"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தொகுப்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by அ.இராமநாதன் Yesterday at 4:10 pm

» மைக்ரோ கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm

» தேடல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:07 pm

» அரசனை நம்பி..
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm

» கனவு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:57 pm

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:50 pm

» எதுக்காக – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:50 pm

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» நல்லதும் கெட்டதும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:48 pm

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:46 pm

» பிறந்தநாள் பரிசு!
by அ.இராமநாதன் Yesterday at 3:46 pm

» சக்கரம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:44 pm

» ஐடியா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:44 pm

» மொய்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:43 pm

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 10:18 pm

» எண்ணம் போல் வாழ்க்கை...!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 10:04 pm

» எட்டாவது ஜென்மத்துல எவ கூட சேர்ந்து வாழப்போறீங்க..!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:28 pm

» வாட்ஸ் அப் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:24 pm

» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:22 pm

» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:21 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:20 pm

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:16 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:15 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:15 pm

» பொண்ணு வீட்ல கட்டாயம் வரும்...டவுட்டுகள்!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:14 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:13 pm

» * "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:12 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:11 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:10 pm

» வெறும் கேடயம் மட்டும் எடுத்து போர்க்களம் போறாரே..!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:08 pm

» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:07 pm

» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உரிமை விடியல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Go down

உரிமை விடியல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி   பாவலர் இலக்கியன்  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  Empty உரிமை விடியல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Sun Nov 03, 2019 1:22 pm

http://www.tamilauthors.com/04/512.html  
--

.உரிமை விடியல்!
நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி 
பாவலர் இலக்கியன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  

தமிழ்மகள் பதிப்பகம், 16, 15ஆம் குறுக்குத் தெரு, அண்ணா நகர், புதுச்சேரி – 605 005. பக்கங்கள் : 124  விலை : ரூ.100
.
******
‘உரிமை விடியல் நூலின் பெயரே சிந்திக்க வைக்கின்றது.  உரிமைகள் விடியல் காண வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது. தமிழ்மாமணி துரை மாலிறையன் அவர்கள் மரபுக்கவிதையால் வாழ்த்துரை வழங்கி உள்ளார். கலைமாமணி அசோகா சுப்பிரமணியன் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார்.
தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் அவர்கள் மரபுக்கவி விருந்து வைத்து உள்ளார். மரபின் பெருமையை உணர்த்தும் வண்ணம் எழுதி உள்ளார்.  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பெருமைகள் பெற்ற புதுவை, இன்று பாவலர் இலக்கியன் அவர்களாலும் பெருமை பெற்றுவிட்டது. 
செயல் செயப் புறப்படு ; செயல் செயப் புறப்படு
      அயல்மொழி ஆங்கிலம் அகற்றப் புறப்படு
      இயன்மொழி இன்றமிழ் ஆட்சியில் அமர்ந்திடப்
      புயலெயனப் புறப்படு ; செயல் செயப் புறப்படு !

‘தக்கது தாய்மொழி என்ற முதல் கவிதையிலேயே, ‘தமிழா, வாய்மொழி பேசியது போதும், செயல் செய்திட புறப்படு என்று போர்ப்பரணி பாடி உள்ளார். உண்மை தான். தமிழ்ப்பேச்சில் கலந்துவிட்ட ஆங்கிலச் சொற்களை அகற்றிட வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிங்கிலத்தை இப்படியே வளர விட்டால் தாய்மொழி தமிழ்மொழி சிதைந்து போகும். சிறார்களுக்கும் நல்ல தமிழை பேசிக் காட்டுவதும் கற்பிப்பதும் உலகத் தமிழர்களின் வாழ்நாள் கடமை ஆகும்.
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போலவே உணர்ச்சிமிக்க வைர வரிகளின் மூலம் தமிழ்ப்பற்றை நன்கு விதைத்து உள்ளார். மகாகவி பாரதியார் கூற்றுப் போல ‘ரௌத்திரம் பழகு என சினத்துடன் செந்தமிழைச் சிதைப்போரைச் சாடி உள்ளார்.
விழிக்குரிமை இலையென்றால் பார்வை இல்லை
      விடியலுக்குத் தடை போட்டால் இருட்டே ஆளும்
      மொழிக்குரிமை இலையென்றால் புலமை இல்லை
      முன்னேற்றம் எதுவுமில்லை ; நம்மை வீழ்த்தும்!

தமிழா விழித்திடு! ‘தமிழ் உயர்ந்தால், தமிழன் உயர்வான். தமிழ் தாழ்ந்தால் தமிழன் தாழ்வான் என்பதை நூல் முழுவதும் செந்தமிழால் சினம் கொண்டு விழிப்புணர்வு மரபுக் கவிதைகளை யாத்து உள்ளார். பாராட்டுக்கள்.
நூலாசிரியர் பெயர் இலக்கியன். கவிதைகள் முழுவதிலும் இலக்கணத்துடன் இலக்கிய விருந்து வைத்து, தமிழ்ப்பால் ஊட்டி, தமிழ்ப்பற்று விதைத்து உள்ளார்.
கோடி கோடி சேர்த்து விட்டாய்
      கொள்கை முரசைக் கிழித்து விட்டாய்!
      ஓடி ஓடி உழைத்த தெல்லாம்
      உன்றன் வீடு நிரம்புதற்கே!

பொதுநலம் மறந்து தன்னலமாக வாழும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு புத்திப் புகட்டும் விதமாக மரபுக் கவிதைகள் வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
நல்ல நாடு!
அயலான் மொழியை அகற்றுதற்கோ
      ஆள்வோர் எவரும் விரும்பவில்லை
      விழைக தமிழ்க்கல்வி!

தமிழ் படித்தால் தமிழ் வளர்ச்சி அறிவீர் நன்றே!
      தனித்தமிழில் இலக்கணங்கள், இலக்கியங்கள்
      அமிழ்தெனவே படைத்தளித்தல் தமிழ் வளர்ச்சி
      அருந்தமிழில் கல்வி கற்றல் தமிழ் வளர்ச்சி!

அரசுப்பள்ளிகளில் தான் தமிழ்வழிக்கல்வி இருந்தது. அருந்தமிழ் வாழ்ந்தது. அங்கும் ஆங்கிலக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருவது வேதனையிலும் வேதனை. தமிழ்த்தாயின் இதயத்தில் வேல் பாய்ச்சும் கொடூரம் ஒழிய வேண்டும். தமிழ்வழிக் கல்வி நாட்டில் நடைமுறைக்கு வந்தாக வேண்டும். எது தமிழ்வளர்ச்சி? என்பதை கவிதைகளில் மிக அழகாகச் சுட்டி உள்ளார்.
மாந்த நேயம்!
பல நிறங்கள் பல மொழிகள் நிலவி னாலும்
      பல சாதி பல மதங்கள் உலவி னாலும்
      பல இனங்கள் பல குலங்கள் இருந்த போதும்
      பண்போடு பழகுகின்ற மாந்த நேயம்!

பல்வேறு வேற்றுமைகள் நிலவினாலும் ‘வேற்றுமையில் ஒற்றுமை காணும் விதமாக ‘எல்லோரும் பண்போடு மனித நேயத்தோடும் வாழ்வதே மனிதனுக்கு அழகு என்பதை அழகாக அழகு தமிழால் உணர்த்தி உள்ளார்.
பணத்தைப் பறிக்க ஏமாற்றே
      பால மாக அமைந்துளது
      பிணத்தைத் தருவதற்கு மிங்குப்
      பணமே பிடுங்கப் படுகிறது!

இறந்த துக்கத்தில், சோகத்தில் இருப்பவர்களிடம் கூட, ‘பிணம் தர, பணம் தர வேண்டும் என்று வசூலிக்கும் அடாவடித்தனத்தையும் கையூட்டுப் பெறும் அவலத்தையும் கவிதையின் மூலம் சுட்டிக்காட்டி சமுதாயத்தி சீர்திருத்தும் விதமாக நல்ல பல கவிதைகளை வடித்துள்ளார்.
நெருப்புப் பேச்சு!
ஒரு கொள்கை, ஒரு குறிக்கோள், ஒரு நோக்கம் இல்லார்
      உணர்வில்லார் ; உயர்வில்லார் ; இவரெதையும் வெல்லார்
      அருந்தமிழின் அடிமைதனை விரைந்தெழுந்து கொல்லார்
      அன்றாடம் தற்பெருமைப் பறைகொட்டும் பொல்லார்

கொள்கை இல்லாமல், குறிக்கோள், நோக்கம் இல்லாமல் தன்னலத்தோடு தான்தோன்றித்தனமான வாழ்க்கை வாழ்வோரைத் திருத்தும் விதமாக இல்லார், வெல்லார், கொல்லார், பொல்லார் என இறுதி எழுத்து ஒன்று வரும் இயைபு நயத்துடன் சொல் விளையாட்டு விளையாடி தமிழ் உணர்வு விதைத்து உள்ளார்.
பாவேந்தன்!
நமக்குக் கிடைத்த நல் வயிரம்
      நாடு புகழும் ஒளிமுத்து
      குமுறு என்ற எரிமலைக்குக்
      கூடப் பிறந்த உடன்பிறப்பு
      சமன்மை தந்த வரலாறு
      தாவி வந்த பாட்டாறு
      கமழு கின்ற தமிழ்முல்லை
      கனக சுப்பு ரத்தினந்தான்!

பாட்டால் பகுத்தறிவு விதைத்திட்டப் பாவலர், தந்தை பெரியாரின் போர்முரசு, புதுவையின் புதுமை பாரதிதாசன் பற்றிய கவிதைகள் மிகச்சிறப்பு.  பாராட்டுக்கள். ‘உரிமை விடியல் என்ற பெயரில் தமிழின் உரிமைக்காகவும், தமிழரின் விடியலுக்காகவும் வடித்த பாக்கள் சிறப்பு!.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2421
Points : 5699
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum