"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! வருமானம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 10:07 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by அ.இராமநாதன் Yesterday at 11:12 am

» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்
by அ.இராமநாதன் Yesterday at 11:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தினமலர்)
by அ.இராமநாதன் Yesterday at 10:58 am

» 'கிரே' பட்டியல் பாக்., தொடரும்?
by அ.இராமநாதன் Yesterday at 10:52 am

» சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது
by அ.இராமநாதன் Yesterday at 10:50 am

» லோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா?
by அ.இராமநாதன் Yesterday at 10:47 am

» கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 am

» பிரிட்டன் எம்.பி.,க்கு இந்தியா நுழைய மறுப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:34 am

» விமானப்படையில் அதி நவீன தேஜஸ் விமானங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 7:31 am

» வலுவடையும் 'டென்னிஸ்' புயலால் மிதக்கும் பிரிட்டன்
by அ.இராமநாதன் Yesterday at 7:28 am

» புன்னகை தருகின்ற தன்னம்பிக்கை...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:47 pm

» கணவன், மனைவி இருவரில் யார் தைரியசாலி?
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:46 pm

» ஆஞ்சநேயரை வணங்கினால் சர்வ தோஷமும் விலகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:42 pm

» உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பஅப்பட்டவன்!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:40 pm

» பல்சுவை தொகுப்பு
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:10 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:00 pm

» இதுவும் கடந்து போகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:59 pm

» எங்கே இருக்கிறோம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:48 pm

» கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:45 pm

» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:39 pm

» திரியை அட்ஜஸ்ட் பண்ற மெழுகுவர்த்தி...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:37 pm

» நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:29 pm

» பல்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:14 pm

» திருக்குவளைக்கு தேவாரப் பெயர் - குறுக்கெழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:12 pm

» தும்பை பூ துகையல்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:10 pm

» தும்பை பிறந்த கதை
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:09 pm

» தும்பை பூ ரசம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:07 pm

» அமைதியை தேடாதே, அமைதியாய் மாறிவிடு...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:05 pm

» ...ரசிக்க தெரிந்தவனே வாழ்க்கையை வாழ தெரிந்தவன்!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 8:58 pm

» ரசித்த கவிதைகள் - (நன்றி- இணையம்)
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 3:36 pm

» கவிதைகள் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 3:22 pm

» ஆனந்த விகடன் - ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 3:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 11:10 am

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 11:04 am

» ரிக்சா தொழிலாளி மகள் திருமணம்: பிரதமர் வாழ்த்து
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 11:00 am

» மக்களிடம் திருடிய 14 கிலோ தங்கம் கடத்த முயற்சி: நடுக்கடலில் பறிமுதல்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:57 am

» காலநிலை மாற்றம் கடல் மட்டத்தை உயர்த்தும்: எச்சரிக்கிறது உச்சி மாநாடு
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:55 am

» தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:21 am

» 5,000 அனாதை பிணங்களை அடக்கம் செய்த சேலம் பெண்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:19 am

» மாண்புமிகு மாணவி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:15 am

» விஜய் படத்தின் ‘காப்பி’ என்று சர்ச்சை ஆஸ்கார் விருது படம் மீது வழக்கு?
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:09 am

» மீண்டும் நடிக்க வந்துள்ள விஜயசாந்தி சம்பளம் ரூ.4 கோடி?
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:06 am

» தடைகளை கடந்து திரைக்கு வரும் திரிஷா படம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:04 am

» “என் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா” நடிகை அமலாபால் விளக்கம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:02 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Go down

தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர்   முனைவர் நிர்மலா மோகன்      நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி   Empty தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Mon Oct 07, 2019 3:38 pm

தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை!
நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் 

முனைவர் நிர்மலா மோகன்  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  


வெளியீடு : 
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017.  
பக்கங்கள் : 176, விலை : ரூ.180

.

******

மதுரையில் இலக்கிய இணையர் என்று போற்றப்படும் ஆளுமைகள் தமிழ்த் தேனீ இரா. மோகன், நிர்மலா மோகன் அவர்கள். தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் எழுதியுள்ள 37ஆவது நூலாகும்.  இந்நூலை தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். வானதி பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடாக உள்ளது.  அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன.
நவரத்தினம் போல ஒன்பது தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார்கள். ஒன்பதும் ஒன்பது சுவை போல இலக்கிய விருந்தாக நூல் உள்ளது. படிக்கும் வாசகர்கள் மனத்தில் எதிர்மறை சிந்தனைகளை அழித்து உடன்பாட்டுச் சிந்தனைகளை விதைக்கும் விதமாக வந்துள்ளது நூல்.
ஒரு புத்தகம் என்ன செய்யும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக வந்துள்ள நூல். படிக்கும் முன் உள்ள மனநிலைக்கும், படித்த பின் உள்ள மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே நூலின் வெற்றியாகும். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து வந்துள்ள நூல்.  நல்லவை இருக்க அல்லவை எதற்கு. கனி இருக்கும் போது காய் எதற்கு? கனி என்பது உடன்பாட்டுச் சிந்தனை. காய் என்பது எதிர்மறையான சிந்தனை. எப்போதும் நல்லவை சிந்திக்க, நல்லவை பேச, நல்லவை செய்திட வலியுறுத்திடும் நூல்.
தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொடங்கி இன்றைய ஹைக்கூ கவிதைகள் வரை கொட்டிக் கிடக்கும் உடன்பாட்டுச் சிந்தனைகளை மேற்கோள் காட்டி எழுதியுள்ள நூல்.
ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அறிஞர்கள் உடன்பாட்டுச் சிந்தனைகள் குறித்துச் சொன்ன பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த்தேனீ  இரா. மோகன் அய்யா பாணியிலேயே தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களும் கட்டுரைகள் வடித்து இருப்பது சிறப்பு. முதல் கட்டுரையில் உடன்பாட்டுச் சிந்தனைகள் குறித்த விளக்கம் மிக நன்று. அக்கட்டுரையிலிருந்து சில துளிகள் :
கவிப்பேரரசு வைரமுத்து கவிதை.

எதிர்மறை வார்த்தைகள் / உதிர்ந்து போகட்டும்!
      உடன்பாட்டு மொழிகள் / உயிர் கொண்டெழட்டும்!

(பெய்யெனப் பெய்யும் மழை      பக். 76-77)

மேற்கோள் காட்டும்போது எழுதியவர் பெயர், நூலின் பெயர் பக்க எண்கள் குறிப்பிட்டு மிகத்துல்லியமாக எழுதி இருப்பது சிறப்பு. மேற்கோள் காட்டப்பட்ட நூலை வாங்கிப் படித்திட தூண்டும் விதமாகவும் உள்ளது.
தொல்காப்பியரின் உடன்பாட்டுச் சிந்தனையில் தொடங்கி புறநானூறு, திருக்குறள் பக்தி இலக்கியங்களில் உள்ள உடன்பாட்டுச் சிந்தனை பாரதியாரின் பாடல்களில் உள்ள உடன்பாட்டுச் சிந்தனை இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுத்து வாசகர்களுக்கு பரிசளித்து உள்ளார். அன்னப்பறவை தண்ணீரை நீக்கி விட்டு பாலை மட்டும் அருந்தும் என்பார்கள். அதுபோல தமிழ் இலக்கியத்தில் உள்ள பாலை மட்டும் எடுத்து எழுதி உள்ளார்.
எண்ணம் போல வாழ்க்கை என்பார்கள். அதுபோல உடன்பாட்டுச் சிந்தனை என்பது நல்லது நினைப்பது. நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும். மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்பார்கள். அதுபோல நல்லதை நினைத்து நல்லதைப் பேசி, நல்லதைச் செய்தால் வாழ்க்கை வளமாகும் என்பதை உணர்த்திடும் நூல்.
கவியருவி தமிழன்பன் கவிதை உடன்பாட்டுச் சிந்தனையின் உச்சம் என்றே சொல்லலாம். பல பட்டிமன்றங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் கவிதையை மேற்கொள் காட்டி உள்ளார்கள்.
பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு முத்தமிட்டுச் சொன்னது பூமி. ஒன்பது முறை எழுந்தவனல்லவா? நீ
சூரியப் பிறைகள் (ப.30)

நூல ஆசிரியர் வரலாற்று பெருமைமிக்க செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராக இருந்து பணிநிறைவு பெற்றவர். காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்பதால் சங்க இலக்கியம் பற்றி வகுப்பறையில் பாடம் நடத்தி நடத்தி சங்க இலக்கியத்தில் புலமை மிக்கவராக இருப்பதால், சங்க இலக்கியத்தில் உள்ள உடன்பாட்டுச் சிந்தனைகளை மிக அழகாக தொகுத்து எடுத்தி இயம்பி உள்ளார்.
ஒருமுறை அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் நீட்டித்த போது ஔவையார் வாயிலோனை விளித்துப் பாடிய புறநானூற்று பாடலும் விளக்கமும் நன்று.
‘திருவள்ளுவர் ஓர் உடன்பாட்டுச் சிந்தனையாளராக என்ற கட்டுரையில் திருக்குறளில் உள்ள குறள் எண்கள் 50, 48, 49, 46, 56, 374, 426, 280, 596, 772, 621, 999, 1122, 338, 336, 339, 1, 1330 – இத்தனை திருக்குறள்களை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை சிறப்பு. திருக்குறளின் புகழை மேலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் கட்டுரை. நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகள் சில :
ஆகாயமும் அழகு
      பூமியும் அழகு - ஆம்
      என் கையில் ரொட்டித் துண்டு

      சாகும் தாய்
            அருகில்
            சிரிக்கும் குழந்தை!


      பழைய இலக்கியமான சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய இனிய இலக்கியமான ஹைக்கூ வரை அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்து தொகுத்து வகுத்து பகுத்து வழங்கிய நூல்.
      நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் தொடர்ந்து எழுதி வரவேண்டும் என்ற என் வேண்டுகோளை வைத்து முடிக்கிறேன். தமிழ்த்தேனீ இரா. மோகன் அய்யா போல நீங்களும் 150 நூல்களை எழுதிட வேண்டும்..
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2430
Points : 5726
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum