தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Fri Sep 17, 2021 11:59 am

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm

» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm

» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm

» தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 8:43 pm

» தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 05, 2021 7:48 pm

» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Mon Aug 02, 2021 9:58 pm

» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm

» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm

» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm

» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

» கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jun 25, 2021 10:34 pm

» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர்

3 posters

Go down

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர் Empty மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 29, 2011 1:57 pm

ரணம். ரணம். த்தகு
கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின்
தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப்
படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில்
இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள்
அரிதே.

தவறுகள் எல்லோரிடத்திலும் நிகழ்கிறது.
சிலது தவறுகளாக காட்டப் பட்டும் சிலது வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டும்
போக’ எங்கோ யாரோ ஒரு சிலரைமட்டும் குற்றவாளி என்ற பெயரில் தண்டிப்பதென்பது
சரிதானா’ என்று முற்றிலும் ஆராய இருக்கையில், ஒரு குற்றத்தின் காரணமாக
ஒருவரை மட்டும் கொல்லும் பின்னணியில்’ நாம் சமூகக்குற்றம் கண்டு
தட்டிக்கேட்காத பங்கும், அவனவன் சுயநல காரணத்திற்கென அவனவன் செய்த
பங்கிற்கு யாரோ ஒருவன் தண்டிக்கப் படுவதும், முற்றிலும் உயிர்பிக்க முடியாத
மனிதன் ஒருவனால் ஒரு உயிர் கண்ணெதிரே வீழ்த்தப் படுவதும் சம்மதிக்கத்
தக்கதா?

மரணம் நிகழ்ந்த வீடுகளில், நிலையில்
கிடத்தப் பட்ட உயிரற்ற உடலின் உயிர் போகும் நேரத்து வலி ஒவ்வொரு முறை
அவரைப் பற்றி எண்ணும் நேரமும் வாழ்வோருக்கு உண்டென்பதை’ உறவுகளைப் பிரிந்து
அழும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் எச்சரித்தே வழிகிறது. மரணம் எங்கு
நடந்தாலும் தடுக்கும் மனமொன்று எல்லோருக்கும் வேண்டுமெனும் எண்ணம்’ அந்த
வலி தெரிந்தோருக்கே வருமென்பது ஞானமல்ல, நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய
ஒன்று.

ஒரு கண்ணைப் பிடுங்கினால் இரு கண்ணைப்
பறிப்பதென்பது மிருக குணம், மன்னிப்பதே மனிதரின் மாண்பு. பிறகு, நீ உன்
சகோதரனைக் கொன்றவனை சும்மா விடுவாயா’ என்று கேட்கலாம். விடமாட்டேன்,
தண்டிப்பேன், அவன் தவறை அவன் உணருமளவிற்குத் தண்டிப்பேன். ஆயினும், அதை
உணர்த்த துடிக்கும்’ என் இழப்பின் பெருவலிக்கு என் கோபம் ஒரு ஆயுதமெனில்,
பின்விளைவுகள் பற்றிய அறிவும், மனிதம் இழக்கா மனசாட்சியும் கூட என்
மற்றிரண்டு ஆயுதங்களென்று பக்குவமுறுவேன். எது எப்படியாயினும் மரணம்
நிச்சயம் எவரும் எடுத்து எவர்மீதும் வீசி தலை வெட்டும் ஆயுதமோ’ அல்லது
அத்தனை இலகுவாக கொடுத்துவிடும் இறுதி தீர்ப்போ அல்ல.

தண்டனை என்பது ஒருவரை திருத்தும் வகையில்
மட்டுமல்ல அது பிறருக்குப் பாடமாகவும் இருக்கிறது, எனும் வகையில்
தவறுசெய்வோர் தண்டிக்கப் படவேண்டியவராகின்றனர். என் மனைவியை ஒருவன் கண்முன்
கொன்று விட்டுப் போவானெனில், என் தங்கையை ஒருவன் கொளுத்திவிட்டுச்
செல்வானெனில், என் குழந்தையை கத்திமுனையில் வைத்து ஒருவன் மிரட்டுவானெனில்
நிச்சயம் நான் அவன் வாயைப் பார்த்துக் கொண்டு நிற்பது கருணை என்று
ஆகிவிடாது. தவறு உள்ளோரை தட்டிக் கேட்டே தீரவேண்டும்.

ஆனால் அந்த வரிசையில் எல்லோரின்
தண்டனைக்கும் மரணமொன்றே தீர்வென்று நம்மால் உறுதி செய்துவிட இயலாது. எதிரி
என்றாலும் மன்னிக்க வேண்டிய மனிதம் பெற்றவர்கள் நாமெல்லோரும். இழந்தால்
பெற முடியாத மரணத்தின் முன் நின்று செய்யென்றோ கொல் என்றோ கட்டளையிட எந்த
ஒரு பொது மனிதருக்கும் உரிமை இருக்க இயலாது.

அதிலும், இங்கு எல்லோரும் குரலெழுப்பி
நிற்பது, நியாயமற்ற ஓர் அநீதிக்கு மரணம் எப்படி பரிசாகும் என்று மட்டுமே
எனில், நானும் அவர்களோடு சேர்ந்து இல்லை மரணம் இங்கு சரியான தீர்ப்பல்ல,
இது மறுக்கத் தக்கதே என்றே வாதிடுவேன். எக்காலும் தீர விசாரிக்க இயலாத
அல்லது தண்டனைக்கு உட்பட்டு பின் திருத்தங்களோடு வாழ முற்படும் ஒரு
அப்பாவியை கொல்ல எந்த உரிமையும் எந்த கொம்பனுக்கும் கிடையாது.

அதே நேரம், மிருக குணமுற்று
‘பிறருயிரெடுத்து தன் உயிரைக் காத்துக் கொள்ளும், சுயநலவிசமிகள் இருந்தால்
அவர்களால் பலர் அழியக் கூடுமெனில், அந்த ஒருவர் வாழத் தக்கவறல்ல தான்,
அதாவது அவர் மக்கள் மத்தியில் மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் அளவிற்கு
வெளியில் புழங்க ஏற்புடையவரல்ல என்பதே சரியேத் தவிர; பொட்டென யாரைக்
கொல்லவோ, தன் அறிவிற்கெட்டிய நீதியென்று சொல்லி’ யாரைத் தூக்கிலிடவோ நமக்கு
எந்த உரிமையும் இல்லை என்பதே ஆழமான உண்மை.

அப்படி அவன், ஒருவரைக் கொன்றது தவறெனில்,
அதற்கு பதிலாய் நாம் அவனைக் கொல்வதும் தவறுதான். மரணம் எதற்கும் விடை
இல்லை. மரணத்திற்கு; மரணம் பதிலில்லை. மரணத்தை விடுத்து, மரணம்வரை
வலுக்கிறது பல தண்டனைகள் என்பது வேறு, சுயமாக நான் பாதிக்கப் பட்டவன் ‘அவன்
தலை கொய்து வருவேன் என்பது வேறு. அது உணர்வின் அடிப்படையிலானது. பொதுவில்,
தண்டனை ஒருவனை திருத்தவோ அல்லது அவனை அந்த தவறை மீண்டும் செய்ய விடாமல்
தடுக்கவோ அல்லது கட்டுப் படுத்தவோ அவன் தவறு பொருத்து எண்ணம் பொருத்து
செய்கை பொருத்து தொடர்காவலில் வைக்க நீதியை வழங்கலாமே யன்றி, உடனே
கொன்றுவிடும் அளவிற்கு அல்ல.

ஆனால், அப்படி கொன்றபின், அதே நீதி வேறு
சாட்சியங்களோடு மறுக்கப் படுமெனில், அந்த உயிரை உடனே மீட்டுக் கொல்ல இயலாத
நாம்’ அவனைக் கொல்லவும் தகுதி அற்றவர்களே” என்பதைச் சொல்ல வருகையில்’ அந்த
கோயம்பத்தூர் மாணவிகளின் பேருந்தைக் கொளுத்தி, உள்ளே துடிக்க துடிக்க
அந்தக் குழந்தைகளை எரித்தவனை எண்ணுகையில் கொன்றுபோடு அவனை உடனே என்றே
கோபம் வருகிறது.

ஆனால் இங்கு அந்த ஒருவன் மீது மட்டும்
வரும் ஒட்டுமொத்தக் கோபம்’ எத்தகு சரி என்பது அவரவர் பார்வையையும், அதன்
பின்னணிக் காரணங்களையும் பின்னாலிருப்பவர்களையும் பொறுத்தது. பிறகு ஒருவரை
மட்டுமே கொள்வதும் சரியாக வழங்கப்பட்ட நீதியில்ல என்ற உண்மை நிதானித்து
யோசித்தால் புரிகிறது. தீர்வாக சொன்னால், மரணம் பொதுவில் மிக யோசிக்கத்
தக்கது. மிக அலசி ஆராய்ந்து, தீர விசாரித்தப் பின் மட்டுமே ஆம் சரி இல்லை
என்று முடிவுகொள்ளத் தக்கது. யாரையும் நம்பி யாரையும் கொல்வதற்கில்லை..

எனவே, தவறு செய்பவர்களை திருந்துமாறு
தண்டிக்கலாம், அல்லது தவறை அறவே ஒழிக்குமாறு அவர்களை தடுக்கலாம்.
கட்டுப்படுத்தலாம். கடுங்காவலில் வைக்கலாம். இன்னொருவன் அதை தொடர்ந்து
மீண்டும் செய்யாதவாறு எச்சரிக்கைப் படுத்தலாம், மரணம் ஒன்றைத் தவிர
வேறேதேனும் யோசிக்கலாம்!!

அதிலும், நீதிபதி மனைவியை மிரட்டி,
குழந்தைகளை கொன்று விடுவேன் என்று சொல்லி, பணம் கொடுத்து வாங்கி, போலிகளை
வைத்து வாதாடி, இல்லாத சாட்சிகளை பணம் போட்டு அல்லது சாராயம் ஊற்றி
தயார்செய்து, அரசியல் மூக்குநுழைய, செல்வந்தன் காலாட்டி மீசை தடவி வழக்கை
சாதகமாக்கிக் கொள்ளவென, இப்படி நீளும் பல ஓட்டைகளை நீதித் துணியினில்
வைத்துக் கொண்டு’ அதை மரணத்தின் கண்களில் மட்டும் கட்டுவேன் என்று சொன்னால்
எங்கோ தவறு நம் எல்லோரிடமுமே இருப்பதாய் தெரியவில்லையா?

நம் அக்காத் தங்கை கொல்லப்பட்டால் கோபம்
வராதா என்கிறார்கள், வரும். அதேநேரம் என் அண்ணன்தம்பி நீதி தவறி கொல்லப்
பட்டாலும் கோபம் வருமென்பதே யதார்த்தமும் இல்லையா? அதற்காக குற்றவாளிகளின்
செயல் சரி என்றோ, அவர்கள் எது செய்தாலும் மன்னிக்கத் தக்கவர்கள்
என்றோயெல்லாம் அர்த்தமல்ல. செய்துவிட்டால் மீண்டும் சரி செய்துக்
கொள்ளயிலாத மரணத்தை மட்டும் இயன்றவரை கடைசியாக தள்ளிவைப்போம்.
முயற்சித்தேனும் அதை விட்டொழிப்போம்’ என்பதே வேண்டுகோள்.

அடிமைப்பட்டு அடிமைப்பட்டு அடிதாங்காமல்
ஒர்தினம் ‘உயிரை எடுப்பாயா..டா ம்ம்ம்ம் எடுத்துக் கொள்’ என்று மார்பை
விரித்துக் காட்டி தன் உயிரையும் தன் மக்களின் விடுதலைக்கென துச்சப்
படுத்திக் கொண்ட ஒரு இனம் இன்று உலக கண்களில் தீவிரவாதியாகவும், தன் செயலை
தண்டனைக்குரியதாகவும் காட்டிக் கொண்டிருப்பது எத்தனை வருத்தத்திற்குரியது?

அந்த இனத்தின் விடுதலைக்கென நாம் உடன்
நின்று ஒட்டுமொத்தமாய் கொடுக்காத ஒற்றைக் குரலால் உயிரிழந்தோர் எண்ணற்றோர்.
சரிதவறு’ நீதி அநீதி அலசுவதற்குள் அத்தனைப் பேரை இழந்துவிட்டோமே, இனி
இருப்பவர்களையேனும் மிச்ச மனிதத்தின் ஆதாரத்திற்கேனும் காத்துவிடமாட்டோமா?
என்று தவித்திருக்கையில், இருக்கும் கொடுங்கோலன்களுக்கு மத்தியில் இறக்க
மறுக்கும் இம்மூவரை இப்படி இத்தனை துரிதநடவடிக்கையாக இத்தனை வருட
தண்டனைக்குப் பிறகும் தூக்கிலுட தீர்ப்பளித்துள்ளது நம்மை சிந்திக்கவைக்க
வேண்டாமா?

இவர்களை எதன்பொருட்டோ கொன்று தீர்க்க
எண்ணுமரசியல் கிருமிகளால் இவர்களுக்குப் பின் நிற்பவர்களையும் நாளை
கொண்டுவந்து தூக்கிலிடும் வலிமையுண்டா? லட்சாதிலட்சம் பேரைக் கொன்றவனை
ஏனென்றே கேட்க இயலாத அரசிற்கு இந்த மூன்று உயிர் என்ன அத்தனை இளசா?
தமிழரெனில் என்ன அத்தனை துச்சமா? ஒரு கொலையை ஒருவர் செய்தால் அது கொலை
அதையே பலர் செய்தால் அது போராட்டம் என்று சொல்லி தண்டனையை துண்டு போடும்
சட்டத்திற்கு ‘ஒரு உயிருக்கு எப்படி இத்தனை உயிர்கள் சமமாயின? அரசியல்
சம்மட்டி கையிலிருந்தால் அதைக் கொண்டு யார்தலையில் வேண்டுமாயினும்
அடிப்பேன் என்பது அதிகார வர்க்கத்தின் எதிர்க்க வேண்டிய இழிசெயலில்லையா?

தவறை யார் செய்தாலும் தவறெனில், ஈழத்தில்
அன்று அத்தனைப் பேரைக் கொன்றதோ அல்லது அதற்கு துணைப் போனதோ மட்டுமெப்படி
நீதியாகும்? தனிப்பட்ட ஒருவரின் எந்த ஒரு விருப்புவெருப்பும் இத்தனைக் கோடி
மக்களின் தேசத்தை ஆளும் தலைமைக்கு இருக்கவேண்டாத ஒன்றெனில்; வேறென்ன
கோபமிருந்துவிடும் என் தமிழ்மக்களின் மேல் இழைக்கப்பட்ட அதர்மத்தை
ஏனென்றுக் கூட தட்டிக் கேட்காமைக்கு?

என் தேசம் என்தேசம் என்று உயிரினும் மேலாக
இந்தியாவை தலையிலேந்தி நடக்கும் தமிழினத்திற்கு எதிராகவே இயங்கும், ‘இந்த
அரசியல் கைக்கூலிகளால் உடையும் இந்தியரென்னும் ஒற்றுமையை இனி யார் வந்து
மீட்டெடுப்பார்? அத்தகு ஒரு நல்ல தலைவனில்லையே எம் தேசத்திலென்று
சிந்திக்கும் முன் யாரிருப்பவர்களை தட்டிக் கேட்பார்?

சுயம் பற்றி மட்டுமே நாம் சிந்தித்து
சிந்தித்து மெல்ல மெல்ல இழந்த ஒட்டுமொத்த நம் சுதந்திரத்தின்’ சாட்சியே
இந்த லட்சாதிலட்ச மக்களின் உயிரிழப்பு’ என்பது கண்முன் தெளிவாகும் ஒரு
காலகட்டத்தின் கடைசி திருப்பமாய், இந்த தூக்குதண்டனை இனி நம்மால் மாற்றி
அமைக்கப் படட்டும் உறவுகளே.., உயிர் எந்த ஒரு விலைக்குமகப் படாத ஒன்று;
என்பதைப் புரிந்து மரணதண்டனையை மாற்றியமைப்போம்.

மனிதர்கள் நாம் மனிதம் குறைந்து அலைவதால்
தான் நாட்டில் இத்தனை சீர்கேடுகள் நிகழ்கின்றன. அதை முழுதாக மீட்டெடுக்க,
மரணத்தை அவரவர் விருப்பிற்கு முடிவுகட்டுமிந்த மூடத்தனத்தை முற்றிலுமாய்
மாற்றிக் கொள்வோம். தலையில் இருக்கும் ஒரு முடியை பிடுங்கக் கூட
தகுதியற்றோர் நாம் பிறகு, பிறர் உயிரைப் பறிக்கும் எண்ணத்தை கையிலெடுக்க
மட்டும் எவ்வழியில் தகுதியுற்றோம்’ என்று மீண்டும் மீண்டும் சிந்திப்போம்.

சரி, முடியை பிடுங்கத் தகுதியில்லை,
விடுவாய் சரி; ஒரு மனிதனை கொன்றபின் இரண்டாம் மனிதரை கொள்ளட்டுமே என்று
விட்டு வைக்கலாமா என்றால்? வேண்டாம் அவன் கைகளை உடனே முறிப்போம்,
திருந்தும் வரை சிறையில் அடைப்போம், திருந்த இயலாதவனை கடைசி வரை காவலில்
இருத்துவோம், உயிரை எடுப்பதை விட்டுவிட்டு கொலையை உறுதியாய் தடுப்போம்.
உயிர்; யாருடயதாயினும் வலியதே என்று எல்லோருமே உணர்வோம்.

இப்போதைக்கு, கண்முன் உயிர்வாழ
மிச்சமிருக்கும் நாளை ஒவ்வொன்றாய் இழந்து, தன் வாழ்வின் கணக்கை வெகு
சொற்பமாக எண்ணிக் கொண்டிருக்கும் இம்மூவுயிரையேனும் நம் ஒற்றுமையினால்
காப்போம். ஈழத்து விடியலுக்கு இது முதற்புள்ளியென்று உலகெங்கும்
முரசொலிப்போம்!!
——————————————————————————————————————
வித்யாசாகர்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர் Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர் Empty Re: மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Aug 29, 2011 3:18 pm

மத்தியில் அரசியல் ஆதாயத்துக்காகத் தூக்கு தண்டனை நிறைவேற்றச் சொல்லியிருக்கிறார்கள். நாம் நம் அரசியல் ஆதாயத்துக்காக தூக்கு தண்டனையை கையில் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. தமிழக முதலமைச்சர் தூக்கு தண்டனைக்கு ஆதரவு தெரிவித்தால் அடுத்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது. அல்லது தண்டனையைத் தடுத்து நிறுத்தினாலும் தமிழ்நாட்டு மக்களிடம் அரசியல் ஆதாயம் கண்டிப்பாக இருக்கிறது. எப்படியோ மூவரின் தூக்கு தண்டனை அரசியல் ஆதாயத்திற்குத் துணைபோயாகிவிட்டது. இன்றைய நூற்றாண்டில் மனித நேயம் என்று பேசுவதெல்லாம் சும்மாதான்.

---
தூக்குத் தண்டனையை மாற்ற எனக்கு அதிகாரமில்லை என்று ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர் Empty Re: மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 29, 2011 3:20 pm

நீங்கள் சொல்ல்வது 100க்கு 100 உண்மைதான் ரமேஷ்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர் Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர் Empty Re: மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர்

Post by தங்கை கலை Thu Sep 29, 2011 11:26 pm

உயிர்; யாருடயதாயினும் வலியதே,,,,

அக்ரீ வித் ரமேஷ் அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர் Empty Re: மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!! - வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum