"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Today at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Today at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Today at 9:05 am

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Today at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Today at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Today at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Today at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Today at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Today at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Today at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Today at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Today at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Today at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Yesterday at 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Yesterday at 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 pm

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Yesterday at 2:30 pm

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Yesterday at 2:28 pm

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Yesterday at 2:25 pm

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Yesterday at 11:40 am

» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» கண்கலங்கிய அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:36 am

» சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 7:31 am

» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 7:29 am

» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
by அ.இராமநாதன் Yesterday at 7:27 am

» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
by அ.இராமநாதன் Yesterday at 7:24 am

» சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை
by அ.இராமநாதன் Yesterday at 7:22 am

» மகப்பேறு தரும் மகரந்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 am

» அரவிந்தரின் சாவித்திரி
by அ.இராமநாதன் Yesterday at 7:17 am

» இளவரசர் ஹாரிக்கு டப்பாவாலாக்களின் பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 7:14 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யானை பூஜித்த இறைவன்!

Go down

யானை பூஜித்த இறைவன்!

Post by அ.இராமநாதன் on Sat Jul 22, 2017 9:26 am

புராணங்களுடன் தொடர்புடைய தலங்கள் நம் நாட்டில்
அதிகமுள்ளன. அவற்றுள் ஒன்று, ஆதியில்
திருப்பிடவூர் என்றழைக்கப்பட்டு, தற்போது திருப்பட்டூர்
என்று வழங்கப்படும் தலம்.


ஒரு சமயம் நீரின்றி இத்தலம் வறண்டுவிட்டது.
புலிக்கால் முனிவர் என அழைக்கப்பட்ட வியாக்ரபாதர்,
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய தீர்த்தம்
கிடைக்காது மனவேதனையடைந்தார்.


அச்சமயம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரருக்கு
அர்ச்சனை செய்வதற்காக கயிலாயத்திலிருந்து
வௌ்ளை யானையில் இந்திரன் தீர்த்தத்தை எடுத்துக்
கொண்டு வான் வழியாக பயணம் செய்வதைப்
பார்த்தார்.


உடனே வௌ்ளை யானையிடம் திருப்பிடவூர்
சிவபெருமானுக்க பூஜை செய்ய கொஞ்சம் தீர்த்தம்
கொடு என்று கேட்டார். வௌ்ளை யானை முடியாது
என்று கூறி, மறுத்துவிட்டது.


இதைக் கேட்ட முனிவருக்க கோபம் தலைக்க ஏறியது.
தனது புலிக்கால் நகரங்களால் தரையைத் தோண்டினார்.
உடனே சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை
கீழே இறங்கி வந்தது. அவர் தோன்டிய இடத்தில் தண்ணீர்
ஊற்றெடுத்துப் பெருகிறது. அந்த நீரைக் கொண்டு
முனிவர் சிவ பூஜை செய்தார்.


அந்த நீர் ஊற்று திருக்குளமாக மாறி, அதுவே
புலிப்பாய்ச்சி தீர்த்தம் என்று இப்போது அழைக்கப்
படுகிறது.


முனிவரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதால் வௌ்ளையானை
திருவானைக்காவலுக்கு தாமதமாக வந்தது.
தாமதத்திற்கு என்ன காரணம் என்று ஜம்புகேஸ்வரர்
கேட்க, முனிவர் தண்ணீர் கேட்ட விபரத்தையும், தான்
அவருக்கு தண்ணீர் தர மறுத்த விபரத்தையும் அவரிடம்
கூறியது வௌ்ளை யானை.


உடனே முனிவருக்க தண்ணீர் கொடத்து விட்டு வரும்படி
ஜம்புகேஸ்வரர் பணிக்க, வௌ்ளை யானை மீண்டும்
திருப்பிடவூர் திரும்பி, தீர்த்தம் எடுத்துக் கொள்ளும்படி
முனிவரிடம் கூறியது. ஆனால், கோபத்துடன் இருந்த
முனிவர் வேண்டாம் என மறுத்துவிட்டார்.


எனவே, வௌ்ளை யானை தன்னிடமிருந்த தீர்த்தத்தை
கொண்டு தானே சிவபெருமானுக்க அபிஷேகம் செய்து,
வழிபட்டது. இந்த வரலாற்று சம்பவம் நடந்த தலம்,
திருப்பிடவூர் அதுவே காலப்போக்கில் திருப்பட்டூர்
என்று மாறிவிட்டது.


பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில்
அருள்பாலிக்கும் இறைவன் காசிவிஸ்வநாதர்,
இறைவி காசி விசாலாட்சி. ஆலயத்திற்கு தென்
முகமாக நுழையும்போது முதலில் பலிபீடமும், நந்தியும்
உள்ளன.அடுத்து புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்
படும் வியாகரபாத முனிவரின் ஜீவசமாதி உள்ளது.


அதைக் கடந்து உள்ளே சென்றால் நேர் எதிரே அம்மன்
சன்னதியும், இடதுபுறம், இறைவன் சன்னதியும்
கிழக்கில் புலிப்பாய்ச்சி தீர்த்தம் என அழைக்கப் படும்
திருக்குளமும் உள்ளது.


இந்தத் தீர்த்தம் கங்கைக்க இணையாகக் கருதப்
படுகிறது. எனவே ஆலயத்திற்கு வரும் பக்தர்கள்
தெற்கு வாசலையே பயன்படுத்துகின்றனர். கிழக்குப்
பக்கம் இறைவன் சன்னதிக்க எதிரே பிராகாரத்தில்
நந்தியும் பலிபீடமும் உள்ளன.


இறைவனின் கருவறைக் கோட்டத்தில் வலம்புரி
விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா,
துர்க்கை திருமேனிகள் தரிசனம் தர, வடக்கு
பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.


இந்த ஆலயத்தின் உட்பிராகாரம் ஓங்கார வடிவத்தில்
அமைக்கப்பட்டுள்ளதும், மதில் சுவரில் மகரமீன்,
அன்னப் பறவைகள் விதவிதமான பாம்பு இனங்கள்
சுதை வடிவத்தில் காணப்படுவதும் சிறப்பான
அம்சமாகும்.


தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
இந்த ஆலயத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும்
விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நடைபெறுகின்றன. பௌர்ணமியன்று சுமார்
ஆயிரம் பேருக்கு அன்னதானமும், கிரிவலமும், ஐப்பசி
பௌர்ணமியில் இறைவன் இறைவிக்கு
அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.


இத்தலத்தில் வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி
முனிவரும் இறைவனிடம் ஐக்கியமானதாக ஐதிகம்,
வியாக்ரபாத முனிவரின் ஜீவசமாதியின் முன் நின்று
பிரார்த்தனை செய்து கொண்டால் உடல் உபாதைகள்
நீங்கும் என்பதும்; மனநிலை சரியில்லாதவர்கள்,
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம்
உள்ளவர்கள் புலிப்பாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி
இறைவனை வழிபட்டால் பயன் பெறலாம் என்பதும்
பக்தர்களின் நம்பிக்கை.



எங்கே இருக்கு:

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 30 கி.மீ.
தொலைவில் உளளது சிறுகனூர். இங்கிருந்து மேற்கே
4 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர்.

தரிசன நேரம்: காலை 8-12; மாலை 5-7

———————

– மல்லிகா சுந்தர்
குமுதம் பக்தி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27960
Points : 61446
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum