தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மதுராபுரி! நாவல் ! நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. by eraeravi Yesterday at 5:46 pm
» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,!
by அ.இராமநாதன் Yesterday at 6:56 am
» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 11:31 pm
» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 6:28 pm
» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:26 pm
» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 1:47 pm
» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 10:08 am
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am
» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:59 am
» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:55 am
» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:52 am
» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm
» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm
» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am
» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am
» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm
» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm
» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm
» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm
» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm
» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm
» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm
» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm
» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்?!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:41 am
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:37 am
» சிரிக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:55 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:44 pm
» பேரன்பு இயக்குநர் : இராம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 04, 2019 7:06 pm
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
by eraeravi Sun Feb 03, 2019 4:05 pm
» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:42 am
» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:40 am
» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:12 am
» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:07 am
» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Feb 02, 2019 3:06 pm
» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Sat Feb 02, 2019 2:57 pm
» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
by அ.இராமநாதன் Thu Jan 31, 2019 10:27 pm
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:42 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:41 am
ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
[You must be registered and logged in to see this image.]
By சுரேஷ் கண்ணன் - தினமணி
-
அடித்தட்டு மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளை
அதிகாரத்தின் கைகளிலிருந்து மீட்பதற்குப் போராட்டத்தைத்
தவிர வேறு வழியேயில்லை என்கிற அரசியல் செய்தியை
அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது, ரஞ்சித்தின் ‘காலா’
திரைப்படம்.
‘நிலம் எங்கள் உரிமை’ என்கிற ஆதாரமான செய்தி
பல்வேறு இடங்களில் தொடர்ந்து நினைவூட்டப்பட்டுக்
கொண்டேயிருக்கிறது. ஆனால் இது சார்ந்த தீர்வு எந்த
வகையான போராட்டத்தில் கிடைக்கும் என்பது
தடுமாற்றத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.
எதிர்ப்பதற்காகவும் தற்காத்துக் கொள்வதற்காகவும்
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வன்முறையை
வன்முறையால் எதிர்கொள்வது அவசியம்தான்
என்றாலும், நிலையான தீர்வுகளுக்கு மக்களிடம்
அரசியல் விழிப்புணர்வு பரவுவதே சரியான வழி
என்பதை ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் சொன்ன
இரஞ்சித், ‘காலா’வில் பல குழப்பமான செய்திகளை
விட்டுச் சென்றிருக்கிறார்.
காலாவின் மகனான லெனின் ஜனநாயகப்
போராட்டங்களின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண
முயல்கிறார். ஆனால் அவரின் வழிமுறைகள்
கோமாளியாக்கப்படும் சூழலில் அதிகாரத்தின்
மூர்க்கத்தை எதிர்க்கவும் கட்டுப்படுத்தவும் ரஜினியின்
ரவுடியிஸம்தான் இறுதி வரை கைகொடுக்கிறது.
இதன் மூலம் இரஞ்சித் உணர்த்த வரும் செய்தி என்ன?
**

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 29443
Points : 64673
Join date : 26/01/2011
Age : 74
Re: ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
மும்பை, தாராவியில் உள்ள அடித்தட்டு மக்களின்
காப்பாளன் ‘காலா’ என்கிற கரிகாலன். அங்குள்ள
மக்களுக்கு ‘வீடு கட்டித் தருகிறேன்’ என்று சில
கட்டுமான நிறுவனங்கள் கிளம்புகின்றன.
இந்தத் திட்டத்தின் பின்னால் அந்த ஊரின் பிரபல
அரசியல்வாதியான ஹரிதாதா இருக்கிறார். தாராவி ப
குதியின் முன்னாள் காப்பாளராக இருந்தவரும்,
காலாவின் தந்தையுமான ‘வேங்கையன்’ கொல்லப்
படுவதற்கு இந்த ஹரிதான் காரணம்.
ஹரியின் சூழ்ச்சியை உணரும் கரிகாலன், வீட்டுத்
திட்டம் நிறைவேற்றப்படாமலும், அதன் மூலம் பாமர
மக்கள் ஏமாறாமல் இருக்கவும் அரணாக நிற்கிறார்.
இதன் மூலம் அவர் பல தனிப்பட்ட இழப்புகளை
எதிர்கொள்ள நேர்கிறது.
எதிரிகளைக் காலா வீழ்த்தினாரா, வீழ்ந்தாரா
என்பதைப் படத்தின் பிற்பகுதியில் வரும் பரபரப்பான
காட்சிகள் விவரிக்கின்றன.
**
மிகையான ஒப்பனையுடன் இளம்பெண்களிடம் ‘டூயட்’
பாடும் அபத்தங்களில் இருந்து விடுபட்டுத் தன் வயதிற்கு
ஏற்ற பாத்திரங்களை ரஜினி ஏற்கத் துவங்கியிருப்பது
மகிழ்ச்சி. இது தொடர வேண்டும்.
‘காலா’வாகப் பெரும்பான்மையான இடங்களில் ரஜினி
தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால்
சில காட்சிகளில் வழக்கமான ஹீரோயிஸம் உயர்ந்து
நிற்பது நெருடலாகவும் அபத்தமாகவும் இருக்கின்றன.
அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒருவர், பத்து பதினைந்து
மூர்க்கர்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடும் காட்சிகள்
ரஜினி மற்றும் வெகுஜன ரசிகர்களுக்காகச் செய்யப்பட்ட
சமரசமாகி நிற்கின்றன.
எனவே இது ரஜினி சினிமாவாக அல்லாமலும் இரஞ்சித்தின்
சினிமாவாக இல்லாமலும் இரண்டுங்கெட்டான்தனமாக
ஆகியுள்ளது.
இழந்த காதலின் தேடல் மற்றும் ஏக்கம் என்கிற படிமம்
இரஞ்சித்தின் படங்களில் தொடர்ந்து காணப்படுகின்றன.
தொலைந்து போன மனைவியை ‘கபாலி’யில் தேடித்
தவித்த ரஜினி, ‘காலா’வில் தன் பழைய காதலியைக்
கண்டு உருகுகிறார்; மருகுகிறார்.
இது தொடர்பான காட்சிகள் இயல்பாகவும்
நெகிழ்ச்சியாகவும் பதிவாகியிருக்கின்றன. இரஞ்சித்தால்
நல்லதொரு ‘ரொமாண்ட்டிக்’ சினிமாவைத் தர முடியும்
என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.
ரஜினியின் பழைய காதலி ‘ஜெரீனா’வாக ஹியூமா குரேஷி
இயல்பாக நடித்திருக்கிறார். இருவரும் உணவகம் ஒன்றில்
அமர்ந்து பேசும் காட்சி சிறப்பானது. தங்களின்
‘மலரும் நினைவுகளைப்’ பரவசத்துடன் நினைவுகூர்வது
முதற்கொண்டுச் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவர்கள்
சமகாலத்திற்குள் வந்து விழுவது வரை அந்தக் காட்சி
அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் மனைவி ‘செல்வி’யாக நடித்திருக்கும்
ஈஸ்வரி ராவின் நடிப்பு பிரத்யேகமாகச் சொல்லப்பட
வேண்டியது. ‘தே.. இப்படி வந்து உக்காரு. திருஷ்டி சுத்திப்
போடணும்’ என்று ஏக வசனத்தில் கணவரைத் தொடர்ந்து
கலாட்டா செய்து கொண்டேயிருந்தாலும் அடியாழத்தில்
உள்ள அவரின் அன்பும் காதலும் பல காட்சிகளில்
அற்புதமாகப் பிரதிபலித்திருக்கின்றன.
பழைய காதலியை சந்தித்துவிட்டு ரகசிய உற்சாகத்துடன்
வரும் ரஜினியிடம் ‘தின்னவேலில பத்தாப்பு படிக்கும்போது
என்னையும் நெறய பசங்க விரட்டிட்டு இருந்தாங்க..
அதில ஒருத்தன் என்னையே சுத்தி சுத்தி வந்தான். நானும்
ஒரு எட்டு ஊருக்குப் போய் அவன் எப்படியிருக்கான்னு
பாத்திட்டு வந்துடறேன்’ என்று கோபத்தை வெளிக்காட்டும்
காட்சி நகைச்சுவைக் கலாட்டா.
எதிர்நாயகனாக நானா படேகர். அதிகார மமதையும்
அகங்காரமும் தளும்பி வழியும் அரசியல்வாதியின்
பாத்திரத்தை அற்புத இயல்புடன் கையாண்டிருக்கிறார்.
எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வில்லத்
தனத்தைக் காட்டியிருக்கிறார். ‘உன்னைத்தான் கொல்ல
நினைச்சேன். உன் மனைவியும் மகனும் இறந்துட்டாங்க.
மன்னிச்சுடு’ என்று ரஜினியிடம் சொல்வது போன்ற
காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
ரஜினியின் மச்சானாகவும் வலதுகையாகவும் வரும்
சமுத்திரக்கனியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. ரஜினியின்
மகன் ‘லெனின்’ ஆக நடித்திருக்கும் மணிகண்டனின்
பங்களிப்பு சிறப்பானது.
*
பார்வையாளர்கள் எரிச்சலடையும்படி பாடல்களைச்
செயற்கையாகத் திணிக்காமல் சரியான சந்தர்ப்பங்களில்
உபயோகிக்கும் இரஞ்சித்தின் திறமை ‘காலா’விலும்
தொடர்கிறது.
பொருத்தமான இடங்களில் பாடல்கள் அளவோடு
ஒலிக்கின்றன. படவெளியீட்டிற்கு முன்னால் ‘பாடல்களை’
இரைச்சலாக உணர்ந்தவர்கள் கூட திருப்தியடையும்படி
இருக்கின்றன பாடல் காட்சிகள். இரஞ்சித் முன்மொழியும்
அரசியல், பாடல் வரிகளில் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன.
காட்சிகளின் பரபரப்பிற்கு சந்தோஷ் நாராயணின்
அபாரமான பின்னணி இசை உறுதுணையாக நின்றிருக்கிறது.
வசனங்கள் இயல்பாகவும் சமயங்களில் அரசியல் அனல்
தெறிப்புடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
-----

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|