"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் விருந்து! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Sep 14, 2019 2:23 pm

» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Sat Sep 14, 2019 1:43 pm

» எங்கள் கனவுகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 14, 2019 1:26 pm

» நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
by eraeravi Tue Sep 10, 2019 9:48 pm

» பல்சுவை கதம்பம் -10
by அ.இராமநாதன் Mon Sep 09, 2019 4:18 pm

» வேரும் விழுதும்! நூல் ஆசிரியர்கள் : ‘தமிழ்த்தேனீ’ பேராசிரியர் இரா. மோகன் ! ‘தமிழ்ச்சுடர்’ பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 2:05 pm

» இருட்டை விரும்பாத இரவுகள்! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 1:57 pm

» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Sep 03, 2019 1:51 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 1:46 pm

» நல்லதே #நினைப்போம்; #நல்லதே #செய்வோம்
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:12 am

» காலிஃப்ளவர் மிளகு வறுவல்
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:08 am

» வெளிப்படையான பாராட்டுதல் தன்னம்பிக்கையை கொடுக்கும்...
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:05 am

» வர இருக்கும் முக்கியமான பண்டிகைகள்.
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:55 pm

» ஒரே பள்ளியில் 50க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்..!!
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:45 pm

» தினமும் சுதந்திர தினம் தான்...!!
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:38 pm

» பல்சுவை கதம்பம் -9
by அ.இராமநாதன் Fri Aug 30, 2019 10:12 am

» பல்சுவை கதம்பம் - 8
by அ.இராமநாதன் Fri Aug 30, 2019 12:02 am

» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 11:37 pm

» பல்சுவை கதம்பம் - 6
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 10:51 pm

» பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 10:24 pm

» எண்ணம் போல் வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 2:57 pm

» சுழி
by அ.இராமநாதன் Tue Aug 27, 2019 11:26 pm

» பல்சுவை கதம்பம் - 5
by அ.இராமநாதன் Tue Aug 27, 2019 8:43 am

» நோயை விரட்டும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Mon Aug 26, 2019 10:39 am

» படித்ததில் பிடித்த ஹைகூ & கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Aug 25, 2019 12:20 am

» பல்சுவை - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Sat Aug 24, 2019 7:31 pm

» பறவை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Aug 24, 2019 1:22 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 23, 2019 12:09 am

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி! பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Tue Aug 20, 2019 9:59 pm

» மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:35 pm

» ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:32 pm

» நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:29 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:26 pm

» கேரளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: பலி எண்ணிக்கை 104 ஆனது
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:39 am

» பறவை மோதி விபத்து: ரஷிய விமானம் வயல்வெளியில் அவசர தரையிறக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:38 am

» திரும்புகிறதா ‘2008’..
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:36 am

» மெக்ஸிகோ: காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:33 am

» பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:32 am

» உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:31 am

» வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:26 am

» டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:25 am

» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:24 am

» 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:20 am

» மூழ்கத் தயாராகும் நகரங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:18 am

» திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.

Go down

அணிந்துரை அணிவகுப்பு!    நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்!    நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.   Empty அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.

Post by eraeravi on Sat May 18, 2019 2:29 pm

அணிந்துரை அணிவகுப்பு!

நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்!

நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.  


வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, 

தியாகராய நகர், 
சென்னை-600 017. 

பேச : 044 24342810  பக்கம் : 

ரூ.240, விலை : ரூ. 150.


*******

      ‘அணிந்துரை அணிவகுப்பு’ நூலின் தலைப்பே அழகு. ‘எழுத்து வேந்தர்’ இந்திரா சௌந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கி உள்ளார். தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா.மோகன் அவர்களுக்கு இது 145 ஆவது நூல். அணிந்துரைகளைத் தொகுத்து நூலாக்கி வருகிறார். அணிந்துரைகள் தொகுப்பில் இது ஐந்தாவது நூல்.      இந்த நூலில் 30 முத்தாய்ப்பான நூல்களின் அணிந்துரைகள் உள்ளன. அணிந்துரை மட்டுமல்ல, ஆய்வுரை என்றே சொல்லலாம். எந்த ஒரு நூலையும் நுனிப்புல் மேயாமல் நூல் முழுவதையும் ஆழ்ந்து படித்து உள்வாங்கி ஒப்பிலக்கியத்துறையின் தலைவராக இருந்த காரணத்தால் ஒப்புநோக்கி ஆய்வு செய்து அணிந்துரை எழுதுவதை வழக்கமாக வைத்துள்ளார். 30 நூலில் 3 நூல்கள் என்னுடைய நூல் என்பது எனக்குப் பெருமை. இறையன்பு கருவூலம், கவிச்சுவை, ஹைக்கூ 500 மூன்று நூல்களின் அணிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன. காரணம் எழுத்து இமயம் மு.வ. அவர்களின் செல்லப்பிள்ளை இரா.மோகன் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களின் செல்லலப்பிள்ளை, சீடன் கவிஞர் இரா.இரவி என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமை.      தமிழ்த்தேனீ இரா.மோகன் அய்யாவிடம் அணிந்துரை வாங்கினால் நூலாகி விடும் என்பது தெரிந்த காரணத்தால் இனி அய்யாவிடம் அணிந்துரை வாங்கிட போட்டி நிலவும் இருந்தாலும் எப்போதும் எனக்கு தட்டாமல் தந்து விடுவார்கள்.      அணிந்துரை எழுதும் முன் அணிந்துரைக்கு ஒரு தலைப்பு வைப்பார்கள். அந்த தலைப்பு நூலாசிரியருக்கு வைக்கும் மணிமகுடம் போன்ற மகிழ்வைத் தரும். பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்கள் புதுகைத் தென்றல் மாத இதழில் தொடராக தொடர்ந்து எழுதி வருவதை நூலாக்கி விடுவார்கள். சென்னையின் இலக்கிய இணையர் என்றால் அது புதுகைத்தென்றல் இதழாசிரியர் தருமராசன் – பேராசிரியர் பானுமதி தருமராசன் வரலாறு படைத்த வைரமங்கையர் என்ற இரண்டு தொகுதிக்கும் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்.      “புதுமைப்பெண், இளைய நங்கை, பெண்மைத் தெய்வம், செம்மை மாதர், உதயகன்னி, வீரப்பெண் எனக் கவியரசர் பாரதியாரால் புகழாரம் சூட்டப்பெற்ற இருபது வைர மங்கையர் இந்நூலில் அணிவகுத்து நிற்கின்றனர்”      அணிந்துரையின் தொடக்கமே மகாகவி பாரதியாரின் சொற்களுடன் மேற்கோள் காட்டி இருப்பது சிறப்பு. கமலா கந்தசாமி அவர்களின் நாம் கண்ட வள்ளல் எம்.ஜி.ஆர். – வரலாற்றுப் பெட்டகம். நூல் அணிந்துரையில் எம்.ஜி.ஆர். பற்றி வள்ளல் கலைவாணர் சொன்ன சொல் மிக அருமை. “நான் என்னிடம் கேட்டால் கேட்டவர்க்குக் கொடுப்பேன். ஆனால் எம்.ஜி.ஆர். தம்மிடம் கேட்காதவர்க்கும் கொடுப்பார்”.      திரு. க. ஹரி தியாகராஜன் தொகுத்துள்ள ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின் உரைக்கோவை நூலிற்கான அணிந்துரையில் முடிவுரையாக இன்னும் ஏனைய எழுத்துக்களும் பேச்சுக்களும் நூல் வடிவம் பெற வேண்டும் என்பது தமிழ் கூறு நல்லுலகின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளும் கூட’ என்று முடித்து அடுத்த நூல் தொகுத்திட ஆர்வம் கொடுத்துள்ளார்கள்.      பகுத்தறிவுப் பகலவன் பெரியார் வழிவந்த சாலை இளந்திரையன் அவர்களை ஆய்வு செய்திட தலைப்பு வழங்கி நெறியாளராக இருந்து வி.ஜன்னத்தின் ஆய்வை நூலாக்கிட ஆலோசனை வழங்கி அணிந்துரையும் நல்கி உள்ளார்.      பேராசிரியர் இரா.மோகன் அவர்கள், தான் நூல் எழுதுவது மட்டுமன்றி தன்னைச் சார்ந்தவர்களும், நான் உள்பட பலரும் நூல் எழுதிட ஊக்கமும் ஆக்கமும் அளித்து வரும் உயர்ந்த உள்ளத்திற்க்கு சொந்தக்காரர்.      இந்த நூலில் உள்ள 30 நூல்களின் ஆசிரியர்கள் 25 பேருக்கும் அணிந்துரைகளின் மூலம் அளப்பரிய மகிழ்ச்சியை படைப்பாளிக்கு வழங்கியது மட்டுமன்றி அந்த அணிந்துரைகளைத் தொகுத்து நூலாக வழங்கி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளார். நூலாசிரியர் பேராசிரியர் இரா. மோகன் அவர்கள்.      இலண்டனில் கல்லூரியில் துணைமுதல்வராக இருக்கும் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்களின் கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை என்ற நூலிற்கு நீண்ட நெடிய ஆய்வுரையை பாராட்டுரையை அணிந்துரையாக வழங்கியது மட்டுமன்றி அந்த நூலின் வெளியீட்டு விழாவை முன்னின்று நடத்திக் கொடுத்து மகிழ்வித்தவர் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் முனைவர் பட்ட மாணவராக இருந்தபோது முனைவர் இனியன் அ. கோவிந்தராஜூ அவர்களின் கண்டேன் கனடா நூலிற்கு அற்புத அணிந்துரை நல்கி தொடர்ந்து அவர் நூல் எழுதிட ஊக்கம் தந்து வெளியீட்டு விழாக்களையும் முன்நின்று நடத்தி உதவி வருகிறார். அவரது ‘வா நம் வசப்படும்’ நூலிற்கும் அணிந்துரை சிறப்பு. முனைவர் ப. திருஞானசம்பந்தம் அவர்களின் பதினெண்கீழ்க்கணக்கு உழவரும் வரலாறும் நூலிற்கு சங்க இலக்கியம் நன்கு அறிந்த காரணத்தால் நயத்தகு அணிந்துரையை நயமாக வழங்கி உள்ளார்.      டாக்டர் ஆர். நடராஜ் நூல், பா. கலையரசியின் நூல், கவிஞர், கா. கருப்பையா நூல், டி.ஆர். ஜவஹர்லால் நூல், அலசி மை. இராசா கிளைமாக்கம், கு.ரொ.மஞ்சுளா இருவரும் இணைந்து எழுதியுள்ள நூல். அருட்கவி முஹம்மது தாஹாவின் நூல், முனைவர் ஈரோடு இனியவன் நூல், மகாதேவ ஐயர் ஜெயராம சரமாவின் நூல், பேராசிரியர் கா. ஆபத்துக் காத்த பிள்ளையின் இரண்டு நூல்கள், பெங்களூரில் வாழும் இனிய நண்பர் கே.ஜி. இராஜேந்திர பாபுவின் நூல் முனைவர் ச. இராமமூர்த்தியின் நூல், முனைவர் மீனா சுந்தர் நூல், முனைவர் இரா. மனோகரன் நூல், கோ.சந்திரன் நூல், ஔவை நிர்மலாவின் நூல், இப்படி 30 நூல்களின் அணிந்துரை 30 நூல்கள் படித்த உணர்வைத் தருகின்றன.      படைப்பாளிகளுக்கு பாராட்டையும் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் வழங்கி அற்புதமான அணிந்துரைகள் மூலம் அங்கீகாரம் வழங்கி வரும் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்க
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2377
Points : 5567
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum