தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கேரளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: பலி எண்ணிக்கை 104 ஆனது

Go down

கேரளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: பலி எண்ணிக்கை 104 ஆனது Empty கேரளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: பலி எண்ணிக்கை 104 ஆனது

Post by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:39 am

[You must be registered and logged in to see this image.]


-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்தில் மழை குறைந்து, 
வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதால் மெல்ல இயல்பு நிலை 
திரும்பி வருகிறது. அங்கு மழை, வெள்ளச் சம்பவங்களில் 
பலியானோர் எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்தில் கடந்த 8ஆம் தேதியில் 
இருந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் 
வெள்ளக்காடாக மாறின. வயநாடு, மலப்புரம் ஆகிய 
மாவட்டங்களில் பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

வியாழக்கிழமை பகல் 3 மணி நிலவரப்படி, மழை, வெள்ள 
பாதிப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை 104 ஆக 
உயர்ந்துள்ளதாக மாநில அரசு வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மலப்புரம் 
மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 43 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 
அங்கு இன்னும் 28 பேரைக் காணவில்லை. 

அடுத்ததாக, கோழிக்கோட்டில் 17 பேரும், வயநாட்டில் 12 பேரும் 
இறந்தனர். வயநாட்டில் மேலும் 7 பேரைக் காணவில்லை. 
கண்ணனூரில் 9 பேரும் திருச்சூரில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கேரளத்தில் மழை குறைந்துள்ளதால், வெள்ளம் 
வடியத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 
வியாழக்கிழமை வெயில் அடித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை 
மெல்லத் திரும்பி வருகிறது.

மழையின் தீவிரம் குறைந்து விட்டதால் கேரளத்தின் 
14 மாவட்டங்களில் ஒன்றில் கூட மிக பலத்த மழைக்கான ரெட் அலர்ட் 
எச்சரிக்கை வியாழக்கிழமை விடுக்கப்படவில்லை. எனினும், 
ஆங்காங்கே கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் மற்றும் யெல்லோ 
அலர்ட் எச்சரிக்கைகள் கண்ணனூர், காசர்கோடு, இடுக்கி 
மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டன.

நிலச்சரிவுகள் ஏற்பட்ட மலப்புரம் மாவட்டத்தின் 
கவளப்பாறையிலும், வயநாடு மாவட்டத்தின் புத்துமலை 
பகுதியிலும் வியாழக்கிழமையும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து. 
அங்கு வீடுகளுக்குள் உயிரோடு புதைந்து பலியானதாக 
கருதப்படுவோரைத் தேடுவதற்காக இப்பணி மேற்கொள்ளப்பட்டு 
வருகிறது. 

புத்துமலை பகுதியில் வியாழக்கிழமை வெயில் காய்ந்தது. 
அங்கு எர்த் மூவர் இயந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்களின் 
உதவியுடன் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

கவளப்பாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் டிரோன் 
எனப்படும் சிறிய விமானங்கள் மூலம் தேடுதல் நடவடிக்கை 
மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் வடிந்து வருவதைத் தொடர்ந்து, 
நிவாரண முகாம்களில் இருந்து மக்கள் வெளியேறி வீடுகளுக்கு 
செல்லத் தொடங்கியுள்ளனர். 

எனினும், இன்னும் 1 லட்சத்து 75 ஆயிரத்து 373 பேர் 1,057 முகாம்களில் 
தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு வெளியிட்ட தகவலின்படி மழை வெள்ளத்தால் 11,901 வீடுகள் 
ஓரளவு சேதமடைந்துள்ளன; 1,115 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேரள அரசு 
புதன்கிழமை இழப்பீடு அறிவித்தது. 

அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10,000 உடனடி உதவி என்பதும் 
அதில் அடங்கும்.
-
--------------------------------------
தினமணி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum