தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Yesterday at 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Yesterday at 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Yesterday at 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Yesterday at 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Yesterday at 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Yesterday at 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Yesterday at 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Yesterday at 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Yesterday at 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
சொல்லியலும் அகராதியியலும் - முனைவர் அ.பரிமளகாந்தம்,
Page 1 of 1

முனைவர் அ.பரிமளகாந்தம்,
இணைப் பேராசிரியரி,
அகராதியியல் துறை,
பி.எஸ். தெலுங்குப் பல்கலைக்கழகம்,
ஹைதராபாத் – 500 004.
சொல்லியல், அகராதியியல் என்ற இரண்டு சொற்களும் Lexicology, lexicography என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களாகும். Lexicology, lexicography என்ற இரண்டு சொற்களும் ‘lexiko’ (“lexiko” என்பது ‘பேச்சு’ (அ) ‘பேசும் முறை’ (அ) ‘சொல்’ என்ற பொருட்களை உடைய ‘lexis’-என்பதன் பெயரடை) என்ற கிரேக்கச் சொல்லிருந்து உருவான சொற்கள். Lexicology என்பது ‘lexiko+logos’. ‘lexiko’ என்றால் ‘சொல்’, ‘logos’ என்றால் ‘கற்றுக்கொள்வது’ (அ) ‘விஞ்ஞானம்’ என்று பொருள். அதாவது ‘சொற்களைப் பற்றிக் கற்றுத் தருவது’ (அ) “சொற்களைப் பற்றிய விஞ்ஞானம்” என்று பொருள். Lexicography என்பது, ‘lexiko+graph’ என்று பிரிக்கப்பட்டு, ‘lexiko’ என்றால் ‘சொல்’, ‘graph’ என்றால் ‘எழுதுவது’ என்று பொருளாகிறது. அதாவது ‘சொற்களை எழுதுவது’ என்று பொருள் உரைக்கப் பெறுகின்றன. இவை இரண்டும் தமிழில் ‘சொல்லியல்’ என்றும் ‘அகராதியியல்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு இயல்களும் ‘சொல்’ (அ) மொழியின் ‘சொற்கூறுகளைப்’ பற்றிய செய்தியை அடிப்படையாகக் கொண்டதாகும்.
மொழியியலின் பிரிவுகளான சொல்லியல், அகராதியியல்களின் நோக்கத்தை அச்சொற்களின் சொற்பிறப்பியல் பொருளே உணர்த்துகின்றன. சொல்லியல் என்பது சொற்களை அறிவியல் முறையில் கற்பது. ஆனால் அகராதியியல் என்பது, சொற்களை வெளிப்படையாக எழுதி அகராதியாக உருவாக்குவது. சொல்லியலும், அகராதியியலும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையவை. மேலும் அகராதியியல், சொல்லியலை அடிப்படையாகக் கொண்டது. எனவே அகராதியியல் ‘பயன்பாட்டு சொல்லியல்’ என்று கூட வழங்கப்படுகிறது
.
மேலே குறிப்பிட்டது போல சொல்லியலுக்கும் அகராதியியலுக்கும் பொதுவானது சொல். ஒரு மொழியின் எல்லாச் சொற்களும் அம்மொழியின் சொற்கோவையை அல்லது சொல் ஒழுங்குமுறையை உருவாக்க உதவுகின்றன. வானிலுள்ள விண்மீன் கூட்டத்தைப் போன்றவை மொழியில் உள்ள சொற்கள். ஒவ்வொரு சொல்லும் தனக்குரிய தனித்தன்மைகளோடு சொல்லடுக்களாகவும், தொடர்களின் பகுதிகளாகவும் பிறவற்றுடன் தொடர்புடையது. சொல்லடுக்குச் சொற்கள், அகராதியியல் ஒழுங்கமைவில் ஒன்றுக்கொள்று தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு மொழியின் தொடர் அமைப்பு சொற்களுக்கு இடையேயுள்ள தொடர்பை சொற்களின் வைப்பு முறைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றது. அதாவது மொழியிலுள்ள சொற்கள் தனித்தன்மையுடையதாக இருப்பினும், குழப்பமின்றி ஒரு ஒழுங்கமைவுடன் ஏதாவது ஒரு வகையில் பிற சொற்களோடு தொடர்புடையதாக இருக்கும். ஒவ்வொரு சொல்லும் குறிப்பிட்ட பொருள், குறிப்பிட்ட ஒலிகளின் கூட்டம், குறிப்பிட்ட இலக்கணச் செயல்பாடும் கொண்டதாக இருக்கும். ஆகையால் சொல் என்பது ஒலியன், உருபன், பொருண்மை போன்றவற்றைக் கொண்டது. சொல்லியல், என்பது சொற்களின் எல்லா நிலைகளையும் அதாவது சொற்களின் பொருண்மைத் தொடர்புகளுடன் ஒலியன் உருபன் இன்னும் சூழல் நடவடிக்கையையும் ஆராய்கிறது. மொழி தன் உருவத்திலும், பொருளிலும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. சொல்லியல் மொழிச் சொற்கோவையை அதன் பிறப்பு, வளர்ச்சி இன்னும் தற்போதைய பயன்பாடு என்ற நிலைகளில் பார்க்கிறது. சொற்களுகிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வைத்துச் சொல் அலகுகளிடையே உள்ள இணையான தொடர்பைப் பார்க்கிறது சொல்லியல்.
சொல் தனிச்சொற்களாக மட்டுமின்றி, கூட்டுச் சொற்களாகவும் மொழிப் பயன்பாட்டில் உள்ளதால் சொல்லியல் சொற்றொடர், கூட்டுச் சொற்கள் போன்றவற்றையும் ஆராய்கிறது.
மொழியியலில், விளக்க மொழியியல், வரலாற்று மொழியியல் போன்ற பிரிவுகள் உள்ளதைப் போன்று மொழியியலின் ஒரு பிரிவான சொல்லியலிலும் விளக்கச் சொல்லியல், வரலாற்றுச் சொல்லியல் என்ற பிரிவுகள். உள்ளன. விளக்கச் சொல்லியல், மொழியிலுள்ள சொற்கோவைகளை முறையாகக் கொண்டு குறிப்பிட்ட காலப் பின்னணியில் சொற்களை நோக்குகிறது. வரலாற்றுச் சொல்லியல், மொழியிலுள்ள சொல்லழகுகளின் வடிவம், பொருள் ஆகியவற்றின் மூலத்தையும் (origin) வளர்ச்சியையும் (development) காலத்தோடு இணைத்து ஆராய்கிறது. பொதுவாகச் சொல்லியலின் பகுதிகளை ஒப்பீட்டு ஆய்வுசெய்யாமல் தனியாகப் பார்க்கமுடியாதாகையால் அவை இருமுகச் சார்புடையவையாக உள்ளன.
சொல்லியல் இரண்டு வகைப்படும். அவை 1. பொதுச் சொல்லியல் 2. சிறப்புச் சொல்லியல். பொதுச் சொல்லியல் எல்லா மொழிச் சொற்களின் பொதுத் தன்மையை ஆராய்கிறது. அதாவது மொழிகளிலுள்ள உலகப்பொதுமையைப் பற்றி ஆராய்கிறது. ஆனால் சிறப்புச் சொல்லியல் ஒரு குறிப்பிட்ட மொழியில் உள்ள சொற்களை ஆராய்கிறது.
சொல்லியல் ஆராய்ச்சியை ஒப்பீட்டுச் சொல்லியல் என்றும் வேற்றுநிலைச் (contrastive) சொல்லியல் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவைகளில் இரண்டு மொழிகளின் சொல் ஒழுங்குமுறையை வேறு படுத்தி ஆராயப்படுகிறது.
பயன்பாட்டு மொழியியலின் வகைகளான அகராதியியல், நடையியல், மொழி கற்பித்தல் போன்றவற்றின் தேவைகளைச் சொல்லியல் நிறைவு செய்கின்கிறது.
மொழியின் சொற்கோவை அல்லது சொல் ஒழுங்குமுறை இதர ஒழுங்குமுறைகளைப் போல மொழியின் ஒழுங்குமுறையை உருவாக்குகிறது. ஆகையால் சொல்லியல் ஆராய்ச்சியை ஒழூங்குமுறையின் இதர உறுப்புகளிலிருந்து பிரித்தல் கூடாது. சொல்லியல் ஒலியனியலுடனும், இலக்கணத்துடனும் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையது.
ஒலியனியலுக்கும் சொல்லியலுக்கும் இடையே உள்ள தொடர்பு மிகவும் முக்கியமானது. ஒலியன்கள் பொருளற்றதாக இருந்தாலும், சொற்கள் ஒலியன்களால் ஆனவை. இவை பொருளை உணர்த்தும் உருபன்களை உருவாக்கப் பயன் படுகின்றன. ஆகையால் அவை பொருளை வேறுபடுத்திக் காட்ட உதவுகின்றன. மேலும் பொருள், ஒலியனியல் பகுப்பாய்வில் இன்றியமையாதது. உதாரணத்திற்கு /pit/ /put/; /aaTu/ /maaTu/ “cattle”.போன்ற சொற்களிடையே உள்ள பொருள் வேறுபாடு /i/ /U/; /aa/ /maa/ என்பவை ஒலியன்கள் என்று தீர்மானிக்கப் பயன்படுகிறது. வரலாற்று ஒலியனில் பலபொருள் ஒரு சொல் (polysemy), ஒருபொருள் பல சொல் (synonymy), ஒரு சொல் போலியியல் (homonymy) சொற்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.
சொல்லியலுக்கும் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்பு கூட மிகவும் நெருக்கமானது. ஒவ்வொரு சொல்லும் மொழியின் சொல் வகையுடன் (parts of speech) தொடர்பு கொண்டு ஏதாவது ஒரு சொல் வகைப்பாட்டைச் சார்ந்ததாக இருக்கும். சொல்லியல் சொல் வகைப்பாட்டை இலக்கணப் பொருளாகவும் சொற்பொருளாகவும் கொண்டு ஆராய்கிறது. சொல்லாக்கக் களத்தில் சொல்லியலுக்கு இலக்கணத்துடன் இன்னும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரண்டும் சொல்லாக்க முறையை விளக்குகிறது.
மொழி சமுதாயத்தின் ஒரு அங்கம் (Social Phenomenon).மொழி ஆய்வைச் சமூக ஒழுங்குமுறை மற்றும் சமூக வளர்ச்சி ஆய்விலிருந்து பிரிக்கமுடியாது. சமூக, அரசியல் மற்றும் தொழில் நுட்ப ஒழுங்கு முறையில் உள்ள வளர்ச்சி முன்னேற்றம் மொழியில் உள்ள சொற்கோவையைத் தெளிவாக வெளிப்படுத்துப்படுகிறது. மொழியில் புதிய சொற்களின் வருகையும், பழைய சொற்களின் மறைவும் நிகழ்கின்றன. புதிய பொருட்களின் சேர்க்கையும், பழைய பொருட்களின் மறைவும் நிகழ்கின்றன. சொல்லியல் மொழியின் சொற்கோவையைச் சமூக நோக்கிலும் ஆய்வு செய்கிறது.
அகராதியியலும் சொல்லியலைப் போலச் சொற்களை ஆய்வு செய்கிறது. ஆனால், சொல்லியல் சொற்களின் பொது உடைமையிலும், பண்புக் கூற்றிலும் ஒழுங்கமைவு முறையிலும் கவனம் செலுத்துகிறது. அகராதியியல் தனிச் சொல்லலகின் தனித்தன்மையில் கவனம் செலுத்துகிறது. (ஜூகுஸ்தா 1973, 14). அகராதியில் என்றால் பேரகராதி அல்லது அகராதியை எழுதுவது அல்லது தொகுப்பது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. அகராதியை எழுதும் கலை அல்லது அகராதியை விஞ்ஞான முறைகளில் தொகுப்பது. முதன் முதலாக, அகராதியியல் என்னும் சொல் 1680 - இல் ஆக்ஸ்போர்டு என்னும் ஆங்கில அகராதியில் பயன்படுத்தப்பட்டது.
சொல்லியலில், சொல், ஒழுங்கு முறையின் ஒரு பகுதியாக ஆய்வு செய்யப்படுகிறது. ஆனால் அகராதியியலில், அகராதி சொல்லை அதன் பொருள், பயன்பாடு என்ற முறையில் தனி அலகாக ஆய்வு செய்கிறது. மேலும், மொழியைக் கற்கும் வாசகனுக்காகவோ அல்லது அதில் உள்ள பனுவல், அறிவுணர் திறன், சரியான எழுத்து, உச்சரிப்பு போன்ற பல்வேறு நோக்கங்களைப் பயன்படுத்தும் வாசகனைக் கருத்தில் கொண்டு அகராதி உருவாக்கப்படுகின்றது.. ஒரு சொல்லிற்குப் பல்வேறு தன்மைகள் இருக்கலாம். அகராதியியலாளர் அவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதில்லை. அகராதியியலாளர்கள் அகராதியின் நோக்கத்தையும், பல்வேறு வாசகர்களின் தன்மைகளையும் கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர். மேலும் அவர்கள் சொல் ஒழுங்கு முறையில் உள்ள சொற்களை வாழ்க்கைப் பயன்பாட்டிற்குரிய சொற்களாக அமைத்துத் தருகின்றனர். உதா. சொல்லியல், பலபொருள் ஒரு சொல்லின் பொருள்களுக்கு அடிப்படைக் கோட்பாட்டை வகுக்கிறது. ஆனால் அகராதியியல் எப்படி இந்தப் பொருள்களைச் சொற்களாக்கி அகராதியில் பல்வேறு வாசகர்களின் பயன்பாட்டுத் தன்மையின் பிரச்சனைகளை முக்கியமாகக் கொண்டு கொடுக்கப்படுகிறது என்பதை விவரிக்கிறது. மொழியின் சொற்கோவையை ஒரு ஒழுங்கு முறையாக ஆய்வு செய்வது சொல்லியலின் நோக்கம் என்பதால் தனியான அலகுகளாக ஆய்வு செய்வது முற்றுப்பெறாமல் இருக்கும் ஏனென்றால் அலகுகளின் எண்ணிக்கை பெரிது. அதன் நோக்கம் மொத்தத்தில் ஒழுங்கு முறையாக்கம் செய்வதேயல்லாமல் தனி அலகுகளின் முழுமை குறித்து அல்ல. ஆனால் அகராதியியலின் நோக்கம் ஏறக்குறைய தனி அலகுகளை முழுமையாக விவரிப்பதாகும். ஆகையால் ஒழுங்கு முறை ஆய்வில் முழுமையை எதிர்பார்க்கமுடியாது. இதில் ஒவ்வொரு பதிவும் ஒரு தனிப் பிரச்சனையாகப் பார்க்கப்படும். அகராதியியலார் தங்கள் பொருட்களைத் சொற்கோவை ஆய்வு நோக்கில் தொடர்ச்சியாகக் கொடுப்பார். அகராதியியலார், தரவுகளின் மீட்டுறுவாக்கத்தில் சொற்களைத் தம் வசதிக்கேற்ப அகராதி வரிசையில் வரிசைப்படுத்துவார்.
சொல்லியல், சொல்லின் அடிப்படை கோட்பாடுகளை அகராதியியலுக்குக் கொடுக்கிறது. அகராதியியலார் எல்லா சொல்லலகின் பொருண்மைத் தன்மைகளை அறிந்திருப்பினும், சில முடிவுகளை எடுப்பது, சில பண்புக்கூறுகளை வரைவிலக்கணத்தில் சேர்ப்பது போன்றவற்றைத் தன் சொந்த நோக்கலில்தான் செயல்படுத்துகின்றனர்.
சொல்லியலில் சொற்களை ஆய்வு செய்வது புறவயமானவை. அது சொல்லாக்கத்தையும், பொருண்மைக் கோட்பாட்டையும் தழுவியது. அங்கே தனிமனித முடிவுகளுக்கு (aberrations) இடமில்லை. அகராதியியலில் அகராதியியலாரின் உண்மையான உழைப்பிற்குப் பின்பும் கூட பல வரைவிலக்கணங்கள் அகவயமானதாகிவிடும். அதாவது அகராதியியலாரின் சொந்தத் தாக்கத்திலிருந்து விலகல் முடியாது. (cf. ஜான்ஸன் அகராதியில் ஓட்ஸூக்கு உள்ள பொருள்).
பொதுச் சொல்லியல், மொழியில் உள்ள சொற்களின் உலகப் பண்புக்கூறுகளை ஆராய்கிறது. அதாவது சொல்லியல் ஒரு குறிப்பிட்ட மொழியை ஆய்வு செய்யாது. ஆனால் அகராதியியல், உலக கோட்பாட்டுப் பின்புலத்துடன் இருப்பினும் குறிப்பிட்ட மொழியையே ஆய்வு செய்யும். அகராதியியல் கோட்பாடுகளுக்கு, அகராதியியல் தயாரிப்பில் செயல்முறை பொருத்தத்தைத் தவிர வேறு எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை.
சொல்லியல் கோட்பாடுகளால் ஆனது. ஆனால் அகராதியியல், அந்தக் கோட்பாடுகளின் பயன்பாட்டைக் குறிக்கிறது. ஆகையால், அகராதியியல் சொல்லியலை விட உயர்ந்த துறையாகக் கருதப்படுகின்றது. எனவே அகராதியியலில் உள்ளுணர்வுகளைவிட விளைவுகளே முக்கியமாகக் கருதப்படுகின்றது, மேலும் கோட்பாட்டு விதிகளின் மதிப்புகளும் விளைவுகளை வைத்து கணிக்கப்படுகிறது. (Doroszewski 1973, p. 36).
அகராதியியல் என்பது அகராதியைத் தயாரிக்கும் ஒரு அறிவியல் கலையாகும். முதன்முதலாக 13-ஆம் நூற்றாண்டில் ஜான் கார்லெண்டு என்ற ஆங்கிலேயர் dictionary என்ற சொல்லுக்கு Dictionarius என்ற சொல்லைப் பயன்படுத்தினார். 14-ஆம் நூற்றாண்டில் Dictionarium என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. Dictionary என்ற தலைப்பில் Sir Thomas Elyot (1538) என்பவரால் வெளியிடப்பட்ட முதல் புத்தகம் Latin-English Dictionary. இடைக்கால அறிஞர்களுக்கு Dictionary என்றால் கதைகளின் அல்லது தொடர்களின் தொகுப்பாகவும் இலத்தீன் பயிலும் மாணாக்கர்களுக்கு பாடமாகவும் அமைந்தது. இடைக்காலத்தில் அகராதியின் பயன் பனுவலைப் பொருள் விளக்கமாகச் செய்து அவற்றிற்கு ஒரு பொருட் குறித்த பல பொருள்கள் சொல்வதாகும்.
அகராதி மக்களின் பலவிதமான செயல்முறைத் தேவைகளை நிறைவேற்ற தயாரிக்கப்பட்டதாகும். வாசகன் அகராதியைக் கீழ்கண்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளப் பயன்படுத்துவான்.
1. சொல்லைப் பற்றிய பலவிதமான தகவல்களைக் கொடுக்கும் குறிப்புப் புத்தகம். உதா. உச்சரிப்பு, சொற்பிறப்பியல், வழக்கு முதலியவை. இது அகராதியின் வைப்பறை என்று சொல்லலாம்.
2. தப்பும் தவறுமான வழக்கிலிருந்து சரியானதும் நல்லதுமான வழக்கைப் பிரிக்கும் குறிப்பிடமாக விளங்குகிறது. இது அகராதியின் சட்டசபை அல்லது நீதிமன்றச் செயல்பாடு என்று சொல்லலாம்.
ஜான்ஸன் (1755) என்பவர் அகராதி எழுதுபவரை/ தயாரிப்பவரை......”a harmless drudge that busies himself in tracing the original and detailing the signification of word”. ஆங்கில மொழிக்கு அகராதி என்பது நெடுங்காலமாக ஒரு பைபிளைப் போல செயல்பட்டுக்கொண்டிருந்தது..
இது தவிர, அகராதி, தகவல்களின் சுத்திகரிப்புச் சாலை யாகவும் (clearing house) பணிபுரிகிறது. இந்த வேலைகளைப் போதுமான அளவில் செய்வதற்கு அகராதியில் உள்ள தகவல்களை எத்தனை மூலங்களின் மூலம் சேகரிக்கமுடியுமோ அத்தனை மூலங்களின் மூலம் சேகரிக்கவேண்டும். இத்தகவல்கள் உண்மையானதாகவும் மீளுமை செய்யக் கூடியதாகவும் இருக்கவேண்டும். எனவே அகராதியியலை ஒரு வகையில் பயன்பாட்டு அறிவியலாகக் கூடக் கருதலாம்.
அகராதியியலும் மொழியியலும்
முன்னர் குறிப்பிட்டது போல அகராதியியலின் அடிப்படையானது சொற்களே. இச்சொற்களை மொழியியலின் பல பிரிவுகளான ஒலியனியல், இலக்கணம், நடையியல் போன்றவை ஆய்வுகள் செய்திருக்கின்றன. அகராதியியல் மொழியியலுடன் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை; மொழியியலின் பகுதியான பயன்பாட்டுக் கிளையுமாகும் (applied discipline). அகராதியியலின் செயல்முறைப் பிரச்சனைகளை மொழியியல் ஆராய்ச்சியைப் பயன்படுத்தித் தீர்வு காணலாம். அகராதியியலாளிரின் முழுப் பணியிலும் அதாவது பதிவுகளை தேர்ந்தெடுத்தல் முதலாக தலைமைச் சொல் தீர்மானிப்பது, சொல்லிற்குக் கோட்பாடு சொல்லுதல், பதிவுகளையும் அதன் பொருட்களையும் வரிசைப்படுத்துவது வரை மொழியியலின் பல பிரிவுகளின் ஆய்வுகள் உதவுகின்றன.
அகராதிகளில் பலவற்றில் பொதுவாகப் பதிவுகளைத் தேர்ந்தெடுக்க எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அளவீடு அதிர்வெண் (frequency count) ஆகும். இவ்வதிர்வெண் அளவீடு, புள்ளியியல் மொழியியலில் இருக்கிறது. தலைமைச் சொல் தேர்ந்தெடுக்க அகராதியியலாளர் வாய்ப்பாட்டு வடிவத்தையோ அல்லது அடிக்கடி பயன்படுத்தும் சொல்லையோ தேர்ந்தெடுப்பார். இது மொழியின் இலக்கண ஆய்வில் காணப்படுகிறது. எழுத்துச் சான்று இருக்கும் மொழிகளுக்கும் நல்ல இலக்கண இலக்கியச் சான்றுகள் உள்ள மொழிகளுக்கும் தலைமைச் சொல் நிர்ணயிப்பது எளிது. இத்தகு சான்றுகள் இல்லாத மொழிகளுக்குத் தலைமைச் சொல் நிர்ணயிப்பதென்பது மிகவும் கடினம். இங்கு அகராதியியலாளர் மொழியியலாளரின் துணை கொண்டு மொழிப் பகுப்பாய்வு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தரவுகளைச் சேகரிக்கவவும், அவற்றைப் பகுப்பாய்வு செய்யவும் கள ஆய்வியல் மொழியியலாளர் உதவியும், விளக்க மொழியியலாளர் உதவியும் அகராதியியலாளருக்குத் தேவைப்படுகிறது. ஒரு நாட்டின் இயற்கை வளங்களுக்கும் பண்பாட்டு வகைகளுக்கும் வரைவிலக்கணம் கொடுக்க கலைக்களஞ்சியத் தகவல்கள் அகராதியியலாருக்குத் தேவை. அதற்காக நாட்டுப்புற வகைப் பாட்டியல் மூலமாக சொற்கோவையின் படிநிலை அமைப்பு விதியைப் பயன்படுத்துகின்றனர் அகராதியியலார். இவ்வகையாக அகராதியியலாளர் இன மொழியியலில் பங்கு பெறுகிறார்.
அகராதியில் சொற்களுக்கான எழுத்துக்களையும், உச்சரிப்புக்களையும் கொடுப்பதற்கு ஒலியனியல் ஆய்வின் உதவியை நாடுகின்றனர் அகராதியியலார். மேலும் சொற்களுக்கான இலக்கண விளக்கங்கள் கொடுக்க உருபனியல் ஆய்வு உதவியை நாடுகின்றனர்.
அகராதியியலாருக்குப் பலபொருள் ஒரு சொல்லில் மையப் பொருளைக் கண்டறிய வரலாற்று மொழியியல் உதவுகிறது. சொல் பிறப்பியல் அடிப்படைப் பொருளைத் தீர்மானிக்க உதவுகிறது. மேலும் பொருள்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கவும் பொருள்களிடையே உள்ள உள்ளீட்டு உறவைத் தீர்மானிக்கவும், சொல்லடி வகைப்பாட்டு தொடை, விகிதம், தேர்வுக் கட்டுத்திட்டம் முதலிய மொழியியல் முறைகளை எடுத்தாள்கின்றனர் அகராதியியலார்.
வரலாற்று மொழியியல், வரலாற்று அகராதியிலுள்ள சொற்களின் வடிவம், மற்றும் பொருள்களின் பிறப்பு பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் அறிய உதவுகிறது. விளக்க அகராதியில் சொல்லின் பழமை நிலையையும், வழக்கற்றதுமான புலப்பாடுகளைத் தீர்மானிக்க வரலாற்று மொழியியல் உதவுகிறது. வரலாற்று மொழியியல் குறிப்பாக சொற்பிறப்பியல் ஆய்வு ஒருசொல் போலியியலுக்கும், பலபொருள் ஒரு சொல்லுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய உதவுகிறது. சொற்பிறப்பியல் உதவவியலாத போது தாய்மொழியாளரின் உள்ளுணர்வு இந்தக் காரணிகளைக் கணிக்க உதவுகிறது. இவ்வகையில் அகராதியியலாளருக்கு உளவியல் உதவுகிறது. உளவியல், படித்தர (Graded) அகராதித் தயாரிப்பில் சொற்கோவை வளர்ச்சிக்குத் தேவையானவற்றைக் கொடுத்து உதவுகிறது.
அகராதிகள், குழுக் கொச்சை வழக்கு அதாவது குழூவுக்குறி, குழு வழக்கு, கொச்சைச் சொற்கள், அலங்காரச் சொற்கள், முறையான, கீழ்த்தரமான பேச்சு முதலிய தகுதிப் புலக் குறிப்புகளைக் கொடுக்கின்றன. இப்புலக்குறிப்புகளைத் தீர்மானிக்க சமூதாய மொழியியல் மற்றும் நடையியல் ஆய்வுகள் உதவி செய்கின்றன.
கிளைமொழியியல் அகராதிக்கு, கிளைமொழியியல் சரியான ஆதரவை நல்குகிறது. இருமொழிய அகராதிக்கு, இரண்டு மொழிகளின் மொழியியல் ஒழுங்கு முறையின் வேற்றுநிலைப் பகுப்பாய்வு அடிப்படையான முதல் தேவையாகும். இதை வேற்று நிலை மொழியியல் கொடுக்கிறது.
இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது தன்
பயன்பாட்டிற்கு அகராதியியலாளர் பெருமளவில் மொழியியலின் பலவிதமான பிரிவுகளின் கண்டுபிடிப்புகளை எப்போதும் சார்ந்திருக்கவேண்டும் என்று தெரிய வருகிறது. நடைமுறையில் இது சாத்தியமல்ல. அகராதியியல் ஆய்வு, மொழியியல் ஆய்வுகளைவிட முன்னணியில் இருக்கிறது. மொழியியல் கண்டுபிடிப்புகள் மாத்திரமே அகராதியியல் பிரச்சனைகளைத் தீர்க்க துணை புரியவில்லை. அகராதியியல் கண்டுபிடிப்புக்களைக் கூட மொழியியலாளர் அதே அளவில் பயன்படுத்திக் கொள்கின்றனர். எப்படியெனில், தங்கள் கருதுகோலின் பலவித நோக்கங்களை உண்மையானதென்று நிரூபிக்கவும், மொழியைக் குறிப்பாக கலைச்சொற்களின் களத்தில் தரப்படுத்தவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அகராதியியலாளரின் பிரச்சனைகள் இயல்பானவை. அவற்றைத் தீர்க்க நொடிப்பொழுது தீர்வுகள் போதும். அகராதியியலார் மொழியியல் களத்தில் உள்ள சில கண்டுபிடிப்புக்களுக்காக காத்திருக்க முடியாது. அல்லது மற்ற துறைகள் தன் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று காத்திருக்கமுடியாது. இந்நிலையில் தான் மொழியியலார் அகராதியியலாரின் தேவையைத் தீர்ப்பதில் தோல்வியடைகின்றனர். மொழியியலின் பல துறைக் கோட்பாட்டு ஆய்வாளர்கள் அகராதியியலாரின் தேவையைத் தூர்ப்பதற்கு ஒருவருடன் ஒருவர் போட்டியிடுகிறார்கள். ஒரு துறையின் கண்டுபிடிப்பு இன்னொரு துறையின் கண்டுபிடிப்பிலிருந்து வேறுபடக் கூடும். மொழியின் ஒரே தன்மையில் பலவிதமான ஆய்வுகள் செய்யக்கூடும். அகராதியியலார், மொழியியலாரின் கடைசி கண்டுபிடிப்பு வரும் வரை காத்திருக்க முடியாது. மேலும் பல மொழிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கின்றன. ஆகையால் அகராதியியலார் தன் வழியைத் தானே கண்டுபிடிக்கவேண்டும். தன் முழு வேலையிலும் அகராதியியலார் அகராதியைப் பயன்படுத்துபவரின் செயல்முறைகளை வைத்தே நடக்கவேண்டியருக்கிறது. மொழியியலின் கோட்பாடுகள் அகராதியியலாருக்கு தேவையானதே. ஆனால் செயல்முறைப் பயன்பாடு அவருக்கு மிகவும் அடிப்படையானது. உர்தங்க் என்பவர் சொன்னதற்கிணங்க அகராதியியல், செய்முறையில் பயன்பாட்டு மொழியியலாகும்.. நிறைய கோட்பாட்டாளர்களை இந்தக் களத்திற்கு வரவேற்றாலும் அவர்கள் கோட்பாடுகள் செய்முறையால் விவரிக்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்” (உர்தங்க் 1963, 594).
பேரகராதியும் இலக்கணமும்
இனி பேரகராதிக்கும் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம். புளும்பீல்டு என்னும் அறிஞர் பேரகராதியும் இலக்கணமும் மொழியியலை விவரித்தலின் இரண்டு பகுதிகள் என்று கூறி “பேரகராதி என்பது இலக்கணத்தின் பின்னிணைப்பு என்றும், அடிப்படை ஒழுங்கில்லாப் பட்டியல்” (புளுமஃபீல்டு 1933, 274) என்றும் கூறுகிறார். அவருடைய கூற்றுப் படி இலக்கணம், தெரிந்து கொள்ளக் கூடிய ஒழுங்கான அனைத்து மொழி வடிவங்களையும் விளக்கும் என்றும், பேரகராதி ஒழுங்கில்லாத தெரிந்து கொள்ள இயலாத அனைத்து வடிவங்களையும் அத்துடன் ஒழுங்கில்லா தெரிந்து கொள்ள இயலாத பொருள்களையும் விளக்கும் என்பதும் தெளிவாகிறது. இதை வேறொரு விதமாக மொழியின் தனிமனிதப் போக்குகளை ஆய்வு செய்கிறது என்றும் சொல்லலாம்.. பேரகராதி சீரில்லாப் பன்மைகள், வினையின் ஒழுங்கில்லா வடிவங்கள் மேலும் சொல்லலகின் அடுக்கில் உள்ள தெரிந்து கொள்ள இயலாத வடிவங்களையும் கொடுக்கிறது. அது ஒழுங்கான சொல் திரிபு வடிவங்களைக் கொடுக்காமல் ஆக்க வடிவங்களைக் கொடுக்கிறது. மேலும் தெரிந்து கொள்ள இயலாத வடிவத்தையும், பொருளையும் கொடுக்கிறது. இதையே இடுகுறியென்பர். இவ்வகையில் புளுமஃபீல்டு பேரகராதியை இலக்கணத்தின் பின்னிணைப்பு என்றும் அடிப்படை ஒழுங்கில்லாதவைகளின் பட்டியல் என்றும் கூறுகிறார்.
அகராதி சொற்களையும், பொருளையும் மாத்திரமே விளக்குகிறது என்றோ, இலக்கண வடிவங்களை மாத்திரமே விளக்குகிறது என்றோ உறுதியாகச் சொல்ல இயலாது. (கிளீஷன் 1967, 90). இலக்கண விதிகளோடு கட்டுமானங்களின் பொருளையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். அகராதி சொற் பதிவின் வெவ்வேறு இலக்கண வகைப்பாடுகளுடன் பொருளையும், பயன்பாட்டையும் சேர்த்துக் கொடுக்கிறது.
பேரகராதிக்கும் இலக்கணத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்னவென்றால் பேரகராதி திறந்த தொடையாகவும் open – ended இலக்கணம் மூடு தொடையாகவும் closed – ended இருப்பது தான். தனிமனிதன் ஒருவனுக்கு ஐந்து அல்லது ஆறு வயதிலேயே மொழியின் இலக்கண விதிகள் அனைத்தும் மனதில் பதிந்து விடுகிறது. மிகச் சிறிய அளவில் இலக்கண விதிகள் பின்னர் சேர்க்கப்படுகின்றன. இதற்கு மாறாக சொற்கோவையைக் கற்றுக் கொள்வது தொடர் நிகழ்வாக இருந்து இறந்த பிறகுதான் முடிவடைகிறது. தினமும் புது சொற்கள் பேரகராதியில் சேர்ந்து கொண்டே இருக்கிறது. (இங்கு பேரகராதி
என்பது ஒரு மொழி பேசும் மனிதனின் மனம் என்னும் அகராதியும், அதில் உள்ள சொற் சேர்க்கையும் ஆகும்). பேரகராதி மாறிக் கொண்டே இருக்கிறது. புதுச் சொற்கள் சேர்ந்து கொண்டே இருக்கிறது. சில சொற்கள் வழக்கொழிதலும் மேலும் சில சொற்களின் தனித்தன்மை புதுமையாக்கப்படுதலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
(கிளீஷன் 1967, 93-94). இலக்கணத்திற்கும் பேரகராதிக்கும் உள்ள உறவை வகுப்பு, உறுப்பு என்பவற்றைக் கொண்டு விளக்குகிறார். இலக்கணம் வகுப்புகளை ஏற்படுத்தி அவற்றுக்கிடையே உள்ள உறவுகளை ஆய்வு செய்கிறது. அகராதி தனித்தியங்கும் வடிவங்களை, சொற்களை, உருபன்களை உறுப்புக்கள் என்று சொல்லி அவை எந்த வகுப்புகளில் உறுப்புக்கள் என்று வகை செய்கிறது.
செய்முறை அகராதியும் கோட்பாட்டு அகராதியும்
முதலில் செய்முறை அகராதியையும் கோட்பாட்டு (ஆக்க) அகராதியையும் வேறுபடுத்த வேண்டும். செய்முறை அகராதி அகராதியியலாளரால் தயாரிக்கப்படுகின்ற அகராதி. இதைப் பல வாசகர்கள் பலவிதமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வர். செய்முறை அகராதியின் நோக்கம் புத்தகத்திற்கு விளக்கம் அளிப்பதுதான். கோட்பாட்டு அகராதி தனிமனிதனின் மனதில் உருவாக்கப்பட்ட அகராதி. இது மனிதப் பொருண்மை அறிதிறனுக்குப் பிரதிநிதியாக இருக்கிறது. மேலும் தனிமனிதன் தம் வாழ்நாளில் கற்றுக் கொண்ட மொத்த சேமிப்புச் சொற்களையும் தன்னகத்தே கொண்டது. இந்த அகராதி பேசுவோர்க்கு வெவ்வேறு விதமான அமைப்புகளில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர்க்குத் தேவையான தகுந்த சொற்களை எடுத்துப் பயன்படுத்தும் ஒரு சாதனமாக இருக்கிறது. கோட்பாட்டு அகராதி அல்லது தனிமனிதப் பேரகராதியில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். புதிய சொற்களைச் சேர்ப்பதோ, சில மறைந்த சொற்களை களைவதோ அல்லது வழக்கில் உள்ள சொற்களுக்கு பேசுவதற்கேற்றவாறு புதிய பொருள் சேர்ப்பதோ நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதனால் இந்தப் பேரகராதி திறந்த தொடை (open ended set) என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை அகராதிக்கும் கோட்பாட்டு அகராதிக்கும் உள்ள மற்றொரு வித்தியாசம் இரண்டு அகராதிகளின் சொற்பதிவுகளை வரிசைப்படுத்தும் வைப்பு முறையில்தான் இருக்கிறது. செய்முறை அகராதியில் சொற்பதிவுகள் வரிசை முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கோட்பாட்டு அகராதியில் வரிசை முறையில் ஒழுங்குபடுத்தப்படவில்லை.
கோட்பாட்டு அகராதியின் ஒவ்வொரு பதிவும் நடைமுறை வழக்கில் உருபனியல், தொடரியல், பொருண்மையியல் என்ற மூன்று உடைமைகள் அல்லது குணங்களால் உணரப்படுகிறது. உருபனியல் குணதிரள்கள் பதிவுகளைத் தன் வெவ்வேறு உருபனியல் உறுப்புக்களான பகுதிகள், சொல் திரிபு ஒட்டுக்கள், சொல்லாக்க ஒட்டுக்கள் போன்றவைகளாகப் பிரித்துக் குறிப்பிடப்படுகிறது. இந்த உருபனியல் பிரிப்பு பதிவுகளின் எழுத்துக்களையும் உச்சரிப்பையும் காட்டுகிறது.
தொடரியல் பண்புக்கூறுகளைத் தொடர் போன்ற பெரிய அமைப்புகளில் உள்ள சொற்களின் சொல்லடி வகைப்பாடு களாலும் கூட்டு சொற்களாலும் விளக்கலாம். இப்பண்புக் கூறுகள், சொல் இலக்கண வகைப்பாடுகளான பெயர், அடை அல்லது துணை இலக்கண வகைப்பாடுகளான செயப்படு பொருள் குன்றிய வினை, செயப்படுபொருள் குன்றா வினை, எண்ணுப்பெயர், திரள் பெயர் முதலியவற்றால் குறிக்கப்படுகின்றன
பொருண்மைக் குணத்திரள்கள் சொல்லலகின் பொருண்மைப் பண்பாட்டுக் கூறுகளை அவற்றின் எதிர்மறையாகவும் வேற்றுநிலையுடைமையாகவும் விளக்குகின்றன.
இம்மாதிரியான சொல் பதிவு தனித்தன்மைகளின் அடிப்படையில் பேசுவோர் புதுச் சொற்களை உற்பத்தி செய்யவோ அல்லது வழக்கில் உள்ள சொற்களுக்குப் புது பொருள்களை சொல் விதிகளின் மூலம் உருவாக்க பயன்படுகிறது. சொல் விதிகள் மொழியில் உள்ள வெவ்வேறு சொல்லலகுகளின் இடையிலுள்ள உறவை விளக்குகிறது.
சொல்லலகு விதிகள் புதுச் சொல்லாக்கங்களை தங்கள் ஏற்புடைமை அல்லது மற்றவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் கணக்கிடுகிறது. ஏற்புடைமை என்பது மூன்று வகைப்படும். அவையாவன: 1. உண்மை ஏற்புடைமை 2. தகுதி ஏற்புடைமை
3. முழு ஏற்புடைமையற்றவை
1. உண்மை ஏற்புடைமை என்பது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டவையும், சொல்லாக்க விதிகளின் மூலம் ஆக்கபட்டவையும் சமூதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்களை உடையதும் ஆகும்.
2. தகுதி ஏற்புடைமை என்பது சொல்லாக்க விதிகளால் ஆக்கப்பட்டவையாகவும் சமுதாயத்தில் நிலைபெறாதவையும் ஆகும். .
3. முழுஏற்புடைமையற்றவை என்பது சொல்லாக்க விதிகளாலும், சமூகத்தாலும் ஏற்கப்படாததும் அங்கிகரிக்கப்படாததும் ஆகும். சொல் விதிகள் சொல்லலகுகளின் உண்மை ஏற்புடைமை பற்றிய பின்புல விவரத்தைத் தருவதற்கான சான்றாதாரங்களைக் கொடுக்கின்றன. உண்மை ஏற்புடைமையுள்ள சொல்லலகுகளில் கூட ஏற்புடைமைக்கான படிநிலை அளவுகள் உள்ளன. பொதுவாகச் சில அலகுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளாகவும் வேறு சில அலகுகள் மிகக் குறைந்த அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளாகவும் இருக்கும்.. செய்முறை அகராதி பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அலகுகளைப் பதிவு செய்யும். ஏற்றுக் கொள்ளுதல் குறைவாகவுள்ள அலகுகளைப் பதவு செய்யாமலோ அல்லது கட்டுப்பாடுள்ள புலப்பாடுகளைப் பயன்படுத்தியோ (delimiting labels) பதிவு செய்யும்..
சொல் ஆக்க விதிகள் உருபனியல் ஆக்க விதி, உருபனியல் மாற்று விதி, உருபனியல் பொருண்மை மாற்று விதி என்ற மூன்று வகைப்படும். உருபனியல் ஆக்க விதிகள், சொற்களின் பகுதிகளில் பின் ஒட்டு அல்லது முன் ஒட்டு சேர்ப்பதன் மூலம் உருபன் அமைப்பில் ஏற்படும் மாற்றத்தோடு தொடர்புடையது. உதா. இந்தி கோடா குதிரை, கோடாவாலா குதிரைக்குச் சொந்தக்காரன்.
உருபனியல் மாற்று விதி, உருபனியல் அமைப்பைப் பாதிக்காமல் ஏற்படும் தொடரியல் செயல்பாட்டுடன் தொடர்புடையது. உதா. Cut: noun, cut:verb, drop:noun, drop:verb.
உருபனியல் பொருண்மை மாற்று விதி சொல்லின் பொருண்மை அமைப்பு மாற்றத்தோடு தொடர்புடையது. பொருண்மை மாற்றங்களான உருவக விரிவுகள், ஆகுபெயர் போன்றவை இதில் அடங்கும், இவ்விதிகள் சொல் அலகுகளின் உணர்பொருள், நடையியல் பொருள்களின் மூலம் கணக்கிடப்படுகின்றன. அவை காலக் கிரமமாக ஒழுங்கு செய்யப்பட்டு மொழியில் நிலைபாடு செய்யப்படுகின்றன.
சொல் விதிகள் பிரிநிலைத் தன்மையையுடைவை. பெரும்பான்மையாக ஒன்றுக்கும் மேற்பட்ட சொல் விதிகளை ஒரு சொல் அலகுக்கு விதிக்கப்படலாம். உதா. Boy, boyish, boyhood etc. அதே விதிகள் வேறு சொற்களுக்கும் பயன்படுத்தப்படலாம். உதா. Boyhood, girlhood, manhood, womanhood etc. வெவ்வேறு சொல் அலகுகளின் இடையிலுள்ள உறவை விவரிக்கும் சொல் விதிகள் பல பொருள் ஒரு சொல் (polysemy), ஒருபொருள் பல சொல் (Synonymy), உயர் உள்ளீடு (Hyponymy) போன்றவற்றோடு தொடர்புடையவைகள் ஆகும்.
REFERENCE
1. Singh, R.A. 1982 An Introduction to Lexicography, Central Institute of Indian Languages, Mysore.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

» தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன்.மதிப்புரை: முனைவர் ச.சந்திரா
» “டாக்டர் மு.வ. ஆய்வுக்கோவை “ பதிப்பாசிரியர்கள் : முனைவர் பா. கந்தசாமி முனைவர் வா.மு.சே. ஆண்டவர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் ! ஆய்வுக் கட்டுரைக் கோவை ! பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|