"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள்! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 19, 2018 10:27 pm

» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Aug 18, 2018 4:51 pm

» கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Aug 17, 2018 11:07 pm

» வாழ்வின் நிசங்கள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Aug 17, 2018 11:06 pm

» காந்தக் கண்ணழகி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Aug 17, 2018 11:06 pm

» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Aug 17, 2018 11:05 pm

» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Aug 17, 2018 11:04 pm

» வெளிச்சத்தில் ஒரு கனவு! நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Aug 17, 2018 10:50 pm

» பார் போற்றும் பாரதி ! தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Aug 17, 2018 10:43 pm

» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Aug 17, 2018 10:41 pm

» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 3:01 pm

» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:53 pm

» மிக உயர்ந்த சிகரங்கள்
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:49 pm

» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:45 pm

» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:16 pm

» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:09 pm

» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:06 pm

» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:51 pm

» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:41 pm

» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:35 pm

» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:33 pm

» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:08 pm

» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:06 pm

» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:05 pm

» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:59 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 12:03 am

» நகைச்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:56 pm

» 5 வரி கதைகள் -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:52 pm

» அருவிகூட ஜதி இல்லாமல்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 10:06 pm

» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:17 pm

» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:16 pm

» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:13 pm

» மீண்டும், நீயா!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:12 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:04 pm

» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:03 pm

» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:01 pm

» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:59 pm

» ராஜமௌலி படம் சமந்தா பதில்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:56 pm

» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:31 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:30 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:27 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’- சினிமா விமரிசனம்

Go down

கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’- சினிமா விமரிசனம்

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2018 3:32 am

[You must be registered and logged in to see this link.]


சாவித்திரி – ஐம்பது, அறுபதுகளில் தென்னிந்தியா 
கொண்டாடிய ஒரு நடிகை. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் 
சாவித்திரியை மனத்தளவில் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே
 கருதுமளவிற்கு அவரது இயல்பான நடிப்பும் புகழும் கொடி 
கட்டிப் பறந்தன. 

இன்றும் கூட ஆணாதிக்கம் நிலவும் திரைத்துறையில் தனது 
அபாரமான திறமையினால் தனக்கென ஒரு பிரத்யேகமான 
இடத்தையும் அங்கீகாரத்தையும் அடைந்த நடிகைகளுள் 
சாவித்திரி தனித்துவம் கொண்டவர்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த அந்தச் சிறுமி, தனக்குள் 
இயல்பாகப் படிந்திருக்கும் கலைத்திறமையினால் சினிமா 
வாய்ப்பு தேடி சென்னை வந்தார். 

துவக்கத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் அவரது வளர்ச்சி
 சீரான ஏறுமுகத்தில் அமைந்தது. ஏற்கெனவே திருமணம் 
ஆகியிருந்த சக நடிகரைக் காதலித்து மணம் புரிந்தார். 

அவருடைய வளர்ச்சியின் வேகத்தைப் போலவே வீழ்ச்சியும் 
அமைந்தது. அதற்குப் பின்னால் நிறைய சோகங்களும் 
துரோகங்களும் இருந்தன.

சாவித்திரியின் வாழ்க்கை ஒரு காவியத் திரைக்கதைக்கு 
நிகரானது. எனவே அது திரைப்படமாக ஆனதில் ஓர் ஆச்சரியமும் 
இல்லை. அது அவசியமும் கூட. 
இயக்குநர் நாக் அஷ்வின் இந்த முயற்சியை அபாரமாகச் 
சாத்தியமாக்கியுள்ளார்.  
-
----------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’- சினிமா விமரிசனம்

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2018 3:32 am

-
மயங்கிய நிலையில் இருக்கும் சாவித்திரியின் உடல், 
மருத்துவமனையில் கவனிப்பாரின்றிக் கிடக்கும் பரிதாபத்துடன் 
இந்தத் திரைப்படம் துவங்குகிறது. சாவித்திரி கோமாவில் 
விழத் துவங்கிய எண்பதுகளின் காலக்கட்டம் அது.

மதுரவாணி (சமந்தா) என்கிற இளம் பத்திரிகை நிருபர், சமையல்
 குறிப்பு எழுதுவது போன்ற சலிப்புகளுக்கு இடையே சவாலான 
பணியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். 

நடிகை சாவித்திரி மருத்துவமனையில் கோமா நிலையில் 
இருக்கும் செய்தியைப் பற்றி எழுத அவர் பணிக்கப்படுகிறார். 
அசுவாரசியத்துடன் இந்த வேலையைத் துவங்கும் மதுரவாணி, 
சாவித்திரி என்கிற பிரம்மாண்ட ஆளுமையின் விஸ்தீரணத்தைப் 
பிரமிப்புடன் அறியத் துவங்குகிறார். 

அவருடைய தேடல் பயணத்தில் நாமும் இணைந்து கொள்கிறோம். 
சாவித்திரி பிறந்து வளர்ந்து நடிகையாகி பிறகு வீழ்ந்த காலக்
கட்டங்களும், மதுரவாணியின் எண்பதுகளின் காலக்கட்டமும் 
மாறி மாறி காட்டப்படுகின்றன.

சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ். அவருடைய வாழ்நாள் சாதனையாக
 இத்திரைப்படம் இருக்கக்கூடும். தேசிய விருதை எளிதில் அடையக்
கூடிய, அதற்கு முற்றிலும் தகுதியான அபாரமான நடிப்பு. 

‘இத்தனை கனமான பாத்திரத்தை இவரால் சுமக்க முடியுமா?’ 
என்று எழுந்த கேள்விகளுக்கெல்லாம் தனது விஸ்வரூப நடிப்பைத் 
தந்து வாயடைக்கச் செய்திருக்கிறார். 

திறமையான உடல்மொழி, ஒப்பனை போன்றவற்றின் மூலம் 
பெரும்பான்மையான காட்சிகளில் கீர்த்தியின் வழியாக
 சாவித்திரியே வெளிப்பட்டிருக்கிறார் எனலாம். 

சாவித்திரியின் உடல்மொழி ஒரு வளர்ந்த குழந்தைக்குரியது. 
அந்தத் துடுக்குத்தனமான நகைச்சுவையையும், நடிப்பென்று 
வந்துவிட்டால் ராட்சசியாக மாறி விடும் ஆச்சரியத்தையும் 
கீர்த்தி கச்சிதமாக நகலெடுத்துள்ளார்.  
-
---------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’- சினிமா விமரிசனம்

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2018 3:33 am

ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான். தோற்றப் பொருத்தம் 
இல்லாத குறையை தனது அபாரமான நடிப்பால் ஈடு
கட்டியிருக்கிறார். சாவித்திரி மீது உருவாகும் காதலையும், 
பிறகு சாவித்திரிக்குக் கிடைக்கும் அபரிதமான புகழினால் 
தனக்கு ஏற்படும் மனக்கொந்தளிப்பையும் தாழ்வு மனப்
பான்மையையும் கச்சிதமாக பிரதிபலித்திருக்கிறார். 

சாவித்திரியின் வாழ்க்கையில் ஜெமினி கணேசனின் பாத்திரம் 
முக்கியமானதுதான் என்றாலும், ஒரு பெண் மைய திரைப்படத்தில் 
நடிக்கத் தயங்காத துல்கர் சல்மானின் துணிச்சலும் 
அர்ப்பணிப்பும் வியக்கத்தக்கது.

சாவித்திரியின் ஆரம்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த 
பெரியப்பா வேடத்தை ராஜேந்திர பிரசாத் மிக இயல்பாகக் 
கையாண்டுள்ளார். நாகேஸ்வர ராவாக நாக சைதன்யா, 
ரங்கா ராவாக மோகன்பாபு, சாவித்திரியின் இளம் வயது 
தோழியாக ஷாலினி பாண்டே, அலூரி சக்ரபாணியாக 
பிரகாஷ்ராஜ், பெரியம்மாவாக பானுப்பிரியா .. என்று பிரபல 
நடிகர்கள் பலர் சிறு பாத்திரங்களில் தோன்றி மறைகிறார்கள்.

இத்திரைப்படத்தின் தரவுகளுக்காகவும் அவற்றைக் காட்சிகளின் 
வழியாகக் கொண்டு வருவதற்காகவும் இயக்குநர் 
நாக் அஷ்வின் மிகவும் உழைத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு
 காட்சியிலும் தெரிகிறது.

 சாவித்திரியின் வாழ்க்கை வழியாக ஒரு காலக்கட்டத்திய
 தென்னிந்திய சினிமாவின் நகர்வுகளையும், முக்கியத் 
தருணங்களையும் நாம் அறிந்து கொள்ளவும் அதன் மூலம் 
மீள் நினைவுகளில் ஆழவும் முடிகிறது. சித்தார்த் சிவசாமியின் 
திரைக்கதை சில போதாமைகளுடன் இருந்தாலும் 
துல்லியமாகவும் சலிப்பு ஏற்படுத்தாத சுவாரசியத்துடனும் 
உருவாக்கப்பட்டுள்ளன.

‘மதராசப்பட்டினத்தின்’ டிராம் வண்டி முதல் எண்பதுகளின்
 லூனா வரை பின்னணிகளில் தோன்றும் பொருள்கள் 
காட்சிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன. 

விஜயா – வாகினி ஸ்டுடியோவின் உட்புறக்காட்சிகள் முதற்
கொண்டு கலை இயக்குநரின் அசாத்தியமான உழைப்பு பல 
காட்சிகளில் வெளிப்படுகிறது.
-
------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’- சினிமா விமரிசனம்

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2018 3:33 am

நடனமங்கை, நடிகை, பாடகி, தயாரிப்பாளர், இயக்குநர் என்று 
பல பரிமாணங்களில் இயங்கிய சாவித்திரியின் வாழ்க்கை 
வேகமாக சுழலும் ராட்டினத்திற்கு ஒப்பானது. 

மூன்று மணி நேரத்திற்குள் இவற்றை அடக்குவது ஒரு சவால் 
என்றாலும், முக்கியமான சம்பவங்களை ஒரு கச்சிதமான
 ஒத்திசைவுடன் நகர்த்திக் கொண்டு வருவதில் எடிட்டர் 
கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் வெற்றி பெற்றிருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் டேனி சான்செஸ்-லோபஸ்ஸின் கேமரா 
வழியாகக் கடந்த காலம் உயிர்பெற்றிருக்கிறது. 
படமாக்கப்படும் காட்சிகள் மட்டும் கருப்பு  வெள்ளையில் 
காட்டப்படுவதின் மூலம் கால மயக்கத்தை உருவாக்கி
இருக்கிறார்கள். 

குடிப்பழக்கத்தினால் சாவித்திரியின் வீழ்ச்சி துவங்குவதைத் 
தலைகீழான காட்சி ஒன்றின் வழியாக உணர்த்தியிருப்பது 
அருமை.

“பெண் அழுதா பாருக்கே தெரியும். ஆண் அழுதா Bar-க்கு 
மட்டும்தான் தெரியும்”, 

“வேண்டாத கல்யாணம் தேடி வந்தது, வேண்டி நிற்கிற 
காதல் வரமாட்டேங்குது” என்பது போன்ற, சூழலுக்கு ஏற்ப 
எழுதப்பட்ட திறமையான வசனங்கள் கவர்கின்றன.
 (தமிழில் மதன் கார்க்கி). மிக்கி மேயரின் அற்புதமான 
பின்னணி இசை, கடந்த காலப் பின்புலத்துடன் பொருந்தி
 நிற்கிறது. 

மெல்லிசைப் பாடல்கள் இனிமையாக உள்ளன.  
-
------------------------------------------------
By சுரேஷ் கண்ணன்
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’- சினிமா விமரிசனம்

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2018 12:52 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’- சினிமா விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum