"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி! பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Tue Aug 20, 2019 9:59 pm

» மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:35 pm

» ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:32 pm

» நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:29 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:26 pm

» கேரளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: பலி எண்ணிக்கை 104 ஆனது
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:39 am

» பறவை மோதி விபத்து: ரஷிய விமானம் வயல்வெளியில் அவசர தரையிறக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:38 am

» திரும்புகிறதா ‘2008’..
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:36 am

» மெக்ஸிகோ: காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:33 am

» பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:32 am

» உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:31 am

» வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:26 am

» டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:25 am

» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:24 am

» 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:20 am

» மூழ்கத் தயாராகும் நகரங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:18 am

» திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:17 am

» தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:15 am

» பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:14 am

» சீன மாஞ்சாவால் 200 பறவைகள் பலி
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:13 am

» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:12 am

» தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:10 am

» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:08 am

» அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:07 am

» இந்திய விடுதலைப் போராட்டத்தில் மதுரையின் பங்களிப்பு! நூல் ஆசிரியர் : M.A. சர்தார் M.A.,அலைபேசி எண் 9842850149 (பழம்பெரும் தியாகி ஜனாப். ஹாஜி H. முஹம்மத் மௌலானா சாகிப்பின் பேரன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
by eraeravi Sat Aug 10, 2019 5:15 pm

» கவிஞர் இரா. இரவி அவர்களின் படைப்பாற்றல்..... நூல்ஆசிரியர் : முனைவர் .ந.செ.கி. சங்கீத்ராதா. நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Fri Aug 09, 2019 10:26 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Aug 09, 2019 11:39 am

» பா உழுதவன் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமார ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 09, 2019 12:34 am

» பொம்மை ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Aug 07, 2019 11:44 pm

» தமுக்கடி! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Aug 05, 2019 10:30 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Aug 04, 2019 12:15 am

» குழந்தை வரைந்த காகிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இளவல் ஹரிஹரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Aug 03, 2019 11:35 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை பேராசிரியர் மித்ரா !
by eraeravi Sat Aug 03, 2019 8:49 pm

» பல்சுவை கதம்பம் - 4
by அ.இராமநாதன் Sat Aug 03, 2019 6:11 pm

» வர்ணஜாலம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Aug 02, 2019 11:04 pm

» கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை ;மா.கணேஷ்
by eraeravi Fri Aug 02, 2019 10:21 am

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் மித்ரா
by eraeravi Thu Aug 01, 2019 9:23 pm

» நீ தான் ஒசத்தி! நூல் ஆசிரியர் : மகுவி !' நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 01, 2019 9:20 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரிமர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை; கே ஜி. ராஜேந்திரபாபு !
by eraeravi Thu Aug 01, 2019 9:18 pm

» உண்மை , நேர்மை - அழியாத சொத்து
by அ.இராமநாதன் Wed Jul 31, 2019 10:51 pm

» கருப்பு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jul 29, 2019 11:53 pm

» ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!
by அ.இராமநாதன் Mon Jul 29, 2019 10:49 am

» இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்
by அ.இராமநாதன் Sun Jul 28, 2019 11:57 pm

» எதிரும், புதிரும்...{கவிதை}
by அ.இராமநாதன் Sun Jul 28, 2019 11:49 pm

» நம்மிடமே இருக்கு மருந்து! - தேன் மற்றும் லவங்கம்!
by அ.இராமநாதன் Sun Jul 28, 2019 11:47 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மழைவாசம் (RAIN’S FRAGRANCE) நூல் ஆசிரியர் : கவிஞர் இன்பா ! நூல் விமர்சனம் : விஞர் இரா. இரவி

Go down

மழைவாசம் (RAIN’S FRAGRANCE)  நூல் ஆசிரியர் : கவிஞர் இன்பா !    நூல் விமர்சனம் : விஞர் இரா. இரவி   Empty மழைவாசம் (RAIN’S FRAGRANCE) நூல் ஆசிரியர் : கவிஞர் இன்பா ! நூல் விமர்சனம் : விஞர் இரா. இரவி

Post by eraeravi on Mon Jul 08, 2019 2:33 pm

http://www.tamilauthors.com/04/498.html  

மழைவாசம் (RAIN’S FRAGRANCE)
நூல் ஆசிரியர் : கவிஞர் இன்பா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  


a.inba@gmail.com
INBHA BLK 119 # 11-209 BCDOK NORTH ROAD, SINGAPORE – 460 119.
விலை : ரூ.200.


*******

      சிங்கப்பூரில் வாழும் தமிழச்சி கவிதாயினி இன்பா அவர்களின் ஹைக்கூ கவிதை நூல் மழைவாசம். மழைவாசம் எல்லோருக்கும் பிடிக்கும். மழைவாசல் இந்நூலும் எல்லோருக்கும் பிடிக்கும். ஹைக்கூ கவிதைகள் உலகின் முதல்மொழி தமிழ் உலகமொழி. ஆங்கிலம் இரண்டு மொழிகளில் உள்ளன.

      எழுத்தாளர், பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் தங்கம் மூர்த்தி, முனைவர் மன்னை க. இராசகோபாலன், இறைமதியழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி உள்ளனர். மிக நேர்த்தியான வடிவமைப்பு. சிங்கப்பூர் நகர் போலவே அழகான அச்சுக்கோர்ப்பு.

கால்களை கழுவிவிட்டு உள்ளே
வரச்சொல்கின்றன
கடல் அலைகள்.

CLEANSE YOUR FEET TO ENTER
COMMAND
THE SEA WAVES.

சிந்திக்க வைக்கும் ஹைக்கூ. கடல் சுத்தமாக உள்ளது. ஆனால் நகரவாசிகளான நம் கால்கள் அழுக்காக உள்ளன. எனவே கால்களை கழுவி விட்டு கடலில் இறங்கு என அலைகள் கட்டளை இடுவது நல்ல கற்பனை.

உச்சிவெயிலில்
தொப்பி விற்பவன்
தலையில் துண்டு!

IN THE HOT NOON
THE CAP SELLER ROAMS
WITH A TOWEL ON HIS HEAD

தலையில், தான் அணியும் தொப்பியையும் விற்று காசாக்க விடலாம் என்பது ஒரு பொருள்.  தொப்பியை விட துண்டு அணிவதே சிறப்பு என்பது மற்றொரு பொருள். மொத்தத்தில் வறுமையில் வாடுகிறான் என்பது குறியீடு. இயல்பு நிலையை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

இரவானால் போதும்
என் பின்னால் கதறுகிறது
கெட்ட நிலா!

IF IT GETS DARK
STALKING AFTER ME
BAD MOON.

நூலாசிரியர் கவிஞர் இன்பா, நிலாவை ஆண்பாலாகப் பார்த்து உள்ளார். பின்னால் சுற்றும் காதலனாக நிலவைச் சுட்டியதும் அதுவும் வேலைவெட்டி இல்லாமல் சுற்றுவதால் கெட்ட நிலா என்பதும் நல்ல கற்பனை.

மடிக்கணினியைத் திறந்து
எழுதிய கவிதை
பேனா!

SWITCH ON THE LAPTOP
TO COMPOSE A POEM
TITLED PEN.

உண்மை தான். மடிக்கணினி வந்ததிலிருந்து பலர் பேனா பிடித்து எழுதும் பழக்கத்தையை விட்டுவிட்டனர். முரண்சுவையுடன் வடித்த ஹைக்கூ கவிதை நன்று.

பேனா பயன்படுத்தாது வடிக்கும் கவிதையின் தலைப்பே பேனா.

சுட்டுக்கொண்டே இரு
செத்துக்கொண்டே இருக்கிறேன்
முத்த குண்டு!

KEEP ON SHOOTING TIME
KEEPS ON DYING
SHELLS OF KISSES.

ஹைக்கூ கவிதையின் நுட்பம் என்னவென்றால் மூன்றாவது வரியில் எதிர்பாராத திருப்பம். முதல் இரண்டு வரிகளில் வன்முறை போலச் சொல்லி மூன்றாவது வரியில் காதல் முத்தம் பற்றி குறிப்பிட்டு வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

சற்றே இழக்காமல்
தள்ளிப்போ என்னவள்
நடந்து வருகிறாள்!

YOU MIND, DON’T DASH
MOVE AWAY MY SWEET
HEART IS APPROACHING.

கவிதாயினி இன்பா ஆண்பாலாக மாறி என்னவள் வருகிறாள். காற்றே இழக்காமல் போ என கட்டளை இடுகிறாள். காதலன் என் காதலியை யாரும் இழக்காதீர்கள் என்ற வேண்டுகோளாகவும் பொருள் கொள்ள முடியும். ஹைக்கூ கவிதையும் சிறப்பு அதுதான். படைப்பாளி ஒரு பொருளில் எழுதினாலும் வாசகர்கள் பல்வேறு விதமாகவும் பொருள் கொள்ள வாய்ப்பாகவும் அமைவதே ஹைக்கூ.

சமைத்ததைப் பரிமாறிய பின்பு
சாப்பிடச்  சொல்கிறார் மாமியார்
பசியை விழுங்கும் மருமகள்!

AFTER SEVING THE COOKED FOOD
ASKED MOTHER IN LAW TO EAT
SWALLOWING OWN HUNGER DAUGHTER IN LAW.

ஒரு ஹைக்கூவின் மூலம் மாமியார் கொடுமையை மனநிலையை உணர்த்தி உள்ளார். வா மருமகளே இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம் என்று மாமியார் சொன்னார். எவ்வளவு மகிழ்ச்சியாகவும் இருக்கும் மருமகளுக்கு. மாமியார்களிடையே மனமாற்றம் வரவேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.

பழம் கீழே விழுகிறதெனப்
பறந்து வந்தது காக்கை
தரையில் பழுத்த இலை!

ASSUMING THE FALLING OF FRUIT
CROW CAME IN FLIGHT
RIPENED LEAF ON THE GROUND.

இலவு காத்த கிளி என்பார்கள். அதனை நினைவூட்டும் நல்ல ஹைக்கூ. பழம் என்று கருதி வந்த காகம் பழுத்த இலை என்பதை அறிந்து ஏமாந்து சென்றதை உற்றுநோக்கி காட்சிப்படுத்தும் ஹைக்கூவாக வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

முகம் பார்க்கக் கண்ணாடியைத்
தேடியலைகிறது நிலா
காணவில்லை குளங்கள்!

TO SEE THE FACE
THE MOON LOOKS OUT FOR 
MISSING THE MIRROR PONDS.

குளங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன அரசுக் கட்டிடங்களே. குளங்களில் குத்த வைத்து விட்டன. குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் குற்றத்தை நேரடியாகச் சொல்லாமல் நிலா முகம் பார்க்க முடியாமல் தவிக்கிறது என்று நிலா மூலம் உணர்த்திய உத்தி நன்று.

கால் கூட நனையாமல்
முத்தெடுத்து வந்தேன்
நூல்!

WITH OUTGETTING MY FEET WET GRAP OUT PEARL 
BOOK

கடலில் மூழ்கி தான் முத்து எடுக்க முடியும். கால் கூட நனையாமல் எப்படி முத்து எடுக்க முடியும் என்று யோசித்த போது நூல் எனும் கடலில் மூழ்கி முத்து எடுத்ததாக விடை சொல்லி வியப்பில் ஆழ்த்தி விடுகிறார். நூலின் சிறப்பை இதைவிடச் சிறப்பாக சொல்லிட முடியாது.கடற்கரைக்குச் 
செல்லும் காதல்
உப்புக் கரிக்கிறது!

SEASHORE GOING
LOVE
TASTING BRACKISH

கடற்கரையில் வந்து அமர்ந்து காதலர்கள் செய்திடும் சில்மிசங்கள் அருகில் நடப்பவர்களை கூச்சப்பட வைக்கின்றன.  போது இடத்தில் அவைஅடக்கம் இன்றி அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். அதனை நாகரிகமாக கண்டித்து உள்ளார்.கவிதாயினி இன்பா அவர்கள் அழ்ந்து சிந்தித்து உற்றுநோக்கி ஹைக்கூ கவிதைகளை வடித்துள்ளார். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2368
Points : 5540
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum