"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உணவு பழக்கம் பழமொழி வடிவில் -
by அ.இராமநாதன் Yesterday at 9:41 pm

» பல்சுவை -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:31 pm

» படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:31 pm

» புன்னகைக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Yesterday at 12:16 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 12:00 am

» நகைச்சுவை - ரசித்தவை-தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 9:05 pm

» ஞானம் என்பது தினமும் எதையாவது கை விடுவது...!!
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 8:49 pm

» இது நகர்வலமல்ல! சுகர் வலம்...!
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 7:49 pm

» குறுஞ்செய்தியாவது அனுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 2:35 pm

» ஸ்ரீவள்ளி கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 2:31 pm

» மர்மம் உணர்ந்து விட்டால் - கவிதை
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 2:26 pm

» அதனால் நீ - கவிதை
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 2:17 pm

» பாடம் கற்பீர் - கவிதை
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 2:04 pm

» மனிதனுடைய ஆற்றலுக்கு எல்லை இல்லை...!!
by அ.இராமநாதன் Mon Jan 21, 2019 6:34 pm

» தத்துவம் - இணையவெளியில் ரசித்தவை
by அ.இராமநாதன் Mon Jan 21, 2019 6:29 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்
by eraeravi Wed Jan 16, 2019 4:47 pm

» கொசுவின் வலிமை
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:24 am

» படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:19 am

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:16 am

» அழுக்காறாமை - குறள் விளக்கம்
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:03 am

» மைக்ரோ கதை
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:01 am

» பொய் - ஆன்மீக கதை
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 11:57 pm

» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 12:14 am

» போஸ்ட் கார்டு கவிதை
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:34 pm

» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:31 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:22 pm

» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:17 pm

» தமிழ்ப் புத்தாண்டு சபதம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 13, 2019 5:24 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Fri Jan 11, 2019 11:22 am

» முதுமை போற்றுதும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:18 pm

» நினைவுகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:16 pm

» சிந்தனை துளிகள்
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» இதற்கிணையோ ஒரு நாடு! - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» உயிர் அச்சம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:14 pm

» வாழ்க்கைத் தடகளம் - கவிதை Post new topic Reply to topic
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» யாரிடம் கற்பீர் – கவிதை..
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:12 pm

» பரிசு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:11 pm

» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» கைநாட்டு அரசியல்காரன்...!! -ஹைகூ
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 3:06 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 10:09 am

» இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Tue Jan 08, 2019 4:15 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே! தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Jan 08, 2019 2:37 pm

» படித்ததில் பிடித்தது...!
by அ.இராமநாதன் Mon Jan 07, 2019 11:19 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது! கவிஞர் பா.விஜய் நேர்காணல்!

Go down

அது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது! கவிஞர் பா.விஜய் நேர்காணல்!

Post by அ.இராமநாதன் on Wed Sep 05, 2018 10:23 am

By - சலன்  |   சினிமா  செய்திகள்- தினமணி
 


[You must be registered and logged in to see this image.]
கவிஞர், எழுத்தாளர், நடிகர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பன்முக திறமை கொண்டவர். பல்வேறு நூல்களை எழுதி உள்ள இவர், தனது திறைப்பட பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். தனக்கு 'பிடித்த பத்து' பற்றி இங்கு கூறுகிறார், கவிஞர் பா. விஜய்:
ஆருத்ரா: நடிகனாக 'ஆருத்ரா' எனக்கு 6 - வது படம். நான் நடிகனாக மட்டும் நில்லாமல் தயாரித்து இயக்கும் இரண்டாவது படம். நல்ல படமாக, மக்கள் பார்க்கும் படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்து 'ஆருத்ரா' வை எடுத்துள்ளேன். இந்தப் படம் ஆங்கிலத்தில் சொல்வார்களே social Crime thriller வகையைச் சேர்ந்தது. இன்றைய செய்தித்தாளை பார்த்தாலே பக்கத்துக்கு பக்கம் வரும் செய்தி பெண் குழந்தைகளை மானபங்கபடுத்துவதுதான் (Child abuse). இது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து எடுக்கப்பட்ட படம்தான் ஆருத்ரா. பொழுதுபோக்கு அம்சங்களுடன், ஜனரஞ்சகமான ஒரு படமாக நானே தயாரித்து, இயக்கி, நடித்துள்ளேன். இதில் ஒரு செய்தியும் உள்ளது. அது படிப்பினையாகவும் இருக்கும். அதே சமயம் அது தெரியாமல் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்து இருக்கும். அடுத்த வாரம் இப்படம் வெளியாகும்.
கலைஞர் கருணாநிதி: என் இதயத்தோடு என்றுமே இணைந்த தலைவர். 'வித்தகக் கவிஞர் விஜய்' என்று எனக்கு 2005- ஆம் ஆண்டு பட்டம் கொடுத்து பாராட்டியவர். அவருக்கு முன் நான் கவிதையும் பாடியுள்ளேன். அவரது கதை வசனத்தில் நடித்தும் உள்ளேன். நான் வாழ்க்கையில் நிரம்ப பேறு பெற்றவன் என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவை இல்லை. நான் மிக சிறியவன் என்றாலும் என்னோடு அவர் பழகியது நான் பெற்ற பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். 
கிராமம்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உட்கோட்டை. எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த ஊர். அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. நெசவும் விவசாயமும்தான் இங்குள்ளவர்களின் தொழில். எனக்கு சிந்தனை கொடுத்த ஊர். என்னை சிறகடித்து பறக்கச் செய்யும் ஊர். நான் இங்கு செல்லும் போதெல்லாம் இந்த ஊரில் உள்ள பசுமை, இயற்கை வளம் என்னை தாலாட்டும். நான் என்னை அறியாமல் பல நாட்கள் தனியாக நடந்து சென்று மகிழ்ந்ததுண்டு. ஊரில் உள்ள வெள்ளந்தியான மக்கள், அவர்கள் பழகும் தன்மை, உபசரிக்கும் விதம் இதை எல்லாம் பார்த்து ரசிக்க வேண்டும்.
நண்பர்கள்: கோவைதான் நான் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் இங்கு என்னுடன் பள்ளியில் படித்தவர்கள் பலர் இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள். இப்போது பல்வேறு தொடர்பு சாதனங்கள் வந்து விட்டதே, அதன்மூலம் பள்ளி நாட்களில் என்னோடு படித்த பல நண்பர்கள், உதாரணமாக வசந்த், ஜெயராமன், பிரபுராஜ், போன்ற 20-வதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் இன்றும் என்னுடன் பேசிக் கொண்டும், நான் கோவை சென்றாலோ, இல்லை அவர்கள் சென்னை வந்தாலோ நாங்கள் பேசிப் பொழுதை போக்குவோம். 
கவிதை: நான் முதலில் கவிதை எழுத தொடங்கியது 10 - ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது. 12 - ஆம் வகுப்பில் நான் படிக்கும் காலத்தில்தான் எனது முதல் கவிதை புத்தகம் 'இந்த சிப்பிக்குள்' வெளியானது. எனது அப்பாவின் ஒரு மாத சம்பளப் பணத்தை அப்படியே அந்த புத்தகத்தை வெளிக்கொணர உபயோகித்துக் கொண்டேன். இந்த இலக்கிய உலகில் நான் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தது அன்றுதான். இதுவரை நான் சுமார் 60-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளேன். இதில் பெரும்பான்மையானவைகள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்டவை.
காவியக் கவிஞர் வாலி: இவர்தான் திரை உலகில் எனது குருநாதர். என்னை பொருத்தவரையில் அவர் ஒரு பல்கலைக்கழகம். என் மீதும், எனது எழுத்தின் மீது அலாதியான பிரியம் கொண்டவர். நான் திரையுலகில் நுழைந்த பிறகு அவரது பழக்கம் ஏற்பட்டவுடன் பேரானந்தம் கொண்டேன். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாள் அன்று ஒரு பெரிய கேக்கை எடுத்துக் கொண்டு போய் அவரை வெட்டச் செய்வேன். ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதத்தை அவருக்கு வரவழைத்து கொடுப்பதும் நான் தவறாமல் செய்யும் விஷயமாக இருந்தது. 
கன்னிமாரா நூலகம்: என்னை போன்ற படைபாளிக்கு அது சொர்க்கலோகம். நான் எழுதிய 'உடைந்த நிலாக்கள்' என்ற நூலுக்கு அங்கிருந்துதான் குறிப்புகளை திரட்டினேன். இந்த நூலை வைத்து சுமார் 200 மாணவர்கள் தங்களது M.Phil ஆராய்ச்சியை செய்துள்ளார்கள். நான் இந்த நூலகத்தில் வந்து உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாமல், மூடும்வரை இருந்து பின்னர் அடுத்த நாளும் வந்து உட்கார்ந்திருக்கிறேன். 
யாழ்ப்பாணம்: சமீபத்தில் ஓர் இலக்கிய கூட்டதிற்காக யாழ்பாணம் சென்றிருந்தேன். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். எனக்கு எப்பொழுதுமே அவர்கள் பேசும் தமிழ் மிகவும் பிடிக்கும். அந்த காலத்தில் சிலோன் ரேடியோவில் அப்துல் ஹமீத் பேசுவதை கேட்டுப் பழகியவர்கள். இன்றும் மறக்க மாட்டார்கள். நான் சென்ற இலக்கிய கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். காரணம் தமிழ் மீது யாழ்ப்பாண மக்களின் விருப்பம் மற்றும் அவர்களின் அன்பும் வெளிப்பட்டது. தமிழன் எங்கு சென்றாலும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு வருவான் என்பதற்கு மற்றொரு சான்று இது.
மெரீனா கடற்கரை: உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்று இந்த கடற்கரையை கூறுவார்கள். ஒரு புறம் கூவம் நாற்றம் இருந்தாலும், காதலர்கள் தொல்லை செய்தாலும் இந்த மெரீனா கடற்கரைதான் பல சமயம் எனக்கும் எனது எழுத்துக்கும் தூண்டுகோலாக, இன்னும் சொல்லப் போனால் தூரிகையாக இருந்திருக்கிறது. சில புத்தகங்களை இங்கே ஆரம்பித்து முடித்திருக்கிறேன். பல பாடல்கள் இங்கு பூத்திருக்கின்றன. கடல் அலைகள் என்னை வந்து தொட்டுவிட்டு செல்லும் போதெல்லாம் எனக்கு ஒரு புது எண்ணம், செய்தி அல்லது வார்த்தை உதயமாகிறது என்று கூறினால் அது மிகை இல்லை. மெரீனா கடற்கரையின் மடி, பல சமயங்களில் எனது கவிதையின் உயிர் நாடி என்றும் கூறலாம். 
தமிழ் சினிமா: இந்த தமிழ் சினிமாவை நம்பினோர் கைவிடப்படார் என்று தைரியமாக சொல்லலாம். நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தமிழ் சினிமாவை நேசித்தேன். பலநாட்கள் யோசித்தேன். பின்பு தமிழை ஆழ்ந்து வாசித்தேன். பாடலாசிரியன் ஆன பின்னர் இன்று நான் பல வேலைகளை செய்கிறேன். அதாவது பாடலாசிரியன், நடிகன், கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர். இப்படி பல துறைகளிலும் நான் வளர்ந்துள்ளதற்கு காரணம் இந்த தமிழ் சினிமாவை நம்பியதால்தான். முடிவு செய்தபின் இங்கு வந்து முயன்று தோற்றதாக யாரும் இல்லை. 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலத்தில் நான் கற்றுக் கொண்டது எந்த வேலையை நீ ஆத்மார்த்தமாக செய்கிறாயோ, அந்த வேலை உன்னை கண்டிப்பாக உயர்த்தும். என்னை உயர்த்தி இருக்கிறது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29323
Points : 64467
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum