தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பளிங்கு காகிதம்- ருத்ரா

2 posters

Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:21 am

அந்த புத்தகத்தை
புரட்டியபோது
அதை அவன் பார்த்தான்.
அதை பார்த்ததும்
அவன் மனம் விம்மியதில்
புத்தகத்திற்குள்
வானமே வந்திருந்தது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:22 am

கரடு முரடாய்
கணித சமன்பாடுகளில்
புடைத்திருந்த
அந்த கல்லூரிப் புத்தகம்
இன்று 
ஒரு அன்னத்தூவியை
செருகியிருந்ததால்
அவன் ஆகாசத்தில் மிதந்தான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:22 am

நேற்று வரை 
அந்த புத்தகம்
நூலாம்படை வரிகளில்
மண்டிக்கிடந்தது.
இன்று
மூலைக்கு மூலை
'மத்தாப்புக் காடுகளாய் '
உற்சாகம் கொண்டு
எரிந்ததில்
அவன் மனக்குகைகளில்
'வர்ண வெளிச்சங்கள். '
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:23 am

அவளா
அதை எழுதியது ?
அந்த
பிஞ்சுவிரல்களா
இந்த
பிரளயத்தை உண்டாக்கியது ?
ஆம்
அவள் அவனுக்கு எழுதிய
காதல் கடிதம் அது.
அவள்
அந்த காகிதச் சுருளில்
சுருட்டி மடக்கி
சுருதி சேர்ந்திருந்தாள்.
அவன் நரம்பின் 
அதிர்வுகளில்
அட்லாண்டிக் அலைவிரித்தது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:23 am

தொல்லை தரும்
தொல்காப்பியமா வேண்டும் ?
'மெல் ' காப்பியத்தின்
அந்த மின்னல் எழுத்துக்களை
புரிந்து கொள்வதற்கு.
காதல் நெருப்பில்
ஆகுதியாய்
அவன் விழுந்துவிட்ட பிறகு
அவள் வார்த்தைக்கு
'பகுதி-விகுதி ' இலக்கணத்
தகுதிகள் தேவையில்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:24 am

அந்த ஆர்வத்தின்
அசுரவேகத்தில்
அவன் படித்தான்.
முதல் பக்கத்தை
படிக்காமல் 
மறுபக்கத்திலிருந்து
அவன் ஆரம்பித்தான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:24 am

'லிக்கிறேன்.... '
முதல் பக்கத்தின்
மிச்சம் தொடர்ந்த
அந்த எழுத்துக்களில்
அவன் சுரங்கம் வெட்டி
சுகமாய்க் கிடந்தான்.
 "லிக்கிறேன்" 
அர்த்தம் என்ன ?
உங்கள் காதலை
'எதிரொ 'லிக்கிறேன் '
'மறுத 'லிக்கிறேன் '
'இன்னும் குழப்பத்தி 'லிருக்கிறேன் '
'ஆனாலும் நான்
உங்கள் இதயத்தி 'லிக்கிறேன் '
எதை எடுத்துக் கொள்வது ?
எப்படி எடுத்துக்கோள்வது ?
முழு வாக்கியத்துள்
நுழைய 
அவனுக்கு தெம்பில்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:25 am

அந்த ஒடிந்த வரிகளில்
ஒளிர்ந்து கொண்டு 
ஒளிந்து கிடக்கின்றான்.
வாக்கியத்தின்
அந்த மறுமுனையில்
அவள் எழுதிய 'ஸ்பரிசத்தில் '
மறைந்திருப்பது என்ன ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:25 am

பூமி அதிர்ச்சிகளின்
பூக்கள் அர்ச்சனையா ?
சூாியனைத் தொட்டு வரும்
சோப்புக் குமிழிகளா ?
அவன் 'பிராந்தி ' நினைவுக்கு
அண்ட்டார்ட்டிகா கண்டத்தை
நறுக்கிப் போட்ட
ஐஸ் கியூப் களா ?
உள்ளத்தில் தோய்ந்திருக்கும்
ஒரு உடல்
அல்லது
உள்ளத்தில் ஊற்றெடுக்கும்
ஒரு உணர்ச்சியை
வயதுகளின் பயணத்தில்
மைல் கல் 'பதினாறிலிருந்து '
மயங்கவைக்கும் போதை இது!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:25 am

ஒரு வழியாய்
அந்த அணுகுண்டு
அவனுக்குள் விழுந்தது.
'உங்களை நான்... '
'காதலிக்கிறேன் '
என்ற அவள் எழுத்துக்களின்
இன்பக் கதிர்வீச்சு
அவனது 
பொக்ரான் பாலைவனத்தில்
ஒரு பூஞ்சோலையை
புதையல் ஆக்கியது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:26 am

ஓடினான்
நடந்தான்
நின்றான்
மீண்டும் ஒடினான்
மேகங்களில்
தார் ஊற்றி போட்ட
ஆகாய‌ ரோட்டில்
அவன் மிதந்தான்.
அருகில் குவித்துக் கிடந்த
கருங்கல் ஜல்லிகூட
அவன் கால் பட்டு
'ஜொள்ளு ' விட்டது!.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:26 am

'ஏண்டா அம்பி!
பாத்துப் போப்படாதோ ? '
அவன் செதுக்கி வைத்திருந்த
'ஃபி ஃப்டி கே.ஜி தாஜ்மாகால் '
நினைப்பில்
எதிரே வந்த
ஒரு 'ஃபிஃப்டி ஏஜ்ஜின் தாஜ்மகால் '
மாமியை மோதிவிட்டான்.
ஒரு காதல் கடிதம்
படுத்தும் பாடு அல்லவா இது.!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:27 am

காகிதம்கிடைக்கவில்லை
என்பதற்காக
நிலவை 'சரக் 'கென்று 
கிழித்து ..அதில் 
எழுதி அனுப்பியிருக்கிறாள்.
அதனால் அவன் உள்ளம்
இப்போது
குற்றாலத்துப் பொங்குமாங்கடல்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:27 am

ஒரு வானம்
ஒரு சூரியன்
கொஞ்சம் நீர்த்துளி
இவையெல்லாம் வேண்டும்
என்று யார் சொன்னது 
வானவில் தோன்ற.?
அவள் மூச்சு பட்ட
அந்த காகித துண்டு போதுமே!.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:28 am

'அன்.......பே..! '
என்று நீண்டு அழைத்திருந்தாளே
அது எத்தனை மாத்திரை ?
என்று அவனுக்கு பெருங்கவலை.
குறில் நெடில் மாத்திரை
அல்ல அது.
அவன் உயிர் காத்த.
மாத்திரை அது!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:28 am

'இப்படிக்கு உன் இதயம் '
என்று எழுதி
அவள் கையெழுத்தை
போட்ட பின்னும்
..................
புள்ளிகளின் ஊர்வலம் 
தொடர்ந்தது.
முற்றுப்புள்ளிக்கு
அவசரப்படாத கடிதம் அது.
மீண்டும் மீண்டும் பார்த்தான்.
செவியை நுழைத்து
நுட்பமாய் கேட்டதில்
அவள் உரசல் சப்தங்கள்
காகிதம் முழுவதும் ஒலித்தது.
அவள் உதட்டையே
விரல் ஆக்கி எழுதியதாய்
அவன் உணர்ந்ததால்
அவனுக்கு
அந்த எழுத்துக்களெல்லாம்
சத்தம் போடாத‌
முத்த எழுத்துக்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:39 am

ஒரு இதயத்துள்
இன்னொரு இதயம்
இளைப்பாறிய‌
இனிய தருணங்கள்
அல்லவா அவை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:40 am

எந்த மொழியிலும்
இப்படி
"உயிர் எழுத்துக்கள்" என்று
பெயர்வைக்கவில்லையே.
என்று
இப்போது அல்லவா
அவன் புரிந்து கொண்டான்.
எழுத்தின் சிகரமாய்
அந்த அகரம்
"அன்பு"ஈனும் குழவியாய்
காதலாய்
காகித கருப்பையை விட்டு
அவனுள் வந்து உயிர்த்தது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:40 am

எழுதாத எழுத்தும்
புரிவது போல் புரிந்து
புரியாமலேயே புதைகுழிபோல்
தெரியும் எழுத்தும்
அவனுக்கு 
புகை மூட்டம் போட்டது.
பொதிந்து கிட‌ப்ப‌தெல்லாம்
அந்த‌ பொதிகை முனிவ‌னுக்கே
வெளிச்ச‌ம்
இருப்பினும்
அந்த 'எழுத்து அதிகாரத்தையும் '
'பொருள் அதிகாரத்தையும் '
புரிந்து கொள்ள
தொல்காப்பியத்தைத் தேடி
இப்போது அவன் ஓடினான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:41 am

காதல் என்பது 
'கானல் நீரில் ' எழுதிய
'பொய் எழுத்து '..என்று
பொறி மயங்கிக் கிடந்தவனை
பொறி தட்டி எழுப்பியது
அந்த கடிதம் !
இரண்டு உள்ளங்கள்
ஒன்றிய ஒரு 'மை 'யில்
எழுதிய ...காதல்
அந்த 'மெய்யெழுத்து '!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:42 am

அவள் 
கடிதம் எழுத தொடங்கும்போது
பொன்னெழுத்தில் ' 
பெயர் பொறித்திருந்த
அவள் பேனா
அவசரத்துக்கு கிடைக்கவில்லை.
எழுதாமல் விட்டெறிந்த
கடைக்குட்டி தம்பியின்
குட்டைப் பென்சிலில்
தகிக்கும் வெப்பத்தில்
தழல் பூத்து எழுதியிருந்தாள்.
அவனும் 
அதை படித்தபோது
அக்கினிப்புயல் வீசுவ‌து
க‌ண்டான்.
அந்த கட்டைபென்சிலிலும் கூட‌
உடன் கட்டைஏறினான்,
காத‌ல் எனும் இன்ப‌த்தீ அது.!
இற‌க்காம‌ல் இற‌ப்ப‌தும்
பிற‌க்காம‌ல் பிற‌ப்பதும்
காத‌லின் "ப‌ர‌ம‌ண்ட‌ல‌த்தில்"
ப‌ர‌ம‌ சுக‌ம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:42 am

அந்த கடிதத்தை
திரும்ப திரும்ப
அவன் 
படித்துக்கொண்டிருந்தான்.
அவளது 
படிக நினைவோட்டத்தின்
காதல் எனும் தாமிரவருணியில்
முங்கி முங்கி
முக்குளி 
போட்டுக்கொண்டேயிருந்தான்.
இப்போது
அந்த கடிதம் மட்டும் அல்ல‌
கல்லிடைக்குறிச்சியின்
அந்த தாமிரபரணி கூட‌
அவனது
பளிங்கு காகிதம் அல்லவா!

==============================================ருத்ரா 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 03, 2013 12:03 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பளிங்கு காகிதம்- ருத்ரா Empty Re: பளிங்கு காகிதம்- ருத்ரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum