பக்தி செலுத்துவது போன்றது என, காந்தி கூறினார். எனவே, கழிவுகளை அகற்றி சுத்தமாக இருக்க வேண்டும் என்பது, மக்கள் ஒவ்வொருவரின் ஆன்மாவில் இருந்தும் உருவாக வேண்டும். துஷார் காந்திமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்

மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை!

உ.பி., மாநிலத்தில் இருந்து, பா.ஜ., சார்பில், நிறைய எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு ஒத்துழைப்பு தருவதில்லை. விவசாயிகள் பிரச்னையில், மத்திய அரசு, அரசியல் விளையாட்டு விளையாடுகிறது. ஆனால், உ.பி.,யில் இதற்கு முன் இருந்த அரசுகளை விட, எனது அரசு, விவசாயிகளுக்கு நிறைய செய்துள்ளது.அகிலேஷ் யாதவ்உ.பி., முதல்வர் – சமாஜ்வாதி

கிரிமினல்கள் ஆதிக்கம் அதிகரிப்பு

ஜனதா தளம் கட்சிகள் ஒன்றிணைந்து, ஜனதா பரிவார் உருவாக்க முடிவு செய்த பின், பீகார் மற்றும் உ.பி.,யில், கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கயாவில் டாக்டர் தம்பதியர்
சமீபத்தில் கடத்தப்பட்டனர். அவர்களை விடுவிக்க, லக்னோவில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. இதிலிருந்தே, பீகார், உ.பி., மாநில கிரிமினல்கள் ஒன்றிணைந்துள்ளதை அறியலாம்.
சுஷில் குமார் மோடிபா.ஜ., மூத்த தலைவர் – பீகார்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தூய்மை இந்தியா

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 26, 2015 11:00 am

காந்தியும் தூய்மை இந்தியாவும்
-----------------
நாஞ்சில்நாடனின் மிதவை நாவலில் பம்பாய் சேரி பகுதிகளின் வாழ்க்கைச் சித்திரம் வரும். காலையில் ‘சண்டாஸ்’ கழிக்க கருக்கிருட்டில் ரயில் இருப்புப்பாதைகளுக்கு செல்ல வேண்டும். கருக்கிருட்டில் சென்றால் மட்டுமே கவுரவமாக கழிக்க முடியும். பெண்களும் ஆண்களுமாய் எல்லோருக்கும் அதுதான் ஒரேவழி. நிச்சயிக்கப்பட்ட பெண் மலக்குழியில் விழுந்ததால் பித்தாகும் காதலனின் சித்திரம் உறையவைக்கும்.

ஜெயமோகனின் புறப்பாடிலும் மும்பையின் மலக்குழி பற்றிய சித்திரம் வரும். அவருடைய ஒலைச்சிலுவை கதையிலும்கூட காலரா பற்றிய சித்திரம் விரியும். கிரெகரி டேவிஸ் எழுதிய ஷாந்தாராம் தாராவி சேரியின் பின்புலத்தில் விரிகிறது. சுந்தர ராமசாமி மொழியாக்கம் செய்த தகழியின் ‘தோட்டியின் மகன்’ நாவல் அவர்களின் உலகையும் அதிலிருந்து விடுபட வேண்டும் எனும் வேட்கையையும் பதிவு செய்கிறது. ஒவ்வொரு மழைகாலங்களிலும் கொள்ளை நோய் ஏற்பட்டு குடிசைகளுக்குள் நீர்புகுந்து மொத்தமாக உயிரை அள்ளிப்போகும் சித்திரங்களைதான் இப்படைப்புகள் அனைத்துமே வழங்குகின்றன. இப்படைப்புகள் காட்டும் அழிவின் சித்திரங்கள் பொது சுகாதாரம் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.  


சிந்து சமவெளி கழிப்பிடம் 


தனிச் சுகாதாரம் பேணுவதற்கு இந்திய மரபு விரிவான வழிமுறைகளை வகுத்திருக்கிறது. தனிச் சுகாதாரத்தை பேணும் நாம் பொதுச் சுகாதாரம் குறித்து அக்கறையற்ற சமூகமாகவே இருக்கிறோம். இந்த முரண் குறித்து காந்தியும் பேசியிருக்கிறார். நம் வசிப்பிடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனும் உந்துதல் நமக்கிருக்கிறது ஆனால் அந்தக் குப்பைகளை நம் வீட்டிற்கு வெளியே சாலையில் கொட்டுவதில் நமக்கு எவ்வித குற்ற உணர்வும் இல்லை. 

இந்தியாவின் மிகமுக்கியமான சவால் பொது சுகாதாரம் என்றே எண்ணுகிறேன். பெரும்தொகையிலான மக்களுக்கு இன்னும் கழிப்பறை வசதி சென்று சேரவில்லை என்பதே நிதர்சனம். சுமார் 638 மில்லியன் மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒவ்வொருநாளும் இந்தியா முழுவதும் தவிர்க்கக்கூடிய வயிற்றுப் போக்கினால் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் மரிக்கிறார்கள் என்கிறது மற்றொரு தகவல்.   

திறந்தவெளியில் மலம் கழிப்பது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எளிதாக வழிவகுக்கிறது. பிறப்புறுப்பில், மூத்திர பாதையில், குடலில் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவினால் வளர்ச்சி தடைபட்டு ஊட்டம் குன்றியவர்களாக ஆகிறார்கள். இன்றளவும்கூட மனிதர்கள் மலத்தைச் சுமந்து செல்லும், சுத்தம் செய்யும் அவலம் இங்கு நீடிக்கிறது.

சென்ற இதழில் வெளிவந்த நிகழ்கண காந்தி கட்டுரையில் நண்பர் கொண்டைவளை அளிக்கும் சித்திரம் மனிதநேயம் கொண்ட எவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்யும். மலம் அகற்றும் துப்புரவு தொழிலாளிகள் தொடர்ந்து சுரண்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் உயிர்களைப் பற்றி அக்கறை கொள்ள எவருமில்லை.

கழிப்பறை மிக முக்கியமான சமூக – பொருளாதார சிக்கலும்கூட. கழிப்பறை கட்டுவது மட்டுமல்ல அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வேண்டும். பெரும்பாலும் அரசு கட்டிக்கொடுக்கும் கழிப்பறைகள் பயன்படுத்த இயலாத அளவிற்கு பராமரிப்பின்றி கிடக்கின்றன. வருடத்திற்கு ஏழாயிரம் கோடி ரூபாய் கழிப்பறைகள் கட்டிகொடுக்க அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனாலும் திறந்தவெளி மல கழிப்பில் இந்தியாவே அகில உலக முதல்வன், அதிலும் அதன் அடுத்த நிலைகளில் இருக்கும் பதினெட்டு நாடுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இருமடங்கு அதிகமானவர்கள் திறந்தவெளியில்தான் மலம் கழிக்கிறார்கள்.

சிந்து சமவெளி காலகட்டத்தில் நீர் பயன்படுத்தப்பட்ட ஃபிளஷ் கழிப்பறைகள் புழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன என்பது ஒரு நகைமுரண்தான். உலகத்தில் முதன்முதலில் ஃபிளஷ் கழிப்பிடம் பயன்படுத்திய சமூகம்தான் இன்று இத்தனை பின்தங்கியிருக்கிறது.  

அரசின் திட்டங்கள் மக்களின் இயல்பு என இருபுள்ளிகளிலும் மாற்றம் நிகழ வேண்டும். நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின்கீழ் மானியத்தொகையில் கிராமப்புறங்களில் கழிவறை கட்டிக் கொடுக்க அரசு முன்வந்திருக்கிறது. ஆனால் மானியத்தொகை 4600 மட்டுமே வழங்கப்படுகிறது. அது கழிவறை கட்டுமானத்திற்கு போதியதாக இல்லை. மேற்கொண்டு பணம் போட்டு கட்டுவதற்கு மக்களும் விரும்புவதில்லை. நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் அறுபது சதவிகிதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

2011 புள்ளிவிவரப்படி அரசு உதவியின் கீழ் 71 மில்லியன் கழிப்பறைகள் கட்டிகொடுத்தாலும் இருபது மில்லியன் கழிப்பறைகள் பயன்பாட்டில் இல்லை. வடிவமைப்பில் பிராந்திய தேவைகள் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதே இது விடுக்கும் செய்தி.

திட்ட அளவில் அரசு உயர்ந்த நோக்கங்கள் கொண்டதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும்தான் இருக்கிறது ஆனால் அதை அமல்படுத்துவதில்தான் நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. அரசு நிர்வாகம் முழுமையான முனைப்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டால்தான் திட்டங்கள் வெற்றி அடைய முடியும். மேலும் பிராந்திய தேவைகள் மைய திட்டமிடலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இயந்திரத்தனமாக செயல்படுத்த முனையும்போது எல்லா இடங்களிலும் சம அளவிலான பலன்கள் வருவதில்லை. உள்ளூர் சூழலுக்கு ஏற்ப திட்டங்கள் தகவமைக்கபட வேண்டும்.     

கிராமாலயா அமைப்பு இருபது ஆண்டுகளுக்கு மேலாக கிராமப்புறங்களில் கழிப்பறைகளை கட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு செலவழிக்க இயலும்? ஒதுக்கப்படும் இடம் எவ்வளவு? மண்ணின் இயல்பு, நிலத்தடி நீர் போன்ற புவியியல் காரணிகள், பண்பாட்டு பழக்கவழக்கங்கள், நீர் பற்றாக்குறை/ நீர் இருப்பு, உரிய மனிதவளம் என இவ்வனைத்தும் கழிப்பறை வடிவமைப்பில் கணக்கில் கொள்ளப்படவேண்டும் என்கிறார்கள். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பத்து வடிவமாதிரிகளை இச்சுட்டி விவரிக்கிறது.       

   
காந்தியின் பேரன் அருண் காந்தி அவருடைய ஆசிரம வாழ்வை பற்றிய கட்டுரை ஒன்றில் கழிப்பகற்றல் குறித்தான காந்தியின் பார்வையை, தனது அனுபவத்தை முன்வைத்து விரிவாக எழுதுகிறார். 

“ஆசிரமத்துவாசிகள் அனைவரும் தயங்கிய, கடினமான பணியோன்று உண்டென்றால் அது ஆசிரமத்து பொது கழிவறைகளை சுத்தப்படுத்துவதுதான். காந்தி வேண்டுமென்றே தனி கழிவறைகளை அனுமதிக்கவில்லை. ஆசிரமத்தின் ஒரு மூலையில் இருந்த பொது கழிப்பிடத்தையே அனைவரும் பயன்படுத்தவேண்டும். சாதி அடக்குமுறை கழிவறை சுத்திகரிப்பில் இருந்து தொடங்குவதாக காந்தி எண்ணினார். இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அவர்களுடைய பணியின் காரணமாகவே தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தனர்.

"தாழ்த்தப்பட்ட சாதி மக்களே தெருக்களை கூட்டுவது, குப்பைகளை அகற்றுவது, பொது கழிப்பிடங்களை சுத்தம் செய்வது போன்ற கீழான பணிகளைச் செய்யத் தகுந்தவர்கள் என்று நம்பப்பட்டது. அவர்களுடைய பணி கீழானதாகக் கருதப்பட்டதால் அதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலியும் மிகக் குறைவாக இருந்தது. ஆதலால் அவர்கள் வறுமையிலும் அறியாமையிலும் காலம் கழிக்க வேண்டியதானது.

"விதிவிலக்கின்றி அனைவரும் கழிப்பிடங்கள் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டாக வேண்டும். முதன் முறையாக எனக்கு இந்த பணி வழங்கப்பட்டபோது, அது என்னை கொந்தளிக்கச் செய்தது. ஆனால், என் தாத்தா உட்பட அனைவரும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். நான் யாரிடம் சென்று புகார் செய்திட முடியும்? நான் எனக்கு கொடுக்கப்பட்ட பணியை கீழ்படிந்து செய்யத் தொடங்கினேன், காலப்போக்கில் என் ஆரம்பக்கால கொந்தளிப்புகள் அடங்கின. பணியின் மதிப்பையும் மகிமையையும் புரிந்துகொள்ள அது ஓர் வாய்ப்பாக இருந்தது."

துஷார் காந்தி மற்றும் அருண் காந்தி வெவ்வேறு கட்டுரைகளில் ஆசிரமத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை (சற்றே வேறு வார்த்தைகளில்) பதிவு செய்திருக்கிறார்கள்.

காந்தியின் உற்ற தோழரின் புதல்வர்  ஸ்ரீமன் நாராயன் செழிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து பிரித்தானியாவின் லண்டன் பொருளியல் கல்லூரியில் பொருளியல் பாடத்தில் பட்டம் பெற்று பெரும் கனவுகளுடன், மகத்தான யோசனைகளுடன் நாடு திரும்பியவர். குடும்பத் தொழிலை தொடர்வதற்கு முன்னர் காந்தியைக் கண்டு ஆசி பெற்று இந்தியாவின் வருங்காலத்தை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த விரும்பினார். காந்தி அவரை தன்னுடைய சேவாக்ராம் ஆசிரமத்தில் ஏற்றுகொண்டார். தனக்கு எதாவது பனி வழங்க வேண்டும் என அவர் கோரியபோது, மறுநாளிலிருந்து கழிவறை சுத்தபடுத்த வேண்டும் என காந்தி கூறினார்.

ஸ்ரீமன் நாராயன் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், எல்லா வேலைகளைச் செய்யவும் வேலையாட்கள் உண்டு. ஆனால் அவரால் காந்தியின் வாக்கை மீற இயலவில்லை. மிகுந்த மனக்கசப்புடன் முதல்நாள் அவ்வேலையை செய்தார். ஒருவாரம் கழிந்த பின்னர் காந்தியிடம் “பாபு நான் கழிப்பறைகளை இந்த ஒருவார காலம் சுத்தம் செய்துவிட்டேன். .நான் மற்றைய முக்கியமான பணிகளை எப்போது தொடங்குவது?” என கேட்டார். காந்தி திரும்பவும் அதே வேலைக்கு அனுப்பினார்.  ஒரு மாதம் கழிந்தது “ பாபு நான் லண்டன் பொருளியல் கல்லூரியில் பட்டம் பெற்றவன், என்னால் மகத்தான விஷயங்களை சாதிக்க இயலும், எனது திறமையை இப்படி கழிவறை சுத்தப்படுத்துவதிலேயே விரயம் செய்வது ஏனோ?” என வாதம்செய்தார்.

“நீ வெளிநாட்டில் கற்றவன், பெரிய விஷயங்களை உன்னால் சாதிக்க முடியும் என்பதெல்லாம் எனக்கு தெரியும், ஆனால் சிறிய விஷயங்களைச் செய்வதற்கு உண்டான தகுதி உன்னிடம் இருக்கிறதா என்பதை நான் இன்னும் அறியவில்லை. வறுமை ஒழிப்பு, வளர்ச்சி, கல்வி வழங்குதல் போன்ற பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என விரும்புவது புரிகிறது ஆனால் மிகக் கீழான வேலைகளைச் செய்வதற்கான மனப்பக்குவம் இல்லாது போனால் உனது தாய்நாட்டை சூழ்ந்திருக்கும் உண்மையான பிரச்சனைகளை நீ உணரமால் போய்விடலாம். உண்மையில் ஏதேனும் மாற்றங்களை உண்டாக்க விரும்பினால் நீ உனது அகந்தையை விட்டகல வேண்டும், அப்போதுதான் முக்கியத்துவமற்ற கீழான பணிகளைச் செய்வதற்கு தேவையான பணிவை உணர்ந்துகொள்ள முடியும், அதை கவுரவத்துடனும் மரியாதையுடன் செய்யத் துவங்கும்போது பெரிய காரியங்கள் எல்லாம் தானாக எளிதில் கைகூடும்.”  என்றார் காந்தி.       
 
காந்தி கழிவறை சுத்தத்தை இரு வகையில் அணுகினார் என்பது தெளிவாகிறது. ஒன்று எல்லாவித உடலுழைப்பும் சமமானதே எனும் கருத்தை நிறுவி ஏற்றத்தாழ்வை போக்க முனைந்தார் மற்றொன்று பொதுச் சேவையில் அகந்தையை விடுத்து களப்பணிக்கு தயார் செய்யும் நோக்கம். கொல்கத்தா காங்கிரஸ் நிகழ்வில் பங்கேற்க இந்தியா வரும் காந்தி மலக்குழிகளை தூய்மைப்படுத்தத் தொடங்குகிறார்.

தேசகட்டுமானத்தின் மிக முக்கியமான பகுதியாகவே கழிப்பிடத்தை கருதினார் என்பதற்கு இதுவே சான்று. அணு பந்தோபத்யாயா எழுதிய பகுருபி காந்தி எனும் நூலில் காந்தி எனும் தோட்டியை பற்றி விவரிக்கிறார். கொள்ளை நோய் காலங்களில் காந்தி வீடுவீடாகச் சென்று கழிப்பிடங்களை ஆய்வு செய்தார். செல்வந்தர்கள் வீட்டு கழிப்பிடங்கள் மிக மோசமாக இருந்ததைக் கண்டு வருந்துகிறார். 

காந்தி சுயாட்சியை ஒரு மரத்துடன் ஒப்பிட்டார். தீண்டாமை ஒழிப்பு, ஆக்கப்பூர்வ செயல்திட்டம், விடுதலை போராட்டம், போன்றவை எல்லாம் அதன் வேர்கள். எந்த வேருக்கு நீருற்றி பேணினாலும் அது மரத்திற்கான ஊட்டம்தான் என அவர் கருதினார். காந்திக்கு ஆங்கிலேய அரசிடமிருந்து விடுதலை பெறுவதைப் பற்றி எந்த அளவிற்கு கவலை இருந்ததோ அதேயளவு இந்தியர்களின் கழிப்பிட வழக்கங்களை பற்றிய கவலையும் இருந்தது. . 

“ விருந்தினர் அறை எப்படி சுத்தமாக இருக்கிறதோ அதேயளவு கழிப்பறையும் சுத்தமாக இருக்க வேண்டும் என முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னரே நான் கற்றுக்கொண்டேன். மேற்கிலிருந்துதான் இதைக் கற்றுக்கொண்டேன். கிழக்கைக் காட்டிலும் மேற்கில் கழிப்பறை தூய்மைக்காக பல விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுகிறார்கள் என்றே நம்புகிறேன்.” என்கிறார் காந்தி.  


சேவாக்ராம் - காந்தியின் கழிப்பறை 

நோய் பரவாமலிருக்க உரிய முறையில் மலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கருதினார். “நமது இந்திய கழிப்பிடங்கள் நமது நாகரீகத்தையே இழிவு செய்கின்றன. அவை அடிப்படைச் சுகாதார விதிகளுக்கு எதிரானவை.” என்று காந்தி 1925 ல் எழுதுகிறார்.

சேவாக்ராம் காந்தி ஆசிரமத்தில் உள்ள அவரது குடிலில் விசாலமான கழிப்பறை இருக்கிறது. திறந்தவெளி கழிப்பிடம் மட்டுமே புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் வேறுவழியின்றி எளிமையாக கட்டப்பட்டிருந்த காந்தி குடிலில் கழிப்பறை வசதி இருந்திருக்கிறது. காந்தி வடிவமைத்த கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவு சுற்றுவட்டாரத்தில் உள்ள வயல்வெளிகளுக்கு உரமாகும் வண்ணம் அமைந்திருக்கிறது. 

சமூக மாற்றத்தின் மிக முக்கியமான கருவியாக கழிப்பறையை சுத்தம் செய்தலை கருதினார் காந்தி. ஒரு சமூகத்தின் உண்மையான சுதந்திரம் மற்றும் பெருமை பொது மற்றும் தனி மனித சுகாதாரம் குறித்தான பார்வையில் அடங்கி இருக்கிறது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அடுத்த பிறவியில் தான் ஒரு பங்கியாக பிறக்க வேண்டும் என்றே விரும்பினார். 

இவ்வாண்டு காந்தி ஜெயந்தியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி முன்னெடுத்திருக்கும் ‘தூய்மை பாரதத்திற்கான முயற்சி வெற்று விளம்பரம் என விமர்சிக்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் நாட்டின் பிரதமர் கையில் துடைப்பத்துடன் தெருவில் இறங்கியதும், அவருடைய சவாலை ஏற்று வேறு பல முக்கிய ஆளுமைகளும் தூய்மையாக்கப் புறப்பட்டிருப்பதும் வரவேற்கபட வேண்டியதே. 

இரண்டாண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் சிலர் இணைந்து அருகில் உள்ள பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டோம். குச்சிகளை கூராக்கி, கையுறை, மூச்சுறை எல்லாம் அணிந்துகொண்டு மூன்று தெருக்களில் ஒரு காலைவேளை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பொறுக்கினோம். அந்தப் பகுதி மக்கள் சிறிது நேரம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துவிட்டு அகன்று சென்றனர். மூட்டை மூட்டையாக சேகரித்த மட்காத குப்பைகளை பேரூராட்சி குப்பை வண்டியில் சேர்ப்பித்தோம். அதன் பின்னர் ஒவ்வொரு வீடாக சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை விளக்கும் துண்டு பிரசுரத்தை அளித்தோம்.. படித்த இளைஞர்கள், வேறு பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களே தங்கள் பகுதியில் குப்பையை அகற்றினார்கள் எனும் செய்தி ஒரு முன்மாதிரியாக, தூண்டுகோலாக இருக்கும் என நம்பினோம். ஆகவே அதன் பின்னர் சொல்லப்படும் செய்திக்கு ஒரு மதிப்பு இருக்கும் என்றும் எண்ணினோம். இரண்டே வாரங்களில் அப்பகுதி பழையபடி ஆனது. தொடர்ந்து சில வாரங்கள் செய்திருந்தால் மாற்றம் ஏதும் நிகழ்ந்திருக்குமோ என்னவோ? தெரியவில்லை. 

இம்முயற்சிகள் பெருந்திறள் மக்களுடன் குறியீட்டு ரீதியாக உரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என்பதில் ஐயமில்லை ஆனால் இவை ஆரம்ப சூரத்தனங்களுடன் நின்றுபோய்விடகூடிய அபாயமும் இருக்கவே செய்கிறது. 

இது தீர்வை நோக்கிய பயணத்தின் ஒரு அடி எனும் தெளிவு அரசிற்கும் மக்களிற்கும் இருக்க வேண்டும். இத்துடன் சேர்ந்து நெடுங்காலத்திற்கு பலனளிக்கும் செயல்திட்டமும் இணைய வேண்டும். காந்தியின் கனவான மாசற்ற, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத, தூய்மையான இந்தியா நனவாக வேண்டும்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தூய்மை இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum