"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

» எது ஆயுதம்? – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:27 pm

» சொன்னால் நம்ப மாட்டீர்கள் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:27 pm

» சுவைதான் கூடும் – கவிஞர் சுரதா
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:25 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:24 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:23 pm

» கவிதை எழுத வைத்த காதல்! - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:23 pm

» கரங்கள்’ எனும் மூலதனம் - குறுங்கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:06 pm

» புதிய வருஷம்-சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:05 pm

» வருக புத்தாண்டே!
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:05 pm

» வேலைகளல்ல, வேள்விகளே – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:04 pm

» அன்பின் சொற்கள் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:03 pm

» பந்திக்கு முந்துதல் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:03 pm

» பன்முகப் பார்வையில்; கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள் ! செல்வி இர. ஜெயப்பிரியங்கா ! திண்டுக்கல்.
by eraeravi Sun Jan 05, 2020 7:28 pm

» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
by eraeravi Tue Dec 31, 2019 2:23 pm

» நூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரநூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.வி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Sun Dec 29, 2019 1:15 pm

» எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால் இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்! கவிஞர் இரா .இரவி
by eraeravi Sun Dec 22, 2019 6:08 pm

» போலி செய்திகள் - சூழ் உலகு
by அ.இராமநாதன் Thu Dec 19, 2019 2:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Go down

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Empty ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Post by அ.இராமநாதன் on Sun Jul 28, 2019 10:22 pm

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! E_1475058099ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் போலவே, இருகரங்கள் 
மட்டும் கொண்ட ரங்கநாதரைக் காண வேண்டுமா?


திருமோகூர் போலவே உள்ள சக்கரத்தாழ்வாரை 
தரிசிக்க வேண்டுமா?


பார்வதி தேவியார் தவமியற்றி வணங்கிய பெருமாளை 
வழிபட வேண்டுமா?


தசாவதாரத் திருவுருவங்களும் கருங்கல் சிலையாக 
வடிக்கப்பட்டு அருள் வழங்கும் கோலத்தை நோக்க 
வேண்டுமா?


திருப்பதி போல ரத்னாங்கி சேவையில் ஜொலிக்கும் 
பெருமாளை ஆராதிக்கவேண்டுமா?


இந்த அற்புதங்கள் அனைத்தும் காண நீங்கள் செல்ல 
வேண்டிய புனிதத்தலம், காரைக்கால் நித்ய கல்யாண 
ரங்கநாதர் கோயில்!


பார்வதிதேவி தன் அண்ணாவான பெருமாளைக் குறித்துத் 
தவமியற்றிய தலம் இது. பெருமாள் தங்கையின் தவத்தை 
மெச்சி காட்சியளித்தார்.


'என்ன வரம் வேண்டும் தங்கையே?' என்ற பெருமாள் 
கேட்க, 'சாகம்பரி' என்ற பெயரில் அவதாரம் செய்திருந்த 
பார்வதிதேவி கேட்ட வரம் தனக்கல்ல; வரம் தர 
வந்தவருக்கே வரம் தந்த வரம்!


'அண்ணா, சகோதரனான நீ திருமணம் செய்து கொண்டு
 ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக எனக்கு காட்சி தரவேண்டும்.
 உன் திருமணத்தை நான் காண வேண்டும்' தாய் - தந்தை
 ஸ்தானத்தில் தன் திருமணப் பேச்சையே வரமாகக் கேட்ட, 
புத்திசாலித் தங்கையை பெருமாள் பாசமாய்ப் பார்த்தார்.


'தந்தேன் வரம்!' என்றார். தங்கைக்கு மட்டுமல்ல.. 
தன்யர்களாகிய நமக்கும் சேர்த்துத்தான் நித்ய கல்யாண 
ரங்கநாதராக இன்றும் என்றும் அருள் வழங்கி வருகிறார் 
பெருமாள்.


திருமணத்திற்கு வந்த ஈசனும், உமையும் எதிரிலேயே உள்ள 
கைலாயநாதர் கோயிலில் அருள்பாலிக்கிறார்கள்.


ஆதிஅந்தமிலாத ஈசனே தமது திருவாக்கினால், 
'அம்மையே' என்று அழைத்த காரைக்கால் அம்மையார் 
கோயில் பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.


இம்மூன்று கோயில்களுக்கும் பொதுவானது, சந்திர 
புஷ்கரணி தீர்த்தக்குளம். இதில் நீராடி, பகவானை 
தரிசித்தால் சந்திர தோஷமும் திருமணத் தடையும் 
நீங்குகிறதாம்!


108 வைணவ திவ்ய தலங்களுள் ஒன்றான
 திருக்கண்ணபுரத்தின் அபிமான தலமாக இது 
விளங்குகிறது.
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30266
Points : 66274
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Empty Re: ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Post by அ.இராமநாதன் on Mon Jul 29, 2019 10:49 am

தாயார், ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், 
ஆழ்வார் சன்னதிகள் என நியமப்படி எல்லா சன்னதிகளும்
 உள்ளன. அபிஷேக, ஆராதனைகளும், விழாக்களும் 
பிரம்மோற்சவமும் திவ்ய தேசங்கள் போலவே வெகு சிறப்பு 
இங்கே.


ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு ஸ்ரீரங்கம் போலவே 
சிவப்பு ரத்னாங்கி சேவை, மூலவருக்கு வஜ்ராங்கி 
எனப்படும் விலையுயர்ந்த கற்களாலான வஸ்திர அலங்காரம்.


இக்கோயில் பாண்டிச்சேரி அரசின் அறநிலைத்துறையால்
 நிர்வாகம் செய்யப்படுகிறது. பிரம்மோற்சவம் மாசி மாதம் 
நிகழ்கிறது.


கருட பஞ்சமி அன்று இத்தலத்தில் 7 கோயில பெருமாள்கள் 
கருட வாகனத்தில் கூடுகின்றனர். ஒரு கருடவாகனரைப் 
பார்த்தாலே பரமபதம் கிட்டும் எனில் ஏழு பேரை ஒரே இடத்தில்
 சேவிப்பது மகாபாக்கியம். 


நிரவி கரியமாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி வரதராஜப்
பெருமாள், தென்னங்குடி வரதராஜப்பெருமாள், கோயில் 
பத்து கோதண்டராமப் பெருமாள், திருமலைப்பட்டினம் 
இரு பெருமாள்கள், காரைக்கால் பெருமாள் என அந்த எழுவர் 
தான் இங்கு அன்று எழுவர்!


புண்டரிக மகரிஷியும், பராசர மகரிஷியும் இப்பிரதேசத்தில் 
தவம் இயற்றியவர்கள். ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் 
பரிதவிக்க, இவர்கள் இருவரும் பெருமாளைக் குறித்து தவம் 
செய்து நீர்வளம் கேட்டனர்.


பெருமாள் ரங்கநாதராக காட்சி தந்து, அரிசில் ஆறு எனப்படும் 
காவிரியின் கிளை நதியை இப்பிரதேசத்தில் பாயவிட்டார்.
 ஹரி தந்தால் ஹரி சொல் ஆறு. அதுவே தற்போது அரிசிலாறு... 
அரிசிலாறு!


இத்தலத்தில் மூலவரான ரங்கநாதர் இங்கு வந்து சேர்ந்ததற்கும் 
ஒரு வரலாறு உண்டு. அது பெருமாளே இங்கு விரும்பி வந்து 
சேர்ந்ததை விளக்கும்.


சிறுபுலியூர் என்றொரு பெருமாள் தலம் அருகில் உள்ளது. 
அங்குள்ள மூலவருக்கு தயாநிதிப் பெருமாள் என்னும் திருநாமம்.


அக்கோயிலுக்காகச் செய்யப்பட்டவர்தான் இந்தப் பெருமாள். 
ஆற்று வழியாக படகில் இருந்தத் திருமேனியைக் கொண்டு 
வருகையில் சிறுபுலியூரில் கரையேறாமல், ஆற்று வௌ்ளத்தில்
 இங்கே வந்து நிலை கொண்டார் பெருமாள். 


இப்போது காரை மக்களின் பக்தி வௌ்ளத்தில் அருள் ஆட்சி 
செய்து வருகிறார்.


நித்ய கல்யாண ரங்கநாதரை தரிசிப்போருக்கு அனைத்து 
நலமும் வளமும் நிச்சயம்!


எங்கே இருக்கு: காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து 
500 மீட்டர் தூரம். நடந்தே போகலாம்.


தரிசன நேரம்: காலை 7-12; மாலை 5-9.
-
---------------------
 சிங்காரவேலன்
நன்றி-குமுதம் பக்தி செய்திகள் & வாரமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30266
Points : 66274
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum