தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm

» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm

» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm

» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm

» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm

» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm

» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm

» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm

» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm

» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm

» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm

» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm

» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm

» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm

» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm

» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm

» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm

» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm

» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm

» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm

» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm

» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm

» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm

» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm

» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm

» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm

» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm

» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm

» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm

» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm

» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm

» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm

» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மழை - கவிதை போட்டி முடிவு

+13
கலைநிலா
கலீல் பாகவீ
மணிமேகலா
puthuvaipraba
tbalasubramanian
சதாசிவம்
ஹிஷாலீ
ருக்மணி
vaithy10
Aarya
ramkumark5
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
17 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty மழை - கவிதை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 04, 2012 6:37 pm

மழை கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Jun 30, 2012 11:05 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by yarlpavanan Tue Jun 05, 2012 10:48 pm

மழை
----------
கருமேகம் கருக்கட்டி
இருள்சூழல் நினைவூட்டி
காதைக் குடைந்து கண்ணைப் பறிக்கும்
இடிமின்னல் வழிகாட்டி
பொழிந்துகொண்டது
மழை!
வழிந்தோடிய வெள்ளத்தில்
தெருவெளிக் குடும்பங்கள்
இருக்கப்படுக்க இடமின்றி
நனைந்தபடி நடுத்தெருவில்...
சில வீட்டார் அழுகின்றனர்
நட்ட பணப்பயிர்கள் பூச்சி பிடித்து
கெட்டுப் போயிடுமென நினைத்தவாறு...
சில வீட்டார் சிரிக்கின்றனர்
ஆடியிலே தேடி விதைத்தோம்
ஆவணியில வந்தது மழை
தையில நெல்லு வரப்போவதை எண்ணி...
வாடிச் சுருண்டு செத்துக் கொண்டிருந்த
செடிகொடிகள் எல்லாம்
நிமிர்ந்து தலைகளை ஆட்டின...
வரும் வழியால் வந்த வெள்ளம்
எங்கட வழியில் நின்ற வெள்ளத்தை
அள்ளிச் செல்ல வழிமண்ணும் கரைய
காலை வெட்டும் கல்கள் தலைநீட்டின...
வீட்டிற்கு வெளியே எட்டிப் பார்க்கையில்
கண்ணுக்கெட்டியதைச் சொன்னேன்
ஊரின் நாலா பக்கமும்
நெடுநாள் விட்டுப் பெய்த மழையால்
நடந்தது என்னவென நானறியேன்...
வீசும் காற்றே
காற்றோடு பறக்கும் பறவைகளே
நாளைய செய்தித் தாளில் போட
நாட்டு நடப்பு என்னவென
பார்த்து வந்து சொல்ல மாட்டீரோ!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty காத்திருக்கிறேன் உனக்காக நான்

Post by ramkumark5 Tue Jun 05, 2012 11:53 pm

காத்திருக்கிறேன் உனக்காக நான்

மழை - கவிதை போட்டி  முடிவு Waiting_for_rain_2_by_kerem_keskin

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்
பார்வைகள் முழுதும் கருமேகங்களை நோக்கி

மின்னல்கள் நடத்திய வானவேடிக்கையும்
இடி ஓசைகளின் இன்னிசை கச்சேரியும்
உன்னை வரவேற்க தயாராயின

சில் காற்றில் நான் உரைய
முகத்தில் இட்டாய் முதல் முத்தம்
சாரல் துளியாய் என்னிடம் வந்தாய்

மழை துளியாய் என் மீது பொழிந்தாய்
ஸ்பரிசத்தை முழுதாய் நனைய செய்தாய்
உடலையும் உள்ளத்தையும் குளிர்த்து விட்டாய்

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்.............

ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 37
Location : Surat

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by Aarya Wed Jun 06, 2012 7:51 pm

மழையே..

நீ தீண்டுவாய் என்பதற்காகவே
வாழும் உயிர் நான் ...

நீ வரும் செய்தியையை
இடி முழங்கி அறிவித்ததும்

காதலன் வருகையை
எதிர்பார்த்து நிற்கும் காதலியை போல்
காத்திருந்தேன்...

அம்மா எதிர்த்தாள்
மழையில் விளையாடாதே என்று ..
பாவம் அவளுக்கு எங்கே தெரிய போகிறது
நம் உறவை பற்றி ..

நீ இல்லாத வேளையில்
காய்ந்து பட்டமரமாகிறேன் ,,

நீ வந்ததும் ,
நீ இல்லாத போது இருந்த வருத்தங்களை விரட்டி விட்டு..
புதிதாய் பூக்க செய்கிறாய் என்னை ...

நீ தொடும் போது
என் கவலைகள் எல்லாம்
என்னை விட்டு ஓடி செல்கின்றது...
உன் வருகையாலே நான் தூய்மையாகிறேன்..
அழகாகிறேன்..

நித்தமும் தேவை உன் வருகை
ஆனால் இயற்கை நியதியை உணர்ந்து
இப்பொழுது விடுவிக்கிறேன்..

மீண்டும் என்னை தேடி வருவாய் என்று
காத்திருக்கிறேன் ..
விரைவில் வந்து தழுவிக்கொள் ...



Aarya
Aarya
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 57
Points : 97
Join date : 26/04/2012
Age : 30
Location : chennai

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by vaithy10 Thu Jun 07, 2012 3:58 pm

how to participate in the competiton
vaithy10
vaithy10
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 4
Join date : 24/08/2011

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jun 07, 2012 8:11 pm

vaithy10 wrote:how to participate in the competiton
வணக்கம்.
தாங்கள் போட்டியில் பங்குபெற இங்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. போட்டிக்கான - படைப்புகளுக்கான நெறிமுறைகளை இந்தச் சுட்டியை http://www.tamilthottam.in/t30355-topicகிளிக்செய்து படித்துக்கொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் பங்குபெற நினைக்கும் இந்த http://www.tamilthottam.in/f79-forumபோட்டிப் பிரிவில் இருக்கும் பிரிவுகளில் மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவுகளைப் பதியவும்.

வாழ்த்துகள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by ருக்மணி Fri Jun 08, 2012 2:02 pm

மழை பாடல்
மானங்கருக்குதே வண்ண மயிலும் ஆடுதே
வறண்ட காட்டிலே ஆறும், குளமும் சிரிக்குதே
ஜனங்க பார்த்து ரசிக்குதே!!!
உழவன் மனசுல அறுவடை காலம் வந்ததே
மண் வாசம் வீசுதே !! மழை துளியும் தெறிக்குதே !!
மேகமே குடையும் ஆகுதே !! மழை துளியும் தெறிக்குதே !!
மேகமே குடையும் ஆகுதே !!
இடியின் சத்தம் கேட்டு பிள்ளை மிரளுதே !!
அதையும் இசை என்று ஆக்கி நம்ம ஜனங்க பாடுதே!!

மின்னி மின்னி சின்ன இடியோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத்தோட
வானவில் தான் வரைஞ்சு இருக்கு
மனசுக்கு எல்லாம் பிடிச்சு இருக்கு
கிள்ளி கிள்ளி தரும் உறவல்ல
அன்னை தானே இந்த வானம் போல
யாருக்கு தான் மனசு இருக்கு
மண்மணம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து வறட்சியில போச்சு நிலத்துக்கும் ஈரம் இல்லை
மழைதுளி வழி துணைக்கு வந்தா வறட்சியே இல்லை
விவசாயத்தில் ஏதும் தனிச்சு இல்லை
மண்ணின் வாசம் மழையின் சாரலும் சேர்ந்தது போல ....


ஓ!! ஆத்துல என்ன அயிரை மீன்
தினம் தினம் நாக்கு ருசி தேடும்
நகரத்துல யாரு அறிஞ்சா
சுவைகளை தான் யாரு புரிஞ்சா
விதை விதைக்குற கைதானே
உன்னை கேட்குது தினம் தோறும்
உன்னை வரவேற்க சிட்டு குருவியும்
புல்லும், மலரும் தயார் ஆச்சு
மழை சேற்றில் பரதம் ஆடும் உயிர் எல்லாம்
ஏறு பூட்டி உயிர் வளர்க்கும் உழவு எல்லாம்
மழைத்தூறல் படும்முன்னே
மழையின் மடியை தேடி ஓடும் குழந்தை போல....


பின் குறிப்பு : இது ஒரு பாடலின் இசையை தழுவி எழுதிய வரிகள். சில இடங்களில் தாளம், ராகம், சுதி சேரலைனா திட்டாதீங்க. ஏதோ என்னால முடிஞ்ச சின்ன முயற்சி. பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர், முக்கியமா நம்ம தோட்டத்து மக்கள் எல்லாம் மன்னிசுருங்கோ. கடைசி வரை என்ன பாட்டுனு சொல்லலைனு பாக்குறீங்களா. சரி சொல்லுறேன்.

பாடல் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
படம் : பிதாமகன்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Fri Jun 08, 2012 3:46 pm

மழை - கவிதை போட்டி  முடிவு Paiyyastills60


மும்மாரி பெய்யும் காதல்

முதல் தூறல்
என்னவள் முகத்தில் பார்த்தேன்
பருவம் கனிந்த
அழகிய பருக்கள்

இரண்டாம் தூறல்
கண்கள் நான்கும்
எட்டிய அணைப்பில் நழுவிய
கண்ணீர் துளிகள்

மூன்றாம் தூறள்
காதல் மின் வெட்டில்
இதயம் இடியிடிக்க
மோகத் தீயில் முழுதும்
நனைந்த நொடியில்
கார் மேகக் கூந்தலில்
கவிதை பேசியது
வியர்வை துளிகள்

இதைக் கண்ட
வர்ண பகவான்
காதல் மழலைகளே
வாழ்க வளமுடன் என்று
வான் மழை பூக்களால்
வாழ்த்து மடல் அனுப்புகிறது
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by சதாசிவம் Fri Jun 08, 2012 8:14 pm

பள்ளங்கள் மேடுகள் நிறைத்தாய்
உள்ளங்கள் ஒன்றென உரைத்தாய்
எங்கள் குலமெல்லாம் தழைத்தாய்
வனங்கள் குறைந்திட
த் தளர்ந்தாய்
திங்கள் மும்மாரி மறந்தாய்
வருடம் மும்மாரியும் மறுத்தாய்


உப்பில் (கடலில்) இருந்து பிறந்தாய்
உலகுக்கு உணவை அளித்தாய்
இருப்பதை எடுத்து கொடுத்தாய்
செங்கொடி
ச் சித்தாந்தம் வகுத்தாய்
செய்நன்றி
ப் பார்க்காமல் சிறந்தாய்
செவ்வுலகை எங்களுக்கு
ப் படைத்தாய்
சொல்லப்போனால் நீ இரண்டாம் தாய்


மண் மீது பொழியும் மழை
வானத்து நெசவனின் இழை
வரவேற்க
த் துளிர்க்கும் தழை
உணவளிக்க மண் மீது உழை
மண் மீது செய்யாதே பிழை
தப்பாமல் பெய்யட்டும் மழை



அன்புடன்
சதாசிவம்


Last edited by சதாசிவம் on Sat Jun 23, 2012 9:23 pm; edited 1 time in total
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 47
Location : chennai

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by ருக்மணி Sat Jun 09, 2012 11:48 am

மழை போதுமே

கவிதை என்ற
ஓர் வார்த்தை
மட்டுமே மனதில்...
அமர்ந்தேன்
என் வீட்டு முற்றத்தில்
நேரங்கள் மட்டுமே
நகர்ந்தது..
என் எழுதுகோல்
சிலையானது...

சிலைகள் நகருமா?
என்று கேட்கிறீர்களா!!!
நகர்ந்ததே..
முதல் துளி
வெள்ளை தாளில் பட்டதும்...
மைத்துளி அல்ல
மழைத்துளி...

இடியின் முழக்கங்கள்
எழுது எழுது என்று
அச்சுறுத்தினாலும்
மழையின் சாரல்
மனதை
மகிழ்வித்தது...

குற்றால அருவிக்கு
கூட்டி செல்ல
என் அப்பாவை
இம்சித்த ஞாபகம்...
பயண அலுப்பே
இல்லாமல்
அருவியே பயணம் செய்து
என் வீட்டிற்கே
வந்தது!!!

வர்ண பகவானின்
வர்ண ஜாலமோ!!!
என் ஆசையை
நிறைவேற்றினாரா!!!
என் அப்பாவை
காப்பாற்றினாரா!!!

அட கடவுளே!!!
மின் தடையுமா
என் கவிதை கிறுக்கலை
சோதிக்க வேண்டும்!!
மின்சாரம் இல்லாவிட்டால் என்ன?
மின்னல் ஒளி
போதுமே எனக்கு!!!

யார் அந்த ஓவியன்
வானத்தில் அழகாக
வண்ணம் தீட்டியிருக்கிறானே!!!
என் எண்ணங்களை
கவிதையாய் தீட்ட
இவையாவும் போதுமே எனக்கு!!!

ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Sat Jun 09, 2012 1:33 pm

சொர்க்கத்தின் வாசல் மழை

மயானம் சென்று
திரும்புகையில்
கூடவே மழை

எண்ணை பிரிந்த துக்கத்தில்
என் தாய் அழுகிறாள்
என்று நினைத்தேன்

உடனே ஒரு பூக்குரல் மகனே
என் தாய் செய்த புண்ணியம்
உன் தாய் எனக்கு
சொர்க்கவாசல் தீர்த்தமானது மழை

இன்று நீ செய்யும் புண்ணியம்
நம் தலைமுறைக்கே
சொர்க்கவாசல் தீர்த்தமாய் பொழியட்டும்
என்று பொறுப்பேற்றுக்கொள்
சாந்தியுடன் சமாதி செல்கிறேன்
இப்படிக்கு உன் அன்பு தாய்




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by tbalasubramanian Mon Jun 11, 2012 9:50 am

மழை

மேகத் தோழன் ,

பூமி தோழிக்கு அனுப்பிய,

* தேக வாசனைப் பூச்சு.

மணியன்

*(Body spray )
tbalasubramanian
tbalasubramanian
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 6
Points : 8
Join date : 11/06/2012
Age : 83
Location : chennai

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by puthuvaipraba Wed Jun 20, 2012 2:31 am

மழையெனப்படுவது…

ஆகாய மலையிலிருந்து
ஆர்ப்பரித்து கொட்டும் அருவி
நிலப்பரப்பில்-
மேடெது பள்ளமெது என்று
அறிய உதவும் கருவி.

மேகப் பிள்ளைகள்
மோதிக்கொள்வதைப் பார்த்த
வானத் தாயின் அழை!
காலம் -
பூமியை கௌரவித்து போர்த்தும்
நீர் ஆடையின் இழை!

நீர் மை ஊற்றி
வானம் வரையும்
நேர்கோட்டோவியம்.
மண் மன்னனை மகிழ்விக்க
காற்றுப் புலவன் படைக்கும்
"எச்.டூ ஓ" காவியம்.

தொண்டை வரண்டு கிடக்கும்
நதிகளின்
தாகம் தீர்க்கும் பானம்.
அது-
ஆகாயப்பானையிலிருந்து
பொங்கி வழிகிற வானம்.

அறிவியல்பூர்வமாய்
பார்க்கப்போனால்
அதன் பெயர்
நீரியல்சுழற்சி
அப்படியே பார்த்தால்-
தூறல் பாட
இடி இசையமைக்க
மின்னல் நடனமிட
அது இயற்கையின்
ஆடலும் பாடலும் நிகழ்ச்சி

உச்சி வானத்தையும்
தாழ கிடக்கும் பூமியையும்
இணைக்கும்
சமத்துவ பாலம்
மேலிருந்து விழுந்து
மண்ணுக்குள் நுழைந்து - பின்
செடி-கொடி-மரம்-புல்-பூண்டென
முளைத்து வருகிற ஞாலம்.

புதுவைப்பிரபா
puthuvaipraba
puthuvaipraba
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 9
Points : 11
Join date : 20/06/2012
Age : 49
Location : புதுச்சேரி

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by மணிமேகலா Wed Jun 20, 2012 9:43 am

மழை
*****
மேகம்
பிரசவித்த
முத்துப்பெண்...
மணிமேகலா
மணிமேகலா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 25
Join date : 18/06/2012
Age : 36
Location : திண்டுக்கல்

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by கலீல் பாகவீ Sat Jun 23, 2012 8:30 pm

ஆழி மழை

நனைக்கின்ற மழையை
மறுக்காது,
ஏற்கின்றேன் மணலாய்!

மறுக்கின்ற அலையைத்
தடுக்காது,
வழிவிடுகின்றேன் கரையாய்!

மழையாய் அலையாய்
மணலாய் கரையாய்
நீயாய் நானாய்
என எல்லாமுமாய்

நித்தமும் நிரம்பிக்கொண்டேயிருக்கிற
நரலை தனில் உன் துளிகளையும்
நிரப்புவது தான் உனக்கிட்ட பணியெனின்
நிரப்பிக்கொள் முடிந்தவரை!

நன்றி,

- நாணல்
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 47
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by கலீல் பாகவீ Sat Jun 23, 2012 8:34 pm

அக்னி(அன்பு) மழை....

இன்று அழகிய நந்தவனமாய் காட்சியளிக்கும்
இதே வையம் தான் அவ்வப்போது நடுங்கி
பல்லாயிரக்கணக்கான உயிர்களை
பழிவாங்கியது

அமைதியாய் ஆர்ப்பரிக்கும் இந்த ஆழிதான்
அன்று பொங்கி பிராவாகித்து
பலரை கொன்று குவித்தது

நீல நிறத்தில் ரம்யமாய் மிளிரும் இவ்வானம்தான்
சில நேரங்களில் கனமழை பொழிந்து
எத்தனையோ பேரை காவுகொண்டது

தென்றலாய் என் வாசலில் நிற்கும் குளிர்காற்று
தான் ஊழியாய் அன்று ஊரை சூறையாடியது
ஆனால் இவை எதையும்
என்னால் வெறுக்க முடிவதில்லை

அதே போல் அவ்வப்போது
எரிமலையாய் வெடித்து என் மேல்
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழியும் உன்னையும்.......

-வீட்டுப்புறா
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 47
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Jun 23, 2012 8:34 pm

மழைக்கு குடை
எதிரி யென்றால்
எனக்கு நண்பன்
உன்னோடு
உரசிபோக
உதவும் நண்பன்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty மழை ! தளிர் கவிதை!

Post by thaliranna Sun Jun 24, 2012 9:34 pm

ஒவ்வொரு மழையும் நம்முள்
ஏதாவது ஞாபகங்களை
கிளறிவிட்டு போகிறது!
மழையின் ஞாபகங்கள் சுகமானவை!
அம்மனுக்கு கொடை போட்ட இரவில் பொத்துக்கொண்ட
மழையில் ஆடிய சாமியாடிகளை குளிரில் ஆடுகிறாரா?
அருள்வந்து ஆடுகிறாரா என்று இளவட்டங்கள் கேலி பேசிய கோடை மழை!

நண்பனுக்கு கல்யாணமென்று நாலுமணிக்கு கிளம்புகையில்
நனைத்து எடுத்த திடீர் மழை!

வெள்ளம் ஓடுகையில் நிவாரணம் வாங்க நீண்டவரிசையில்
நின்றதை நினைவூட்டும் ஐப்பசி மழை!

பள்ளியில் படிக்கையில் புயல் காத்து அடிக்குதுன்னு
பாதி வேளையில் வீட்டுக்கு அனுப்பிய
கார்த்திகை காத்து மழை!
இடித்து பெய்யும் மழையோ என்றோ இடிவிழுந்து
இறந்து போன ராமசாமி தாத்தாவை நினைக்க வைக்கிறது!

தூறலில் நனைகையில் தாய் சொல்ல கேட்காமல்
துள்ளி விளையாடிய இளமைக் கால மழை நினைவில்!
இரவெல்லாம் பெய்யும் மழை என்றோ அலுவலகத்தில்
மாட்டிக்கொண்ட ஒர் மழை இரவை மனக்கண்ணில் காட்டுகிறது!

சுற்றுலா செல்கையில் பெய்த மழை
தேர்வெழுத செல்கையில் பெய்த மழை!
கோவில் கும்பாபிஷெகத்தில் பெய்த மழை!
பிரசவத்தின் போதுபெய்த மழை!
பெண்பார்க்க சென்ற போது பெய்த மழை!
என்று எத்தனையோ மழைகள் என் வாழ்வில் வந்து போனாலும்
மேகங்கள் கூடும் போதெல்லாம்
மீண்டும் கூடுகின்றன மெல்ல மழைக்கால நினைவுகள்!

எத்தனையோ பேரின் புதைந்த ஞாபகங்களை
கிளறி சுகமாக சென்று விடுகிறது ஓர் மழை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 47
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty மழை ! தளிர் கவிதை!

Post by thaliranna Mon Jun 25, 2012 11:16 pm

வானவரின் வாயிலிருந்து
சிந்திவிட்ட அமுதம்!
வானமகள் பூமகனை
கைப்பிடிக்க வரவேற்பாம்
ஊதலிசைக் காற்றும்
உறுமி மேள இடியும்
வர்ண ஜால மின்னலும்!
ஊரெல்லாம் உனக்காக
காத்திருக்கும்!
நீ வர தாமதித்தால்
தரையெல்லாம் வெடிப்பாகும்!
பாரெல்லாம் உன் வருகை
பரவசப்படுத்தும்!
மயிலினங்கள் உன் வரவை
எதிரொலிக்கும்!
மழலையர்கள் உன் மடியில்
ம்கிழ்ந்திருப்பர்!
உன் நீரை பருகிட்ட
வயலெல்லாம் பொன்னாகும்!
நீ கானா ஊரினிலே
நிழல்கூட சுட்டெரிக்கும்!
வரையாது வழங்கும் வரை
நீ தேவதை!
வரையறை தவறினால்
வந்திடும் 'சா'வதை!
மாசில்லா மழையே
மாண்பிலா மனிதரை மன்னிப்பாய்!
மண்ணில் கொஞ்சம் சங்கமிப்பாய்!
மாநிலம் தழைக்க மனம் வைப்பாய்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 47
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jun 26, 2012 7:25 pm

வணக்கம்.

நடுவர்கள் (நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ) 29 ஆம் தேதி இரவுக்குள் முதல் மூன்று இடத்துக்கான படைப்புகளை முன்னிருத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty வா மழையே! வான்மழையே!

Post by அன்புடன் மலிக்கா Thu Jun 28, 2012 9:07 pm

மழையே மழையே வானின் மழையே!
மயில் தேவையுமறியும் மேகமழையே!

உன் வருகையில்லா இடங்களுமுண்டோ!
உன் துளிகள் தொடதா தளிர்களுமுண்டோ!
உன் வரவால் வாசம் மண்மேல் வீசும்!
உன் சாரல் துளியில் தேகமும் கூசும்!
நீ அளவாய் வந்தால் இந்த உலகம் செழிக்கும்!
உன்வரவு அதிகப்படியானால் உயிர்கள் தவிக்கும்!

வயலிடுக்கில் நுழைந்து பயிர் செழிக்க வைப்பாய்!
வறட்ச்சி கண்ட நிலத்தில் வழிந்தோடி களிப்பாய்!
வானிலிறங்கிவந்து வசந்தம் தந்து போவாய்!
வரவதிகமாகி வதை செய்து வதைப்பாய்!
வரவு தரமாலிருந்தும் பஞ்சம் தந்து பார்ப்பாய்!
இயற்கைகளை உன்னால் உயிர்வாழச்செய்வாய்!
இறைகட்டளையை நீயும் மீறிடாது நடப்பாய்!
காதல் மழையாய் மனங்குளிர செய்வாய்!
செல்ல மழையாய் சிணுங்கி ரசிக்க வைப்பாய்!
குழந்தை மழையாய் கொஞ்சி சிரிக்க வைப்பாய்!

உன்னைப் பாடாத கவிஞருமுண்டோ
உன்னைப் தேடாத மனங்களுமுண்டோ!
உன்னைப் தீண்டாத தேகமுமுண்டோ!
உன் வரவால் இந்த பூமியும் பூக்கும்
உன் செலவால் இந்த பூமியில் அழியும்!
செழிப்பைத் தந்து வன[த்தை]ப்பை காப்பாய்
செல்லமாகவே தூவி மனிதத்துயரம் துடைப்பாய்..

அன்புடன் மலிக்கா..
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 44
Location : துபை- முத்துப்பேட்டை

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty ம[ன]ழைக்காலம்.

Post by அன்புடன் மலிக்கா Thu Jun 28, 2012 9:23 pm


மழை - கவிதை போட்டி  முடிவு 0020
மழைக்கால நேரத்தில்
மதிமயக்கும் தாகத்தில்
இதமான தருணத்தில்
இன்னிசை பாடிவரும்
இளஞ்சூடான மழைத்துளிக்குள்
குடையில்லாமல் நனைகிறேன்
குதூகளித்து மகிழ்கிறேன்
மகிழும் வேளையில்
மனதுக்குள்ளும் கேட்கிறது
மழை சத்தமும்
மன்னவன் கொடுத்த முத்தமும்!
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 44
Location : துபை- முத்துப்பேட்டை

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Fri Jun 29, 2012 4:52 pm

செம்மண் வகுடுகள்
பாலைவனமானத்தால்
விவசாயம் நாவரண்டு
வான் மழையை
வாய் பார்த்து நின்றது
விதைகள்...!

மக்கிய விதைகள்
மண்ணைக் கெடுப்பது போல்
சொக்கிய கண்கள்
சோகத்தில் வான் பார்த்தது
சோறுக்காக...!

எட்டிய துளிகள் எங்கே என்று
எங்கூரு சாமி கேட்க
கக்கிய மழை
காணாமல் உருண்டு ஓடியதால்
எங்கள் கண்ணீர் துளிகள்
கரை சேராமலே பட்ட இமையில்
கடலானது...!

கடலும் ஆவியாகவில்லை
கதிரும் போணியாகவில்லை
ஏணியாகவே நிற்கிறது
ஏர் முனைகள் அதில்
ஏளனமாய் புத்துகட்டி வாழ்கிறது
எறும்பினங்கள் ...!

அரும்பினங்கள் எல்லாமே
அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாம்
வரும் ஆருயிருக்கு விவசாயம்
ஒரு கேள்விக்குறியாம...!





ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 30, 2012 11:05 pm

மழை - கவிதை போட்டி முடிவு

முதல் இடம்
by Aarya on Wed Jun 06, 2012 6:21 pm

மழையே..

நீ தீண்டுவாய் என்பதற்காகவே
வாழும் உயிர் நான் ...

நீ வரும் செய்தியையை
இடி முழங்கி அறிவித்ததும்

காதலன் வருகையை
எதிர்பார்த்து நிற்கும் காதலியை போல்
காத்திருந்தேன்...

அம்மா எதிர்த்தாள்
மழையில் விளையாடாதே என்று ..
பாவம் அவளுக்கு எங்கே தெரிய போகிறது
நம் உறவை பற்றி ..

நீ இல்லாத வேளையில்
காய்ந்து பட்டமரமாகிறேன் ,,

நீ வந்ததும் ,
நீ இல்லாத போது இருந்த வருத்தங்களை விரட்டி விட்டு..
புதிதாய் பூக்க செய்கிறாய் என்னை ...

நீ தொடும் போது
என் கவலைகள் எல்லாம்
என்னை விட்டு ஓடி செல்கின்றது...
உன் வருகையாலே நான் தூய்மையாகிறேன்..
அழகாகிறேன்..

நித்தமும் தேவை உன் வருகை
ஆனால் இயற்கை நியதியை உணர்ந்து
இப்பொழுது விடுவிக்கிறேன்..

மீண்டும் என்னை தேடி வருவாய் என்று
காத்திருக்கிறேன் ..
விரைவில் வந்து தழுவிக்கொள் ...

இரண்டாம் இடம்
by ramkumark5 on Tue Jun 05, 2012 10:23 pm

காத்திருக்கிறேன் உனக்காக நான்

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்
பார்வைகள் முழுதும் கருமேகங்களை நோக்கி

மின்னல்கள் நடத்திய வானவேடிக்கையும்
இடி ஓசைகளின் இன்னிசை கச்சேரியும்
உன்னை வரவேற்க தயாராயின

சில் காற்றில் நான் உரைய
முகத்தில் இட்டாய் முதல் முத்தம்
சாரல் துளியாய் என்னிடம் வந்தாய்

மழை துளியாய் என் மீது பொழிந்தாய்
ஸ்பரிசத்தை முழுதாய் நனைய செய்தாய்
உடலையும் உள்ளத்தையும் குளிர்த்து விட்டாய்

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்...

மூன்றாம் இடம்
by thaliranna on Sun Jun 24, 2012 8:04 pm

ஒவ்வொரு மழையும் நம்முள்
ஏதாவது ஞாபகங்களை
கிளறிவிட்டு போகிறது!
மழையின் ஞாபகங்கள் சுகமானவை!
அம்மனுக்கு கொடை போட்ட இரவில் பொத்துக்கொண்ட
மழையில் ஆடிய சாமியாடிகளை குளிரில் ஆடுகிறாரா?
அருள்வந்து ஆடுகிறாரா என்று இளவட்டங்கள் கேலி பேசிய கோடை மழை!

நண்பனுக்கு கல்யாணமென்று நாலுமணிக்கு கிளம்புகையில்
நனைத்து எடுத்த திடீர் மழை!

வெள்ளம் ஓடுகையில் நிவாரணம் வாங்க நீண்டவரிசையில்
நின்றதை நினைவூட்டும் ஐப்பசி மழை!

பள்ளியில் படிக்கையில் புயல் காத்து அடிக்குதுன்னு
பாதி வேளையில் வீட்டுக்கு அனுப்பிய
கார்த்திகை காத்து மழை!
இடித்து பெய்யும் மழையோ என்றோ இடிவிழுந்து
இறந்து போன ராமசாமி தாத்தாவை நினைக்க வைக்கிறது!

தூறலில் நனைகையில் தாய் சொல்ல கேட்காமல்
துள்ளி விளையாடிய இளமைக் கால மழை நினைவில்!
இரவெல்லாம் பெய்யும் மழை என்றோ அலுவலகத்தில்
மாட்டிக்கொண்ட ஒர் மழை இரவை மனக்கண்ணில் காட்டுகிறது!

சுற்றுலா செல்கையில் பெய்த மழை
தேர்வெழுத செல்கையில் பெய்த மழை!
கோவில் கும்பாபிஷெகத்தில் பெய்த மழை!
பிரசவத்தின் போதுபெய்த மழை!
பெண்பார்க்க சென்ற போது பெய்த மழை!
என்று எத்தனையோ மழைகள் என் வாழ்வில் வந்து போனாலும்
மேகங்கள் கூடும் போதெல்லாம்
மீண்டும் கூடுகின்றன மெல்ல மழைக்கால நினைவுகள்!

எத்தனையோ பேரின் புதைந்த ஞாபகங்களை
கிளறி சுகமாக சென்று விடுகிறது ஓர் மழை!

நண்பர்களுக்குப் பாராட்டுகள்.


போட்டி நெறிமுறைப்படி (25ஆம் தேதிக்குள்) அல்லாமல் காலம் தாழ்ந்து அன்புடன் மலிக்கா அவர்களும் ஹிஷாலீ அவர்களும் சிறப்பான (முதல் மூன்று இடத்துக்குரிய) படைப்பைப் படைத்துள்ளார்கள். நெறிமுறையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் முதல் மூன்று இடத்துக்கு அவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுக்க வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இனி நண்பர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் (25ஆம் தேதிக்குள்) போட்டிப் படைப்புகளைப் பதியும் படி கேட்டுக்கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by ருக்மணி Sat Jun 30, 2012 11:49 pm

ஆச்சரியம் :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .......... மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்

Back to top Go down

மழை - கவிதை போட்டி  முடிவு Empty Re: மழை - கவிதை போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum