"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Dec 04, 2018 1:57 pm

» பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Dec 04, 2018 12:39 am

» ஆயிரம் ஜன்னல் வீடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Dec 03, 2018 7:20 pm

» சமுதாயச் சாளரம்! நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Dec 03, 2018 6:51 pm

» .தமிழ் போலாகுமா? நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Dec 03, 2018 6:42 pm

» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:19 pm

» மழையே மழையே..
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:13 pm

» கண்களுக்கு பயிற்சி
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:11 pm

» பனித்துளிகள்
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:35 pm

» தெரிந்ததும் தெரியாததும்!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:21 pm

» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா?
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:20 pm

» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:15 pm

» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...!!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:11 pm

» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:54 pm

» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:43 pm

» கஸல் கண்ணிகளின் தொடர்...
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 7:47 pm

» வலிகளைப் பழகலாம் வா! - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 7:09 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Nov 29, 2018 9:56 pm

» கவிச்சுவை ! நூலாசிரியர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா
by eraeravi Thu Nov 29, 2018 8:40 pm

» ஹைக்கூ 500 ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் !
by eraeravi Tue Nov 27, 2018 8:20 pm

» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Nov 27, 2018 7:59 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Nov 23, 2018 9:25 pm

» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது !!
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 2:07 pm

» தனிமையிலே இனிமை காண முடியுமா?
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 1:43 pm

» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்! -
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 1:34 pm

» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 12:57 pm

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:58 am

» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை !
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:56 am

» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே ! - கவிதை
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:51 am

» தர்ம்பிரபு - சினிமா
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 9:09 am

» நடிகை சுவாதி
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 9:07 am

» ஏண்டா, கையில என்னடா கத்தி..?
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 11:50 am

» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 11:06 am

» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 10:03 am

» பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Nov 18, 2018 9:37 pm

» புன்னகை செய்யலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Sun Nov 18, 2018 8:55 pm

» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
by அ.இராமநாதன் Sat Nov 17, 2018 9:40 am

» இணைய வெளியினிலே...
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:46 am

» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:43 am

» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:39 am

» ஆரோக்கிய வாழ்விற்கு....
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:35 am

» சிரிப்’பூ’ - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:29 am

» காரணம் கூற வேண்டாம்...!
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:27 am

» வலைதளத்திலிருந்து...
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:02 am

» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...!
by அ.இராமநாதன் Thu Nov 15, 2018 11:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சினிமா -முதல் பார்வை: செம

Go down

சினிமா -முதல் பார்வை: செம

Post by அ.இராமநாதன் on Sat May 26, 2018 11:58 am

[You must be registered and logged in to see this image.]
மாமனாருக்குத் தெரியாமல் அவர் மகளை மணம் முடித்து 
இறுதியில் அவரை சமாதானம் செய்தால் அதுவே 'செம'.

காய்கறி, மீன், கருவாடு என கிடைத்த பொருட்களையெல்லாம் 
விற்கும் வேலை செய்து வருகிறார் ஜீ.வி.பிரகாஷ். ஒரு நள்ளிரவில் 
குடுகுடுப்பைக்காரர் இந்த வீட்டில் 3 மாதத்துக்குள் ஒரு நல்லது 
நடக்கவில்லை என்றால் ஆறு வருடங்களுக்குப் பிறகுதான்
 நல்லது நடக்கும் என்று சொல்லிவிட்டுப் போகிறார். 

இதனால் பதறிப்போகும் அம்மா சுஜாதா மகனுக்கு கல்யாணம்
 செய்து வைப்பதில் தீவிரம் காட்டுகிறார். பார்க்கிற பெண்கள்
 எல்லாம் வேண்டாம் என்று ஏதோ ஒரு காரணத்திற்காக மறுக்க, 
அர்த்தனா பினு வீட்டில் மட்டும் சம்மதம் சொல்ல, ஜீ.வி.பிரகாஷ் 
தேவதையே தனக்கு மனைவியாகக் கிடைத்துவிட்டதாகக் 
கொண்டாடுகிறார். 

சுற்றமும் நட்பும் சூழ பூ வைக்கப் புறப்பட்ட பிறகு அங்கு தடை
 ஏற்படுகிறது. அர்த்தனா பினுவின் தந்தை நிச்சயதார்த்தை
 திடீரென்று நிறுத்த, ஜீ.வி.யின் அம்மா தற்கொலைக்கு 
முயற்சிக்கிறார். இந்த சூழலில் அந்த நிச்சயதார்த்தம் என்ன 
ஆனது, அம்மா சுஜாதாவைக் காப்பாற்ற முடிந்ததா, 
ஜீ.வி.யாரை திருமணம் செய்துகொள்கிறார் போன்ற 
கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது 'செம'.

 
குடும்பப் பாங்கான கதையைக் கொடுக்க வேண்டும் என்ற 
எண்ணத்தில் முகம் சுளிக்கும் காட்சிகள் வைக்காமல் கண்ணியம் 
காத்திருக்கும் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்தை வாழ்த்தி 
வரவேற்கலாம்.

அச்சுபிச்சு காமெடிப் படம், அடல்ட் காமெடிப் படம் என்று 
இல்லாமல் ஓட்டப்பாதையில் உறுத்தல் இல்லாத ஒரு கதையைத் 
தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அவரின் அந்த 
அக்கறையைப் பாராட்டலாம். ஆனால், நடிப்பில் ஜீ.வி. எந்த 
மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை. 

வருத்தப்படுவதை வார்த்தைகளில் கூட சரியாக வெளிப்
படுத்தவில்லை. அம்மா மீதான அன்பையோ, காதலின் 
ஆழத்தையோ, பிரச்சினைகளுக்கிடையே இருக்கும் சூழலின் 
தீவிரத்தையோ உணர்ந்து நடிக்காமல் ஜாலிப் பையனாகவே 
வந்து போகிறார்.

அர்த்தனா பினு நாயகிக்கான பங்களிப்பை மிகச் சரியாகச் 
செய்கிறார். தந்தை மீதான பாசத்தையும், கணவர் மீதான 
காதலையும் இயல்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். 
சில இடங்களில் தன் வருகையால் ரசிக்க வைக்கிறார்.

படத்தின் முதல் பாதியை ஒற்றை ஆளுமையாக இருந்து 
காப்பாற்றுகிறார் 'யோகி' பாபு. சந்தர்ப்ப சூழல் பார்க்காமல் 
அவர் பேசும் வசனங்களில் மட்டும் சில சமயங்களில் சிரிக்க 
முடிகிறது.

ஜீ.வி.பிரகாஷின் அம்மாவாக சுஜாதா பொருத்தமான பாத்திர 
வார்ப்பு. கோவை சரளாவையும், மன்சூர் அலிகானையும் 
வீணடித்திருக்கிறார்களே என்று யோசிக்கும்போது ஒரே ஒரு 
காட்சியில் ஸ்கோர் செய்து கடமையை முடித்துக்கொள்கிறார்கள்.

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. 
ஜீ.வி.பிரகாஷ் இசையில் சண்டாளி, நெஞ்சே நெஞ்சே பாடல்கள் 
ஓ.கே.ரகம். பின்னணி இசை படத்துக்குப் பொருத்தம். 
பிரதீப் ராகவ் பல இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். 
இழுவை அதிகம்.

'கல்யாணத்துக்கு அப்புறம்தான் பிரச்சினை வரும், 
உன் பையனுக்கு பிரச்சினைக்குள்ளதான் கல்யாணம் நடக்கும்',
 'பாட்டுப் புத்தகமா வர்றதை விட பாடப் புத்தகத்துல நம்ம 
சுயசரிதை வரணும்', 'முகூர்த்த நாள்ல கல்யாணம் பண்றது 
பெரிய விஷயம் இல்லை, முகூர்த்தம் இல்லாத நாள்ல கல்யாணம் 
பண்றதுதான் புதுசு' என வசனம் எழுதியிருக்கிறார் 
பாண்டிராஜ். அது எந்தவிதத்திலும் படத்தில் எடுபடவில்லை.

பெண் கிடைக்காமல் கஷ்டப்படும் இளைஞனின் அவஸ்தையை, 
தவிப்பை இயக்குநர் சொல்லத் தவறி இருக்கிறார். பக்கத்து 
வீட்டுப் பெண்கள் பேசும் உரையாடல்கள் எரிச்சலை 
வரவழைக்கின்றன. 

படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் சில காட்சிகள் துருத்தி 
நிற்கின்றன. கதாபாத்திரங்களை இயக்குநர் கையாண்ட விதம் 
முதிர்ச்சியற்றதாக உள்ளது. பக்குவம் இல்லாத விவரணைகள் 
சோர்வையும் அலுப்பையும் தருகின்றன. 

படம் எதை நோக்கிப் போகிறது என்றே தெரியாமல் தடுமாறும்
போது ஒரு அதிர்ச்சியை!? வைக்கிறார்கள். இரண்டாம் 
பாதியிலும் அந்த வைத்தியத்தைப் பரிசோதித்திருக்கிறார்கள். 
அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

“அடல்ட் படங்களை இயக்குவதில் தவறில்லை. ஆனால்...” 
- கிருத்திகா உதயநிதி
-
---------------------------------
தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29114
Points : 64102
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum