"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» முயற்சி உடையார்! வளர்ச்சி அடைவார்!! நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Dec 11, 2018 12:16 am

» ராம்கி டுவிட்டூ தலைகீழ்! நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Dec 11, 2018 12:05 am

» நேற்று-இன்று-நாளை ! தே. பிர்த்தோ கலை இலக்கியப் பவளங்கள் 75 . ஆசிரியர்கள் : அருட்பணி இ. இருதய வளனரசு சே.ச. முனைவர் ஸ்டீபன்ராஜ் மிக்கேல்ராஜ் ! மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Dec 11, 2018 12:02 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Dec 04, 2018 1:57 pm

» பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Dec 04, 2018 12:39 am

» ஆயிரம் ஜன்னல் வீடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Dec 03, 2018 7:20 pm

» சமுதாயச் சாளரம்! நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Dec 03, 2018 6:51 pm

» .தமிழ் போலாகுமா? நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Dec 03, 2018 6:42 pm

» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:19 pm

» மழையே மழையே..
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:13 pm

» கண்களுக்கு பயிற்சி
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:11 pm

» பனித்துளிகள்
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:35 pm

» தெரிந்ததும் தெரியாததும்!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:21 pm

» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா?
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:20 pm

» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:15 pm

» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...!!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:11 pm

» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:54 pm

» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:43 pm

» கஸல் கண்ணிகளின் தொடர்...
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 7:47 pm

» வலிகளைப் பழகலாம் வா! - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 7:09 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Nov 29, 2018 9:56 pm

» கவிச்சுவை ! நூலாசிரியர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா
by eraeravi Thu Nov 29, 2018 8:40 pm

» ஹைக்கூ 500 ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் !
by eraeravi Tue Nov 27, 2018 8:20 pm

» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Nov 27, 2018 7:59 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Nov 23, 2018 9:25 pm

» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது !!
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 2:07 pm

» தனிமையிலே இனிமை காண முடியுமா?
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 1:43 pm

» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்! -
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 1:34 pm

» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 12:57 pm

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:58 am

» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை !
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:56 am

» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே ! - கவிதை
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:51 am

» தர்ம்பிரபு - சினிமா
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 9:09 am

» நடிகை சுவாதி
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 9:07 am

» ஏண்டா, கையில என்னடா கத்தி..?
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 11:50 am

» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 11:06 am

» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 10:03 am

» பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Nov 18, 2018 9:37 pm

» புன்னகை செய்யலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Sun Nov 18, 2018 8:55 pm

» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
by அ.இராமநாதன் Sat Nov 17, 2018 9:40 am

» இணைய வெளியினிலே...
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:46 am

» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:43 am

» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:39 am

» ஆரோக்கிய வாழ்விற்கு....
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:35 am

» சிரிப்’பூ’ - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சின்ன மச்சான் - என்னைக் குனிய வச்சான் - விடுகதைகள்

Go down

சின்ன மச்சான் - என்னைக் குனிய வச்சான் - விடுகதைகள்

Post by அ.இராமநாதன் on Fri Sep 14, 2018 1:48 pm

1. அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது - அது என்ன? 

2. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன? 

3. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை?

4. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; 
    விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்.

5. தாளைக் கொடுத்தால் தின்னும்; 
    தண்ணிர் குடித்தால் மடியும். 

6. சின்ன மச்சான் - என்னைக்
    குனிய வச்சான். 

7. பக்கத்திலுள்ள பட்டணத்தைப்
    பார்க்க முடியவில்லை.

8. நூல் நூற்கும்; இராட்டை அல்ல,
    ஆடை நெய்யும், தறியும் அல்ல. 

9. சூடுபட்டுச் சிவந்தவன், 
    வீடுகட்ட உதவுவான். 

10. பட்டையைப் பட்டையை நீக்கி, 
      பதினாறு பட்டையை நீக்கி, 
      முத்துப் பட்டையை நீக்கி, 
      முன்னே வாராள் சீமாட்டி.

11. நித்தம் கொட்டும்; சத்தம் இல்லை.

12. மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி, 
      உரிக்க உரிக்கத் தோலாண்டி. 

13. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம்;
      எவராலும் பார்க்க இயலாத கடிகாரம்.

14. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் புடவை.

15. காது பெரிசு; கேளாது,
      வாய் பெரிசு பேசாது,
      வயிறு பெரிசு உண்ணாது16. அம்பலத்தில் ஆடுகிற அழகுப் பொண்ணுக்கு 
      அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி

17. வாலைப் பிடித்தால் வாயைப் பிளப்பான்; 
      நெருப்பை விழுங்குவான்; விழுங்கிக் கக்குவான்.

18. வட்ட வட்டப் பாய்; 
      வாழ்வு தரும் பாய்; 
      ஊரெல்லாம் சுற்றும் பாய், 
      ஒவ்வொருவரும் விரும்பும் பாய்.

19. நிலத்திலே முளைக்காத புல்-அது 
      நிமிர்ந்து நிற்காத புல். 

20. கண் சிமிட்டும் ஒன்று: 
      மணி அடிக்கும் மற்றொன்று: 
      கண்ணிர் வடிக்கும் இன்னொன்று.

21. கண் இல்லாத நான், 
      பார்வையிழந்தவர்க்குப் பாதை காட்டுவேன். 

22. ஆள் இறங்காத கிணற்றிலே 
      மரம் இறங்கிக் கூத்தாடுது. 

23. அம்மாளோ சும்மா படுத்திருப்பாள் 
      மகள் முன்னும் பின்னும் ஒடிக்கொண்டிருப்பாள்.

24. சின்னப் பையனும் சின்னப் பெண்ணும் 
      சேர்ந்து கட்டின மாலை - அதை 
      சிக்கில்லாமல் அவிழ்ப்பவர்க்குச் 
      சென்னைப் பட்டினம் பாதி.

25. கையிலே கர்ணம் போடும் 
      கணக்குப் பிள்ளை யார்? 

26. கால் உண்டு; நடக்க மாட்டான். 
      முதுகு உண்டு; வளைக்க மாட்டான். 
      கை உண்டு; மடக்க மாட்டான். 

27. உச்சிக் கிளையிலே ஒரு முழக் குச்சி 
      ஊசலாடுது.

28. வண்ணான் வெளுக்காத வெள்ளை, 
      குயவன் பண்ணாத பாண்டம், 
      மழை பெய்யாத தண்ணிர்.


29. கள்ளனுக்குக் காவல் 
      காற்றுக்குத் தோழன். 

30. வெள்ளைக் குதிரையும் கறுப்புக் குதிரையும்
      மாறி மாறி ஒடும்; பிடிக்க முடியாது. 

-
கள்

1. தண்ணிர்.

2. காற்று.

3. பூமி.

4. வானம்.

5. நெருப்பு.

6. முள்.

7. முதுகு.

8. சிலந்தி.

9. செங்கல்.

10. வாழைப் பூ.

11. கண் இமை.

12. வெங்காயம்.

13. இதயம்.

14. மூக்குத்தி.

15. அண்டா.

16. மயில்.

17. குறடு.

18. ரூபாய்.

19. தலைமயிர்.

20. மின்னல், இடி, மழை.

21. கைத்தடி.

22. தயிர் கடையும் மத்து.

23. அம்மியும் குழவியும்.

24. தூக்கணங் குருவிக் கூடு.

25. அளக்கும் படி.

26. நாற்காலி.

27. முருங்கைக்காய்.

28. தேங்காய்.

29. சன்னல்.

30. பகலும் இரவும்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29114
Points : 64102
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: சின்ன மச்சான் - என்னைக் குனிய வச்சான் - விடுகதைகள்

Post by அ.இராமநாதன் on Fri Sep 14, 2018 1:50 pm

31. காசியிலிருந்து கல்கத்தாவரை 
      ஆடாமல் அசையாமல் போகிறது, அது என்ன? 

32. மஞ்சள் சட்டை மாப்பிள்ளை 
      மண மணக்கிRறார் வீட்டிலே.

33. பார்த்தால் கல்தான்; 
      பல்பட்டால் தண்ணிர்தான். 

34. உள்ளே இருந்தால் ஒடித்திரிவான்; 
      வெளியில் வந்தால் விரைவில் மடிவான். 

35. அண்டை வீட்டில் குடியிருப்போம் 
      அக்காள் தங்கை நாங்கள்; 
      கிட்டகிட்ட இருந்தாலும் 
      தொட்டுக் கொள்ள மாட்டோம்.

36. முகத்திலே காட்டுவான்; 
      முதுகிலே காட்டமாட்டான். 

37. ஒரு குருவிக்கு ஒரே கால்; நாலு இறக்கை.

38. முன்னும் பின்னும் போவான் - ஆனால், 
      ஒற்றைக் காலில் நிற்பான். 

39. ஒல்லியான மனிதனுக்கு ஒரே காது. 

40. முதுகெல்லாம் கூனல்; வயிறெல்லாம் பல். 

41. முள்ளு வேலியும் தாண்டி, 
      மூங்கில் வேலியும் தாண்டி,
      உள்ளே சென்று பார்த்தால் 
      ஒளிந்திருப்பான் சின்னப்பயல். 

42. கொக்கு நிற்க நிற்க; 
      குளம் வற்ற வற்ற.

43. ஆலமரம் தூங்க, 
      அவனியெல்லாம் தூங்க, 
      சீரங்கம் துரங்க,
      திருபாற்கடல் தூங்க,
      ஒருவன் மட்டும் தூங்கவில்லை.


44. ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி. 

45. உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டி.

46. சிறுசிறு கதவுகள்; செய்யாக்கதவுகள்; 
      திறக்க அடைக்க சத்தம் செய்யாக் கதவுகள்.

47. கத்திபோல் இலை இருக்கும் 
      கவரிமான் பூப்பூக்கும்,
      தின்னப்பழம் பழுக்கும், 
      தின்னாத காய் காய்க்கும்.

48. காலில்லாத பந்தல் காணக் கான விநோதம்.

49. காலையில் நான்கு கால்; 
      கடும்பகலில் இரண்டு கால்; 
      மாலையில் மூன்று கால்; 
      முடிவிலே எட்டுக்கால்.

50. கிணற்றைச் சுற்றி வெள்ளைக் கல்.

51. படுத்துத்துங்கினால் கண்முன் ஆடும்; 
      அடுத்து விழித்தால் மறைந்தே ஒடும். 

52. ஒற்றைக்காலில் சுற்றிடுவான்; 
      ஒய்ந்து போனால் படுத்திடுவான்.

53. கடிவாளம் போட்டால் காலிலே கிடக்கும்.

54. ஒரு பானைச் சோறு வடித்து, 
      ஓராயிரம் பேருக்குப் போட்டு, 
      இன்னும்கூட மிச்சமிருக்கு. 

55. மடக்காமல் பறக்குதே,
      அது என்ன மந்திரி? 
      சிமிட்டாமல் விழிக்குதே, 
      அதுதான் அரசே.

56. ஒல்லியான மனிதன்; ஒரே காது மனிதன், 
      அவன் காது போனால், ஏது பயன்? 

57. நீரிலே கொண்டாட்டம்; நிலத்திலே திண்டாட்டம். 

58. சின்னஞ் சிறு வீட்டில் சிப்பாய்கள் பலபேர். 

59. கோயிலைச் சுற்றிக் கறுப்பு; 
      கோயிலுக்குள்ளே வெளுப்பு.


60. பச்சைக் கதவு,
      வெள்ளை ஜன்னல்,
      கறுப்பு ராஜா.

--
gggஒஒஒஒ

விடைகள்
------------

31. தண்டவாளம்.

32. எலுமிச்சம்பழம்.

33. பனிக்கட்டி. 34. மீன்.

35. கண்கள்.

36. முகம்பார்க்கும் கண்ணாடி . 

37. அரைக்கீரை.

38. கதவு.

39. ஊசி.

40. கருக்கரிவாள்.

41. பலாச்சுளை.

42. எண்ணெய் விளக்கு.

43. மூச்சு.

44. பூண்டு.

45. வானம்.

46. கண் இமைகள்.

47. வேப்பமரம்.

48. வானம் .

49. தவழும் குழந்தை, 
நடக்கும் இளைஞன், தடியுடன் கிழவர், 
தூக்கிச் செல்லும் நால்வர்.

50. பல் ,

51. கனவு.

52. பம்பரம்.

53. செருப்பு.

54. சுண்ணாம்பு.

55. தட்டாரப் பூச்சி.

56. ஊசி.

57. மீன்.

58. தீக்குச்சி.

59. சோற்றுப் பானை.

60. சீத்தாப்பழம்.
-
-----------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29114
Points : 64102
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum