தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலைby அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
(இயல் – மூன்று) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்களின் தீர்வுகள்
3 posters
Page 1 of 1
(இயல் – மூன்று) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்களின் தீர்வுகள்
இயல் – மூன்று
கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்களின் தீர்வுகள்
இன்றைய இலக்கியங்களில் சமூகச் சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் படைப்பாளர்கள், தங்கள் படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்து கின்றனர். அவ்வகையில் வித்யாசாகரின் கனவுத் தொட்டில், நடப்பியல் நிலையில் சமூகத்தில் மக்கள் எதிர்க்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களையும், போராட்டங் களையும், மனிதப் பண்புகளையும், மனித நேயத்தையும் மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்களின் தீர்வுகள்
சமூகச் சிக்கல்களாக அமையக்கூடிய வறுமை, சுரண்டல், குடும்பச் சிக்கல்கள், காதல் சிக்கல், மனித உறவுகள் சிதைவு, பெண்ணியச் சிக்கல் போன்றவை தனிமனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் அவற்றால் ஏற்றபடும் தீய விளைவுகளையும் சமூகக் கண்ணோட்டத்தோடு வித்யாசாகர் கனவுத் தொட்டிலில் உற்றுநோக்கித் தீர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை இவ்வியல் எடுத்துரைக்கிறது.
“இலக்கியம் என்பது வாழ்வைப் பற்றியும் அதன் குறைகளைப் பற்றியும் எதிர்காலத்தில் அமைக்க வேண்டிய செம்மையான பாதையைப் பற்றியும் சுட்டிக்காட்டிச் செல்வது. நல்ல இலக்கியம் சமுதாய நோயையும், நோய் முதலையும், அது தணிக்கப்படுகிற வழியினையும் அறிவுறுத்துகிறவன் மருத்துவனே”1
என்னும் கூற்று அமைகிறது. சமுதாயச் சிக்கல்களை உள்ளவாறே எடுத்துக் கூறுவதோடு, அச்சிக்கல்கள் தீர்ந்திட வழிவகைக் காண்பதிலும் இலக்கியம் சிறந்த பங்காற்றுகிறது. மனித சமுதாயத்தின் நிறை குறைகளை எடுத்துக் கூறுவதால், இலக்கியம் சமுதாயம் செம்மையுறப் பயன்படுகிறது என்று கூற முடிகிறது.
“சமுதாயம் அதன் அழகைப் பார்த்து மகிழ்வதற்காகவும், குறைபாடுகளைச் சீர் செய்து கொள்வதற்காகவும் இலக்கியம் பயன்படுகிறது.”2
என்னும் கருத்து உண்டு சிந்திக்கத்தக்கது. எனவே இலக்கியம், குறைபாடுள்ள சமுதாயத்தைக் காட்டி, வாழ்வியல் சிந்தனைகளை எட்டுகிறது என்று உறுதிபடக் கூறமுடிகிறது.
குடும்பம்
திருமணத்தால் ஏற்படும் கணவன் - மனைவி உறவு உள்ளத்தாலும் உடலாலும் மிக நெருங்கிய உறவாகும். அந்த உறவில் விரிசல்கள் ஏற்படாமல் சமூகமும் பார்த்துக்கொள்ள உதவுகிறது. இந்தியப் பண்பாட்டோடு, தமிழகப் பண்பாடும் உயர்ந்து நிற்கக் காணலாம்.
“சமூக உறவை விட்டு அகலாமல் இருக்கவும் குழந்தைகளைப் பெறவும் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு நிரந்தரமான உறவை ஏற்படுத்தித் தருவது திருமணம்.”3
திருமண உறவுக்குப்பின் இருவரும் ஒருவராகி விடுகின்றனர். கணவனும் மனைவியும் பரஸ்பர விட்டுக் கொடுத்தலுடன் குடும்பம் நடத்துகின்ற இல்வாழ்க்கையில் இன்பம் பெருகின்றன. கணவனுக்குப் பிடித்தாற்போல் மனைவியும், மனைவிக்கு ஏற்ப கணவனும் உருமாறிப் போகிறார்கள். அதனால்தான்,
“இல்லம்மா! நிச்சயமா இல்லை! என்னைப் பொறுத்த வரை யாருமே கவலையா இருக்கக்கூடாது. அதிலும் வைஷ்ணவி என் மனைவின்றதை விட முதலில் அவளொரு பெண். தன் சுற்றம்… தாய்… தந்தை… அக்கா… தங்கை… அண்ணன்… தம்பி… தோழின்னு அத்தனை உறவுகளையும் தாலி கட்டிய ஒரு நாள் பொழுதில் ஓரம் ஒதுக்கி விட்டு நாமே கதின்னு நம்ம வீட்டிற்கு வந்த பெண்”4
என்று மதிவாணன் குடும்பாத்தாற்கு எடுத்துக் கூறுவதால் மதிவாணனின் தாய், தந்தை இருவரும் சிக்கலுக்குத் தீர்வுகான – சமாதானம் பேச முற்படுகின்றனர். தான் பெற்ற மகன், மகள் என்றாலும் ஒரு சமுதாயப் பார்வையோடு அணுகுவதும், அவர்களின் உணர்வு புரிந்து செயல்படுவதும், எது அவர்களுக்கு நன்மையை நல்குமோ அதை அவர்களுக்குப் புரியும்வண்ணம் எடுத்துரைத்து நல்வழிபடுத்தி ‘மானுட சுகத்தை நல்ல பண்போடும் மதிப்போடும் அடைந்து வாழுமாறு எடுத்தியம்புவதும் நல்ல பெற்றோரின் கடமையாகும். இவ்வாறான மனநிலை கொண்ட பெற்றோர்களால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் எளிதில் நிவர்த்திச் செய்யப்படுகிறது.
ஒரு நல்ல குடும்பம் வீட்டின் முற்றத்து துளசி போல, ‘ஒரு ஊரின் நன்மை தீமைக்கு’ தன்னை பொறுப்பாக்கிக் கொள்கிறது. என் அண்ணன் தானே என்று நினைப்பவனால் தான் என் நண்பன் தானே என்று விட்டுத் தரவும் முடியும். என் தங்கை இப்படி வாழவேண்டும் என்று தன் தங்கைக்கெனத் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி ஒரு நல்லதைச் செய்ய முயல்பவனால் தான் தன் மனைவியையும் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள முடியும். தன் மனைவி மீது அக்கறை கொள்வோருக்கு பிறர் மனைவி மீது மதிப்பு கூடும். நல்ல ஆண்மகனைத் தான் சுற்றம் மதிக்கும். கண்ணியமான பெண்களைத் தான் மரியாதையுடன் பார்ப்பர் மக்கள். ஆக, சுற்றத்தால் மதிக்கத் தக்க குணங்கள் ஒரு ஆணிற்கும் சரி பெண்ணிற்கும் சரி அவர்கள் வாழும் வீட்டின் நற்பண்புகளாலேயே பிறக்கிறது. மீதம் அது வளர்வது வேண்டுமெனில் சமுதாயத்தின் கையிலிருக்கலாம். சுருக்கமாகச் சொல்வதெனில் வீடு சிறக்குமெனில் நாடும் சிறக்கும். ஒரு குடும்பத்தின் வெளிச்சம் என்பது ஒரு தேசத்தின் நன்மைக்கான முதற்புள்ளி என்கிறார் நாவலாசிரியர் வித்யாசாகர்.
குடும்பத்தில் பிள்ளைகளின் நலனுக்கு முக்கியத்துவம்
குடும்பத்தில் கணவன்-மனைவியின் முக்கிய உறவுமுறைக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் தாயின் பங்கு போற்றுதலுக்கு உரியது.
பெண்களின் பங்குநிலைகளில் தாயின் பங்கு நிலையே மிக உயர்ந்த இடத்தைப் பெறுகிறது. தியாகம், பொறுமை, தன்னலமின்மை ஆகிய பண்புகள் தாயின் உயர்ந்த குணங்களாகப் போற்றப்படுகின்றன.
“தாய் குழந்தையை ஈன்றெடுப்பதற்கு மூலமாக இருப்பவள் அல்லது தாயைப் போலப் பேணி வளர்ப்பவள்... தாயின் பங்கு விலைமதிக்க முடியாதது; வெளிப்படையானது. தாயின் பங்குநிலை உயர்ந்தது. மிக முக்கியமானது.”5
என்று மெர்லி.என்.டி.கிலன்சி என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
“தாய்மை என்பது மனப்பண்புகளின் மலர்ச்சியும் உன்னதங்களும் சேர்ந்த ஒரு மாண்பாகும்.”6
என்கிறார் எழுத்தாளர் இராஜம்கிருஷ்ணன்.
“...மிக முக்கியம் வாய்ந்த தாய்மை நிலையை அடைய பெண் தன் உயிரையும் பொருட்படுத்துவதில்லை.”7
என்று சி.எஸ்.லட்சுமி குறிப்பிடுவதிலிருந்து தாய்மை எத்துணை அருமையாகக் கருதப்பட்டது என்பதையும், குடும்பம் பெருக பிள்ளைப்பேற்றின் முக்கியத்து வத்தையும் அறியலாம். இந்த முக்கியத்துவத்தினையே,
“உயிர் பேசி…
உயிர் வாடி…
உயிர் மறந்து…
உயிர் வருந்தி…
உயிர் கொடுத்து…
உயிர் இழந்து…
மீண்டும்… உயிர் பெற்றாள்
இன்னொரு உயிருக்காக
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாய்!.”8
என்று தாயின் உயர்வினை நாவலாசிரியர் சிறப்பாகப் போற்றுகின்றார். இதனால் தாயின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்து பெற்றோர்களுக்கான அன்பையும் மரியாதையையும் நாம் கொடுக்கத் தவறக்கூடாது என்கிறார்.
திருமணம்
திருமணம் ஆண், பெண் இருவருக்குமே உரியயொன்றுதான். இருவருடைய வாழ்க்கையிலும் திருமணம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது என்பதும் மறுக்க இயலாத உண்மை. ஆயினும் பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் அவள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் நிகழ்ச்சியாகவும், அவள் வாழ்க்கையை முழுமையாக்கும் ஒரு நிறுவனமாகவும் சமூகத்தால் மதிக்கப்படுகிறது என்பது கவனத்திற்குரியது.
“திருமணம் என்ற நிறுவனம், குடும்பத்தின் நுழைவாயில்”9
என்பர்.
“ஒவ்வொரு பாதியாய் வளர்ந்து வரும் இரண்டு உயிர், (ஆண், பெண்) ஒன்றி முழுத்தன்மை எய்திக் கடனாற்றுவதற்கு அவைகளை அன்புக்கயிற்றால் இயற்கை பிணைப்பது திருமணம்.”10
என்று திரு.வி.க. விளக்கம் கொடுத்துள்ளார்.
திருமணமும் பெண்ணும்
“ஒரு குடும்பத்திலிருந்து மற்றொரு குடும்பத்திற்குப் பெண்ணை மாற்றுகின்ற திருமணம், அவளுக்கு முதன்மையும் முழுமையுமான தாகக் கருதப் படுவதோடு சமுதாயத்தில் அவள் தொடர்ந்து மதிப்புடன் வாழ்வதற்கும் தேவைப்படுகிறது.”11
என்ற கருத்தையும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.
பெண்ணியச் சிக்கல்களும் தீர்வுகளும்
பெண்ணியச் சிக்கலுக்குக் காரணங்களாகச் சமூக அமைப்பு, குடும்ப நிறுவனம், ஆதிக்க உடைமை மனப்போக்குகள், காலங்காலமாகப் பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டு வரும் கற்பு, விதவைக் கோலம், ஆடவர் மட்டும் அனுபவித்துவரும் உரிமை மறுப்பு ஆகியவற்றைக் கூறலாம்.
ஆணாதிக்கம் என்பது, “தமது பாலே உயர்ந்ததென்று ஆண்கொள்ளும் நம்பிக்கை. எதிர்பாலைத் தன்னாதிக்கத்திற்கு உட்படுத்த தூண்டும் நிலை”12 ஆகும். இத்தகைய உள்ளம் கொண்டவன்,
“பெண்களை அடித்தல், துன்புறுத்துதல், அவர்கள்பால் இழிசொற்களைப் பயன்படுத்துதல், பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுதல்.”13
போன்றவைகளைப் பெண்கள் மீது இழைப்பது, வன்முறைகளாகப் பெண்ணிய வாதிகளால் கருதப்படுகின்றன.
“வாசுகி அக்காவோட அம்மா இருக்காங்களே அப்பப்பா! பொம்பளையா அவ, நிச்சயம் எதனா கலகம் பண்ணுவா? அவ முகத்துல கூட முழிக்கக் கூடாதுங்க… என்று சலிப்பாகச் சொல்ல – பளாரென்று ஒரு அறை அறைந்தான் - வெண்மதி.”14
“வெண்மதி சரசரவென்று விரைந்து வைஷ்ணவியின் முடியைக் கற்றையாகப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்தான்.”15
என்று வரும் பெண்ணியச் சீண்டல்கள் எல்லாமே பெண்ணியப் பார்வையாகும். மேற்கண்ட அதிகாரம், அடக்குமுறை போன்றவை ஓர் ஆணாதிக்கத்தால் ஒரு பெண்ணின் இல்வாழ்க்கையில் விவாகரத்து எண்ணத்தைத் தோற்றுவித்து விடுகிறது. இறுதியில் வெண்மதிவாணன் மனம்திருந்தியவனாகப் படைக்கப் பட்டிருக்கின்றான். அவனே குடும்பச் சிக்கலுக்கான தீர்வுகளையும் நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைத்து மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் பாத்திரமாகப் படைக்கப்பட்டிருப்பது நாவலாசிரியரின் உத்தியாகிறது.
விபச்சாரம் ஒழிப்பு
தொழில் நகரங்களில் விபச்சாரம் பெருகுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபச்சாரத்தின் தன்மைகள் பல வடிவங்களாகி வெகு இயல்பாகக் கருதுமளவுக்கு நடைமுறையாகி வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
பாலியல் வணிகம் (sex trade), பாலியல் தொழில் (sex work) ஆனது பண்டைய தமிழ்ச்சமூகத்தில் ‘தாசித் தொழில்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. காலனித்துவ ஆட்சியுடன் ஆங்கிலேய ஆணாதிக்க விழுமியங்களுக்கமைய ஏற்படுத்தப்பட்டிருந்த சட்டங்கள் அடையாளப்படுத்தப்படலாயிற்று. ஆங்கிலத்தில் Prostitute எனப் பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை, அல்லது விபச்சாரி என அழைக்கப்படுகின்றனர். பாலியல் வியாபாரத் துறையும் விபச்சாரம்(Prostitution) என அடையாளப்படுத்தப் படுகின்றது.
நகரமயம், நாகரீகம் ஏராளமான செயற்கைக் கட்டுப்பாடுகளை விதித்ததால் இயற்கை நுகர்வு வீணடிக்கப்படுகிறது. 25 ஆண்டுகள் படிப்பு ஆண்களுக்கு வாழ்வியல், இல்லற இன்பத்தைத் தடுக்கவல்லது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய படிப்பு பாதி வாழ்நாளை வீணடிக்கிறது. சாகும்வரை கல்வி, ஞானம் நிலை மாறி பட்டம் படிக்க ஆர்வம் திருமண வயதைத் தள்ளிப்போடுகிறது.
ஆண்களின் வருமானம், பாலியல் கற்பு நம்பகத்தன்மை பொய்த்துக் கொண்டிருக்கிறது. ஆண் - பெண் நேரடிப்பார்வை, கலந்துரையாடல், பணி நேர நெருக்கம், குறைந்த இறுக்கமான ஆடை சலனத்தை மனதில் ஏற்படுத்தவே செய்யும். சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கும் மனம் பாலிச்சை செயலில் ஈடுபடத் தூண்டுகிறது.
சினிமா, ஆடல் பாடல், தொலைக்காட்சி நடனப்போட்டிகள் விரசத்தைத் தூண்டுகின்றன. மறைமுகப் பாலியல் ஒத்திவைப்பு இயற்கைக்கு முரணானது. அமுக்கமாக, அடக்கமாக, சாமர்த்தியமாக, சந்தர்ப்பவாதமாகத் தவறு நடக்கும். தடுக்கும் சக்தியை சமூகம் இழக்கும். சிற்றுண்டி சாலை, பேருந்து நிலையம், பூங்காவில் மணிக்கணக்கில் இளம்பெண் நெருக்கமாக உரையாடும் காட்சியைக் காண முடிகிறது. விபச்சாரம் சகல ஆற்றலுடன் அனைவரையும் சுவீகரிக்கிறது.
இந்திய கலாச்சாரம் விபச்சாரத்தைப் பகிரங்கமாகவே ஏற்கிறது. சீதை, கண்ணகி, முதலான ‘கற்புக்கரசிகள்’ போற்றப்படும் இந்நாட்டில்தான் தேவதாசி என்ற உலகிலேயே மூத்த விபச்சார நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்து மதக் கோவில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் அபலைப் பெண்கள் தங்களை அழகுபடுத்தி, ஆடல், பாடல் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, அரசர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகள், பார்ப்பனப் புரோகிதர்கள் முதலான அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்குக் காமக்கிழத்தியாகப் பணி புரிய வேண்டும். இந்த முறை சென்ற நூற்றாண்டு வரை கூடப் புழக்கத்தில் இருந்தது.16
தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று திராவிட இயக்கம் போராடிய போது அதைக் காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்திப் போன்ற பார்ப்பனர்கள் எதிர்த்தது வரலாறு. தேவதாசி குடும்பத்தில் இருந்து வந்த மூவலூர் ராமாமிருதம் அம்மையார்தான் இந்தத் தேவதாசி ஒழிப்பு இயக்கத்தில் பெரியார் ஆதரவுடன் முன்னணி பங்கு வகித்தார்.
இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஏழை மற்றும் ‘கீழ்’ சாதிப் பெண்களைப் பொட்டுக்கட்டி விடும் சடங்கு மூலம் கிராமங்களுக்கு ‘பொது மகளீரா’க்கும் முறை இருக்கிறது. இங்கும் ஊர் தெய்வத்திற்கு நேர்ந்து விடப்படும் அபலைப் பெண்கள் கிராமத்து ஆதிக்க வர்க்க ஆண்களின் காமக்கிழத்திகளாகப் பணி புரிய வேண்டும். இது கீழ்மட்ட அளவில் உள்ள தேவதாசி முறை என்றும் கூறலாம்.
இயற்கையை மட்டும் சார்ந்து, சொத்துடமை பிரிவினைகள் ஏதுமற்ற ஆதிகாலப் புராதானப் பொதுவுடமை சமூகம் தாய்வழிச் சமூகமாக இயங்கியது. இங்கு வாழ்ந்த இனக்குழு சமூகத்தின் மக்கள் குறிப்பிட்ட பெண்ணின் மக்கள் என்று அறியப்பட்டார்கள். பெண்ணே சமூகக் குழுக்களின் தலைவியாகவும் இருந்தாள். இயற்கையான வேட்டையிலிருந்து, திட்டமிட்ட வேட்டை, கால்நடை, பயிர் என்று பொருளுற்பத்தி மாறியதும் சொத்துடமைகள் தோன்றி வர்க்கங்கள் எனும் சமூகப் பிளவுகள் தோன்றுகின்றன. ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என்று பாலின ரீதியில் வேலைப்பிரிவினையும் தோன்றுகின்றன.
பிறகுதான் மனித உறவுகள் சொத்துடமையின் நீட்சியாகப் பரிணமிக்கின்றன. அதாவது தனக்குரிய நிலம், கால்நடைகள், அடிமைகள் முதலான சொத்துக்களைக் காக்கும் வாரிசுரிமை தவிர்க்கவியலாமல் தோன்றுகிறது. இப்படித்தான் தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகம் பிறக்கிறது. இந்தப் பெண்ணிற்குப் பிறந்த மக்கள் என்பதிலிருந்து இந்த ஆணுக்குப் பிறந்த வாரிசுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் எந்த ஆணுக்கு பிறந்தவர்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய எந்தப் பெண்ணுக்குப் பிறந்தவர்கள் என்பது முக்கியமல்ல. குடும்பத்தின் தோற்றம் இப்படித்தான் இருந்தது என்பதைப் பலரும் நம்ப மாட்டார்கள். ஓர் ஆண் அல்லது முதலாளி அவனது சொத்துக்களைப் பாதுக்காப்பதற்குக் குடும்பம் எனும் ஒரு தார மணமுறையே பொருத்தமாக இருக்கிறது என்பதும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.17
சொத்துடமையின் படிக்கட்டுகளில் மேலே செல்லச் செல்ல குடும்பத்தில் இருக்கும் பாலியல் வாழ்க்கை நிர்ப்பந்தம் காரணமாகவே நீடிக்கிறது. ஊருக்கும், சொத்துடமையின் வாரிசு பிரச்சினைக்காக மட்டுமே திருமணங்கள், குடும்பங்கள் தேவைப்பட்டன. ஊருக்கு ‘கற்பு’, ஆசைக்கு ‘விபச்சாரம்’ என்பது ஆண்களின் இயல்பாக மாறியது. அதே போன்று, ஆண்களின் அந்தப்புரத்தில் அடைபட்டுக்கிடந்த பெண்களும் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டார்கள். இப்படிச் சொத்துடமை காரணமாக உருவாகிய குடும்பம் தன்னளவிலேயே போலித்தனத்தையும் சேர்த்து உருவாக்கியிருந்தது. இதைத்தான் ஆசான் ஏங்கெல்சு ‘கற்பும், விபச்சாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்’ என்று அழைக்கிறார்.18 இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து உடன்பாட்டுப்பொருள் ஆவது போல இரண்டு விபச்சாரங்கள் சேர்ந்து ஒரு கற்பாக மாறுகின்றன என்று கூறிய ஃபூயேவின் மேற்கோளையும் ஏங்கெல்சு காட்டுகிறார்.19
இன்று எல்லா வர்க்கங்களிலும் இந்தக் ‘குடும்பத்தின்’ செல்வாக்குதான் நீடிக்கிறது. அந்த வகையில் இன்றைய குடும்பங்களின் சொத்தடைமைத் தன்மையே ‘கள்ள உறவுக்கு’ ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்தக் கள்ள உறவுகளைத் தாண்டி அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு, விபச்சாரம் தேவையான பாலியல் வக்கிரங்களை நிறைவேற்றுகிறது. அதனாலேயே இன்று பல நாடுகளில் விபச்சாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசின் ஆதரவோடு செயல்படுகிறது. விபச்சாரத்தை யார் ஒழிப்பது என்ற கேள்விக்குப் பதிலாக,
“பூவில் முள் விழுந்தாலும், முள்ளில் பூ விழுந்தாலும் பூவின் இதழ்களே கிழியும் என்பர். அதுபோல் ஒத்துப் பெண்கள் எங்கிருப்பினும் அவர்களுக்கே வலிக்குமொரு சமுதாயத்தைப் படைத்தவர் யார்? ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்த நாம் தானே? நம் சுற்றமும் நாம் உருவாக்கிய சமுதாயமும் தானே?
அப்படிப்பட்ட அந்தச் சமுதாயமும், அந்தச் சமுதாயப் பிரதிநிதிகளாக நியமிக்கப் பட்டுள்ள அரசியல் அமைப்புக்களும், அந்த அமைப்பினை சரியாகத் தேர்வுசெய்து அதன் பலத்தினால் மெல்ல யாருக்கும் வலிக்காமல் விபச்சாரத்தை அவசியமற்ற ஒன்றாக ஆக்கத் தக்க வலிமையான பண்புநிறைச் சூழலை நம் சமூகத்தில் மலரச் செய்யும் கடமை நம் செயல்பாடுகளுக்குரியதன்றி வேறில்லை.”20 என்கிறார் நாவலாசிரியர் வித்யாசாகர்.
நவீன தகவல் தொடர்பினால், நேரடி பாலியல் வக்கிரங்களைத் தாண்டி சராசரியான செய்தி, விளம்பரம், பாடல், புகைப்படம், மொழி என அனைத்தும் பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கின்றன. இவை பாலுணர்வின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படும் ஆண்களைக் குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. சராசரி பெண்ணுடல் என்பது சக மனித இனம் என்பதைத் தாண்டி எப்போதும் நுகர்வதற்குரிய ஒரு பண்டமாக ஆண்களின் மனங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. அழகு, அலங்காரம், நடை, உடை, பாவனை சகலமும் இதைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை எற்றுக்கொள்ளுமளவு பெண்களும் மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருகிறார்கள்.
நேர்மறையில் இந்த முரண்பாட்டினை சமூக விழுமியங்களோடு, சமூக நோக்கிலான வாழ்வோடு கடந்து செல்ல வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஆனால் முதலாளித்துவ அமைப்போ இந்த முரண்பாட்டைக் கேடாகப் பயன்படுத்தி வெறியை வளர்த்து காசு பார்க்கிறது. இதை ஒழிக்காமல் பாலியல் வன்முறைகளையும், நமது குழந்தைகளையும் பாதுகாக்க முடியாது. அதற்கு விபச்சாரத்தைச் சட்டபூர்வமாக்குவதும் பலனளிக்காது.
“அச்சம்… நாணம்… மடம்... பயிர்புன்றது மாறி – வெறும் காசு… பணம்… சுகம்னு ஆயிடக்கூடாது.”21
என்று வாட்டமுறுகின்றார் நாவலாசிரியர். அடுத்து எந்த நிலையிலும் நாம் விபச்சாரத்தை ஏற்க இயலாது. ஏனெனில் மனிதனின் அகவய தேவையைப் பண்பாட்டு தரத்துடன் நிறைவேற்றும் பாலியலை ஒரு தொழிலாகச் செய்வது என்பது மனித சாரத்திற்கு எதிரானது.
பணக்காரர்களின் வக்கிரங்களுக்கான விபச்சாரத்தைத் தாண்டி உழைக்கும் வர்க்க ஆண்களும் கீழ்தட்டு விபச்சாரத்தை நாடி செல்கின்றனர். உதிரித் தொழில்களில் அதிக உடலுழைப்பை செலவழித்து இறுதியில் தமது மனித சாரத்தைப் பறி கொடுக்கும் இந்த மனிதர்கள் ஓர் இயந்திரம் போல தமது கேளிக்கைகளை நாடுமாறு அவர்களது பணிச்சூழல் கோருகிறது. புகை, போதை வஸ்து, பான்பராக், மது, விபச்சாரம் அனைத்தும் இவர்களை மேலும் கடினமாக உழைப்பதற்கு ஒரு வகையில் உதவுகிறது. இவர்கள் எவரும் வக்கிரங்களுக்காக விபச்சாரத்திற்குச் செல்வதில்லை. இவர்களது கொடுமையான வாழ்க்கைச் சூழலை மாற்றி அவர்களும் மனைவி, குழந்தைகளோடு ஓர் இனிமையான வாழ்க்கையை நடத்த முடியும் என்று செய்தால் இவர்கள் விபச்சாரத்திற்குச் செல்வதைத் தடுக்க முடியும். என்பதை,
“பெண்களுக்கு ஆசையே வேணாம்னு எழுது. காசு வேணாம்னு எழுது. பொருளு வேணாம்னு எழுது… ஒரே ஒரு குடும்பம் போதும்னு எழுது. ஒரே ஒரு புருஷன் போதும்னு எழுது. யாருக்கு ஆசை இல்லை. உணர்ச்சிகள்னு இருந்தா ஆசை வரத்தான் செய்யும். அதை அடக்கத் தெரியணும். அடக்க முடியணும். அடக்கி ஆளணும். அம்மாவுக்கும்… பெண்டாட்டிக்கும் வித்தியாசம் தெரியற ஆம்பளைக்கு, பொண்டாட்டிக்கும் – வேற பொண்ணுக்கும் உள்ள வித்தியாசம் தெரியணும்.”22
என்று விபச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கும் ஒரு பெண் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறாள்.
பால்வினைத் தொழில் அல்லது பாலியல் தொழில் (prostitution) என்பது வளர்ந்தவர் ஒருவர் தனது உடலை அல்லது பாலியல் ஆற்றலை இன்னொரு வளர்ந்தவருக்குப் பணத்திற்கு விற்கும் தொழில். வளர்ந்தவர் இருவருக்கிடையில் நடைபெறும் பாலியல், பணம் (பொருள்) பரிமாற்றமாகப் பாலியல் வியாபாரத்தைக் கொள்ளலாம்.
பாலியல் அவலங்களும் வித்யாசாகரின் தீர்வும்
பாலியல் தொழில் ஒரு துன்பியல் நிறைந்த நரக வாழ்க்கை. கட்டாயத்தின் பேரில் ஒருத்தி தன் உடலை ஒருவனின் இச்சைக்கு இரையாக்க பெண்களை நாடு கடத்தி விற்கும் இடைத் தரகரும், பெண்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து இச்சை தீர்க்க வரும் ஆண்களுக்குப் பெண்களைக் காட்சிப் பொருளாகக் காட்டிப் பேரம் பேசி சிலமணி நேரங்களுக்கோ அல்லது ஓர் இரவுக்கோ வாடகைக்கு விடும் தலைமைத் தரகரும் அதில் பணம் சம்பாதிக்கும் அவலம் மிகவும் கொடுமையானது.
வலுக்கட்டாயமாக அழைத்து வந்துவிடும் அவர்கள் விபச்சாரத்திற்கு மறுக்கும் பட்சத்தில் பலாத்காரப் படுத்தி பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்த படுவார்கள். இதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வாய்ப்பே இருப்பதில்லை.
“இங்க வர்ற ஆம்பளைங்க எல்லாருமே… விரும்பித்தான்யா வராங்க… ஆனா எங்கள மாதிரி சில பெண்கள் தான் நாய் மாதிரி இழுத்து வரப்படுகிறோம். சாவு வந்தா கூட ஒரு தடவைதான் வரும். ஆனா நாங்களோ… இங்குப் பல தடவை சாகிறோம்.”23
என்பதையும், கடத்தி வந்தவர்களைக் காவலில் வைத்திருப்பது போலவே இவர்களும் தப்பியோட முடியாத படி துன்புறுத்த படுகிறார்கள் என்பதும், இந்தத் தரகர்கள் கொடுக்கும் இப்படியான அதீதமான அழுத்தங்களினால் காவல் துறையிடம் போய் முறையிடும் துணிவு கூட இந்தப் பெண்களுக்கு இல்லாது போய்விடுகிறது என்பதையும் நாவலின் மூலம் அறிய முடிகிறது.24
இந்த விலைமாதர்கள் மீது அங்கு வந்து போகும் வாடிக்கையாளர்களில் யாருக்காவது விருப்பமோ, காதலோ வந்தால், விலைமாதின் வயதுக்கும், உடல்வாகுக்கும், அழகுக்கும் முக்கியமாக அவளால் விடுதிக்கும் தரகருக்கும் வரும் வருமானத்துக்கும் ஏற்ப பேரம் பேசப்பட்டு, அவள் வாடிக்கையாளருக்கு விற்கப் படுவாள். அவள் தன்னை ஒரு கடைச்சரக்காக, அழுக்குத் துணியாக உணர்ந்து கொண்ட போதும், அவளின் பெறுமதி பல்லாயிரக்கணக்காக இருக்கும்.
“வெண்மதி அவள் கண்களில் இருந்த ஈரத்தை துடைத்துவிட்டு எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு என்னைக் கட்டிக்குவியா? என்றான்.”25
என்பது போல, இவர்களில் ஓரிருவர் வாடிக்கையாளர்களால் நியமாகவே காதலிக்கப்பட்டு விடுதலை பெற்றுக் குடும்பம் குழந்தையென்று வாழும் நிகழ்வுகளும் அபூர்வமாக நடந்துள்ளன. அவ்வாறான எதிர்பார்ப்பைதான் ஆசிரியரும்,
“முதலில் அங்ஙனம் ஒரு பெண்ணை மனம் முடிப்பவர், அப்பெண்ணின் மனநிலை, அதனால் தனது வீட்டினில் நிகழும் மாற்றங்கள், அதைச் சமாளிக்கும் பக்குவம், எதையும் ஏற்கும் பெருந்தன்மை என எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டியதொரு இழிவு நிலையை நாம் தான் உருவாக்கியுள்ளோம், அதையும் நாம் தான் சரிசெய்ய வேண்டும்.
முதலில் வீட்டிற்கு வரும் பெண் ‘இவள்’ என்றுதான் உறுத்தும், பின் மெல்ல மெல்ல மாறி அந்த ‘இவள்’ மறைந்து அவள் இத்தனை நல்லவளெனப் புரியவும் வாய்ப்பும் உண்டு. பொதுவாகக் கெட்டவை விரைந்து நடந்துவிடும், நல்லவை நடக்கப் புரிய ஏற்க நாளாகும். சீர்திருத்தமானதும் அப்படித்தான் சொன்னதும் நிகழ்ந்துவிடுவதல்ல, மெல்ல மெல்லவேனும் நிகழ்த்த வேண்டியது.”26 என்று வலியுறுத்துகிறார்.
ஏறக்குறைய எழுபது சதவிகித விபச்சாரத் தொழில் செய்யும் பெண்கள் யாரும் வற்புறுத்தாமலும், யார் மூலமும் விற்கப்படாமலும் தானாகவே முன்வந்து விபசாரத் தொழிலில் சேர்ந்துள்ளனர் என்றும் வறுமையில் வாழும் ஏழைப் பெண்களுக்கு விபசாரத் தொழில் எளிதில் அமையக் கூடிய வாழ்வாதாரத் தொழிலாக உள்ளது என்றும் அதிர்சிதரக் கூடிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. சாதரணமான வேலைகலான வீட்டு வேலை மற்றும் இன்ன பிற தொழில்களில் ஈடுபட்ட மூத்த வயதுடையவர்கள் கூட இந்த விபசாரத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பதும் இந்த அறிக்கையின் தகவலாகும்.
விபச்சாரத் தொழில் செய்யும் பெண்களில் எழுபது சதவிகிதம் பேர் வற்புறுததலினால் ஈடுபடுவதில்லை - அதிர்ச்சி தகவல் ஏறக்குறைய எழுபது சதவிகித விபச்சாரத் தொழில் செய்யும் பெண்கள் யாரும் வற்புறுத்தாமலும், யார் மூலமும் விற்கப்படாமலும் தானாகவே முன்வந்து விபசாரத் தொழிலில் சேர்ந்துள்ளனர் என்றும் வறுமையில் வாழும் ஏழைப் பெண்களுக்கு விபசாரத் தொழில் எளிதில் அமையக் கூடிய வாழ்வாதாரத் தொழிலாக உள்ளது என்றும் அதிர்சிதரக் கூடிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. சாதரணமான வேலைகலான வீட்டு வேலை மற்றும் இன்ன பிற தொழில்களில் ஈடுபட்ட மூத்த வயதுடையவர்கள் கூட இந்த விபசாரத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பதும் இந்த அறிக்கையின் தகவலாகும்.27
நம் சமுதாயம், நம் கலாச்சாரத் திரிபு, நம் நகர்தலின் ஊடையில் வந்துவிட்ட மூட பழக்கவழக்கங்கள், எளிய வழியில் மிடுக்காக வாழ எடுத்த பிரயத்தனம், தன் தேவையைத் தனக்குச் சாதகமாக அமைத்துக்கொள்ள மனிதன் பட்ட வரம்புமீறிய ஆசைகள், பின் உழைக்க மறுத்தவை, பிறர் மனை நோக்கல், பொறாமை, சுயநலம் என எல்லாம் சேர்ந்து மொத்தமாக நாம் பண்பு தவறி வாழ்ந்துவிட்டதன் சாட்சியங்களே நம் பெண்கள் விபசாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டதும் அவர்களை நாம் அத்தொழிலுக்கு உந்தியதும் ஒரு காரணம் என்கிறார் வித்யாசாகர்.
பாலியல் வன்முறை அதிகம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் விபச்சாரத்தைச் சட்டபூர்வமாக மாற்றலாம் என்பது கருத்து இன்றைய கருத்தாக இருக்கிறது. ஆனால் பாலியல் வன்முறைகளின் மூலத்தை விபச்சாரத்தால் அழித்துவிட முடியாது. சொல்லப் போனால் பாலியல் வன்முறைகளின் மூலம்தான் விபச்சாரத்தையே தோற்றுவிக்கிறது, நடத்தி வருகிறது.
இன்று பாதுகாப்பான விபச்சாரத்தைப் பெண்ணிய அமைப்பும் அரசும் முன்னிருத்தும்போது இன்னும் அதிகப்படியான சிக்கலை விலைமகள் அனுபவிக்க வேண்டியுள்ளது. இவ்வாறான, பாதுகாப்பான விபச்சாரம் குறித்த பேச்சுகளை நாவலாசிரியரிடம் வினவியபோது, அது முதலில் பாதுகாப்பானதில்லை என்று அழுத்தமாக உணர்வு பூர்வமாக நம்பியதால். நிறைய ‘விபச்சாரம் குறித்தும் அதை ஏற்றுக் கொள்ளல் குறித்தும் சிந்தித்ததால். அங்ஙனம் தாம்பத்யம் ஒரு தொழிலானால், வாழ்வின் ரசம் குறையும், கட்டுப்பாடு தகர்க்கப்படும், விலங்கின் மூர்க்கம் அதிகமாக புத்தியிலேறும், காதல் மெல்ல ஒழிந்து காமம் விற்பனைப் பொருளாகும், குடும்பத்தின் அர்த்தம் ஏதுமற்றவையாகி வெறும் உண்ணல் உறங்கல் புனர்தலோடு நின்று போகலாம். இதில் மிதிபடுபவை பெண்மையாகவே மிஞ்சுமொரு சூழல் நம் சமூகத்தில் பின்னிப் பிணையப்பட்டுள்ள பலதைப் பற்றிச் சிந்திக்கையில்’ கட்டுப்பாடான வாழ்க்கையே நம் தரத்தை உயர்த்துவதாகவும், பெண்களுக்கு நேரும் இழிசெயல்பாடுகளிலிருந்து பெண்களைக் காக்கக்கூடு மென்றும் எண்ணுகிறேன்.
அதேநேரம், உடல்மொழி குறித்த, உடல்கூறு சம்மந்தப்பட்ட, ஆண்பெண் எனும் இருவேறு பிறப்பின் மாற்றம் மற்றும் தேவைகள் குறித்த பாடங்கள் புரிதலோடு அமையுமெனில்; காமம் விலைபோகும் விபசாரமெனும் நிலை அற்றுப் போய் அது வாழ்வில் ருசிக்கும் காதலாகக் கணியலாம்28 என்று உறுதியான எண்ணம் கொள்ளும் வித்யாசாகர்,
“வேண்டான்னு அரசை சட்டம் போட சொல். அதை விட்டுவிட்டு நாறும் சேற்றில் நின்று கொண்டு சந்தனத்தைத் தேடுகிறேன் எனத் தவறையும் நியாயப்படுத்துகிறாளே… அந்த முண்டையைச் செருப்பால் அடிச்ச மாதிரி எழுது… ஆனா விபச்சார விடுதி நடத்தி கூட்டிக் கொடுக்காதேன்னு அரசுக்கு புரியற மாதிரி எழுது.“29
என்று ஆவேசமாகக் கூறுபவள்,
“ஆம்பளை வறான்… ஆம்பளை வறான்னு… போனமே தவிர – பெம்பளை இங்க இருந்தா தானே ஆம்பளை வருவான்றதை நினைக்கலை. இன்னைக்கி விளங்கிடுச்சி. இனி எனக்கு வேணாம், இந்த இடம் வேணாம். இந்தப் பணம் வேணாம். இந்தத் தொழில் வேணாம்.”30
என்று, ஒரு விபச்சாரி தான் செய்துவந்த விபச்சாரத் தொழிலிருந்து விடுபட்டுச் செல்கிறாள் என்று வித்யாசாகர் படைத்திருப்பது வரவேற்க தக்கதாக உள்ளது. அந்தப் பெண் மட்டுமன்றி விபச்சாரம் செய்யும் ஒவ்வொரு பெண்ணும் இந்த நாவலைப் படித்தால் நிச்சயம் விபச்சாரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வாள் என்றே நம்பலாம்.
விபச்சாரத்துக்கு முக்கியக் காரணம் வறுமைதான் என்று சொல்லப்படுகிறது. வறுமை நிலையிலிருந்து விடுபட்டுத் தங்களாலும் மற்றவர்களைப் போல் வாழ முடியும் என்ற நம்பிக்கை வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு ஏற்படும் வகையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அவ்வாறு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், ‘ஒரு வேலை உணவாவது வேண்டும்’ என்ற பசிக் கொடுமையின் கட்டாயத்தால் தவறான வழியில் சென்றவர்கள் கூட நல்ல வழிக்கு மாறித் தன் வாழக்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்வர் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.
சான்றெண் விளக்கம்
1. அ.சிவக்கண்ணன், மு,வ,வின் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள், பக்.7-8.2. அகிலன், கதைக் கலை, ப.64.
3. தா.ஈசுவரபிள்ளை, பக்தி இலக்கியத்தில் சமூகப் பார்வை, ப.20.
4. வித்யாசாகர், கனவுத் தொட்டில், பக்.149-150.
5. அ.ஜான்லூயி, கற்கத் தவறிய பாடங்கள், ப.155.
6. மே.கு.நூ., ப.157.
7. சுடர், வன்முறை நேர்வும் தீர்வும், ப.1.
8. வித்யாசாகர், கனவுத் தொட்டில், பக்.11 - 12.
9. Johnson, Sociology, P.10.
10. திரு.வி.க., பெண்ணின் பெருமை, ப.187.
11. C.S. Lakshmi, The Face behind the mask, P.129.
12. தேவதத்தா, தி.கமலி, பெண்ணியக் கலைச்சொல் விளக்கக் கையேடு, ப.52.
13. மே.கு.நூ., ப.95.
14. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.159.
15. மே.கு.நூ., ப.163.
16. தேவதத்தா, தி.கமலி, பெண்ணியக் கலைச்சொல் விளக்கக் கையேடு, ப.58.
17. ஏங்கெல்சு, ஏங்கெல்சு மேற்கோள்கள், ப. 37.
18. மே.கு.நூ., ப.39.
19. மே.கு.நூ., ப.63.
20. வித்யாசாகர், நேர்காணல் விடை,12.
21. வித்யாசாகர், கனவுத் தொட
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: (இயல் – மூன்று) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்களின் தீர்வுகள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: (இயல் – மூன்று) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்களின் தீர்வுகள்
என்ன அண்ணா இவ்வளவு பெருசு பெருசா எழுதுனா எப்போ படிச்சி முடிக்குதாம் ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: (இயல் – மூன்று) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்களின் தீர்வுகள்
நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா படிங்க...
ஆய்வு என்பதால் கொஞ்சம் கொஞ்சமா பதிய முடியாது. ஒவ்வொரு இயலாகத்தான் பதிய முடியும்...
அதனால்தான் இப்படி...
ஆய்வு என்பதால் கொஞ்சம் கொஞ்சமா பதிய முடியாது. ஒவ்வொரு இயலாகத்தான் பதிய முடியும்...
அதனால்தான் இப்படி...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» (இயல் – இரண்டு) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்கள்
» இயல் – நான்கு கனவுத் தொட்டிலின் மொழிநடையும் உத்தியும்
» வித்யாசாகரின் கனவுத் தொட்டில் (நாவல்) - ஓர் ஆய்வு - சான்றிதழ்
» குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள்
» கனவுத் தொழிற்சாலைகள்
» இயல் – நான்கு கனவுத் தொட்டிலின் மொழிநடையும் உத்தியும்
» வித்யாசாகரின் கனவுத் தொட்டில் (நாவல்) - ஓர் ஆய்வு - சான்றிதழ்
» குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள்
» கனவுத் தொழிற்சாலைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum