"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! அன்னைத் தமிழை மறக்காதே! அடையாளத்தை இழக்காதே!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Nov 16, 2019 2:26 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 10:46 pm

» ரசித்த கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:29 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:21 pm

» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:11 pm

» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:03 pm

» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:01 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 9:28 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 8:55 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
by eraeravi Sat Nov 09, 2019 7:24 pm

» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
by eraeravi Thu Nov 07, 2019 1:45 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Mon Nov 04, 2019 10:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:49 pm

» உரிமை விடியல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:22 pm

» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
by eraeravi Sun Nov 03, 2019 1:10 pm

» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 28, 2019 9:11 pm

» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Sun Oct 27, 2019 7:24 pm

» மறந்துடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:39 pm

» அப்பா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:37 pm

» விருப்பம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:36 pm

» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:33 pm

» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...!! - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:12 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:01 pm

» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 7:40 pm

» பல்சுவை தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:45 pm

» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:36 pm

» குறுக்கழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:33 pm

» சிந்தனை சிகிச்சை-6
by அ.இராமநாதன் Sat Oct 19, 2019 8:07 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:19 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:09 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 4:27 pm

» ஆசை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:32 pm

» காலம் மாறிப்போச்சு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:31 pm

» தமிழ்ப்பெண்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:30 pm

» திறமை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:29 pm

» 50 வார்த்தை கதைகள்
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:28 pm

» அம்மா மாதிரி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:27 pm

» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை!
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:26 pm

» சீரியல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:25 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:24 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:24 pm

» பல்சுவை கதம்பம் - 6
by ராஜேந்திரன் Tue Oct 15, 2019 1:02 pm

» மதுரை ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Oct 11, 2019 11:33 pm

» நூல் : "இறையன்பு கருவூலம்" நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலை கழகம், கோவை
by eraeravi Fri Oct 11, 2019 11:13 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Wed Oct 09, 2019 11:24 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Go down

வியர்வைக்கு வெகுமதி!   நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.      நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி   Empty வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Mon Oct 07, 2019 3:20 pm

வியர்வைக்கு வெகுமதி!

நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.


  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  



வெளியீடு : விசயா பதிப்பகம், 20, ராச வீதி, கோயம்புத்தூர்-641 001.  பக்கங்கள் : 200, விலை : ரூ.140.

*******
     ‘வியர்வைக்கு வெகுமதி’ என்ற நூலின் தலைப்பே உழைப்பின் உயர்வை உணர்த்துவதாக உள்ளது. நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சமுதாயத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஓய்வின்றி தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். எழுதியவைகளை நூலாக்கி விடுகின்றார். படிக்கும் வாசகர்கள் மனதை செம்மைப்படுத்தி நெறிப்படுத்தி விடுகிறார். பாராட்டுக்கள்.
     நூலில் 30 முத்தான தலைப்புகள், 30 கட்டுரைகள் உள்ளன. தலைப்புகளே சிந்திக்க வைக்கின்றன. ‘வியர்வைக்கு விழா’ என்று தொடங்கி ‘உழைப்பு வீணாகாது’ என்று முடித்துள்ளார். நூல் முழுவதும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. உழைப்பின் உயர்வை உணர்த்தி உள்ளார். கடின உழைப்பிற்கு ஈடு, இணை இல்லை என்பார்கள். சொல்லை விட செயல் முக்கியம் என்பார்கள். நூலிலிருந்து சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு :
     “ஒருவருடைய பண்பாட்டை அவர்கள் பணியிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தூய்மையுடையவரா; வாய்மையுடையவரா என்பதை அவர் செய்யும் விதத்திலேயே தெரிந்து கொள்ளலாம். பணியை கடனுக்காக செய்பவர்களும் உண்டு. கடமைக்காக செய்பவர்களும் உண்டு. கடவுளுக்கு செய்வதாக நினைத்துச் செய்பவர்களும் உண்டு”, செய்யும் செயல், நடத்தை நமது பண்பாட்டை பறைசாற்றுவதாக உள்ளது. எனவே எந்த ஒரு செயலையும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.
     “மனித இனத்தின் பேராற்றலுக்கு அவனது உழைப்பே முக்கியக் காரணம். உழைப்பை எப்போது கைவிட்டாலும் அவன் வீழ்ச்சி அடைவதற்கு சாத்திய கூறுகள் இருக்கின்றன”
     உண்மை தான். மனிதனுக்கு அழகு உழைப்பு தான். ‘எப்போதும் இயயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்ற நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் பொன்மொழியைத் தான் தாரக மந்திரமாகக் கொண்டு நானும் இயங்கிக் கொண்டே இருக்கிறேன்.
     தந்தை பெரியார் அவர்கள் சொன்ன சொல்லும் நினைவிற்கு வந்தது. “ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம்”. ஒன்று படிக்கையில் அது தொடர்பான மற்றொன்று நினைவிற்கு வருவதே படைப்பாளியின் வெற்றி ஆகும்.
     சிறிய கதைகள், சந்தித்த நிகழ்வுகள், அனுபவங்கள், படித்த தகவல்கள் என பல்சுவை விருந்தாகவும், படிக்கும் வாசகர்களுக்குப் பயந்தரும் விதமாகவுன் உள்ளது. தெளிந்த நீரோடை போன்ற சிறந்த எழுத்து நடை. படிப்பதற்கு சுவை கூட்டும் விதமாக உள்ளது”. பாராட்டுக்கள்.
     “செருப்பை விடுவதிலும் செம்மை வேண்டும், துண்டை உலர்த்துவதிலும் அழகு வேண்டும், நேரத்தைக் கடைபிடிப்பதிலும் நேர்த்தி வேண்டும என்ற பண்புடன் நடந்து கொள்பவர்கள் எல்லாவற்றிலும் சரியாக இருப்பார்கள்”
     செருப்பை விடும்போது கண்டபடி வீசிவிடுவதையும் பார்த்து இருக்கிறோம். குறித்த நேரத்தில் செல்வதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் எல்லா நேரமும், நேரத்தைக் கடைப்பிடிக்காமல் தாமதமாகச் சொல்வதையே பழக்கப்படுத்திக் கொண்ட பலரையும் இன்றைக்கு பார்க்கின்றோம். செருப்பு விடுவதில் தொடங்கும் ஒழுங்கு உள்ளே சென்று உரையாடி உற்று நோக்கி விடைபெறும் வரை ஒழுங்கு தொடர வேண்டும். எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறையை வகுத்துக் கொள்ள உதவிடும் நூல் இது.
     ‘காதலியாக இருக்கும்போது கொடுத்த தண்ணீரைக் கூடப் பாராட்டுகிற ஆண்கள், மனைவியான பிறகு செய்து தருகிற பால் பாயசத்தைக் கூட பாராட்டுவதில்லை’.
     காதலித்துக் கரம்பிடித்த ஆண்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள். இவை காதலிக்கும் போது காட்டிய அன்பை கரம்பிடித்த பின்னும் காட்ட வேண்டும். மணமானபின் மாறிவிடுவதால் தாலன் காதல் திருமணங்கள் தோற்கின்றன.
     உலகத்தின் அத்தனை பேச்சாளர்களும் உழைப்பால் தான் உயர்ந்தவர்கள். கருத்தில் ‘திரு’ இருக்கிறவர்களெல்லாம், கருவில் ‘திரு’ இருந்தவர்கள் அல்லர். பேசுவதற்கும் தயாரிப்பு செய்திடல் வேண்டும். அப்போது தான் அந்தப்பேச்சுக்கு வெற்றி  கிட்டும் பலரும் பாராட்டுவார்கள். தயாரிப்பு இன்றி வந்து வாயுக்கு வந்தபடி பேசுபவர்களை யாரும் இன்று பாராட்டுவதில்லை.
     “அவமானப்படுத்தியவர்களும் பொன்னாடை போர்த்துமாறு உயர்வதற்கு உழைப்பை மூலதனம்”. உண்மை தான். இந்த வரிகளை என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்தேன். நான் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று பின் வெற்றி பெற்ற பின், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தோல்வியுற்று, வெற்றி பெற்று 11ஆம் வகுப்பு இடம் கேட்ட போது மறுத்து விட்டனர். பின்னர் இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நன்கு படித்து 857 மதிப்பெண் பெற்றேன். கவிஞராக வளர்ந்த பின்னே அதே சேதுபதி பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கவிதைப் போட்டியின் நடுவராகச் சென்ற பொழுதுகளில் பொன்னடைப் போர்த்திப் பாராட்டினார்கள்.
     தற்பெருமைக்காக .எழுதவில்லை நம்மை வளர்த்துக் கொண்டால் மதிக்காதவர்களும் மதிப்பார்கள் என்பது உண்மை.
     வியர்வைக்கு வெகுமதி நூல் உழைப்பாளிகளுக்கு வெகுமதி நூல் ஆசிரியர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்கு பாராட்டுக்கள்.
.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2400
Points : 5636
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum