தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
தளை
Page 1 of 1
தளை
தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும். செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு
தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும். செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது.
அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது. செய்யுளொன்றில் வரும் பெரும்பாலான சீர்கள் ஒவ்வொன்றுக்கும்
இரண்டு தளைகள் அமைகின்றன. செய்யுளின் முதற் சீரும், இறுதிச் சீரும் அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டுமே சீர்களைக் கொண்டிருப்பதால்
அவை தொடர்பில் ஒவ்வொரு தளை மட்டுமே அமையும்.
இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில்
பெரிதும் தங்கியுள்ளது.
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
என்பது ஒரு திருக்குறள். இது இரு அடிகளைக் கொண்ட வெண்பா வகையைச் சேர்ந்த ஒரு செய்யுள். இதன் ஒவ்வொரு சீரும்
அசைபிரிக்கப்பட்டு, அவற்றுக்குரிய அசை வகைகளுடன் கீழே காட்டப்பட்டுள்ளது.
குழ.லினிது யா.ழினி.து என்.பர் தம்.மக்.கள்
நிரை.நிரை நேர்.நிரை.நேர் நேர்.நேர் நேர்.நேர்.நேர்
மழ.லைச்.சொல் கே.ளா தவர் .
நிரை.நேர்.நேர் நேர்.நேர் நேர்
இதிலே முதலிரு சீர்கள் தொடர்பில், நிலைச்சீராக அமைவது ஈரசைச்சீர். நிலைச்சீரின் ஈற்றசை நிரை. வருஞ்சீரின் முதல் அசை நேர்.
நிலைச்சீர் இயற்சீராக (ஈரசைச்சீர்) இருக்க, அதன் ஈற்றுச்சீரும், வருஞ்சீரின் முதற்சீரும் வேறுபட்ட வகைகளாக இருப்பின் விளைவது
இயற்சீர் வெண்டளை எனப்படும்.
இதுபோல இரண்டாம் மூன்றாம் சீர்கள் தொடர்பில் நிலைச்சீர், மூவசைச்சீர் ஆகும். நேரசையை இறுதியில் கொண்ட மூவசைச் சீர்
வெண்சீர் எனப்படும். வருஞ்சீரின் முதல் அசையும் நேரசையாக உள்ளது. இவ்வாறு அமையும் தளை வெண்சீர் வெண்டளை ஆகும்.
இவ்வாறே செய்யுளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகளை அறிந்துகொள்ள முடியும். சீர்களுக்கு
இடையே விளையக் கூடிய பல்வேறு வகையான தளைகளின் பெயர்களும், அத்தளைகள் ஏற்படுவதற்கான நிலைமைகளும் கீழே தரப்பட்டுள்ளன.
1. ஆசிரியத்தளை
நேரொன்றிய ஆசிரியத்தளை
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நேர்
- வருஞ்சீர் முதலசை - நேர்
நிரையொன்றிய ஆசிரியத்தளை
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நிரை
2. வெண்டளை
இயற்சீர் வெண்டளை
சிறப்புடை இயற்சீர் வெண்டளை
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்
- வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.
- வருஞ்சீர் - இயற்சீர்
சிறப்பில் இயற்சீர் வெண்டளை
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்
- வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.
- வருஞ்சீர் - வெண்சீர்
வெண்சீர் வெண்டளை
சிறப்புடை வெண்சீர் வெண்டளை
- நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நேர்
- வருஞ்சீர் முதலசை - நேர்
- வருஞ்சீர் - வெண்சீர்
சிறப்பில் வெண்சீர் வெண்டளை
- நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நேர்
- வருஞ்சீர் முதலசை - நேர்
- வருஞ்சீர் - வெண்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்
3. கலித்தளை
சிறப்புடைக் கலித்தளை
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நேர்
- வருஞ்சீர் முதலசை - நிரை
- வருஞ்சீர் - காய்ச்சீர் (நேர் ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்)
சிறப்பில் கலித்தளை
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நேர்
- வருஞ்சீர் முதலசை - நிரை
- வருஞ்சீர் - இயற்சீர் அல்லது கனிச்சீர் (நிரை ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்)
4. வஞ்சித்தளை
ஒன்றிய வஞ்சித்தளை
சிறப்புடை ஒன்றிய வஞ்சித்தளை
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நிரை
- வருஞ்சீர் - கனிச்சீர்
சிறப்பில் ஒன்றிய வஞ்சித்தளை
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நிரை
- வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்
ஒன்றாத வஞ்சித்தளை
சிறப்புடை ஒன்றாத வஞ்சித்தளை
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நேர்
- வருஞ்சீர் - கனிச்சீர்
சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளை
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நேர்
- வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்
பாக்களும், தளைகளும்
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பல்வேறு விதமான தளைகள், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப்
பாக்களில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பாக உரியவை. இதனாலேயே குறிப்பிட்ட தளைகளின் பெயர்கள் தொடர்புடைய பாக்களின்
பெயர்களால் வழங்கப்படுகின்றன.
ஆசிரியத்தளைகள் ஆசிரியப்பாவுக்கும், வெண்டளைகள் வெண்பாவுக்கும், கலித்தளைகள் கலிப்பாவுக்கும், வஞ்சித்தளைகள்
வஞ்சிப்பாவுக்கும் சிறப்பாக உரியவை.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum