"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:26 pm

» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 1:47 pm

» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Yesterday at 10:08 am

» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Yesterday at 6:59 am

» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Yesterday at 6:55 am

» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 6:52 am

» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm

» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm

» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am

» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am

» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am

» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm

» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm

» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm

» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm

» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm

» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm

» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm

» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்?!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:41 am

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:37 am

» சிரிக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:55 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:44 pm

» பேரன்பு இயக்குநர் : இராம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 04, 2019 7:06 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
by eraeravi Sun Feb 03, 2019 4:05 pm

» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:42 am

» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:40 am

» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:12 am

» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:07 am

» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Feb 02, 2019 3:06 pm

» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Sat Feb 02, 2019 2:57 pm

» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
by அ.இராமநாதன் Thu Jan 31, 2019 10:27 pm

» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:42 am

» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:41 am

» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:39 am

» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ப.சிங்காரம்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:13 am

» புன்னகை பக்கங்கள்
by அ.இராமநாதன் Tue Jan 29, 2019 7:59 pm

» உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே'
by அ.இராமநாதன் Tue Jan 29, 2019 7:38 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !

Go down

கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Fri Aug 17, 2018 11:07 pm

கலைஞர் ! கவிஞர் இரா .இரவி ! 

ஒற்றைச் சொல்லில் 
உலகம் அறிந்தது 
கலைஞர் ! 

பெரியாரின் கனவுகளை 
நனவாக்கிய 
போராளி ! 

அண்ணாவின் 
அடிச்சுவட்டில் 
அடி எடுத்து வைத்தவர் ! 

முதல்மொழி தமிழுக்கு 
முதலிடம் 
முன்மொழிந்தவர் ! 

மனிதனை மனிதன் இழுத்த 
கைவண்டிக்கு 
முடிவு கட்டியவர் ! 

சமூகநீதியைக் காத்தவர் 
சமூகம் பாராட்டியவர் 
காலத்தில் நின்றவர் ! 

அணைகள் பல கட்டியவர் 
பாலங்கள் பல போட்டவர் 
தமிழகத்தை உயர்த்தியவர் ! 

கேள்வியும் நானே 
பதிலும் நானே 
என சிந்திக்க வைத்தவர் ! 

தமிழின் பெருமையை 
தரணிக்கு 
உணர்த்தியவர் ! 

மாற்றுக்கட்சியினரும் 
மதித்திடும் 
மாண்பாளர் ! 

தேனீயென சுற்றியவர் 
தோணியென உழைத்தவர் 
ஏணியென நின்றவர் ! 

சுறுசுறுப்பின் இலக்கணம் 
சோர்வே அறியாதவர் 
சுடரென ஒளிர்ந்தவர் ! 

வள்ளுவர் கோட்டத்தை 
வனப்பாக 
வடிவமைத்தவர் ! 

வான் முட்டும் சிலையை 
வள்ளுவருக்கு 
வைத்தவர் ! 

குறளோவியம் 
தீட்டிய 
இலக்கிய ஓவியர் ! 

கருப்பு கண்ணாடியையும் 
மஞ்சள் துண்டையும் 
அடையாளமாக்கியவர் ! 

திரைப்பட வசனத்தில் 
தனி முத்திரைகள் 
பதித்தவர் ! 

கவியரங்குகளில் 
கர்ஜனை செய்திட்ட 
கவிச்சிங்கம் ! 

செம்மொழிப்பாடலை 
சிறப்பாக 
செதுக்கியவர் ! 

மந்தி மொழியான 
இந்தி மொழியை 
என்றும் எதிர்த்தவர் ! 

காலத்தால் அழியாத 
கற்கண்டுக் கவிதைகள் 
யாத்தவர் ! 

கோடான கோடி 
இதயங்களை 
கொள்ளை அடித்தவர் ! 

சட்டமன்ற உரையில் 
சரித்திரம் 
படைத்தவர் ! 

தமிழகம் மட்டுமல்ல 
இந்திய அரசியலிலும் 
தடம் பதித்தவர் ! 

நிரந்தர 
சட்டமன்ற உறுப்பினராக 
நிலைத்து நின்றவர் ! 

ஆதிக்கம் 
எங்கிருந்தாலும் 
எதிர்த்தவர் ! 

என்றுமே 
தேர்தலில் தோற்காத 
வெற்றி வீரர் ! 

படிக்காத மேதை 
பகுத்தறிவுப் பாதை 
பிடிக்காது கீதை ! 

நிறுத்தியது 
சுவாசம் 
சூரியன் ! 

முத்தமிழ் அறிஞர் 
மூத்த அரசியல் தலைவர் 
நிறுத்தினார் மூச்சை ! 

எடுத்தது 
நிரந்தர ஒய்வு 
ஒய்வறியாச் சூரியன் ! 

நிரந்தரமானது 
தூக்கம் 
ஆதவன் ! 

இமயம் சரிந்தது 
மிகையன்று 
உண்மை ! 

ஓய்ந்தது 
பின்தூங்கி முன்எழும் 
சுறுசுறுப்பு ! 

சரித்திரம் படைத்தவர் 
சகலகலா வல்லவர் 
சாய்ந்து விட்டார் ! 

பராசக்தி படத்தில் 
பகுத்தறிவை 
விதைத்தவர் ! 

கழகத்தவரை 
கரகர காந்தக்குரலால் 
கட்டிப்போட்டவர் ! 

உடன்பிறப்புக்கு 
மடல் வரைந்து 
மகிழ்ச்சி தந்தவர் ! 

கணக்கில் அடங்காது 
சொல்லி முடியாது 
உன் சாதனைப்பட்டியல் ! 

உன் உடலுக்குத்தான் மறைவு 
உன் உணர்வுக்கு 
என்றுமில்லை மறைவு !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2281
Points : 5279
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum