தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Yesterday at 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Yesterday at 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
கட்டுரைப் போட்டி முடிவு
+9
சரவணன்
sarunjeevan
pakee
ஆளுங்க
ஹிஷாலீ
dhilipdsp
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
13 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: போட்டி முடிவுகள்
Page 1 of 1
கட்டுரைப் போட்டி முடிவு
அருண் (ஆளுங்க)
அணுத் தமிழ்
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே”
- நன்னூல்
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே”
- நன்னூல்
மொழிகளின் தொன்மைக்குச் சான்றே அவற்றின் பழம்பெரும் இலக்கியங்களே. எனவே, அவற்றிற்கு "பழையன கழிதல்" என்பது பொருந்தா. ஆனால், மொழிகளின் உய்விற்கு புதியன புகுதல் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
பண்டைய மொழிகளின் தற்கால நிலை:
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் மட்டுமே அறியப்பெற்றிருந்த காலங்களில் உலகில் கோலோச்சிய பண்டைய மொழிகள் ஆறு என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகிறனர்.
அவை தமிழ், சமஸ்கிருதம், சீனம், கிரேக்கம், இலத்தீன் மற்றும் ஹீப்ரு ஆகியன. இவற்றில், இலத்தீன் மொழி சமஸ்கிருதமும் வழக்கொழிந்து போய் பிரார்த்தனைக்கு மட்டுமே பயன்படுகிறன. கிரேக்கமும், ஹீப்ருவும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது மீண்டிருக்கிறன. சீனமோ தன்னைப் படையெடுத்து வந்தவர்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டது. பல்வேறு படையெடுப்புகளையும் தாங்கி, பிற மொழிக் கலவைகளாலும் பாதிப்புறாமல் இன்றும் தழைத்தோங்கும் மொழி தமிழ் ஒன்று தான்.
முற்காலங்களில் தமிழ்:
சங்கக்காலத்தில் தமிழ் மொழி மூன்று வகைகளின் மூலம் செழித்தோங்கியது. அவை இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய பெயர்களில் வளர்ந்தது. உலகிலேயே மிகவும் தொன்மையான இலக்கன நூலான "தொல்காப்பியம்" தமிழ் மொழி அன்றே ஒரு முழு வடிவம் பெற்றிந்தமைக்குச் சான்றாக விளங்குகிறது.
அதன் பின், பாமரரும் படித்து புரிந்து கொள்வதற்கு என "உரைநடைத் தமிழ்" வந்தது. வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் உருவான பின், தமிழ் மொழி அவற்றின் மூலமாகவும் மக்களை அடைய முனைந்தது.
அணுத்தமிழ்:
ஆங்கிலேயர்கள் உலகை ஆண்ட போது, உலகெங்கும் ஆங்கில மொழி புகுந்தது. அதன் விளைவாக, பெரும்பாலான ஊடகங்களிலும் ஆங்கிலமே பிரதான மொழியாக மாறியது.
இன்றைய காலத்தில், மொழியின் வளர்ச்சிக்கு அது எல்லா ஊடகங்களிலும் பரப்ப வல்லதாக இருத்தல் வேண்டும். இதை உணர்ந்த சில தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் தான் இன்று உலகெங்கும் அணுத்தமிழ் உதித்து வளர்ந்து வருகிறது.
கணிணித் தமிழ்:
அணுத் தமிழ் வளர்ச்சியின் முதல் படியே கணிணியில் தான் துவங்கியது. விண்டோஸ் இயங்கு தளம் உருவாகும் முன்னரே, கணிணித் தமிழ் பயன்பாட்டில் இருந்தது.
மக்கள் மத்தியில் விண்டோஸ் உருவான பிறகே கணிணி பிரபலமாகத் துவங்கியது. விண்டோஸ் அறிமுகப்படுத்த போது, ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மக்களின் அறியாமை காரணமாக இடையில், கணிணித் தமிழ் பெரிதாய் வளர்ச்சியின்றி முடங்கியிருந்தது. எனவே, தமிழ் மொழி பெரும்பாலும் தட்டச்சு செய்வதற்கு மட்டுமே கணிணியில் உலா வந்தது.
இப்போது மீண்டும் தமிழ் ஆர்வலர்களின் ஆர்வத்தால், கணிணித் தமிழ் மறு எழுச்சி பெற்றுள்ளது. பலரின் அயராத முயற்சியால், இன்று கணிணி தமிழ் பேசுகிறது.
தமிழ் பேசும் இயங்குதளங்கள்:
லினக்ஸ் என்று சொல்லப்படும் கட்டற்ற திறமூல இயங்குதளங்கள் பலவும் இன்று தமிழ் பேசும் திறன் பெற்று விட்டன. விண்டோஸ் பதிப்பு தமிழில் கிடைக்கிறது என்றாலும், அதனைஅறிந்தவர்கள் மிகவும் குறைவு.
உபுண்டு இயங்குதளத்தில் தமிழ் பதிப்பு உள்ளது. மேலும், விரும்பினால், நிறுவல் மொழியையே தமிழாக வைக்க வகை செய்கிறது. பெரும்பாலான பயன்பாடுகள் தமிழில் உள்ளன.
உலாவிகளில் தமிழ்:
நெருப்பு நரி என்றழைக்கப்படும் பயர்பாக்ஸ் உலாவி தான் முதன்முதலில் தமிழை இணையத்தில் அறிமுகம் செய்தது. அதன் பிறகு, குரோம், எபிக், ஓபரா முதலிய உலாவிகள் தமிழில் பேசத் துவங்கின.
இணையத் தமிழ்:
பல காலமாக இணையத்தமிழ் இருந்தாலும், இணையத்தமிழ் வலைப்பூக்களின் அறிமுகத்திற்குப் பின் மிகவும் வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கியது. இதழ்கள், வானோலி, தொலைக்காட்சி முதலியவற்றில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தயங்கிய பலரும் வலைப்பூ துவங்கி தங்கள் எண்ணங்களையும், திறமைகளையும் பதிவு செய்ய ஆரம்பித்தனர். இப்படி எழுதத் துவங்கிய பலரும் பிறர் எழுதிய படைப்புகளையும் படித்து மகிழ இணையத்தமிழ் அசுர வளர்ச்சி அடைந்தது.
பதிவர்கள் பெருகியதால், பதிவர்கள் அனைவரும் தங்கள் பதிவுகளைத் தொகுக்க இன்ட்லி, தமிழ்10, யுடான்ஸ், வலைச்சரம் போன்ற பல திரட்டிகள் துவங்கப்பட்டன. திரட்டிகளின் வரவால் பதிவுகளின் தரம் மேலும் மேம்பட்டதோடு, பதிவுகள் மேலும் பலரைச் சென்றடைந்தது.
விக்கிபீடியா தனது தளத்தின் தமிழ் பதிப்பை வெளியிட்டதும் இணையத்தமிழ் வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும். இன்று பல தமிழ் பதிவுகள் உலகெங்கும் வலம் வருகின்றன.
அலைத்தமிழ்:
இன்று பல அலைபேசிகளில் தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் வழிவகைகள் உள்ளன. நோக்கியாவின் பல அடிப்படை மாதிரிகளில் தமிழையே இயங்கு மொழியாக மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. (பிற மாதிரிகளில் காணோம்!!).
விலையுயர்ந்த பல அலைபேசிகளில் தமிழில் எழுதும் வசதிகளும் இருக்கிறன. தமிழ் மொழி ஆதரவு இல்லாத பல பேசிகளிலும் அவற்றைச் செயலாக்குவதற்கென்றே இணைய இணைப்புகள் உள்ளன.
பணத்தமிழ்:
இன்று பல தானியக்க வங்கி இயந்திரங்கள் வாடிக்கையாளர்களுடன் தமிழில் பணமாற்றம் செய்கிறன. ஆங்கிலம் அறியாதவரும் பயன்படுத்தும் வகையில், தானியக்க வங்கி இயந்திரங்களும் தமிழ் பேசுவது அணுத்தமிழ் வளர்ச்சிக்கு சான்றாக விளங்குகிறது.
வளரும் அணுத்தமிழ்:
இன்று மிண்ணணு சாதனங்கள் பலவற்றிலும் அணுத்தமிழ் புகுந்திருப்பதற்கு அதற்காக அயராது உழைத்தவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். Launchpad என்கிற தளம் மூலம், தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து பல கணிணி மற்றும் இணைய பயன்பாடுகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டே இருக்கின்றனர்.
வளர்ச்சியும் முட்டுக்கட்டைகளும்:
அணுத்தமிழ் வளர்ச்சி அபரிதமாக இருந்தாலும், அதனைப் பயன்படுத்துபவர்கள் குறைவு என்பது வேதனை அடைய வைக்கிறது.
அறியாமையின் காரணமாக சிலரும், வறட்டு கெளரவம் காரணமாக பலரும், ஆங்கிலத்திலேயே பயன்படுத்தி பழகியமையால் இலகுவின் காரணமாக பலரும் அணுத்தமிழைப் புறக்கணிக்கிறனர்.
தமிழ் மொழி திரையில் இருந்தாலும், ஆங்கிலத்தையே பலரும் தெரிவு செய்வது வேதனைக்குரியது. இதில் தமிழுக்காக அறைகூவல் விடுபவர்களும் அடக்கம்.
முடிவுரை:
மொழியின் வளர்ச்சி மொழியினைப் பேசுபவர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. முடிந்தவரை தமிழ் மொழியை அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவோம். தமிழை வளர்ப்போம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கட்டுரைப் போட்டி முடிவு
வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கட்டுரைப் போட்டி முடிவு
பயனுள்ள கட்டுரை..
-
சிங்கப்பூரில் நூலகத்தில் தானியங்கியில் இரவல் பெறும்
புத்தகங்களின் பட்டியலை வேண்டும் மொழியில்
பெறலாம்...தமிழ், ஆங்கிலம், மலாய் மற்றும்
சீன மொழி)
-
சிங்கப்பூரில் நூலகத்தில் தானியங்கியில் இரவல் பெறும்
புத்தகங்களின் பட்டியலை வேண்டும் மொழியில்
பெறலாம்...தமிழ், ஆங்கிலம், மலாய் மற்றும்
சீன மொழி)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: கட்டுரைப் போட்டி முடிவு
வாழ்த்துக்கள் அருண்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: கட்டுரைப் போட்டி முடிவு
சிறு தகவலுக்கு நன்றி ஐயாஅ.இராமநாதன் wrote:பயனுள்ள கட்டுரை..
-
சிங்கப்பூரில் நூலகத்தில் தானியங்கியில் இரவல் பெறும்
புத்தகங்களின் பட்டியலை வேண்டும் மொழியில்
பெறலாம்...தமிழ், ஆங்கிலம், மலாய் மற்றும்
சீன மொழி)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கட்டுரைப் போட்டி முடிவு
ஆகா.. கட்டுரைப் போட்டியில் வெற்றியா??
நன்றி நன்றி..
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி!!
நன்றி நன்றி..
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி!!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: கட்டுரைப் போட்டி முடிவு
வாழ்த்துக்கள் நண்பரே
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: கட்டுரைப் போட்டி முடிவு
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: கட்டுரைப் போட்டி முடிவு
ஒரு சிறிய விண்ணப்பம்:
யூஜின் அவர்களுக்கு....
இதுவரை எனக்கு சான்றிதழ் வந்து சேரவில்லை..
கொஞ்சம் பாருங்க!
யூஜின் அவர்களுக்கு....
இதுவரை எனக்கு சான்றிதழ் வந்து சேரவில்லை..
கொஞ்சம் பாருங்க!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: கட்டுரைப் போட்டி முடிவு
கட்டுரைப் போட்டியில் வென்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: கட்டுரைப் போட்டி முடிவு
வாழ்த்துக்கள்.
வள்ளல்- புதிய மொட்டு
- Posts : 12
Points : 14
Join date : 26/04/2012
Age : 42
Location : வானம் பார்த்த பூமி
Re: கட்டுரைப் போட்டி முடிவு
3 பேர் மட்டுமே இதுவரை முகவரி கொடுத்திருக்காங்க அதனால் இன்னும் அனுப்பவில்லை விரைவில் அனுப்பிவைக்கிறேன்ஆளுங்க wrote:ஒரு சிறிய விண்ணப்பம்:
யூஜின் அவர்களுக்கு....
இதுவரை எனக்கு சான்றிதழ் வந்து சேரவில்லை..
கொஞ்சம் பாருங்க!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கட்டுரைப் போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:3 பேர் மட்டுமே இதுவரை முகவரி கொடுத்திருக்காங்க அதனால் இன்னும் அனுப்பவில்லை விரைவில் அனுப்பிவைக்கிறேன்ஆளுங்க wrote:ஒரு சிறிய விண்ணப்பம்:
யூஜின் அவர்களுக்கு....
இதுவரை எனக்கு சான்றிதழ் வந்து சேரவில்லை..
கொஞ்சம் பாருங்க!
நன்றி...
ஒருவேளை எனது மடல் உங்களுக்குக் கிடைக்காமலோ, அல்லது நீங்கள் அனுப்பியது எனக்கு வரவில்லையோ என்று தான் கேட்டேன்!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: கட்டுரைப் போட்டி முடிவு
அப்ப எனக்கு? என்னோட முகவரி நீங்க கேக்கவே இல்லையே?
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: கட்டுரைப் போட்டி முடிவு
வெற்றிபெற்ற உள்ளங்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையு்ம் தெரிவித்துக்கொள்கின்றேன்
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: கட்டுரைப் போட்டி முடிவு
சீக்கிரம் அனுப்பி வையுங்க... எவ்வளவு நாளா அவரும் காத்துக்கிட்டு இருப்பாருசரவணன் wrote:அப்ப எனக்கு? என்னோட முகவரி நீங்க கேக்கவே இல்லையே?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கட்டுரைப் போட்டி முடிவு
அழகிய கட்டுரை அருண்,
தொடருங்கள் உங்கள் வெற்றிக் கோப்பைகளை
தொடருங்கள் உங்கள் வெற்றிக் கோப்பைகளை
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: கட்டுரைப் போட்டி முடிவு
நன்றி ஐயா!!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Similar topics
» கதைப் போட்டி முடிவு
» கவிதைப் போட்டி முடிவு
» சமையல் போட்டி முடிவு
» புகைப்பட போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» கவிதைப் போட்டி முடிவு
» சமையல் போட்டி முடிவு
» புகைப்பட போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: போட்டி முடிவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum