தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

+3
கவியருவி ம. ரமேஷ்
sarunjeevan
நெல்லை அன்பன்
7 posters

Go down

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!  Empty ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

Post by நெல்லை அன்பன் Mon Feb 06, 2012 5:56 pm

எனக்கு ஜோதிடத்தின் மீது என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை. நியூஸ்பேப்பரில் வரும் ராசிபலன்களை விளையாட்டுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். நியூஸ்பேப்பரிலோ பத்திரிக்கைகளிலோ வரும் ராசிபலன் மற்றும் வருடபலன் கணிப்புகளைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை.

ஏன் இப்பொழுது இதைப்பற்றி எழுதவேண்டும் என்கிற கேள்வி எழுகின்றதானால், நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்ததுதான் இப்பொழுதுதான் நேரம் கிடைத்திருக்கிறது.(மீண்டும் படியுங்கள்: நேரம் வரவில்லை; நேரம் கிடைத்ததுஅடிதான் விழும் ஓ ). ஆண்டு தொடங்கியவுடன் வருட பலன்களையும் ஜாதகங்களையும் தோஷ நிவர்த்திகளையும் தேடி ஓடுபவர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

ஜோதிடம் பொய். சுத்தப் பொய். உங்களிடம் யாராவது ஜோதிடம் பற்றிச் சொல்கிறார்கள் என்றால் உங்களிடம் ஏதோ ஒன்றை விற்க முயற்சிக்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்களை ஏமாற்றுகிறார்கள்.

ஏன் பொய்? விளக்கமாகச் சொல்கிறேன்.

ஜோதிடம் என்பது என்ன?

ஜோதிடத்தில் நிறைய வகைகள் இருக்கின்றன. கிரகநிலை ஜோதிடம்.ஜென்ம ராசி சக்கரத்தில் சந்திரனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள். சிலர் சூரியனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள்.சிலர் ஜோதிடம் கணிப்பதற்கு பிறந்த நேரம் மிக முக்கியம் என்கிறார்கள். சிலர் பிறந்த மாதம் முக்கியம் என்கிறார்கள்.இன்னும் பலப் பல வகை.இவர்கள் வைத்திருக்கும் வகைகள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மொத்தமாக மிஞ்சிவிடும் போல இருக்கிறது. மொத்தத்தில் ஜோதிடம் கணிக்கும் எல்லாரும் ஒரே ஒரு அனுமானத்தில் தான் வேலை செய்கிறார்கள், அது: அண்டத்திலிருந்து ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது என்பது தான்.

இந்த சக்திக்கு பலர் பல அறிவியல் விளக்கங்கள் அளிக்கிறார்கள்.புவி ஈர்ப்பு சக்தி என்கிறார்கள். மின்காந்த சக்தி என்கிறார்கள். இன்னும் சிலர் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்றும் அதை அளக்க முடியாது என்றும் விவரிக்க முடியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் கடைசியில் பார்த்தீர்களேயானால் இந்த சக்திகள் எல்லாம் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் அவை நம் மீது செலுத்தும் சக்தியையுமே குறிக்கின்றன.

கிரகங்களின் சக்தி என்று ஒன்று இருப்பது உண்மையானால் அதை அளக்க முடியும்.தனிமனிதன் மீதிருக்கும் அதன் சக்தியை அளக்கமுடியவில்லை என்றாலும் ஒரு கும்பல்(!) மீதிருக்கும் சக்தியையாவது அளக்கமுடியவேண்டும் இல்லையா? இன்றிலிருந்து சரியாக இன்னும் பத்துவருடங்களுக்குப் பிறகு வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாகச் சொல்லமுடியாது ஆனால் வெயிலடிக்கும் என்று தோராயமாகச் சொல்லமுடியும். ஆனால் இதையும் ஸ்டாட்டிஸ்டிக்ஸைப் பயன்படுத்தி சோதிக்கமுடியும். இந்த கணிப்பைக்கூடச் சரிபார்க்கமுடியும் இல்லியா?

முதலில் ஜோதிடர்கள் சொல்வது போல கிரகங்களும் நட்சத்திரங்களும் நம்மைப் பாதிக்குமா என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு அவர்கள் சொல்வது போல எந்த சக்தியும் இல்லை இருக்கவும் முடியாது என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு ஜோதிடர்கள் அந்த சக்தியை அளக்கமுடியும் என்று சொல்வது உண்மைதானா என்று பார்ப்போம்(ஒரு க்ளு தருகிறேன்: அவர்கள் சொல்வது பொய்!) அப்புறம் ஜோதிடம் எப்படி மக்களை தெளிவாக சிந்திக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

கொஞ்ச நேரத்துக்கு சும்மானாச்சுக்கும் கிரகங்களின் ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம்மைப் பாதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்;அந்த சக்தி என்னவாக இருக்கமுடியும்?

மூளையைத் திறந்து வைத்துக்கொண்டு யோசிப்போம். நமக்கு இருக்கும் சாய்ஸ் ரொம்பவும் கம்மி.

கிரகங்கள் பனிக்கட்டிகள், பாறைகள், உலோகங்களால் மற்றும் இன்னபிறவற்றால் ஆனவை. அவை நம்மைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் மிகமிகமிகமிக குறைவு ஏனென்றால் அவை பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன. அடிப்படை இயற்பியல்.

தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் அடிப்படையில் மொத்தம் நான்கு சக்திகளே இருக்கின்றன. அவை புவி ஈர்ப்பு சக்தி, மின் காந்த சக்தி, பிறகு கடின சக்தி (strong force) மற்றும் சன்ன சக்தி(week force). இதில் கடைசி இரண்டு சக்திகள் அணு அளவில் மட்டுமே வேலைசெய்யும். அதுவும் இந்த கடினசக்தி என்பது தூரத்தைப்பொருத்து மாறுபடும். கொஞ்ச பில்லியன் மீட்டர்கள் வந்துவிட்டீர்கள் என்றால் இந்த சக்தி காணாமலே போய்விடும்.

நமக்கும் கிரகங்களுக்குமிடையேயான தூரம் பில்லியன் மீட்டர்ஸைத் அசாத்தியமாகத் தாண்டுவதால் கடைசி இரண்டு சக்திகளும் இங்கு செல்லாது செல்லாது.

எனவே நமக்கு இப்பொழுது புவி ஈர்ப்பு சக்தியும் மின்காந்த சக்தியும் மட்டுமே இருக்கின்றன.

புவி ஈர்ப்பு சக்தி மிகப்பெரிய அளவில் (சூரிய மண்டலம்) எப்படி வேலை செய்கிறது என்பது நமக்குத் தெரியும்.அடிப்படையில் புவி ஈர்ப்பு சக்தி இரண்டு விசயங்களைச் சார்ந்தது. ஒரு பொருளின் எடை மற்றும் அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது.பொருளின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதன் புவி ஈர்ப்பு விசை அதிகமாகும். அதேபோல நீங்கள் அந்த பொருளுக்கு பக்கத்தில் போகப் போக அதன் புவி ஈர்ப்பு விசை அதிகரிக்கும்.

சரி தான் ஆனால் இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் எண்களை உபயோகிப்போம்.ஜூப்பிடர் சந்திரனை விட 25,000 மடங்கு எடை அதிகம் கொண்டது. உண்மையில் இது ரொம்ப அதிகம். ஆனால் அதே சமையத்தில் ஜூப்பிடர் சந்திரனை விட 1500 மடங்கு அதிக தூரத்தில் இருக்கிறது. இப்பொழுது புவிஈர்ப்பு விசை யாருக்கு அதிகம் இருக்கும்? சந்திரனுக்குத் தான்; தூரம் அதிகமாக அதிகமாக புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைந்து விடும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனையில் கிரகங்களின் புவி ஈர்ப்பு சக்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சந்திரனுடன் ஒப்பிடப்பட்டது. சந்திரனின் சக்தி ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மற்ற கிரகங்களின் சக்தி எவ்வளவு இருக்கும் என்பதை தெளிவாக விளக்குகிறது கீழிருக்கும் அட்டவணை.
PlanetMass
(10^22 kg)
Distance
Gravity
(Moon=1)
Tides
(Moon=1)
Mercury 33 920.00008 0.0000003
Venus490 420.0060.00005
Mars64800.00020.000001
Jupiter200,0006300.010.000006
Saturn57,000 12800.00070.0000002
Uranus8,700 27200.000020.000000003
Neptune10,000 43540.000010.000000001
Pluto~1 57640.00000000060.00000000000004
Moon7.4 0.3841.01.0
(Thanks: Phil Plait)

பார்த்தீர்களா? கிரகங்கள் நம்மீது செலுத்தும் புவி ஈர்ப்பு சக்தி மிக மிக குறைவு. புவி ஈர்ப்பு விசை தான் ஜோதிடர்களின் கணிப்புக்கு உதவியாக இருக்கிறது என்றால் சந்திரன் தானே எல்லா கிரகக்களை விடவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்? இல்லையே!

இதையே பிடித்துக்கொண்டு சந்திரனுக்குத்தன் சக்தி இருக்கிறதே; அதை வைத்தும் நாங்கள் ஜோதிடம் கணிப்போம் என்று சொல்லாதீர்கள். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனை ஒப்பிட்டுப்பார்ப்பதற்குத்தான். உண்மையில் சந்திரனின் சக்தியும் மிகவும் குறைவுதான்.

எனவே புவி ஈர்ப்பு விசை இல்லை. மின் காந்த சக்தியாக இருக்குமோ?ஒருவேளை அப்படி இருக்குமோ?

புவி ஈர்ப்பு விசை எடையையும் தூரத்தையும் பொருத்தது என்றால் மின் காந்த சக்தி மின் சக்தியையும் தூரத்தையும் பொருத்து மாறுபடும். பிரச்சனை என்னவென்றால் இந்த மிகப்பெரிய பொருள்களான கிரகங்களுக்கு மின் சக்தியே இல்லை என்பது தான்.மின் சக்தி எல்க்ட்ரான்களிடமிருந்தும் ப்ரோட்டான்களிடமிருந்தும் வருகிறது. எதிர் சக்திகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும்; எனவெ ஒன்று இல்லாமல் இன்னொன்றைப் பார்ப்பது என்பது முடியாத காரியம். எனவே கிரகங்கள் நியூட்ரல் சார்ஜ் கொண்டவை. அவைக்கு மின்சக்தியே கிடையாது.

சிற்சில காரணங்களால் சில கிரகங்களுக்கு காந்த சக்தி இருப்பதுண்டு. ஆனால் மீண்டும் இதுவும் தூரத்தைப் பொருத்து மாறும்.ஜூப்பிடரின் காந்த சக்தி மிக அதிகம். ஆனால் அது பூமியிலிருந்து மிகவும் தூரமாக இருக்கிறது. எனவே நம்மீது எந்தவித பாதிப்பையும் அதனால் உண்டுபண்ண முடியாது.மேலும் சூரிய குடும்பத்தில் சூரியனுக்குத்தான் அதிக காந்த சக்தி இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் வெடிப்புகளால் மின் சக்தி கொண்ட அணுக்கள் மிக அதிகமாக வெளிப்படும் பொழுது அவை பூமியின் காந்த சக்தியை பாதிக்கக்கூடும்.1989இல் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது.

எப்படிப்பார்த்தாலும் மற்ற கிரகங்களின் காந்த சக்தி சூரியனின் காந்த சக்தியோடு ஒப்பிடும் பொழுது மிக மிகக் குறைவு. சூரியனுக்கல்லவா முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் ஜோதிடத்தில் சூரியனை விட மற்ற கிரகங்களுக்கு தானே முக்கியத்துவம் அதிகம் இருக்கிறது?

மிஸ்டர் சூரியனார் இதில் ஏதோ சதி இருக்கிறது!

நமக்கு கொஞ்சமாவது பக்கத்தில் இருக்கும் கிரகங்களே நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொழுது பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்? சுத்தம். ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தூரம். அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. ஒளி ஒரு ஆண்டுக்குக் கடக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு சற்றே குறைவு. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி 4.3 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.

புவி ஈர்ப்பு விசை என்றால் சந்திரன் தான் எல்லா கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.மின்காந்த சக்தி என்றால் சூரியன் தான் மற்ற கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.

இரண்டுமே இல்லையே.

பிறகு எந்த சக்தி? நமக்கு மீதமிருக்கும் சக்திகள் குறைந்து கொண்டே வருகின்றன.

ஜோதிடர்களின் நம்பிக்கை என்னவென்றால் இவை தவிர அறிவியலுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது தான். ஆனால் அந்த நம்பிக்கையும் பிரகாசமாக இல்லை.

எல்லா சக்திகளும் தூரத்தைப் பொருத்து மாறுபடும்.இது அடிப்படை அறிவியல். ஒரு பொருள் நமக்குத் தூரமாக இருக்கிறது என்றால் அது நமக்குப் பக்கத்தில் இருக்கும் பொருளைவிட மிகவும் கம்மியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஆனால் ஜோதிடர்கள் எல்லா கிரகங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன என்கின்றனர். எனவே ப்ளூடோவும் வீனஸ¤ம் ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஜோதிடர்களின் கூற்றுப்படி கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கும் அவைகளின் தூரத்துக்கும் சம்பந்தமேயில்லை. அதே போல் கிரகங்களின் எடையும் ஒரு பொருட்டே இல்லை. இல்லையென்றால் ஜூப்பிடர் அல்லவா சக்திவாய்ந்தாக இருக்க வேண்டும். மெர்க்குரி எல்லாம் ஆட்டைக்கே வராது!

இது சரியாகப்படவில்லையே! விண்கற்கள்? விண்கற்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை.அவை மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சூரியனைச்சுற்றி வருகின்றன.இவற்றுள் பெரும்பாலனவை மற்ற கிரகங்களை விட பூமிக்குத்தான் மிக அருகில் இருக்கின்றன. எனவே அவைகளும் நம்மைப் பாதிக்கவேண்டுமே?பிரச்சனை என்னவென்றால் விண்கற்கள் நிறைய-மிக நிறைய இருக்கின்றன.100 மீட்டர் அகலமுள்ள விண்கற்கள் நம் சூரியகுடும்பத்தில் மட்டும் எவ்வளவு இருக்கின்றன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு பில்லியன்.இவை மிக மிக அதிகம்.பல கிரகங்களுக்குச் சமம். ஜோதிடர்கள் இவைகளையும் ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது?கன்ஸிடர் பண்ணுங்கப்பா.

வான் ஆராய்ச்சியாளர்கள் பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் 150 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். நிச்சயம் அவை ரொம்ப தூரத்தில் இருக்கின்றன. ஆனால் ஜோதிடர்களுக்குத்தான் தூரம் ஒரு பிரச்சனையில்லியே? எனவே இந்த கிரகங்களும் நம்மீது பாதிப்பை உண்டுபண்ணவேண்டும்.150 கிரகங்கள் என்பது இது வரை கண்டுபிடிக்கப்பட்டவை. இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் நம் பால்வெளியில் மட்டும் மொத்தம் பில்லியன் கிரகங்கள் இருக்கின்றன.கிரகங்கள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. அவைகளையும் ஏன் ஜோதிடர்கள் சேர்த்துக்கொள்ளக்கூடாது?

இப்படி யோசியுங்கள். கிரகம் தங்களது தாய் நட்சத்திரத்தை சுற்றி வரவேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள். எனவே அவர்கள் வைத்திருக்கும் டேட்டாவை வைத்து இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே என்று கணிக்கிறார்கள். பின் நாளில் அது உண்மையுமாகிறது. 50 வருடங்களுக்கு முன் வரை ஏன் ஒரு ஜோதிடர் கூட "அடடா இப்பத்தான் மைன்ட்ல ஸ்ட்ரைக் ஆச்சு..இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே" என்று கணிக்கவில்லை?ஏனென்றால் அவர்களால் முடியாது. அவர்கள் வைத்திருக்கும் டேட்டா ஒன்றுக்கும் ஆகாதது. அதற்கு அர்த்தமேயில்லை.

ஜோதிடர்களின் விதிப்படி (தூரமும் எடையும் பொருட்டே அல்ல) இந்த கண்டுபிடிக்கப்படாத பில்லியன் கிரகங்களின் பாதிப்பு எல்லாம் சேர்ந்தால் அது நமது சூரிய குடும்பத்தின் கிரகக்களின் பாதிப்புகளை சும்மா ஊதித்தள்ளிவிடவேண்டும். ஒரு அணுகுண்டு வெடிக்கும் பொழுது அது எப்படி ஊசி விழும் சத்தத்தை விழுங்கி விடுகிறதோ அது போல.

எனவே நாம் கீழ்க்கண்ட ஒரு முடிவுக்கு வரலாம்.
1. நமக்குத் தெரிந்த சக்தி இருக்கிறது;ஆனால் அது ஜோதிடத்துக்கு உதவாது.
2. நமக்குத் தெரியாத சக்தி ஒன்று இருக்கிறது அது இயற்பியலின் எல்லா விதிகளையும் மீறிவிடுகிறது.அப்படியானால் பில்லியன் விண்கற்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத (ஆனால் உண்மையில் இருக்கின்ற) பில்லியன் கிரகங்களும் ஜோதிடத்தில் இருக்கவேண்டும். இவை சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ஊதித்தள்ளிவிட வேண்டும். ஆனால் (இப்பொழுது) ஜோதிடத்தில் இது இல்லை.

எனவே தெரிந்த சக்தியும் இல்லை தெரியாத சக்தியும் இல்லை.

பிறகு ஜோதிடம் என்பது என்ன? பொய்.ஏமாற்று வேலை.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!  Empty Re: ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

Post by sarunjeevan Mon Feb 06, 2012 6:21 pm

நல்ல பதிவு

பாராட்டுக்கள் நெல்லை அன்பரே..ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!  64660
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!  Empty Re: ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 06, 2012 10:10 pm

நல்ல பதிவு... ஆனால் யாரும் ஏற்றுக்கொள்ளத்தான் மாட்டேன் என்கிறார்கள்...

உண்மையி்ல் எனக்கு சோதிடத்தில் நம்பிக்கையில்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!  Empty Re: ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 07, 2012 12:15 am

கவியருவி ம. ரமேஷ் wrote:நல்ல பதிவு... ஆனால் யாரும் ஏற்றுக்கொள்ளத்தான் மாட்டேன் என்கிறார்கள்...

உண்மையி்ல் எனக்கு சோதிடத்தில் நம்பிக்கையில்லை...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!  Empty Re: ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

Post by pakee Tue Feb 07, 2012 5:25 am

நல்ல பதிவு வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!  Empty Re: ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

Post by அ.இராமநாதன் Tue Feb 07, 2012 2:00 pm

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…”
என்றொரு பாடல் உண்டு.

மக்கள் எதையும் ஆராயமல் கண்மூடித் தனமாக நம்பிக் கொண்டிருக்கும்
வரை எம்மாற்றுபவர்கள் எல்லாத்துறையிலும் ஏமாற்றிக் கொண்டே தான்
இருப்பார்கள்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!  Empty Re: ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

Post by நெல்லை அன்பன் Tue Feb 07, 2012 2:04 pm

உண்மை உண்மை.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!  Empty Re: ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

Post by தமிழ்1981 Tue Feb 07, 2012 4:33 pm

வணக்கம் நணபரே,

மிகவும் நல்ல பதிவு...... ஜோதிடம் பொய் என்பதை அறிவியல் பூர்வமாக நிருபித்துவிட்டீர்.... ஆனாலும் மக்களுக்கு எதிர் காலத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆவலில் தான் இப்படிப்பட்ட பொய் ஜோதிடங்களை உண்மை என்று நம்புகின்றனர்...... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!  Empty Re: ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum