தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Yesterday at 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ எழுதலாம் வாங்க

4 posters

Go down

ஹைக்கூ  எழுதலாம்  வாங்க Empty ஹைக்கூ எழுதலாம் வாங்க

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 07, 2011 11:39 am

நம் தோட்டத்தில் தளிரன்ன என்பவரின் ஹைக்கூ இது:

காற்றாடிக்கும் சற்று
ஓய்வு!
மின்தடை!

ஒரு ஹைக்கூவை எழுதிவிட்டு மகிழ்ந்துவிடாதீர்கள். அந்த ஹைக்கூவையே ஐந்தாறு முறை திரும்பத்திரும்ப படியுங்கள். எழுதிய ஹைக்கூவில் எதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று தோன்றினால் திருத்தம் செய்யுங்கள்.

காற்றாடிக்கும் சற்று
ஓய்வு!
மின்தடை!

இப்படி இருக்கும் ஹைக்கூவில் சற்று திருத்தம் செய்கிறேன் பாருங்கள்:

விசிறி
ஓய்வு எடுக்கிறது!
மின்தடை.

என்று இருந்தால் நன்றாக இருக்கும்; ஹைக்கூவாக இருக்கும். சரி... இப்போது இரண்டு ஹைக்கூவையும் சுருக்கமாக விமரிசனம் செய்கிறேன் பாருங்கள்... உங்களுக்குத் தெளிவு உண்டாகும்.

காற்றாடிக்கும் சற்று
ஓய்வு!

என்ற முதல் இரண்டு அடிகளை மட்டும் படித்து நிறுத்துகிறேன். ஹைக்கூ வாசிப்பு முறைபடி மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து முடிக்கிறேன். எளிமையாக அடுத்த அடி என்னவாக இருக்கும் என என்னால் ஊகிக்க முடிகிறது. ஒன்று பொத்தான் அணைக்கப்பட்டிருக்கலாம். அல்லது மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு மூன்றாவது அடியைப் படிக்கிறேன். எதிர்பார்த்தது போலவே மின்தடை. எனவே எந்த உணர்ச்சியையும் என்னுள் ஏற்படுத்தவில்லை. உணர்ச்சியை ஏற்படுத்தினால் மட்டுமே அது ஹைக்கூ.

சரி திருத்தம் செய்த ஹைக்கூவைப் பார்க்கலாம்.

விசிறி
ஓய்வு எடுக்கிறது!

இரண்டு முறை படித்துவிட்டேன். விசிறி ஏன் ஓய்வு எடுக்கிறது. அது பனைமட்டையாலோ அல்லது வேறு எந்த பொருளாலோ செய்யப்பட்ட விசிறியா? அல்லது மின் விசிறியா? என்ற கேள்வி எழுகிறது.
சரி இப்படியும் யோசிக்கலாம்.
விசிறி ஏன் ஓய்வு எடுக்கிறது?. விசிறியைக் கொண்டு தாத்தாவுக்கு விசிறிக்கொண்டிருந்தவள் பாட்டி. இப்போது ஓய்வு எடுக்கிறது என்றால் என்ன அர்த்தம். ஒன்று விசிறிக்கொண்டிருந்த பாட்டி இறந்துபோனாலா? அல்லது தாத்தா இறந்துபோனாரா? என்ற வருத்தத்தோடு மூன்றாவது அடியைப் படிக்கிறேன். அப்பாடா என்று பெருமூச்சி விட்டுக்கொள்கிறேன். காரணம் மின்தடைதான் வேறொன்றுமில்லை என்று.

அப்பாடா என்று உங்களுக்குச் சலிப்பு ஏற்படுகிறதா? எனக்கு அப்படியொன்றும் ஏற்படவில்லை. காரணம்: இதை விளக்கியதால் எனக்கு ஒரு ஹைக்கூ கிடைத்தது. இப்படி:

விசிறிக்கு
நிரந்தர ஓய்வு!
தாத்தா மரணம்

சரி நானும் ஹைக்கூ எழுதுகிறேன் என்று சொல்லி,

விசிறிக்கு
நிரந்தர ஓய்வு!
பாட்டி மரணம்

என்று கடைசி அடியை மட்டும் மாற்றி உங்களது ஹைக்கூ என்று சொல்லிக்கொள்ளாதீர்கள். மேற்கண்ட ஹைக்கூவில் தாத்தா என்பவர் குறியீடு. அந்த தாத்தா குறியீடாக விரிந்தால் அது பாட்டி, அம்மா, அப்பா, உறவினர்… என்று யாரையும் குறிக்கும்.

சரி...

விசிறிக்கு
நிரந்தர ஓய்வு!
தாத்தா மரணம்

இந்த ஹைக்கூவை விமரிசித்து யாராவது ஒரு புது ஹைக்கூ எழுதுங்களேன். நானும் மகிழ்வேன்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 12, 2012 2:16 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹைக்கூ  எழுதலாம்  வாங்க Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 07, 2011 3:48 pm

ஒரு சின்ன சந்தேகம் விசிறிக்கு நிரந்த்ரமா ஓய்வு கிடைத்திருக்குமா? வேறு யாராவது பயன்படுத்தியிருக்கலாம் தானே (தவறு என்றால் மன்னித்துக்கொள்ளுங்கள்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹைக்கூ  எழுதலாம்  வாங்க Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 07, 2011 4:52 pm

தவறேதும் இல்லை. இதில்போய் என்ன இருக்கிறது. இன்றைய தலைமுறையினர் தாத்தா, பாட்டிக்குப் பெரும்பான்மையும் மதிப்பளிப்பதில்லை... அப்படியே இருந்தாலும் அவர்கள் பயன்படுத்தியப் பொருள்களைப் பயன்படுத்துவதுமில்லை... கை விசிறியையா பயன்படுத்திவிடப் போகிறார்கள்?.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹைக்கூ  எழுதலாம்  வாங்க Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 07, 2011 8:22 pm

இதுவும் உண்மைதான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹைக்கூ  எழுதலாம்  வாங்க Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க

Post by R.Eswaran Mon May 14, 2012 5:00 pm

விசிறிக்கு
நிரந்தர ஓய்வு!
தாத்தா மரணம்
இந்த ஹைக்கூவை விமரிசித்து யாராவது ஒரு புது ஹைக்கூ எழுதுங்களேன். நானும் மகிழ்வேன்.

விசிறி
மரணமானது
தாத்தா மரணம்
R.Eswaran
R.Eswaran
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 30
Join date : 30/04/2012
Age : 62
Location : Vellakovil

Back to top Go down

ஹைக்கூ  எழுதலாம்  வாங்க Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க

Post by ருக்மணி Mon May 14, 2012 5:19 pm

வியர்த்தது
விசிறிக்கு
ஓய்ந்தார் தாத்தா
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

ஹைக்கூ  எழுதலாம்  வாங்க Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 14, 2012 9:34 pm

நன்றாக இருக்கிறது தோழி... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹைக்கூ  எழுதலாம்  வாங்க Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க

Post by ருக்மணி Tue May 15, 2012 1:18 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நன்றாக இருக்கிறது தோழி... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

நன்றி நண்பரே............
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

ஹைக்கூ  எழுதலாம்  வாங்க Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum