தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை?

+2
தங்கை கலை
அ.இராமநாதன்
6 posters

Go down

 பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை? Empty பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை?

Post by அ.இராமநாதன் Sun Oct 09, 2011 10:39 am

நம் நாட்டில் பழங்காலத்தில் பண்டமாற்று முறைதான்
இருந்துவந்தது. பணத்திற்கான தேவைகள் அதிகமில்லாத
காலம்.

ஏன்? சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கூட, நான் சிறுவனாக
இருந்த போது வீட்டிற்கு வரும் சிறு வியாபாரிகளிடம் கைப்பிடி
அளவு அரிசியைக் கொடுத்துவிட்டு, பதிலாக கறிவேப்பிலை,
கொத்தமல்லி, முந்திரிப்பழம் போன்றவைகளை வாங்கி இருக்கிறேன்.

இப்போது கூட கிராமங்களில் நெல் அறுவடை செய்பவர் நெல்லையே
ஊதியமாகப் பெற்றுக் கொண்டு அந்த நெல்லைக் கடைகளில் கொடுத்து
விட்டுத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் வழக்கம்
இருந்து வருகிறது.

நமது நாடாவது "வளர்ந்து வரும் நாடு' - ஆனால் மிகவும் பணக்கார
நாடான ஜெர்மனியில் ஒரு பெண்மணி, பணமின்றியே 15 ஆண்டுகளாகத்
தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார் என்ற செய்தி வியப்பை
அளிக்கிறது.

அவர் பற்றிய கட்டுரைதான் இது.

69 வயதாகும் இவ்வதிசயப் பெண்மணியின் பெயர் "ஹீட்மேரி ஸ்கர்வெர்மர்'
என்பது. இவர் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த சமயம் கிழக்கு ரஷ்யாவில்
பிறந்தார். ரஷியப் படையினரால் வெளியேற்றப்பட்ட அகதிகளுடன் இவரது
குடும்பம் கையில் பைசா காசு கூட இன்றி, ஜெர்மணிக்கு வந்தது.

"பணமில்லாதவன் பிணம்' என்பார்கள்; வள்ளுவப் பெருமானும் "பொருளிலார்க்கு
இவ்வுலகமில்லை' என்கிறார்.

தேவை இருக்கிறதோ, இல்லையோ, சாமான்களாக வாங்கிக் குவித்து வரும்
மனப்பான்மை உள்ள மக்கள் நிறைந்த நாட்டில் பணமும் பொருளுமின்றி
இருப்பவர் மதிக்கப்படுவதில்லை என்பதை இவர் உணர்ந்தார். நிதர்சனமாகவும்
கண்டார்.

1960ஆம் ஆண்டு தென் அமெரிக்காவில் உள்ள சிலியில் ஓராண்டு இருந்தார்.
அங்கே மக்கள் மிகுந்த ஏழ்மையால் துன்புற்றதை நேரில் கண்டுணர்ந்தார்.
பிறகு ஜெர்மனிக்குத் திரும்பி வந்துவிட்டார்.

விவாகரத்து நேர்ந்து, இரு குழந்தைகளுடன் 1982ஆம் ஆண்டு டார்ட்மண்ட்
என்ற நகரில் மனநல க்ளினிக் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார்.
"மனிதர்களின் மனங்களில் என்னவெல்லாம் எண்ண ஓட்டங்கள் ஓடுகின்றன
என்பதைக் கண்டார்.

சரி, இதுமட்டும் போதாது, நாம் புதிதாக இவ்வுலகிற்கு மனித சமுதாயத்திற்கு
ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும்' என்று அதற்கான முயற்சியில்
இறங்கினார்.

1994ஆம் ஆண்டு கையில் பணமில்லாதவர்களுக்காக ஒரு பண்டமாற்று
முறையைச் செயல்படுத்த ஆரம்பித்தார். இந்தப் புதுமாதிரியான திட்டத்திற்கு
ஓய்வூதியம் பெறுபவர்கள், மாணவர்கள் இவர்களிடையே இருந்து அமோகமான
ஆதரவு கிடைத்தது.

அதனால் தனது வீட்டிலேயே "பண்டமாற்று அகம்' ஒன்றை ஏற்படுத்தினார்.
மிக விரைவிலேயே இம்மாதிரி முறையில் தமது அனைத்துத் தேவைகளையும்
பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்பதை கண்டு கொண்டார்.

அதனால் 1996ஆம் ஆண்டு இம்மாதிரியான பண்டமாற்று முறையையே
வாழ்க்கையின் ஆதாரமாகக் கொள்ள முடியும் என்ற துணிவுடன் தமது மனநல
க்ளினிக்கை மூடினார். வாடகை வீட்டில்தான் வசித்து வந்ததால், தமது
உடைமைகளனைத்தையும் தானம் செய்ததுடன், தனது பாங்க் கணக்கையும்
முடித்துக் கொண்டார்.

ஒரு வருடம் கையில் பைசா காசின்றி வாழவும் முடிந்தது இவரால்.
பிறகு தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதினார். இந்தப் புத்தகம் பல
மொழிகளல் மொழிபெயர்க்கப்பட்டு, நல்ல விற்பனையாயிற்று. அதனால்
இவர் வருமானம் பெருகியது.

அந்தப் பணத்தையெல்லாம் ஐந்து மார்க் (ஜெர்மன் நாணயம்) கரன்சி நோட்டுகளாக
மாற்றித் தேவைப்பட்டவருக்கெல்லாம் விநியோகம் செய்தார். இப்போது தமது
மூன்றாவது புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார்.

இவருக்கு மாதாந்திர ஓய்வூதியம் 700 யூரோக்கள் (அமெரிக்க டாலரில் 1000).
அதை அப்படியே தமக்கு தெரிந்த தேவையுள்ளவர்களுக்கு அளித்து விடுகிறார்.
இவரது உணவிற்காக டார்ட்மண்ட்டிலுள்ள ஓர் உணவகம் உதவி வருகிறது.

இவரது நண்பர்கள் தங்களது தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும் கொடுத்து
உதவுகின்றனர். ஒன்றையும் பணம் கொடுத்து வாங்குவதில்லை.

இவர் சொல்கிறார்: "ஒரு வருடம் பண்டமாற்று முறையில் வாழ்க்கை நடத்த
முடியுமா என்று பரிசோதனை முறையில் ஆரம்பித்தேன. ஆனால்
கடந்த 15 ஆண்டுகளாகச் சிரமமேதுமின்றி இவ்வாறு என்னால் வாழ முடிகிறது.
எப்போது நான் கடைசியாகக் காசைக் கையாண்டேன் என்பதே எனக்கு நினைவில்லை.'

அபூர்வமான பெண்மணிதான் இவர்!

எனக்கு எனது நண்பர் ஒருவர் ஆர்மி கேப்டனாக இருந்தவர். கையில் காலணா
இன்றி, "நர்மதா பரிக்ரமா' எனப்படும் நர்மதை நதியைக் கால்நடையாகவே நடந்து,
வலம் வந்த அனுபவங்களைப் பற்றி அவர் கூறியது நினைவிற்கு வந்தது. இவ்வாறு
பயணம் செய்பவர்கள் ஒரு மாற்று உடையுடன், கையில் பணமின்றி, வழியில்
பிச்சை எடுத்த உண்டு கொண்டு செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.

நர்மதா நதியை அதன் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து முகத்துவாரம் வரை ஒன்றரை
ஆண்டிற்குள் நடந்தே வலம் வர வேண்டும். இந்த யாத்திரையை 9 மாதங்களில்
வெற்றிகரமாக முடித்தார், அவர்.


(Source & Courtesy : The Hindu -
"Happiness in life without money in rich Germany"
- Business line)

தமிழில் சுமன்
நன்றி: மஞ்சரி
























அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை? Empty Re: பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை?

Post by தங்கை கலை Sun Oct 09, 2011 1:14 pm

நல்ல தகவல் அய்யா ...
பணம் தேவை இல்லை ன்னு வந்தா நல்ல இருக்கும்

மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு அய்யா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை? Empty Re: பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை?

Post by vinitha Sun Oct 09, 2011 1:19 pm

super பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை? 548321  பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை? 548321
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

 பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை? Empty Re: பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 10, 2011 1:41 pm

அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை? Empty Re: பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை?

Post by அரசன் Mon Oct 10, 2011 4:03 pm

நன்றிங்க அய்யா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை? Empty Re: பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 10, 2011 4:56 pm

:héhé: :héhé: :héhé: சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை? Empty Re: பணமில்லாமலே மகிழ்ச்சி வாழ்க்கை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum