"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
by அ.இராமநாதன் Today at 9:40 am

» இணைய வெளியினிலே...
by அ.இராமநாதன் Yesterday at 12:46 am

» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 12:43 am

» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்
by அ.இராமநாதன் Yesterday at 12:39 am

» ஆரோக்கிய வாழ்விற்கு....
by அ.இராமநாதன் Yesterday at 12:35 am

» சிரிப்’பூ’ - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 12:29 am

» காரணம் கூற வேண்டாம்...!
by அ.இராமநாதன் Yesterday at 12:27 am

» வலைதளத்திலிருந்து...
by அ.இராமநாதன் Yesterday at 12:02 am

» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...!
by அ.இராமநாதன் Thu Nov 15, 2018 11:56 pm

» இஞ்சி முரபா வியாபாரிக்கு அஜீரண கோளாறு...!
by அ.இராமநாதன் Thu Nov 15, 2018 11:53 pm

» வயது - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Nov 15, 2018 11:51 pm

» ஒரு டேபிள் ஸ்பூன் என்பது ---{பொது அறிவு தகவல்}
by அ.இராமநாதன் Thu Nov 15, 2018 11:50 pm

» செல்வாக்கு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Nov 15, 2018 11:42 pm

» எல்லாம் நானே - கவிதை
by அ.இராமநாதன் Thu Nov 15, 2018 11:39 pm

» ஓட வைத்த வயது - கவிதை
by அ.இராமநாதன் Thu Nov 15, 2018 11:38 pm

» நடுவர் - கவிதை
by அ.இராமநாதன் Thu Nov 15, 2018 11:36 pm

» காட்டை இழந்த மரம்
by அ.இராமநாதன் Thu Nov 15, 2018 11:35 pm

» பழைய செருப்புக்கு கிடைத்த மரியாதை & பாதுகாப்பு...!!
by அ.இராமநாதன் Mon Nov 12, 2018 4:52 pm

» பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Mon Nov 12, 2018 4:41 pm

» இரண்டாவது கோப்பை - By-கவிஞர் ராம்க்ருஷ்
by அ.இராமநாதன் Sun Nov 11, 2018 11:16 pm

» இரண்டாவது கோப்பை - By--இளம்பரிதி ஆழ்வார்சாமி
by அ.இராமநாதன் Sun Nov 11, 2018 11:13 pm

» இரண்டாவது கோப்பை - By-ரமேஷ் கோபாலகிருஷ்ணன்
by அ.இராமநாதன் Sun Nov 11, 2018 11:12 pm

» இரண்டாவது கோப்பை - By-சீனி
by அ.இராமநாதன் Sun Nov 11, 2018 11:10 pm

» இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி-1
by அ.இராமநாதன் Sun Nov 11, 2018 11:07 pm

» ‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Nov 11, 2018 11:04 pm

» ஒரு சின்ன வீடும், ஒரு மனைவியும்தான்..!!
by அ.இராமநாதன் Sat Nov 10, 2018 10:45 am

» நகைச்சுவை ‘கடி’கள்
by அ.இராமநாதன் Sat Nov 10, 2018 10:40 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by அ.இராமநாதன் Sat Nov 10, 2018 10:36 am

» நம் ரகசிய முடிவுகள் எதிரி நாட்டு மன்னனுக்கு எப்படி தெரிந்தது...?
by அ.இராமநாதன் Sat Nov 10, 2018 10:36 am

» நாட்குறிப்பு எழுதிய நாட்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Nov 05, 2018 2:05 pm

» கவிஞர் இரா .இரவியின் துளிப்பாக்கள் சிந்தனைக்கு வித்திடும் ஒளித்துளிப்பாக்கள் ! புதுவைத் தமிழ்நெஞ்சன் !
by eraeravi Mon Nov 05, 2018 1:21 pm

» எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்! நூல் ஆசிரியர் : நிக்கோலஸ் பிரான்சிஸ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Nov 05, 2018 1:15 pm

» தமிழ் உலா! நூல் ஆசிரியர் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Nov 05, 2018 12:51 pm

» வசனமே இல்லாத கொரியா நாடகம்!
by அ.இராமநாதன் Mon Nov 05, 2018 6:40 am

» கடன் மோசடி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தது தொடர்பாக ஆர்பிஐ கவர்னருக்கு சிஐசி நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Nov 05, 2018 5:33 am

» விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு
by eraeravi Sat Nov 03, 2018 10:53 pm

» இன்று ஒரு தகவல் !!! சிந்தனைக்கு .....தென்கச்சி கோ.சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Fri Nov 02, 2018 2:18 pm

» இந்திய நாட்டின்மிகப்பெரிய தேசியக்கொடியின் அளவு என்ன?
by அ.இராமநாதன் Wed Oct 31, 2018 11:14 am

» காந்தியுகம் தோன்றும் கனிந்து...!
by அ.இராமநாதன் Wed Oct 31, 2018 11:06 am

» ஆறு வித்தியாசம்...
by அ.இராமநாதன் Wed Oct 31, 2018 10:57 am

» பிசினஸ் ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Wed Oct 31, 2018 10:55 am

» ஓசி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 30, 2018 11:26 pm

» செல்ஃபி ராதா...!!
by அ.இராமநாதன் Tue Oct 30, 2018 11:15 pm

» நூதன திருட்டு
by அ.இராமநாதன் Tue Oct 30, 2018 10:53 pm

» நல்ல மனம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 30, 2018 10:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

Go down

‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் on Sun Sep 30, 2018 11:23 pm

By கவிதைமணி 
--------------------------
-


விசமிகளின் சகதியில் 
விளைந்த பூங்கொடியை 
விலைகொடுத்து வாங்கவேண்டிய 
தரகன் ஒருவன் 
கொடி வாங்கிப் போக 
பெரும் பேரம் பேசியே 
காசு கேட்கிறான்...! 
-
கொடி கொடுத்து
கொடை கொடுக்க பணமில்லாத 
அந்தப் பரிதாபத்துக்குரிய 
பாசக்காரத் தோட்டக்காரன்...
-
பறந்து சென்று பணம் 
தேடமுடியாமல் உடைந்து போன 
தன் சிறகுகளால் உண்டான 
ஊனம் உடலோடு இருந்தாலும்... 
-
கடல் தாண்டி காசு பணம் 
பார்க்க வந்த வாய்ப்புகளும் 
காற்றின் வேகத்தில் 
கரை ஒதுங்கிய ஓடம் போல
ஆகிவிட...
-
பூங்கொடியின் 
வசந்தகாலக் கோலங்கள் 
பாதியில் முறிந்த பயணமாக 
கலைந்து போனது எல்லாம் 
என்ன...? 
-
காலத்தின் சாபமா...? 
அல்லது கொடி வளர்ந்த 
தோட்டத்தின் குற்றமா...?
-
--------------------
- கவிஞர் பி.மதியழகன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29046
Points : 63980
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் on Sun Sep 30, 2018 11:24 pm

**
பயணப்பட எத்தனிக்கும் முன்னே
சயனத்தில் வீழ்ந்தது என் பயணம்
கவனமுடன் திறமையும் துணைகிருந்தும்
பயணம் பாதியில் முறிந்த தேனோ ?
-
கருவில் சூல்கொண்ட நாள்முதலே
வறுமை பின்னிழுத்த போதும்
கருத்தில் தொய்வில்லாமலே
பொறுப்பாய் படித்திருந்தும்
-
துரத்திய வறுமையை தூரத்தே
நிறுத்தி வைத்து நேர்மையை கரம்பிடித்து
உறுதியாய் நின்ற போதும்
சறுக்கிய நிலை காண சகிக்கவில்லை மனம்
-
முப்பிறவி பாவமென்றார் 
எப்பிறவியிலும் உழைப்பிற்கு தோல்வி இல்லை
நேரம் பாரா நேர்மையான உழைப்பினால்
பாதியில் முறிந்த பயணம் தொடர்ந்திட செய்வோம்.
-
--------------------------
- வ. இசக்கி ராஜு

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29046
Points : 63980
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் on Sun Sep 30, 2018 11:25 pm

**

பயணம்  -  அது
நாம் விரும்பும் இடத்தை 
அடைய உதவும் படிகள்!
-
அது - பாதியில் 
முறிந்தால்  உடலும்  உள்ளமும் 
முறிந்து  போகும்!
-
பள்ளி பயணம்  அது 
தள்ளி முறிந்தால் 
தடைபடும்  படிப்பு என்ற படி!
-
திருமண  பயணம்  அது 
வெறுமையில்  முறிந்தால் 
கருமையான  வாழ்க்கையாகிவிடுமே!
-
எந்த  பயணமும்
சொந்தமின்றி பாதியில்  முறிந்தால் 
பந்தமில்லா தனி மனிதன் 
போல  உள்ளமும்  வாடுமே!
-
முறிந்த  பயணத்தின்  காரணத்தை 
செறிவுடன் சிந்தித்தால் 
நெறியான  பயணமாகி  இனிக்கும்!
-
-----------------------------
- உஷா முத்துராமன், மதுரை

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29046
Points : 63980
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் on Sun Sep 30, 2018 11:25 pm

**

தொடுத்த அம்புகள் இலக்கில் செல்லவேண்டும்
எடுத்த செயல்கள் வெற்றி வசமாக வேண்டும்
அடுத்த முயற்சி என தொடரோட்டமாக வேண்டும்
மிடுக்கான பயணங்கள் ஆனந்தமாக வேண்டுமே
-
பாதி கிணறு தாண்டும் இலக்கு மரணமல்லவா
ஓதி உணர்ந்தே செயல் தொடங்க வேண்டுமல்லவா
மோதி வலியானாலும் வெற்றி வேண்டுமல்லவா
நாதியற்றிருந்தாலும் நம்பிக்கை வேண்டுமல்லவா
-
படிப்பில் உயர்கல்விக்கு முயன்று கற்கும் போது
பிடிப்பில்லாத பொருளாதாரம் பல்லிளிக்கும் நேரம்
விடியலுக்கான வழிகளேதும் எங்குமில்லையே
துடிப்பில்லாமல் பாதியில் முறிந்த பயணமானது அது
-
காதலில் விழுந்து கனிந்து மணம் முடிக்க நினைத்தால்
மோதலாக சாதி மதம் வந்து சதிராடித் தீர்த்த நிலையில்
காத தூரம் காதலர்களைப் பிரித்திடும் தீய சக்திகளினால்
காதலன்புப் பயணம் பாதியில் முறிந்த பயணமானதே
-
இறைவன் கொடுத்த வரம் தவறியதால் வாழ்வுப் பாதை
உறைந்து கரடுமுரடாகி கல்லும் முள்ளும் காலில்குத்த
நிறைந்த இடையூறுகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி
மறைந்து வாழ்வுப் பயணம் பாதியில் முறிந்து நின்றதே
-
பாதியில் முறிந்த பயணங்களால் பயனேதுமில்லை
ஆதியில் தொடங்கிய பயணம்  அந்தம்வரை தொடர
நீதி நின்று துணையிருந்தால் முயற்சி தொடர்ந்தால்
பாதியில் பயணங்கள் முறியாது வெற்றியாகலாமே.
-
----------------------------
- கவிஞர் ராம்க்ருஷ்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29046
Points : 63980
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் on Sun Sep 30, 2018 11:26 pm

**

வாழ்க்கை சக்கர
அச்சாணிக்கு பணம்
எண்ணெய் ஊற்றி
உருட்டிய  தமிழ் வண்டியின்
பாதைகளில் இரு மருங்கிலும்
கள்ளிப் புதர்கள்!
-
இருண்ட வனத்தில்
தமிழ் வண்டி
கல்விக்கண் விளக்கு தேடி
அலுத்து பாதியில்
முறிந்த பயணத்தை
எண்ணியபடி 
இணையத் தமிழ்
நிழலில் உடைந்த
நிலாச் சிதறல் 
முற்றத்தில் காத்திருக்கிறது!
-
-------------------
-சீனி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29046
Points : 63980
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் on Sun Sep 30, 2018 11:26 pm

**

கண்ணே மணியே எனக் காதலித்து
கட்டிக்கரும்பே அமுதே எனக் குழைந்து
நீயின்றி நான் இல்லை எனக் குழறி – பொழுதை
நித்தம் தொலைபேசியில் தொலைந்ததே
-
ஆசையால் கைப்பிடித்து ஆனந்தமாய்
இச்சையுடன் தனிக்குடித்தனம் போய்
கூடிக்குலவி  கணவன் மனைவியாய் – காலத்தை
தேடிக் கைபேசியில் கரைத்ததே
-
இன்பக்கடலில் இல்லறம் செல்லாதே
துன்பக்கடலில் இல்லறம் சென்றதே!
அலைபேசியில் அலைந்து ஐயப்பேய் – உள்ளத்தை
அலைக்கழிக்கப் பாதியில் முறிந்தது பயணம்.
-
----------------------------------
- மீனாள் தேவராஜன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29046
Points : 63980
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் on Sun Sep 30, 2018 11:27 pm

**

அருமையாக  வாய்த்திட்ட  வாழ்க்கை  தன்னை
    அன்பான  மனைவியொடும்  குழந்தை  யோடும்
பெருமைதரும்  வழியினிலே  வாழ்ந்தி  டாமல்
    பேரழிவைத்  தரும்மதுவிற்  கடிமை  யாகி
வருவாயை   அதிலிழந்து  குடும்பம்  தன்னை
    வறுமையிலே  துடிதுடிக்க  வாட  விட்டும்
உருவான  நோயினிலே   சிலரோ  இங்கே
    உயிர்ப்பயணம்  பாதியிலே  முறிக்கின்  றார்கள் !
-
வெண்சுருட்டால்  வரும்நோய்தான்  என்ற  றிந்தும்
    வெளித்தெருவில்  வீட்டிற்குள்  புகையி  ழுத்துக்
கண்சுற்றி  கருவளையம்  காச  நோயும்
    கணையம்தான்  பாதிக்க  உடலும்  வீங்க
மண்மீதில்   வாழ்வதற்காய்க்  கிடைத்த  வாழ்வில்
    மரணத்தைப்  பாதியிலே  அழைத்து  வந்து
கண்முன்னே  கிளைமுறிந்து  விழுதல்  போல
    கண்மூடி  சிலரிங்கே  விழுகின்  றார்கள் !
-
அற்புதமாய்  வாய்த்திட்ட   இயற்கை  தன்னை
    அழிக்காமல்  மாசாக்கிக்  கெடுத்தி  டாமல்
குற்றங்கள்  வன்முறையில்   கொள்ளை  யிட்டுக்
    குவிக்காமல்  நேர்வழியில்  பொருளை  யீட்டி
நற்பண்பில்   வாழ்க்கையினை  அமைத்துக்  கொண்டால்
    நடுவழியில்  பயணம்தான்  முறிந்தி  டாமல்
உற்றதொரு  புகழோடு   ஞாலம்  போற்ற
    உயர்வாக  வாழ்ந்திடலாம்  இறந்த  பின்பும் !
-
-------------------------------
- பாவலர்  கருமலைத்தமிழாழன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29046
Points : 63980
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

Post by அ.இராமநாதன் on Sun Sep 30, 2018 11:28 pm

**

கண்டதும் காதல் கொண்ட 
கோதையர் பலரும் 
கண்ணிலே காதல் பேசும் 
காளையர் பலரும் 
-
கணப்பொழுதில் காதல் கொண்டு 
கடுமையாய் காதல் உண்டு 
பெற்றோரை எதிர்த்து நின்று 
பெருமையாய் மணமும் கொண்டு 
-
மூன்று மாதம் முடிக்கையில
மூவேளை உணவிருக்கோ 
முடங்கிடவே இடமிருக்கோ 
ஆனாலும் பஞ்சமில்ல 
அடிதடிக்கு மட்டுமங்கு 
-
காதல் செய்கையிலே
கண்ணேன்னு சொன்னவங்க 
கல்யாணம் முடிஞ்சதுமே 
கழுதைன்னு சொல்வதென்ன 
-
உண்மையான காதலுன்னா 
உடலை மட்டும் பாக்காது 
உயிரோடு மனம் பார்க்கும் 
உறவுக்கே உயிர் கொடுக்கும் 
-
உடல் பார்க்கும் காதலெல்லாம் 
உண்மையான காதலல்ல 
பாதியில முறிந்து விடும் 
பாழாக்கி வைத்து விடும் 
-
-----------------
- பார். விஜயேந்திரன்
-
--------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29046
Points : 63980
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum