தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிய வேண்டிய ஆளுமைகள் - மரபின் மைந்தன் ம. முத்தையா

2 posters

Go down

அறிய வேண்டிய ஆளுமைகள்  - மரபின் மைந்தன் ம. முத்தையா Empty அறிய வேண்டிய ஆளுமைகள் - மரபின் மைந்தன் ம. முத்தையா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 7:44 pm

ஸ்டீன் கோவே
” எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது; அது எந்த தேவதையின் குரலோ” என்றொரு
பாடல் உண்டு. ஒரு குரல், ஒரு வரி, ஒரு புத்தகம், ஒரு வார்த்தை கூட சிலரின்
வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடும்.
குடும்பத்துடன் விடுமுறையை உல்லாச மாகக் கழித்துக் கொண்டிருந்த
விடுமுறைநாளில், வாசித்துக் கொண்டிருந்த புத்தகம் ஒன்றில் இருந்து ஒரு
பத்தி ஸ்டீஃபன் கோவேயின் புத்தியில் புத்தம் புதிய சுடரேற்றியது.


”திடீரென்று தோன்றுகிற ஓர் எண்ணத் துக்கும், அந்த எண்ணத்தை
செயல்படுத்துவதற்கும் நடுவே ஓர் இடைவெளி இருக்கிறது. அந்த இடை வெளியைப்
பயன்படுத்துகிற முறையில்தான் நம் வாழ்வின் வளர்ச்சியும் மகிழ்ச்சியும்
இருக்கிறது” என்ற பத்திதான் அது.
அடுத்த விநாடியே உள்ளுக்குள் புதிதாய் உணர்ந்தார் ஸ்டீஃபன் கோவே. 1932ல்
பிறந்த ஸ்டீஃபன் கோவே ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம்
பெற்றவர். ப்ரிஹரம் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டே
முனைவர் பட்டம் பெற்ற ஸ்டீஃபன் கோவே, பிற்காலத்தில் நான்கு முறை கௌரவ
டாக்டர் பட்டம் பெற்றார். இத்தனைக்கும், அவர் அரசியல்வாதி இல்லை!!
தலைமைப்பண்பு மற்றும் நிர்வாகவியலுக்காக அவர் தொடங்கியுள்ள நிறுவனத்தின்
வெற்றிச் சூத்திரங்களை ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் உட்பட உலகின் பல
நாடுகளிலுள்ள நிறுவனங்கள் பின் பற்றி வருகின்றன. தலைமைப்பண்பு கூட்டு
முயற்சி, வாடிக்கையாளர் களை முன்னிலைப்படுத்தும் சேவை போன்ற எத்தனையோ
அம்சங்கள் குறித்து உலகளாவிய நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்
ஸ்டீஃபன் கோவே.
பொதுவாகவே சுயமுன்னேற்றச் சிந்தனைகள், வாழ்க்கை மேம்பாட்டுச் சூத்திரங்கள்
போன்றவற்றைக் கண்டுபிடிக்க இயலாது. கண்டறியவே இயலும். இதற்கு சான்றாக
விளங்குபவை, 1989ல் வெளியான “பட்ங் 7 ட்ஹக்ஷண்ற்ள் ர்ச் ஏண்ஞ்ட்ப்ஹ்
ங்ச்ச்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ல்ங்ர்ல்ப்ங்” என்கிற ஸ்டீஃபன் கோவேயின் புத்தகம்.
காலத்தால் அழியாத ஏழு கோட்பாடுகளை ஒன்றிணைத்ததும் ஒருங்கிணைத்ததும் மட்டுமே
தன் பணி என்று பகிரங்கமாகச் சொன்னார் அவர்.
”7 பழக்கங்கள் என்று தலைப்பு கொடுத்திருக்கிறீர்களே! பழக்கங்கள் ஒவ்வொரு
தனிமனிதருக்கும் மாறு படக்கூடியதல்லவா” என்று கேட்ட போது, இந்த 7
அம்சங்களும் பெரும்பாலான வெற்றியாளர்களின் வாழ்வில் காணப்பட்ட பொது
அம்சங்கள் என்பது அவருடைய வாதமாக இருந்தது. ஸ்டீஃபன் கோவே, தன் மனைவி
சன்ட்ராவுடன் 50 ஆண்டுகளுக்கும் மேல் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தி 9
குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 2003ல், ”தேசத்தின் தலை சிறந்த தந்தை” என்ற
விருது அவருக்கு வழங்கப்பட்டது. தான் பெற்ற விருதுகளிலேயே மிகவும்
அர்த்தமுள்ள விருது அதுதான் என்று அக மகிழ்ந்தார் அந்த அதிசய அப்பா!
நாம் கேட்டுக்கேட்டு சலித்த வாசகங்களில் ஒன்று, ”மாற்றம் ஒன்றே மாறாதது”
என்பது. ஆனால் ஸ்டீஃபன் கோவே வாழ்வின் நிலையான விஷயங்கள் மூன்று என்கிறார்.

மாற்றங்கள்…………….. வாய்ப்புகள்…………….. கோட்பாடுகள்
கடந்த காலத்தில் நமக்கு நிகழ்ந்ததே தொடர்ந்து நடந்து கொண்டிருக்க நாம்
விலங்குகளல்ல. நமக்குத் தேர்வு செய்யும் உரிமை உண்டு என்கிறார் ஸ்டீஃபன்
கோவே.
”நாம் ஆன்மீகப் பயணத்தில் இருக்கும் மனித உயிர்கள் அல்ல.
மனிதப்பயணத்தில் இருக்கும் ஆன்மீக உயிர்கள்” என்றும் ஒரு முறை சொன்னார்
அவர்.
ஒரு நிறுவனம் என்று எடுத்துக்கொண்டால், உற்பத்தித்திறன்,
தரக்கட்டுப்பாடு என்று எத்தனையோ விஷயங்கள் பற்றி விடிய விடியப்
பேசுவார்கள். இவை எப்போது சாத்தியம் என்றால், இந்தத் துறைகளுக்கு நடுவே
ஆரோக்கியமான உறவு அமைகிறபோதுதான் என்பது ஸ்டீஃபன் கோவே சொல்வது.
தலைமைப்பண்பு, நிர்வாகவியல் ஆகிய இரட்டைக் குதிரைகளிலும் சவாரி செய்தால்கூட
இரண்டும் தனித்தனிக் குதிரைகள் என்பதை தர்க்க பூர்வமாக நிறுவினார் அவர்.
”நிர்வாகவியல் என்பது வெற்றியின் ஏணிப் படிகளில் ஏறிச்செல்வது.
தலைமைப்பண்பு என்பது, ஏணி சுவரில் சரியாக சாய்த்து வைக்கப் பட்டிருக்கிறதா
என்பதை உறுதி செய்வது” என்றார் அவர்.
இந்தத் தெளிவும் அறிவும் கலந்த ஒரு தனி மனிதனால் ஒரு நிர்வாகத்தையே
தலைகீழாக மாற்றி விடமுடியும் என்பதும் அவருடைய அழுத்தமான நம்பிக்கை.
ஆற்றல்மிக்க மனிதராய், தாக்கம்மிக்க மனிதராய் ஒருவர் வளர வேண்டு மானால்,
அதற்கு வேண்டிய அம்சங்களையும் ஸ்டீஃபன் கோவே சொல்லி வைத்திருக்கிறார்.
தான் யார் என்கிற அறிவு, விழிப்புணர்வு, சுதந்திரமான பார்வை, படைப்பாற்றல்
மிக்க கற்பனை ஆகியவையே அந்த நான்கு அம்சங்கள். சரியானதைத் தேர்வு
செய்யவும், சரியான முறையில் எதிர்வினை ஆற்றவும், தேவையான மாற்றங்களை
நிகழ்த்தவும் இதுவே உதவும் என்றார் அவர்.
ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல ஸ்டீஃபன் கோவேயின் ஒரேயொரு கணிப்பு,
பாதி வெந்த முட்டைபோல் பாதி சரியாகவும் மீதி தவறாகவும் போய் விட்டது.
புத்தகங்களைப் போலவே, தொலைக்காட்சியும் மக்களின் தகவல் அறிவைப்
பெருக்கிக்கொள்ள உதவும் என்று அவர் நினைத்தார். ஆனால் மக்கள் அதில் நாயாட
நரியாட என்று வாய் பிளந்து பார்த்திருப்பார்கள் என்பது அவருக்குத்
தெரியாமல் போய்விட்டது.
வீணான திசை நோக்கி வெள்ளம் பாய்கிற வேளையில் அதனை சரியான திசை நோக்கி
மடை மாற்றம் செய்வதுபோல, பெருக்கெடுக்கும் மனித சக்தியை நெறிப்படுத்தும்
யுக்தியை சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் செய்து வருகிறார்கள். தனி
வாழ்வில் பெருமளவு போராட்டங்களை சந்தித்ததாக ஸ்டீஃபன் கோவே சொல்லவில்லை.
அவருடைய வாழ்வின் அத்தியாயங்களில் இருந்து, மயிர் கூச்செறியும் மர்ம நாவல்
போன்ற சம்பவங்கள் எதுவும் வெளி வரவில்லை.
குமுறுகின்ற அருவியாய், காட்டாறாய் இல்லாமல், கல்லெறியப்படாத நீரோடையாய்
தெளிந்த நடையிட்டு வாழ்வில் இருந்தே வாழும் முறைகளை வகுத்துச் சொன்னவர்
ஸ்டீஃபன் கோவே.
”நாம் என்ன சொன்னாலும், நாம் என்ன செய்தாலும் நம் வாழ்க்கையிலிருந்தே
மனிதர்கள் நம்மைப்பற்றி தெரிந்து கொள்கிறார்கள்” என்பது அவரின் அழுத்தமான
நம்பிக்கை! அதுதானே நமது நம்பிக்கையும் கூட!!
அறிய வேண்டிய ஆளுமைகள்  - மரபின் மைந்தன் ம. முத்தையா 35578மரபின் மைந்தன் ம. முத்தையா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிய வேண்டிய ஆளுமைகள்  - மரபின் மைந்தன் ம. முத்தையா Empty Re: அறிய வேண்டிய ஆளுமைகள் - மரபின் மைந்தன் ம. முத்தையா

Post by RAJABTHEEN Sun Mar 20, 2011 9:48 pm

அழகிய பகிர்வுக்கு நன்றி பாஸ்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum