"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாட்ஸ் அப் மினி கதைகள்
by அ.இராமநாதன் Today at 3:43 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 3:39 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 3:32 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by அ.இராமநாதன் Today at 3:30 pm

» என்னைப்பார் யோகம் வரும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 3:24 pm

» நேர்மை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 3:22 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Today at 3:18 pm

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by அ.இராமநாதன் Today at 3:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:53 pm

» அதிரடி -ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:51 pm

» தன்னம்பிக்கை மொழிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:35 pm

» பைக் ஆட்டோவாம்...! - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:28 pm

» இன்னும் கொஞ்சம் போடு - ரஸிகமணி டி.கே.சி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:24 pm

» உறவு- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:23 pm

» நம்பிக்கை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:21 pm

» அவனைக் கண்டிக்க வேண்டாம்...!! - நகைச்சுவை நடிகர் பீட்டர் உஸ்டினா
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:19 pm

» அவர்களுள் நான் ஒருவன் - ராஜாஜி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:17 pm

» சுட்டுட்டாங்க...! நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:58 pm

» ஜில் அப்பளம்- வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:54 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:52 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:50 pm

» குறியீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:35 pm

» முடிவு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:33 pm

» பாக்யலட்சுமி படத்திலிருந்து நகைச்சுவை காட்சிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:03 pm

» அம்மி அப்டி...!!
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:59 pm

» புத்திமதி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:56 pm

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:55 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:54 pm

» சொல்லடி அபிராமி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:52 pm

» சிரிக்கலாம் வாங்க....!
by அ.இராமநாதன் Sun May 19, 2019 3:22 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun May 19, 2019 2:12 pm

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun May 19, 2019 1:25 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by அ.இராமநாதன் Sun May 19, 2019 1:16 pm

» அன்னை மொழி
by அ.இராமநாதன் Sun May 19, 2019 12:49 pm

» என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun May 19, 2019 10:36 am

» மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat May 18, 2019 6:24 pm

» அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
by eraeravi Sat May 18, 2019 2:29 pm

» இரட்டையர்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat May 18, 2019 12:53 pm

» தமிழகமே தமிழ் மறந்தால் தமிழ்மொழியை யார் படிப்பார்? கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat May 18, 2019 12:44 pm

» ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
by eraeravi Thu May 16, 2019 9:26 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 16, 2019 11:52 am

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 43
by அ.இராமநாதன் Thu May 16, 2019 11:18 am

» காதலியின் முதல்முத்தம்..!
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:25 pm

» அழகான முத்தம்.....!!
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:23 pm

» முதல் முத்தம் - - குமார் சுப்பையா
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:20 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் !

Go down

ஹைக்கூ 500 ...   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் விமர்சனம் : கவிப்பேரருவி   ஈரோடு தமிழன்பன் ! Empty ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் !

Post by eraeravi on Thu Apr 18, 2019 12:37 am

ஹைக்கூ 500 ...

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.


நூல் விமர்சனம் : கவிப்பேரருவி 
ஈரோடு தமிழன்பன் !


95, இரண்டாவது முதன்மைச்சாலை, போரூர் தோட்டம்-2, சென்னை-95.  

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கம் : 132, விலை : ரூ. 100


******
      இன்று ஹைக்கூ தமிழில் பரவலாக எழுதப்பட்டுக் கற்றவர்கள் முதல் எல்லோர் உள்ளங்களையும் கவரும் சிறப்பைப் பெற்றுள்ளது. ஹைக்கூவைத் சார்ந்த பிறவகைக் கவிதைகளும் வெளிவருகின்றன. இவ்வெள்ளப்பெருக்கில் தூண்டில் போட்டால் தரமான ஹைக்கூக் கவிதைகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தான், இவ்வகைக் கவிதைகளை எழுதுவோரை ஊக்கப்படுத்தினால் குற்றமில்லை என்கிற கருத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது.

      ‘ஹைக்கூ 500’ எழுதியுள்ள கவிஞர் ரவி, ஹைக்கூ உலகிலேயே சுற்றுலா வந்து கொண்டிருப்பவர். அவருடை இந்நூல் படங்களுக்கு எழுதப்பட்ட ஹைக்கூக்களைக் கொண்டிருக்கிறது. கவிதைகள் நுண்மையன, படங்கள் படிவமயன சொற்களால் ஆகிய கவிதைகள் அவற்றைக் கடக்கும்போது சிறகு விரித்து உயர்ந்து விடுகின்றன. ஏற்கெனவே வரையப்பட்டுள்ள படத்திற்குள் ஹைக்கூ வரும்போது ஹைக்கூ மிஞ்சுமா? படம் மிஞ்சுமா? என்னும் கவலை எழவே செய்யும். 

படங்கள் ஒருவகையில் கவிதையை வரம்புக்குள் கொண்டுவர எத்தனிப்பதால் கவிதை தருகிற உணர்வு, உண்மை, கற்பனை, அனுபவ எல்லைகளைச் சுருக்கிவிடும் நிலை ஏற்பட்டுக் கலை தோல்வி கண்டு விடும். எனவே, படங்களுக்குள் கவிதை எழுதுவதோ, கவிதைகளுக்குள் படங்கள் வரைவதோ, நன்கு கருதிப் பார்த்து மகிழ்விக்கப்பட வேண்டும். ஓவியங்கள் கூட கோடுகளைக் கடந்து, வடிவம் இழந்த நிலையில் முழுமையை நோக்கி விரியும் போது அம்முயற்சி கலையின் உச்சத்தைத் தொடுகிறது என்று சொல்லலாம்.

      கவிதைகளில் சொந்த அனுபவங்களை பாடுவதுபோல், பிறர் சொன்ன வகையில் பாடும்போது, அக்கவிதையில் விவரங்களும் கவிதை நியமங்களும் இருக்கலாம்.  தயிர் உண்மையின் ஒளிவீச்சி மங்கலாகத் தான் இருக்க முடியும்.

      ‘ஹைக்கூ 500’ நூலில் இரவியின் முயற்சி தோற்றுப் போகவில்லை, ஒன்றிரண்டு ஹைக்கூக்களில் அசல் ஹைக்கூவின் சாயல் நன்கு தென்படுவதைக் கண்டேன்.

      அசைக்காதே காலை
      கொலு சொலியில்
      கூடல் தடைபடும் வண்டுகளுக்கு!      இக்கவிதையில் நம் சங்கக் கவிதையின் சாயலும் நன்கு வெளிப்பட்டிருக்கிறது.

      தலைவியைப் பிரிவுக்கும் பிறகு காணத் தேரில் திரும்பி வரும் காதலன், வழியில் ஆண்மானும், அதன் துனையான பெண்மானும் கூடி இழைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். தேரில் கட்டப்பட்டுள்ள மணியின் ஓசை, அம்மான்களின் இன்ப உறவுக்கு இடையூறு செய்து விடுமோ என்று கருதி, ஒலிக்காதபடி தேரின் மணியைக் கட்டி வைக்கும்படி பாகனிடம் சொல்கிறான். இக்கவிதையில் நமயஇழையில் இரவியின் கவிதையை இணைத்துப் பார்க்க முடியும்.

      இந்த ஹைக்கூவைப் படித்த போது, என் நினைவில் சிய்யோ நீ / (1703-1775) என்னும் பெண் கவிஞரின் ஹைக்கூ பளிச்சிட்டது.

      காலை நேரத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க இவர் கிணற்றருகே சென்ற போது, ‘காலைக்கீர்த்தி (Morning Delight) என்று சொல்லப்படும் கொடி, தண்ணீர் இறைக்கப் பயன்படும் வாளியைக் கைப்பற்றிப் படர்ந்திருந்தது. கொடியை கழற்றி வாளியை எடுக்க மனம் வரவில்லை கவிஞருக்கு. இரக்கம் ததும்பிய உள்ளம், தண்ணீர் தேவைக்கு என்ன செய்தது! அண்டை வீட்டாரிடம் தண்ணீர்ப்பிச்சை கேட்டது!

                “A Morning Glory having taken
                the well bucket, I begged for water”


இங்கு சொல்யோகியின் உணர்வு, காலைக்கீர்த்தி, தண்ணீர்வாளி, காலை நேரம், எல்லாமாகப் படிமவளத்தோடு ஒரு ஹைக்கூவை நமக்குத் தந்துள்ளன.

‘இலை கருகாமல்
      காக்கும் 

கல்லின் ஈரம்’


இரவியின் தரமான ஹைக்கூவாக எனக்குத் தென்பட்ட மற்றொரு கவிதை இது. இங்கு ர.சு. அய்யம்பெருமாள் என்பவர் எழுதியுள்ள கல்லுக்குள் ஈரம் என்ற சிறந்த புதினத்தை நினைத்துக் கொள்கிறேன். கல்மனம், உருகும் காட்சி இக்கவிதை! மழை தந்த ஈரமா? மனம் தந்த ஈரமா? எப்படியோ கல் தன்மேல் விழுந்த இலையைக் கருகாமல் காக்கிறதாம். மரணம், அந்த இலையைத் தொடலாம், ஆனால் சுட முடியாது.

இத்தகைய நுட்பமும், அழகும், உனர்வும் உள்ள ஹைக்கூக்களை எழுத இரவியால் முடியும். ஒதுக்க வேண்டியவற்றை ஒதுக்கித் தள்ளிவிடு, வெற்று மதிப்பீடுகளுக்கு உள்ளத்தைப் பலிகொடுத்து விடாமல் உண்மையான ஹைக்கூவை நோக்கி இரவி பயணம் தொடர  வாழ்த்துகிறேன்.

‘அசல் ஹைகூ அடையாளங்களோடு
ஈரோடு தமிழன்பன்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2321
Points : 5399
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum