"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தியடிகளின் பொன்மொழிகள்.
by அ.இராமநாதன் Today at 3:47 pm

» கால் முளைத்த கனவுகள்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.!
by eraeravi Today at 1:58 pm

» பெங்களூரு மைதானத்தை கலங்கடித்த தோனி: சென்டிமீட்டர் இடைவெளியில் தோல்வியை தழுவியது சென்னை!
by அ.இராமநாதன் Today at 11:00 am

» மராட்டிய மக்களின் புத்தாண்டு
by அ.இராமநாதன் Today at 10:38 am

» போனில் ஒரு இளசு
by அ.இராமநாதன் Today at 10:27 am

» பொத அறிவு தகவல்
by அ.இராமநாதன் Today at 10:24 am

» விருந்து சாப்பிடுகிறீர்களா?
by அ.இராமநாதன் Today at 10:16 am

» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
by அ.இராமநாதன் Today at 10:00 am

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் !
by eraeravi Thu Apr 18, 2019 12:37 am

» திசையெங்கும் தீப்பொறி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Apr 17, 2019 12:06 am

» வேதத்திலிருந்து வந்தது திருக்குறள் என்று பொய் சொன்ன நாகசாமிக்கு மறுப்பு ! திருக்குறள் ஒரு வழிநூலா? கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Apr 16, 2019 11:58 pm

» இரா.இரவியின் படைப்புலகம் ஓர் அறிமுகம் கவிஞர் மஞ்சுளா, மதுரை
by eraeravi Mon Apr 15, 2019 1:14 pm

» சாலை இளந்திரையனின் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : முனைவர் லி. ஜன்னத் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Apr 15, 2019 1:00 pm

» மண் மூடிப் போகும் மாண்புகள்! நூல் ஆசிரியர் : ‘எழுத்தாளர்’ ப. திருமலை1 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Apr 15, 2019 12:54 pm

» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 12, 2019 9:16 am

» இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்
by அ.இராமநாதன் Fri Apr 12, 2019 8:47 am

» ஏரி காத்த இளைஞர்!
by அ.இராமநாதன் Thu Apr 11, 2019 5:28 pm

» பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கும் மணி ரத்னம்: முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள பிரபல நடிகர்கள்!
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:58 pm

» வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் விவேக்
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:57 pm

» புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த பாவனா
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:54 pm

» அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்…! – அமிதாப் பச்சன்
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:53 pm

» பிரசாந்துக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள ‘மிஸ் இந்தியா’ அனு கீர்த்தி
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:44 pm

» ரஜினியின் 167வது படத்தின் பெயர் தர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:43 pm

» தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:41 pm

» இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘தடம்’
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:39 pm

» கோவை சரளாவுக்கு இன்று பிறந்தநாள்!
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:38 pm

» ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண்
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:37 pm

» கல்வி இன்று கடைத்தெருவில்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Tue Apr 09, 2019 10:49 pm

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:11 pm

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:10 pm

» நிழற்பூ - கவிதை
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:08 pm

» தாய்க் கோழி - கவிதை
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:07 pm

» உழைப்பால்...(கவிதை)
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:05 pm

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:04 pm

» அடையாளம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:02 pm

» சாத்தான்கள் அபகரித்த பூமி! நூல் ஆசிரியர் : அருணா சுந்தரராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Apr 07, 2019 10:55 pm

» படைப்புலகில் வாழ்வார் மகேந்திரன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Apr 04, 2019 11:36 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்,
by eraeravi Wed Apr 03, 2019 1:13 pm

» திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Apr 01, 2019 2:07 pm

» கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் ! நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Apr 01, 2019 1:44 pm

» கொடுவா மீசை! அருவா பார்வை! நூல் ஆசிரியர் : திருமதி கலா விசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Apr 01, 2019 1:31 pm

» மனித நேயம் வளர்ப்போம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 31, 2019 5:39 pm

» "ஹைக்கூ 500" நூல் ஆசிரியர்: கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை -"நெருப்பலைப் பாவலர் ", இராம இளங்கோவன்;பெங்களூரு.
by eraeravi Thu Mar 28, 2019 8:42 pm

» ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை: ப. மகேஸ்வரி, பாரதியார் பல்கலை, கோவை.
by eraeravi Thu Mar 28, 2019 12:17 am

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : மு. அழகுராஜ்
by eraeravi Thu Mar 28, 2019 12:16 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி

Go down

 ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி Empty ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி

Post by அ.இராமநாதன் on Sun Sep 30, 2018 11:37 pm

ஏதோ நினைத்தேன்,
எதுவோ நடந்தது;
ஊர் பேச்சைக்கேட்டேன்,
துயர் வந்து சேர்ந்தது


அறியாமையில் தவித்தேன்,
அசரீரி குரல் கேட்டது;
உன் வாழ்வை,
நீ வாழு என்றது


யாரோ சொல்வதை,
கேட்பது எதற்கு?
அதனால்ஏற்படும்விளைவுகளுக்கு,
அவரா பொறுப்பு?
உனக்கு பொறுப்புணர்வு
வேண்டாமா என்று கேட்டது ?


உன் மனம் சொல்வது,
உனக்குப்பொருந்தும்;
உளமாற அதைப்போற்று,
வாழ்க்கைப்பயணத்தை 
அதனூடே மாற்று,
என்று பாடம் எடுத்தது


உன் முக்கிய முடிவுகளை,
நீயே எடு;
உன்
மனதைக்கேட்டு!
என,
மனமாற வாழ்த்தியது


ஒருவேளை தப்பாக போனால்கூட,
அது உன் முடிவு தானே;
அடுத்தவரிடம் உன்னை அடகு வைக்காதே,
என்று சுயமரியாதையுணர்வை விதைத்தது


ஊருக்காக உழைப்பது சரி,
ஊர் பேச்சை கேட்டே,
உன் முடிவுகளையெல்லாம்,
எடுப்பது சரியா?
உன் நடவடிக்கைகளையெல்லாம்,
அமைத்துக்கொள்வது சரியா?


தவறான பயணத்தை,
பாதியிலே நிறுத்து,
அதுதானே சிறப்பு;
தீதும் நன்றும்,
பிறர்தர வாரா !
என்று போதித்தது


- ம.சபரிநாத்


**


முறிந்த   பயணம்.
முடியாத   பாதைகள்.
கலைந்த  கனவுகள்.
தொலையாத நினைவுகள்.


எங்கேயும்  எப்போதும்
எதிர்பாராதது  நடக்குமென
ஏற்றுக்கொண்டால் என்றும்
எளிதாகும் வாழ்க்கைப் பயணம்!.


அடுத்தது  என்னயென யோசிக்க
அடுக்கடுக்காக வழி பிறக்கும்!
அடுத்தஅடி  எடுத்து வைக்க
அவை உதவியாக இருக்கும்.!


முடியாது என முனகினால்
முயற்சியது  விலகிடும் !
முடியும் என முயன்றால்
முறிந்தகிளையிலும் பூ மலரும்.!


- கே.ருக்மணி


**
 
ஜாதகங்கள் சாதகமாய்
கோள்களே கோலமிட
முதியோர் முன்னிலையில்
ஜோசியன் ஆசியுடன்
இறைவனை வேண்டி
இணைந்தன இரு மனங்கள் !!
மின்சார உணர்வுகளால்
சம்சார கருப்பையில்
ஒரு வெளிச்சம் !!
மூழ்கிய நீருக்குள் மெதுவாய்
மூச்சு விடத்தொடங்கியது !!
தொப்புளாய் ஒரு கால்வாய் பாசனம் ,
செழிப்புடன் வளர்ந்தது குட்டிப்பயிர் !!
வளர்ச்சி வெள்ளத்திற்கு அணை கட்டிய
அறிவியல் அதிசயம் ஒன்று 
அரக்கனாய் மாறுமோ  –-
தீபத்தின் ஆழத்திலும் ஒரு கருப்பு உண்டு –
இந்த ஸ்கேன் கருவியும் அப்படித்தானோ ?
அமிலம் ஊற்றி
அழித்தனர் அந்தச்செடியை –
பாதியில் பயணம் நிறுத்தி பூமியை தொட்டது --
ஆம் அது பெண் சிசுவாமே !!


- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி


**


இருமனம் இணைந்து ஒருமனம் 
உருவாகியது திருமண உறவில் !
அருமையான  வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் 
அந்த இருவருக்கும் !
இனிதே தொடங்கிய ஒரு பயணம் 
முடிந்ததே  ஒரே  நாளில் ! ஒரு சாலையில் !
காரணம் ஆயிரம் சொன்னார் சுற்றமும் நட்பும் !
குறை பல சொன்னார் மற்றவர் மீது !
உரைக்கவில்லயே இன்னும் ஒரு உண்மை 
உறவினருக்கு ! தலைக் கவசம் அணிவது 
ஒரு உயிருக்கு கவசம் என்னும் உண்மை !
கவசம் இருவரும் அணிந்து இருந்தால் 
பாதியில், ஒரு பாதையில் முறிந்து 
முடிந்து இருக்குமா அந்த இருவரின் 
வாழ்க்கைப் பயணம் ?
சற்றே சிந்திக்க வேண்டும்... இரு சக்கர 
வாகனம் ஓட்டும் அனைவரும் ! காவலர் 
கேட்டாலும் கேட்காவிட்டாலும் , அந்த 
தலை கவசம்தான் உங்கள் உயிர் கவசம் !
கவசம் எத்தனை நீங்கள் படித்தாலும் 
மறக்க வேண்டாம் இந்த கவசத்தையும் !


- கே.நட்ராஜ்


**


திட்டம் இடாத பயணங்கள்
திசை மாறிப் போவதுண்டு
பட்டம் வாங்கிடும் வேளையிலும்
பலர் பயணத்தில் தடைக்கற்கள்
பலானதாய் வருவதுண்டு.


பாதியில் முறிந்த பயணங்களில்
பலர் வாழ்க்கைகூட இழந்ததுண்டு
பகட்டு வாழ்க்கையைப் பற்றியதால்
பலர் வாழ்வில் பயணம் முடிந்ததுண்டு 


உறவுப்பாதைகள் அறிந்தவர்க்கு 
உள்ளம் உத்தமப்பயணங்கள் புரிந்ததுண்டு
நிலைமை தலைகீழாய் மாறியதால்
நித்தம் சித்தம் தடுமாறும்பயணமுண்டு


பாதை தவறிய வேளையிலும்
பாங்குடன் எல்லாமே  நடப்பதுண்டு
பட்டப் படிப்புகள் இல்லாத சிலருக்கும்
பணம் பதவி உயர்வுகள் வருவதுண்டு.


ஆதியில் திறம்படத் திட்டமிட்டால்
பாதியில் பயணங்கள் முடிவதில்லை
வீதியில் பாதையை மாற்றிவிட்டால்
விபரீதங்கள் வருவதில் சிக்கலில்லை.


பரமனை மறவாமல் துதித்தவர்க்கு
பாதையில் பயணத்தில் சிக்கலில்லை
பயணங்கள் திசைமாறிப்போனாலும்
பாதியிலும்  ஆதியிலும் முடிவினிலும் 
பயம்தரும் தோல்வியே இல்லையே!.


- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்


**


வேலையில்லா திண்டாட்டம் 
வெளி நாடு புறப்படும் சமயம் அது
பாதியில் முறிந்த பயணம் ஆனது
வீடு காக்கும் எண்ணமிருப்பின்
சோடு தைத்தாலும் வாழலாம் 
பட்டதாரியானாலும் இரும்படி 
பட்டறையில் உடம்பு சொட்டு
வியர்வை விட்டாலும் வாழலாம் 
இளகாத இரும்பைக் கூட இளக்கி 
அக் கிடைக்காத வேலையை நம்பி 
அன்றாட வயிற்று பிழைப்பே 
கெடவிடலாமா
பாதியில் முறிந்த பயணம் அதை 
எண்ணிக் கவலை தான் படலாமா 
வெளிநாட்டு வேலை மோகமதை 
விட்டுவிட்டு சுயமாயொரு 
திட்டமதை தீட்டிக் கொண்டு 
தானே ஒரு வட்டத்தை
வகுத்துக்கொண்டு நாலு பேர்க்கு
நீயே வேலை போட்டுத் தரலாமே 
கற்ற அறிவுக்கு வேலை கொடு
நானும் முதலாளி எனும் பெயரெடு 
ஆழ்ந்து யோசிக்க சற்று ஓய்வு எடு 
மன சஞ்சலத்தை விடு தவிக்கும் 
பேர்கள் கண் ஜலத்தை துடைத்திடு


- ஆபிரகாம் வேளாங்கண்ணி 


**


பணமில்லாமல் பாதியில் படிப்பை நிறுத்தும் 
மாணவரின் கல்விப் பயணம்


நட்டத்தால் தொழிலை பாதியில் நிறுத்தும்
தொழில் முனைவோரின் பயணம்


திறமைக்கு மதிப்பு கிடைக்காததால் வேலையை 
விடும் தொழிலாளியின் வேலை பயணம்


காதலர்களின் புரிதல் இல்லாமையால் பாதியில்
முறியும் காதலர்களின் காதல் பயணம்


கருக் கலைவால் பாதியில் முடியும்
குழந்தையின் பயணம்


குதிரை பேரம் படியாததால் ஆட்சி கவிழ்ப்பால்
முடியும் அரசியல்வாதிகளின் ஆட்சி்ப் பயணம்


லஞ்சம் வாங்கும்போது பிடிபடுவதால் முடியும் 
அரசு அதிகாரிகளின் அரசுப் பணி பயணம்


இவ்வளவு பயணங்கள் பாதியில் முறிந்தாலும் .............. 


விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களின் அப்பாவித்தனமான பயணம்
வாக்காளர்களின் வாக்களிக்கும் ஏமாற்றமான தேர்தல் பயணம்
ஊழல் அரசியல்வாதிகளின் ஊழல் பயணம்
லஞ்சத்தில் ஊறித் திளைத்த அதிகாரிகளின் லஞ்சப் பயணம்
குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலைப் பயணம்
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் மனித மிருகங்களின் காட்டு மிராண்டிப் பயணம்


இவர்களின் இத்தகைய பயணம் என்று தான்
பாதியில் முறிந்த பயணமாகப் போகின்றதோ ? 


- ஆம்பூர் எம். அருண்குமார்


**


காதலித்தேன் வாழத்தான் , வாழ்வை காவு கொடுக்க அல்ல
காலத்தால் அழியாத காதலென்றாய் நீ ஆதரித்தேன் நான்
மோதலிலும் காதல் வரும் என்பார் அது போல
நம்மிடையே மலர்ந்தது அந்த பாழாய்போன காதல்
மோகத்தால் வந்த காதல் அல்ல அது முழுதானது
முக வசீகரத்தால் வந்த லகாதல் அல்ல இது
வேகத்தால் வந்த காதல் அல்ல, விவேகமாய் ஆனது
இணைந்த கோடுகளாய் ஆவோம் என்றாய் நீ
இருகோடுகளாய் ஆகிப்போனோம் நாமிருவரும்
இணைந்தபோது என்னனனவோ பேசினோம் மெரினாவில்
எழுச்சிப் போராட்டத்தில் வேறெதும் தெரியவில்லை  
எதுவுமே  நம்  கண்ணுக்குத் தெரியவில்லை, கருத்துக்கும்
இந்த நேரத்தில் நமது பெற்றோருக்கும் , மற்றவர்க்கும்
யாருக்கும் நாம் போராட போவது பிக்க வில்லை
அன்பாக அமதியாக பாதுகாப்பாக, மகிழ்வாக வாழ ஆசை!
போராட்டக் நடகிறது போவோம் வா என்றாய் நீ!
பின்வாங்கி விட்டேன் பாதியில் முறிந்தது பயணம்
கொழைத்தனம் என்று நீ சொன்னாலும் பரவாயில்லை
இந்தத்தருணத்தில் மன்னிக வேண்டுகின்றேன் போ1
பாதியில் முடிந்தது பயணம் புறப்படுவாய் என்றாள்!


- கவிஞர் அரங்க.மணி


**


வாழ்க்கை  என்பதும்  பயணம்தான்…
வாழும்வரை பயணம் தொடரும்தான்…
கடக்கும்வழிகள் எல்லாம் அனுபவம்தான்…
காலமும்நமக்கு உணர்த்தும் பாடம்தான்…
இரவும்பகலும்  நாளும்  வந்துபோகும்…
இந்தநேரமும்  நாளை  மாறிப்போகும்...
தவறுகளை  தோல்வியும்  திருத்திப்போகும்...
தடைகளை  வெற்றியும்  தாண்டிப்போகும்…
மரணமும்  ஓர்நாள்நம்  வாழ்வில்வந்தது...
மரணம்தான் மனிதனை இறுதியில்வென்றது…
பயணமும்  தொடராதுஎன்பது தெரிந்தது...
பயணமும் இங்கேபாதியில் முறிந்தது...


- கவிஞர் நா. நடராசு


**


வெடித்த பாதம் 
வெயில் தொடும் முன்! 
வேகமாய் 
விறகு எடுத்து தலையில் 
முந்தானை சிம்மாடாகிடும்! 
அடகு வைத்த குடும்ப அட்டை 
அடிவயிற்று பசி தீர்த்திட வழியில்லை! 
பத்து பாத்திரம் தேய்க்கும் வீட்டு மீதமே 
அனுதினம் அம்மா தரும் அமிர்த உணவு!
விட்டு விலகிப்போன அப்பா நினைவாய் 
தொங்கிடும் தாலி கயிற்று ஊக்கு அறுந்த 
மஞ்சள் பைக்கு காதாகிடும் கல்வி புத்தகம் சுமக்க! 
காடு மலை ஓடி 
காந்தி தாள் தேடி அன்னை சேர்த்த 
சேமிப்பு பட்டம் பெற்று தந்தது! 
ஊர் போற்றும்
உயர்ந்த வேலை கைநிறைய 
சம்பளம் யென்று புகழ் உச்சி சென்ற எனை!
பாரட்டிட வேண்டியவள் 
பயணத்தை பாதியில் முறித்து 
மூங்கில் கட்டிலில் படுத்தால்! 
பசிக்கு
பாலூட்டியவள் பாழாய்ப்போன புற்றுநோயால்! 


- தஞ்சை. ரீகன்


**


பாதியிலே முறிந்த பயணம் என்றால்
..........பயணமும் முடியாப் பலனும் இல்லை.!
வீதியிலே செல்லும் போதில் கூட
..........விதியென்று வந்தால் வழியும் மாறும்.!


ஆதியுடன் அந்தம் அறியாப் போகும்
..........அர்த்தமற்ற பயணம் அதுவே வாழ்வு.!
நாதியற்றுப் போனேன் நானும் என்றே
..........நாள்முழுதும் புலம்பி நைந்து போவார்.!


பாதியிலே முறிந்த பயணம் போல்தான்
..........பலருக்கும் அமையாப் பண்பாய் வாழ்வு.!
நீதிகேட்டு தினமும் நாடும் மன்றம்
..........நெடுங்காலம் சென்ற நெடிய பயணம்.!


வாதிட்டு வென்று வாகை சூட்ட
..........வகையில்லை யதுவே வாழ்க்கைப் பாடம்.!
மாதிரிக்குப் பலவும் மனதில் உண்டு
..........மறையாது இன்னும் மறக்க வில்லை.!
மேதினியில் நாமும் மேன்மை பெற்று
..........மேன்மையாக வாழ மனதில் தோன்றும்.!
ஆதிமுதல் உழலும் அனைத்துத் துன்பம்
..........அடியோடு அகற்ற ஆர்வம் எழும்.!


பாதியில் முறிந்த பயணம் என்றால்
..........பயமிலாமல் மனதும் பாடம் கற்கும்.!
போதிமர நிழலில் புத்தனும் பெற்ற
..........போதனைகள் போலப் பின்னும் வேண்டும்.!


- பெருவை பார்த்தசாரதி


**
நெட்டி முறித்து
நிமிர்ந் தெழுந்து
காலைக் கடமைகள்
கழித்து;
இயந்திரக் குதிரையை
இயக்கி; - இராம
பாணமாய் விரைந்து;
இல்லற துணை தேடி
முல்லை மனத்தோடு
முழுமை நினைவோடு
பள்ளம் பாராமல்
பதறி விழுந்ததில்
பரமனைத் தேடும்
ஆவியாய்; நிகழை
மறந்து நினைவிலாடி
வில்லினை முறித்து
இராமன் வென்றான்;
பயணத்தை முறித்து
பாதையை யிழந்தேன்....


- ப.வீரக்குமார்


**
வெளிநாட்டு வேலை
வெல்லும் வாழ்க்கை
துள்ளிய உள்ளம்
துரிதம் வெள்ளம்
பச்சை வயல்கள் மறந்து
பசுந்தளிர் மனங்கள் மறந்து
செவ்விதழி மனையாள்
சொந்தம் விலக்கி
வேலையனுமதி, பயணச்சீட்டு பெற்று;
பறந்தேன் ; புதிதாய்
ஒரு புத்துலகம் காண;
இறங்கிய நிலையில்
எனக்கான முகவர்
எழில் பதாகை சுமந்து
ஏற்றமாய் பார்த்து;


பணிக்குச் சென்றேன்
ஊதியத் தகராறில்- என்
கடவுச்சீட்டை எரித்த
கணக்காளனால்;


எப்படி திரும்புவேன்
என்புவி தேடி
கையில் காசுமில்லை
தெரியாத பாட்டையிலே!!! ....


- முகில் வீர உமேஷ்


**
கருவறையில் தொடங்கி 
கல்லறையில் அடங்குவது
மனிதனின் 
வாழ்க்கைப் பயணம்!
சுற்றியடிக்கும் சுனாமி புயலால் 
பாதியில் முறிகிறது 
பலர் வாழ்க்கைப் பயணம்!


சிந்தனையாளனை 
உருவாக்கத் தொடங்கும் 
கல்விப் பயணத்தை
தேர்வு என்னும் அரக்கன் 
சிறைபிடிப்பதால் 
பலருக்கு பாதியில் முறிந்த பயணமாகிறது
கல்விப் பயணம்! 


காதலித்து கரம் பிடிக்கும் 
இளைஞர் கூட்டம் 
இறுதிவரை 
வாழ்க்கை நடத்தினால் 
வெற்றிப்பயணம்!
இடையில் வழக்கு நடத்தினால்
வாழ்க்கையாகும் 
பாதியில் முறிந்த 
வெற்றுப் பயணம்!


கடைமடை அடையா 
காவிரிப் பயணத்தால்
பாதியில் முறிந்த பயணமாகிறது
பயிர்களின் பயணம்!


மனிதனுக்குள் 
அடிக்கடி நிகழும் மதுப் பயணத்தால்
பாதியில் முறிந்து போகிறது 
பலர் வாழ்கை பயணம்!


ஏழைகளின் நிலத்தை பிடுங்கி அமைப்பது 
எட்டு வழிச்சாலையல்ல-அது 
அவர்களின் கடைசி வழிச்சாலை!


எரிபொருள் விலையை 
ஆகாயத்தில் பறக்க விட்டு விட்டு
ஏழைகள் பயணத்தை 
பாதியில் முறித்த மத்திய அரசு! 
ஏழைகளை 
ஆகாயத்தில் பயணிக்க வைப்பதே 
நோக்கம் என்கிறது!


-கு.முருகேசன்


**


திங்கள் கிழமை


ஞாயிற்றுக்கிழமை பார்த்த 
திரைப்படங்களை 
அசை போடக் கழிந்தது - 
அரை நாள் - என்ன செய்வது 
என யோசிக்க முடியும் முழு நாள் .


செவ்வாய்க்கிழமை


டி.வி. நாடகம் அதே மாமியார் மருமகள்
வரதட்சனைக் கொடுமை
பிழிந்து அழுது கண் துடைத்தாலோ - 
கரைந்து போகும் இன்னொரு தினமும்


புதன் கிழமை


புத்தி வந்தது - படிக்க நினைத்து புக்கை திறந்தால்
பவர் கட் - அன்றைய தினமும் ஆஃப் ஆனது.


வியாழக் கிழமை


வெளியே சத்தம், எட்டிப் பார்த்தால் 
குடும்பச் சண்டை, 
முழுவதும் பார்த்ததில் முடிந்தது ஒரு நாள் 


வெள்ளிக்கிழமை


மாரியம்மன் கோவில்,
மாவிளக்கு ஊர்வலம்
ஜெக ஜோதியாய் கழிந்தது தினமது


சனிக்கிழமை


மாமா பெண் பாமா விஜயம்,
ஆஞ்சனேயர் கோவிலும்
ஐஸ்கிரீம் பார்லரும், 
காதலோடு கழிந்தது - படிக்க முடியாமல்


ஞாயிற்றுக்கிழமை


சலூனில் ஏகப்பட்ட கூட்டம் - காத்திருந்து முடிவெட்ட
கடைக்குப் போக, காய்கறி வாங்க,
கிழிந்த நோட்புக் அட்டை மாற்ற


இப்படி எல்லா தினங்களும் எப்படியோ - கழிந்து விடவே


இறைவா - எங்களுக்கு இன்னும் 
நிறைய கிழமைகளைக் கொடு,
நாங்கள் படிக்க வேண்டும்
இப்படிக்கு கல்விப் பயணம் 
பாதியில் முறிந்த மாணவர்கள்


- செந்தில்குமார் சுப்பிரமணியன்


**

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29488
Points : 64786
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum