தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm
» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm
» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm
» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm
ஒற்று மிகுதலும் – மிகாமையும் விதிகள் - முனைவர் அ.பூலோகரம்பை,
Page 1 of 1

முனைவர் அ.பூலோகரம்பை,
இணைப் பேராச்சிரியர்,
தமிழ்த்துறை,
திராவிடப்பல்கலைக்கழகம்,
குப்பம் – 517 426
ஆந்திரா.
“எதுவும் யார்க்கும் இயற்கையாக உண்டாகாது
இயற்கையாக வரவேண்டுமானால் உழைப்பு வேண்டும்”
- ஆட்டோ யெஸ்பர்சன்
முன்னுரை
தமிழ் மொழி செம்மையும், அழகும் ஒருங்கே அமையப் பெற்ற இனிமை வாய்ந்த மொழி. உச்சரிப்பதற்கு அரிதான கூட்டு ஒலிகள் (Clusters) மேனாட்டு மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் உள்ளன. ஆனால், தமிழ் மொழியிலோ அத்தகைய அரிதான கூட்டொலிகள் இல்லை. எவ்வகையான எழுத்துக்கள் சொறகளின் முதலில் வரலாம் இடையில் வரலாம் ஈற்றில் வரலாம் என்பதை ஏற்கனவே விதிமுறைகளாக வகுத்த பின்பு கூட்டொலிகள் போன்ற அரிய ஒலிகளைத் தமிழ் மொழி ஏற்கப்படும் நிலையில் இல்லை. செம்மொழியாம் தமிழ் மொழிக்கென தனிச்சிறப்புக்கள் உண்டு. அத்தனிச் சிறப்புக்களில் ஒன்று தமிழ் எழுத்துக்களை எப்படி எழுதுகின்றோமோ அப்படியே உச்சரிப்பது என்பதுதான்.
தமிழ் மொழியின் சிறப்புக்களில் மற்றொன்று சொற்றொடர்களுக்கிடையே ஒற்றிடுதல் என்பது. பிற திராவிட மொழிகளுக்கில்லாத தனிச்சிறப்பு இது. பொதுவாக மொழி ஒன்றில் சிறப்புக்கூறு உள்ளதெனில் அதனைக் கூர்மையாக அறிதல் தமிழர்களாகிய நம் தலையாய கடமை. இரு சொற்கள் சேரும் போது நிகழும் மாற்றங்களைக் கூறும் சந்தியே ஒற்று மிகுதல் ஆகும். அதாவது நிலைமொழியாகிய சொல்லும் வருமொழியாகிய மற்றொரு சொல்லும் சேரும்போது அவற்றிடையே ஏற்படும் மாற்றங்களைச் சந்தி என்று மொழியியலாளர் அழைக்கின்றனர். தமிழ், மலையாள மொழிகளைத் தவிர வேறெந்த மொழிகளிலும் காணப்படாதொன்று இவ்வொற்றிடுதல் பண்பு. ஒற்றிடுதல் பெரும்பாலும் வல்லெழுத்து மிகுதலே.
நோக்கம்
தொடர்களில் ஒற்று மிகுமிடங்களையும் மிகாவிடங்களைப் பற்றி எடுத்துச் சொல்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். தொடர் என்னும் போது சொற்கள் அடுத்தடுத்து நிற்கும் அமைப்பே ஆகும். தமிழ்ச்சான்றோர்களின் பகுப்பின்படி தொடர்கள் இரண்டு வகைப்படும். அவை ஒன்று வேற்றுமைத்தொடர் மற்றொன்று அல்வழித்தொடர். இத்தொடர் அமைப்புகளில் ஒற்று மிகுமிடங்களையும் மிகாவிடங்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றது இவ்வாய்வு.
அ. ஒற்று மிகுமிடங்கள்
வேற்றுமைத் தொடர் என்பது தொல்காப்பியரின் வகைப்படி எட்டாகும். அதில் எழுவாய், விளி ஆகிய இரண்டையும் தவிர்த்து இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமைத் தொடர்கள் ஆறும் ஒற்று ஏற்கக்கூடிய தொடர்களாகும். அல்மொழித் தொடர்கள் எழுவாய்த்தொடர், விளித்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், தெரிநிலை வினையெச்சத்தொடர், குறிப்பு வினையெச்சத்தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், உவமைத் தொடர், உம்மைத்தொடர், வினைத்தொகைத்தொடர், பண்புத்தொகைத்தொடர், இரு பெயரொட்டுப் பண்புத்தொகைத்தொடர், அல்மொழித்தொடர் ஆகியவை ஆகும். தொகை என்றால் தொகுத்து உரைத்தலேயாகும். பொதுவாக வேற்றுமைத் தொகைகள் மூன்று அமைப்பில் வரும். வேற்றுமை உருபு மட்டும் தொக்க வரும் அமைப்பு, வேற்றுமை உருபு வெளிப்பட்டு வரும் அமைப்பு, வேற்றுமே உருபும் பயனும் உடன் தொக்க வரும் அமைப்பு.
இரண்டாம் வேற்றுமையைப் பொறுத்தவரையில் உருபை வெளிப்படையாகச் சொல்வதைவிட தொகுத்துப் பேசுவதே தமிழ் மரபு. அவ்வாறு தொகுத்துக் கூறாமல் இரண்டாம் வேற்றுமை உருபு விரித்து வரும் போது வரும் மொழி முதலில் க,ச,த,ப என்ற வல்லெழுத்து வந்தால் இயல்பாகவே அவை மிகும். மேலும் இதே போன்று இரண்டாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகையும் தொக்கி வரும்போது வல்லொற்றுக்கள் மிகும்.
எ-டு
வீடு + கட்டு = வீட்டைக்கட்டு
பாட்டு + பாடு = பாட்டைப்பாடு
இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படை
புகை + பெட்டி = புகைப்பெட்டி
அலை + கடல் = அலைக்கடல்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
மூன்றாம் வேற்றுமையைப் பொறுத்தமட்டில், தொகையில் ஒற்றிட வேண்டும்.
எ-டு
மாவு + தோசை = மாவுத்தோசை
இந்த இடத்தில் ஒற்றிடவில்லையெனில் அது மாவும் தோசையும் என்று உம்மைத் தொகையாக மாறிவிடும்.
மூன்றாம் வேற்றுமை விரியில் எவ்விடத்திலும் ஒற்றிட வேண்டிய அவசியமில்லை.
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் ஒற்றிடல் வேண்டும்.
எ-டு மரம் + பெட்டி =மரப்பெட்டி
ஈயம் + தட்டு = ஈயத்தட்டு
வெள்ளி + தகடு = வெள்ளித்தகடு
நான்காம் வேற்றுமையில், வேற்றுமைத்தொகையில் ஒற்றிடல் வேண்டும். ஒற்றிடவில்லையெனில் உம்மைத் தொகையாகி பொருள் மாறிவிடும்.
எ-டு
குறிஞ்சி + தலைவன் = குறிஞ்சித்தலைவன்
பூனை + பகை = பூனைப்பகை
நான்காம் வேற்றுமை விரியில் ஒற்றிடல் வேண்டும்.
எ-டு
கவிதைக்கு + தலைப்பு = கவிதைக்குத்தலைப்பு
கூலிக்கு + பணம் = கூலிக்குப்பணம்
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் ஒற்று மிகும்.
எ-டு
கோழி + தீவனம் = கோழித்தீவனம்
குழந்தை + பாடம் = குழந்தைப்பாடம்
ஐந்தாம் வேற்றுமைத் தொகையிலும் விரியிலும் ஒற்று மிகுவதற்கான் வாய்ப்புக்கள் இல்லை. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை மிக மிக அருகிய வழக்காக உள்ளன.
ஆறாம் வேற்றுமையைப் பொறுத்த வரையில் நிலை மொழியில் உயர்திணை இருப்பின் வருமொழி முதலில் க, ச,த,ப வந்தால் மிகுதல் இல்லை. நிலைமொழி அஃறிணையாக இருப்பின் ஒற்று மிகும்.
எ-டு
பெண்கள் + கல்லூரி = பெண்கள் கல்லூரி
ஒற்று மிகவில்லை
நாய் + குட்டி = நாய்க்குட்டி
ஒற்று மிகுந்தது
ஆறாம் வேற்றுமை விரியில் ஒற்று மிகாது.
ஏழாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிகும்
எ-டு
வீடு + பூ = வீட்டுப்பூ, காடு + தளை = காட்டுத்தளை
ஏழாம் வேற்றுமை விரியில் உருபுகளைப் பொறுத்து ஒற்று மிகலும் மிகாமையும் நடை பெறும். ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் ஒற்று மிகும்.
எ-டு
ஊர் + கிணறு = ஊர்க்கிணறு
மலை + குகை = மலைக்குகை
பூ + தேன் = பூத்தேன்
வீடு + கிணறு = வீட்டுக்கிணறு
அல்வழிப்புணர்ச்சியில் இடம் பெறும் தொடர்களில் வினைத்தொகையைப் பொறுத்தமட்டில் நன்னூலின் மூள்ரு ஆரு உருபு என வினைத்தொகை சுட்டு ஈறு ஆகும் உகரம் முன்னர் இயல்பாம் என்ற சூத்திரத்தின்படி ஒற்று மிகுதல் இல்லை.
பொதுவாக பண்புத் தொகையில் ஒற்று மிகுதல் இல்லை. ஆனால் சில விதிவிலக்குகள் உள்ளன. அவை புது துணி புதுத்துணி பொது பணி பொதுப்பணி சாரை பாம்பு சாரைப்பாம்பு,
இருபெயரொட்டு பண்புத்தொகையில் ஒற்று மிகும்.
எ-டு
ஆனி + திங்கள் = ஆனித்திங்கள்,
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ,
வேளாண்மை + தொழில் = வேளாண்மைத்தொழில்
ஒரு பொதுப் பெயரும் ஒரு சிறப்புப் பெயரும் சேரும்போது இயல்பாகவே ஒற்று மிகும்.
உருவக, உவமைத்தொகைத் தொடர்களில் ஒற்று மிகும்
எ-டு
கண்ணீர் + பூக்கள் = கண்ணீர்ப்பூக்கள்,
இதயம் + கோயில் = இதயக்கோயில்,
குவளை + கண் = குவளைக்கண்,
மழை+ கண் = மழைக்கண்
பச்சை + கிளி = பச்சைக்கிளி
உம்மை, எழுவாய் வினைமுற்று, விளிநிலைத் தொடர்களில் ஒற்றுக்கள் இடம் பெறுவதில்லை.
பெயரெச்சத் தொடர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. அகர ஈற்றுப் பெயரெச்சம் 2. ஆகார ஈற்றுப்பெயரெச்சம்
அகர ஈற்றுப்பெயரெச்சம் ஒற்று மிகாது. ஆகார ஈற்றுப்பெயரெச்சம் ஒற்று மிகும்.
எ-டு
செல்லாத காசு, செல்லாக்காசு, ஓடாத குதிரை ஓடாக்குதிரை, தீராத சிக்கல் தீராச்சிக்கல்
வினையெச்சத்தொடர்களை பெயரெச்சத்தொடர்களைப் போன்றே தெரிநிலை வினையெச்சங்கள் குறிப்பு வினையெச்சங்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தெரிநிலை வினையெச்சத்தொடர்களில் வன்தொடர் ஈற்றுத் தொடர்களில் இகர ஈற்று, யகர ஈற்று வினையெச்சத்தொடர்களில் ஒற்று மிகும். பிற ஈற்றுத் தொடர்களில் ஒற்று மிகாது.
எ-டு
படித்து + காட்டு = படித்துக்காட்டு,
உலுக்கி + போடு = உலுக்கிப்போடு
போய் சொல் போய்ச்சொல்
குறிப்பு வினையெச்சம் மிகக் குறுகிய எண்ணிக்கையிலேயெ உள்ளன. அன்றி, இன்றி, ஆய், ஆக இத்தொடர்களில் வல்லின ஒற்று மிகும்.
எ-டு
அவனன்றிப் பிழைத்தவர் யார்?
நீரின்றிப் பூவியில் உயிரேது?
சிறப்பாய்ச் செய்து முடித்தல் நன்று.
நான் படித்தவன் என்று பெருமையாகச் சொல்.
சால, தவ, நனி, கழி, கூர், கடி என்பனவற்றில் நனி, கழி, கடி என்பவை பெயரெச்சங்களைப் போல ஒற்று பெறாது. உரிச்சொற்றொடர்களில் சால, தவ என்பன ஒற்று பெறும்.
அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி தொடர்களில் ஒற்று மிகுதல் இல்லை. அடுக்குத் தொடர் வினையெச்சங்களில் ஒர்று மிகும்.
எ-டு
செல்ல + செல்ல = செல்லச்செல்ல
அ, இ, உ, எ போன்ற சுட்டெழுத்துக்கள் நிலைமொழியில் இருக்க, வருமொழியின் முதலில் க, ச, த, ப போன்ற எழுத்துக்கள் வருமெனில் அங்கு வல்லெழுத்து ஒற்று மிகும்.
எ-டு
அ+குடம் = அக்குடம் அ+செடி = அச்செடி எ+பக்கம் = எப்பக்கம்
இதே போன்று அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, அப்படி, இப்படி, எப்படி, ஆம்டு, ஈண்டு, யாண்டு, அவ்வகை, இவ்வகை, எவ்வகை, அத்துணை, இத்துணை, எத்துணை போன்ற சுட்டெழுத்துக்கள் நிலைமொழிகளாக இருந்து வரும் மொழி முதலில் க,ச,த,ப போன்ற வல்லெழுத்துக்கள் வந்தால் அங்கு ஒற்று மிகும்.
எ-டு
அந்த + கல் = அந்தக்கல், இந்த + பையன் = இந்தப்பையன் எந்த+ செக்கு = எந்தச்செக்கு
அங்கு + செல் = அங்குச்செல், இங்கு + குடி = இங்குக்குடி, எங்கு + படித்தாய் = எங்குப்படித்தாய்
ஈங்கு + தா = ஈங்குத்தா, யாங்கு + சென்றாய் = யாங்குச் சென்றாய்
ஆண்டு + போனேன் = ஆண்டுப்போனேன் யாண்டு +செய்தாய் = யாண்டுச்செய்தாய் ஈண்டு + தந்தாய் = ஈண்டுத்தந்தாய்
அவ்வகைச்செடி இவ்வகைப்பூக்கள் எவ்வகைப்பந்து
இனிப்படி, தனித்தாள், நடுச்சந்து, பொதுப்பணி, அணுக்குண்டு, முழுப்பக்கம், புதுத்துணி, திருக்காடு, அரைக்கதவு, பாதிப்படிப்பு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, முன்னர்க்கண்டேன், பின்னர்ச்செல்
வினையெச்சத்தொடர்களில் ஒற்று மிகும்
1. நிலைமொழிச்சொல் வினையெச்சமாக இருக்கும்போது வருமொழி முதலில் க,ச,த,ப போன்ற வல்லெழுத்துக்கள் வரும்போது வல்லெழுத்து மிகும்.
எ-டு
அச்சு + புத்தகம் = அச்சுப்புத்தகம்
சாக்கு + கடை = சாக்குக்கடை
தப்பு + கணக்கு = தப்புக்கணக்கு
மாற்று + சட்டை = மாற்றுச்சட்டை
வீட்டு + பாடம் = வீட்டுப்பாடம்
2. அகர, இகர, யகர ஈற்று வினையெச்சத்திற்குப்பின் வருமொழி முதலில் க,ச,த,ப போன்ற வல்லெழுத்துக்கள் வரும்போது வல்லெழுத்து மிகும்.
எ-டு
எழுதி + பார்த்தான் = எழுதிப்பார்த்தான்
காண + சென்றான் = காணச் சென்றான்
பாய + பார்த்தது = பாயப்பார்த்தது
மேய+ சென்றது = மேயச்சென்றது
3. ஆக, ஆய், போய் வினையெச்சத்திற்குப்பின் வருமொழி முதலில் க,ச,த,ப போன்ற வல்லெழுத்துக்கள் வரும்போது வல்லெழுத்து மிகும்.
எ-டு
வந்ததாக + கூறு = வந்ததாகக்கூறு
சொன்னதாய் + சொன்னான் = சொன்னதாய்ச்சொன்னான், போய் + தந்தான் = போய்த்தந்தான்
குற்றியலுகரத்தொடர்களுக்குப் பின் ஒற்று மிகும்
1.வன்தொடர் குற்றியலுகரத்திற்குப்பின் வருமொழி முதலில் க,ச,த,ப போன்ற வல்லெழுத்துக்கள் வரும்போது வல்லெழுத்து மிகும்.
எ-டு
எட்டு + கால் = எட்டுக்கால்
பத்து+ சட்டை = பத்துச்சட்டை
வைத்து + சென்றான் = வைத்துச்சென்றான்
2. ட,ற இரட்டித்து உயிர்த்தொடர், நெடில்தொடர் குற்றியலுகரச் சொற்கள் நிலைமொழி ஈற்றிலிருக்க வருமொழி முதலில் க,ச,த,ப போன்ற வல்லெழுத்துக்கள் வரும்போது வல்லெழுத்து மிகும்.
எ-டு
ஆறு + பாசனம் = ஆற்றுப்பாசனம்
கிணறு + தண்ணீர் = கிணற்றுத்தண்ணீர்
மாடு + சாணம் = மாட்டுச்சாணம்
வீடு + குதிரை = வீட்டுக்குதிரை
வீடு + பாடம் = வீட்டுப்பாடம்
3. உயிர்த்தொடர், மென்தொடர் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின்னும் முற்றியலுகரச் சொற்களுக்குப் பின்னும் வரும் வல்லெழுத்து மிகும்.
எ-டு
உணவு + பொருள் = உணவுப்பொருள்
குரங்கு + கூட்டம் = குரங்குக்கூட்டம்
பாம்பு + தோல் = பாம்புத்தோல்
முகுது + தண்டு =முதுகுத்தண்டு
4. திரு, நடு, முழு, பொது போன்ற முற்றியலுகரத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
எ-டு
திரு + கோயில் = திருக்கோயில்
நடு + தெரு = நடுத்தெரு
முழு + பொய் = முழுப்பொய்
பொது + பெயர் = பொதுப்பெயர்
ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லெழுத்து மிகும்
எ-டு
தீ + பெட்டி = தீப்பெட்டி
பூ + பந்து = பூப்பந்து
கை + குட்டை = கைக்குட்டை
பண்டு, இன்று, நேற்று, ஒன்று, இரண்டு போன்ற உகர ஈற்றுச் சொற்கள் ஐ கார சாரியை பெற்றுப் பின் ஒற்று மிகும்.
எ-டு
பண்டு + காலம் = பண்டைக்காலம்
வண்டு + சாகடி = வண்டைச்சாகடி
ஒன்று + திங்கள் = ஒற்றைத்திங்கள்
ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
எ-டு
செல்லாத + காசு = செல்லாக்காசு
ஓடாத + குதிரை = ஓடாக்குதிரை
வராத + கடன் = வராக்கடன்
படியாத + பிள்ளை = படியாப்பிள்ளை
தனிக்குறிலையடுத்த யகரத்தின் பின்னும், தனி ஐ காரத்தின் பின்னும் வல்லெழுத்து மிகும்
எ-டு
மெய் + பை = மெயப்பை
கை + குட்டை = கைக்குட்டை
யகர, ரகர, ழகர ஈறுகளின் பின் வல்லினம் மிகும்.
எ-டு
பேய் + தோற்றம் = பேய்த்தோற்றம்
தேர் + கால் = தேர்க்கால்
தமிழ் + சங்கம் = தமிழ்ச்சங்கம்
தமிழ் + பற்று = தமிழ்ப்பற்று
சால, தவ, போன்ற உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்
எ-டு
சால + சிறந்தது = சாலச்சிறந்தது
முடிவுரை
மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து ஒற்றிடுதல் என்பது தமிழ் மொழிக்கெனவுள்ள ஒரு சிறப்புக் கூறு. இவ்வொற்றினை இடாவிடில் பொருள் பிழைகள் ஏற்பட வாய்ப்பாகின்றது. ஒர்றகு தேவையில்லாத இடங்களில் ஒற்றிடின் அதுவும் பிழையாகும்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன்.மதிப்புரை: முனைவர் ச.சந்திரா
» “டாக்டர் மு.வ. ஆய்வுக்கோவை “ பதிப்பாசிரியர்கள் : முனைவர் பா. கந்தசாமி முனைவர் வா.மு.சே. ஆண்டவர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் ! ஆய்வுக் கட்டுரைக் கோவை ! பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|