"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் விருந்து! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Sep 14, 2019 2:23 pm

» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Sat Sep 14, 2019 1:43 pm

» எங்கள் கனவுகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 14, 2019 1:26 pm

» நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
by eraeravi Tue Sep 10, 2019 9:48 pm

» பல்சுவை கதம்பம் -10
by அ.இராமநாதன் Mon Sep 09, 2019 4:18 pm

» வேரும் விழுதும்! நூல் ஆசிரியர்கள் : ‘தமிழ்த்தேனீ’ பேராசிரியர் இரா. மோகன் ! ‘தமிழ்ச்சுடர்’ பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 2:05 pm

» இருட்டை விரும்பாத இரவுகள்! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 1:57 pm

» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Sep 03, 2019 1:51 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 1:46 pm

» நல்லதே #நினைப்போம்; #நல்லதே #செய்வோம்
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:12 am

» காலிஃப்ளவர் மிளகு வறுவல்
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:08 am

» வெளிப்படையான பாராட்டுதல் தன்னம்பிக்கையை கொடுக்கும்...
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:05 am

» வர இருக்கும் முக்கியமான பண்டிகைகள்.
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:55 pm

» ஒரே பள்ளியில் 50க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்..!!
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:45 pm

» தினமும் சுதந்திர தினம் தான்...!!
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:38 pm

» பல்சுவை கதம்பம் -9
by அ.இராமநாதன் Fri Aug 30, 2019 10:12 am

» பல்சுவை கதம்பம் - 8
by அ.இராமநாதன் Fri Aug 30, 2019 12:02 am

» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 11:37 pm

» பல்சுவை கதம்பம் - 6
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 10:51 pm

» பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 10:24 pm

» எண்ணம் போல் வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 2:57 pm

» சுழி
by அ.இராமநாதன் Tue Aug 27, 2019 11:26 pm

» பல்சுவை கதம்பம் - 5
by அ.இராமநாதன் Tue Aug 27, 2019 8:43 am

» நோயை விரட்டும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Mon Aug 26, 2019 10:39 am

» படித்ததில் பிடித்த ஹைகூ & கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Aug 25, 2019 12:20 am

» பல்சுவை - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Sat Aug 24, 2019 7:31 pm

» பறவை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Aug 24, 2019 1:22 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 23, 2019 12:09 am

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி! பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Tue Aug 20, 2019 9:59 pm

» மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:35 pm

» ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:32 pm

» நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:29 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:26 pm

» கேரளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: பலி எண்ணிக்கை 104 ஆனது
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:39 am

» பறவை மோதி விபத்து: ரஷிய விமானம் வயல்வெளியில் அவசர தரையிறக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:38 am

» திரும்புகிறதா ‘2008’..
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:36 am

» மெக்ஸிகோ: காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:33 am

» பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:32 am

» உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:31 am

» வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:26 am

» டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:25 am

» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:24 am

» 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:20 am

» மூழ்கத் தயாராகும் நகரங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:18 am

» திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 43

Go down

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 43 Empty ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 43

Post by அ.இராமநாதன் on Thu May 16, 2019 11:18 am

 ஆயிரம் பாடல்கள் எழுதிய தாஸ்! - கவிஞர் முத்துலிங்கம்
By DIN  |   Published on : 12th March 2018 09:26 AM  |   அ+அ அ-   |  [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 43
 தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டவர்கள் எல்லோரும் சிறப்புக்குரியவர்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள். நாம் அறிகின்ற முதல் தாசர் அயோத்திதாசர். ஆம். அயோத்திதாசப் பண்டிதரைத்தான் சொல்லுகிறேன். அதற்கடுத்த தாசன், பாரதிதாசன். அதன் பின்னர் கம்பதாசன், கண்ணதாசன், பிறகு சுப்புரத்தினதாசன் என்று சொல்லப்படுகின்ற சுரதா. பாரதிதாசனுக்கு முன்பு பாரதியார், "ஷெல்லிதாசன்' என்ற புனை பெயரிலே எழுதியிருக்கிறார். இன்றும் வாலிதாசன், கவிதாசன், வண்ணதாசன் என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 அதைப்போல், தாஸ் என்று பெயர் வைத்துக் கொண்டவர்களும் புகழ்பெற்றவர்களாகத் தான் பெரும்பாலும் இருந்திருக்கிறார்கள். வரலாற்றில் அதுவும் இலக்கிய உலகில் நாம் அறிகின்ற முதல் தாஸ், வடமொழியில் "சாகுந்தலம்', "மேக சந்தேசம்' போன்ற காவியங்களை எழுதிய மகாகவி காளிதாஸ். இந்தியிலே இராமாயணம் எழுதிய துளசிதாஸ், மற்றும் புரந்தர தாஸ், கபீர்தாஸ், பக்த ராமதாஸ்.
 தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் நாடக உலகின் தந்தையென்று போற்றப்படுகின்ற சங்கரதாஸ், தேசிய நடிகர் என்று போற்றப்பட்ட எஸ்.எஸ். விசுவநாத தாஸ், சினிமாவுக்கு முதன்முதல் பாடல் எழுதிய பாஸ்கரதாஸ், ""கடலுக்குள் அரண்கட்டி கன்னி நீ வாழ்ந்தாலும், உடலுக்குள்ளே மாறன் உதயமாவது திண்ணம்'' என்று அந்தக் காலப் "பூலோக ரம்பை' படத்திலே பாடல் எழுதிய புதுக்கம் பன் பூமி பாலதாஸ்.
 பி.யு. சின்னப்பா நடித்த "ஆரியமாலா', "ஜகதலப்பிரதாபன்' போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதியவரும், "நாடோடி மன்னன்' படத்தில், ""உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா'' என்ற பாடலையும், "தாய் மகளுக்குக் கட்டிய தாலி' என்ற படத்தில் ""ஒன்றல்ல இரண்டல்ல தம்பி - சொல்ல - ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் ஒன்றல்ல இரண்டல்ல தம்பி'' என்ற பாடலையும் இவை போன்ற பல பாடல்களை எழுதியவருமான "கவி லட்சுமணதாஸ்', (இந்தப் பாடலைப் பலர் கண்ணதாசன் எழுதியது என்றும் சிலர் கே.டி.சந்தானம் எழுதியது என்றும் சிலர் உடுமலை நாராயண கவியென்றும் தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.)
 திரைப்பட வசனகர்த்தாக்களில் ஆரூர்தாஸ், பக்திப் பாடகர்களில் பித்துக்குளி முருகதாஸ், சினிமா பின்னணிப் பாடகர்களில் ஜேசுதாஸ் தொழில் அதிபர்களில் வி.ஜி. பன்னீர்தாஸ், அரசியல் தலைவர்களில் அன்றைக்கு சித்தரஞ்சன் தாஸ் இன்றைக்கு டாக்டர் ராமதாஸ், அது போல் திரைப்படப் பாடலாசிரியர்களில் புகழ்பெற்ற தாஸôக விளங்கிய தாஸ், தஞ்சை ராமையாதாஸ். இவர் பள்ளி ஆசிரியராக இருந்தவர்.
 இவர் தஞ்சாவூர் மானபூச்சாவடி என்ற பகுதியில் 1914-இல் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமையா. இவர் தந்தை பெயர் நாராயணசாமி நாயனார். பள்ளி ஆசிரியராக ராமையா இருந்த போதே பல நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று எண்ணிய இவர், வேலையை விட்டுவிட்டு சேலத்தில் இருந்த ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து பல நாடகங்கள் எழுதினார். அப்போது இவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர்தான் ராமையாதாஸ்.
 அன்றைய காலத்தில் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பெண்கள் என்றால் "தேவி'யென்றும் ஆண்கள் என்றால் தாஸ் என்றும் தங்கள் பெயருக்குப் பின்னால் வைத்துக் கொள்வார்கள்.
 அதன் பிறகு, தானே ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கி முதலில் சிறுவர்களை வைத்தும் அதன் பின்னர் இளைஞர்களை வைத்தும் நாடகங்கள் நடத்தினார். அதில் ஒரு நாடகம், "மச்சரேகை' இந்த நாடகத்தின்போதுதான், பின்னாளில் பல படங்களை எழுதித் தயாரித்து இயக்கிய ஏ.பி. நாகராஜன் தஞ்சை ராமையாதாசிடம் உதவியாளராகச் சேர்ந்தார். ஏ.பி. நாகராஜன் பள்ளிக்கூடத்திற்கே போனதில்லை. எல்லாம் அனுபவப் படிப்புத்தான். இவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து இவரைச் சிறந்த முறையில் உருவாக்கிய நாடக ஆசிரியர் ராமையாதாஸ்தான்.
 ராமையாதாஸ் நடத்திய நாடகங்களில் வில்லன் வேடங்கள் பல ஏற்று நடித்துப் புகழ்பெற்றவர் ஏ.பி. நாகராஜன் என்பது இன்றைய ரசிகர்கள் பலருக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. ஆரூர்தாஸ் மூலம்தான் இதெல்லாம் தெரிந்து கொண்டேன். சேலத்தில் நடந்த ராமையாதாசின் நாடகங்களைப் பார்த்தவர்கள் பாடல்களைக் கேட்டவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்திடம் சொல்லியிருக்கிறார்கள். அதனால் ராமையாதாசை அழைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்ற படத்தில் ஒரு பாடல் எழுத வைத்தார். இது 1947-இல் வெளிவந்த படம். வி.என்.ஜானகி கதாநாயகியாக நடித்த படம்.
 ""வச்சேன்னா வச்சதுதான் - புள்ளி
 வச்சேன்னா வச்சதுதான்''
 இதுதான் அந்தப் படத்தில் ராமையாதாஸ் எழுதிய பாடல். அவர் எழுதிய முதல் திரைப்பாடலும் இதுதான். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "திகம்பர சாமியார்' என்ற படத்தில் இவர் எழுதிய
 ""ஊசிப் பட்டேசே வேடிக்கையாய்த் தீ
 வச்சாலே வெடி டபார் டபார்''
 என்ற பாடல்தான் இவரை ஜனரஞ்சகமான பாடலாசிரியர் என்று ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
 இந்தப் பாடலை உடுமலை நாராயணகவி எழுதியதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இது இந்தி மெட்டுக்கு எழுதிய பாடல். இந்தி மெட்டுக்கு இவர் வார்த்தைகள் போட்ட லாகவத்தைப் பார்த்து டி.ஆர். சுந்தரம் அசந்து விட்டாராம்.
 மெட்டுக்கு எழுதுவதில் அருவியைப் போல் வார்த்தைகளைக் கொட்டியவர்களை வரிசைப்படுத்த வேண்டுமானால் தஞ்சை ராமையாதாஸ், கே.பி. காமாட்சிசுந்தரம், கம்பதாசன், ஆகியோரைத் தான் முதலில் சொல்ல வேண்டும். அதன் பிறகுதான் மருதகாசி, கண்ணதாசன் போன்றவர்களைச் சொல்லலாம்.
 "திகம்பர சாமியாரு'க்குப் பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த "மாரியம்மன்' என்ற படத்திற்கு கதை வசனம் பாடல்களை எழுதினார் ராமையாதாஸ். முதன்முதல் அவர் கதை வசனம் பாடல்கள் எழுதிய படமும் இதுதான். அந்தச் சமயத்தில், சேலத்தில் ராமையாதாஸ் எழுதிய "மச்சரேகை' என்ற நாடகம் நடந்தது. அதைப் பார்த்த நடிகர் டி.ஆர். மகாலிங்கம், அதைத் தானே தயாரிக்க விருப்பம் கொண்டு ராமையாதாசிடம் கேட்க, அவரும் மனமுவந்து ஒப்புக்கொண்டு கதை வசனம் பாடல்களை எழுதிக் கொடுத்தார். மிகப்பெரிய வெற்றிப் படமாக அது அமையாவிட்டாலும் ஓரளவு வெற்றி பெற்றது. சுகுமார் புரொடக்ஷன் சார்பில் டி.ஆர். மகாலிங்கம் தயாரித்து நடித்த முதல் படம் இதுதான். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் சி.ஆர். சுப்பராமன்.
 1950-இல் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த "பாதாள பைரவி' என்ற படத்திற்கு வசனம் பாடல்களை எழுதினார். தஞ்சை ராமையாதாஸ். இது மிகப்பெரிய வெற்றிப்படம். இந்தப் படத்திற்கு வசனம், பாடல் எழுதுவதற்கு மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்திற்கு ராமையாதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் கதாநாயகனாக நடித்த என்.டி.ராமராவ், மாதம் முந்நூறு ரூபாய் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தை சிவகங்கை அரசர் உயர்நிலைப் பள்ளியில் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பலமுறை பார்த்து மகிழ்ந்தேன்.
 ""அமைதி இல்லாதென் மனமே என் மனமே
 அனுதினம் கண்முன் கனவே போலே
 மனதே பிரேமை மந்திரத்தாலே
 அமைதி இல்லா தென் மனமே என் மனமே''
 என்ற பாடல்,
 ""காதலே தெய்வீகக் காதலே
 தமிழின் அமுதக் கடலிலே
 தனிமையாகப் படகிலே
 சரச லீலை ஆடலாம் நமது வாழ்விலே''
 என்ற பாடல்,
 ""உயிருடன் உனைக் காண்பேனோ
 பிரேம பாசத்தால் வலையில் வீழ்ந்தான்
 அறியாதவனன்றோ''
 ஆகிய பாடல்கள் எல்லாம் மிகவும் பிரபலமான பாடல்கள் மட்டுமல்ல எங்களைப் போன்ற சிறுவர்கள் அடிக்கடி அந்தக் காலங்களில் பாடிக் கொண்டிருந்த பாடல்கள்.
 பாடல்களுக்கு அர்த்தங்களெல்லாம் அப்போது எங்களுக்குத் தெரியாது. இசை இனிமையால் ஈர்க்கப்பட்டுப் பாடிக் கொண்டிருந்தோம்.
 இந்தப் படத்திற்குப் பிறகுதான் ராமையாதாசுக்கு ஏராளமான படங்கள் ஒப்பந்தம் ஆயின. வாகினி எடுத்த இரண்டாவது படம் "சந்திரஹாரம்'. இதற்கும் வசனம் பாடல்கள் ராமையாதாஸ்தான். "கல்யாணம் பண்ணிப்பார்', "கடன் வாங்கிக் கல்யாணம்', "மனிதன் மாறவில்லை', "மிஸ்ஸியம்மா', "குணசுந்தரி', "பெண்ணின் பெருமை', "மாயா பஜார்', அஞ்சலி தேவி தொடர்ந்து தயாரித்த "மணாளனே மங்கையின் பாக்கியம்', "மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்', "அனார்கலி' "அடுத்த வீட்டுப் பெண்' ஆகிய படங்களுக்கெல்லாம் வசனம் பாடல்கள் எழுதியவரும் இவர்தான். சிவாஜி நடித்த "ராணி லலிதாங்கி', சிவாஜி - பத்மினி நடித்த "ஸ்ரீவள்ளி', எம்.ஜி.ஆர் நடித்த "குலேபகாவலி' போன்ற பல படங்களுக்குக் கதை வசனம் பாடல்கள் எழுதியவர் இவர். ஏறத்தாழ 75 படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதியிருக்கிறார். பாடல்கள் மட்டும் ஆயிரத்திற்கும் மேல் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.
 ஒரு காலத்தில் சினிமாப் பாடல்கள் இலக்கியம் ஆகுமா ஆகாதா என்ற கேள்வியெழுந்தபோது ஆகாது என்று கூறியவர் கண்ணதாசன். ஆகும் என்று கூறியவர் கவிஞர் சுரதா. 1958-ஆம் ஆண்டில் "குமுதம்' பத்திரிகையில் மாறி மாறி இவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
 கண்ணதாசன் அப்படிக் கூறியதற்குக் காரணம் தஞ்சை ராமையாதாஸ் கொடிகட்டிப் பறந்த காலம் அது. "சிவங்கைச் சீமை' படத்தைக் கண்ணதாசன் தயாரித்தபோது அதில் நகைச்சுவைப் பாடல் ஒன்று எழுதி வாங்குவதற்காக ராமையாதாசைத்தான் கண்ணதாசன் நாடிச் சென்றார். ஆனால் ராமையாதாஸ் பேசிய முறை சரியில்லாததால் அவரிடம் பாடல் எதுவும் எழுதி வாங்காமல் திரும்பிவிட்டார்.
 இதை இசையமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதனும், இயக்குநர் கே.சங்கரும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். கண்ணதாசன், இவர்கள் இருவரையும்தான் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். ஏனென்றால் அந்தப் படத்திற்கு இசை விசுவநாதன்-ராமமூர்த்தி, அந்தப் படத்தை இயக்கியவர் கே. சங்கர் என்பதால்.
 ராமையாதாஸ் நல்ல பாடல் எதுவும் எழுதவில்லையா? கண்ணதாசன் அப்படிச் சொல்வதற்கு?
 (இன்னும் தவழும்)
 படங்கள் உதவி: ஞானம்
 dinamani

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30063
Points : 65893
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum