தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
+3
Rikaz (Amarkkalam)
செய்தாலி
bparthasarathi
7 posters
Page 1 of 1
என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
என் தாய்!
எந்தையிடம் தாவென்று
எனைக் கேட்டு பெற்றவள்;
யாரவள்?
என் தாய்!
என் தாயே!
கருவான நாள் முதலாய்
கவனித்தாய்;
எனை
கண்ணும் கருத்தாய்!
கருவிலே நான் வளர
உன்னுணவை எனக்கும்
தாமாகவே
பகிர்ந்தளித்தாய்!
ஈரைந்து திங்களாய்
இடுப்பு நோவுடன் எனை சுமந்து
மீளாத வலி தாங்கி
மீண்டு வந்து ஈன்றெடுத்தாய்!
கண் விழித்ததும் கண்டு
எனைக் கனிவுடனே கண்ணோக்கி
வாஞ்சையோடு
வாரியணைத்தாய்!
அனுதினமும் அன்போடு
எனை
உன் நெஞ்சணைத்து
அமுதளித்தாய்!
பஞ்சணையி லல்ல; உன்
நெஞ்சணையில் தூங்க வைத்தாய்!
உறவுகளை அறிவித்து எனக்கு
உலகையும் கற்பித்தாய்!
என் மழலை மொழி கேட்டு
உன் துன்பம் தொலைத்திருந்தாய்!
எழுந்து நான் நிற்கையிலே
என் மகனென்று மகிழ்ந்திருந்தாய்!
நோயோ எனை வருத்த
கண் விழித்து பசித்திருந்தாய்!
படைத்தவனை கடிந்து நீயும்
பத்திய உணவு புசித்திருந்தாய்!
என் பசியை நான் மறக்க
உன் பசியை நீ மறந்தாய்!
பாலகனாம் எனை நினைத்து
பகல் கனவு கண்டிருந்தாய்!
அதிகாலை துயிலெழுப்பி
அடுத்த நாளை அறிவித்தாய்!
சிறு வெற்றியை மிகப்பெரிதாய்
சிறப்பு செய்து நீ மகிழ்ந்தாய்!
வேலைக்கு எனை அனுப்ப
வேண்டாமென்று
நீ மறுத்தாய்.
நீ மறத்தாய்!
கை வளையல் தான் வைத்து
கல்லூரிக் கனுப்பி வைத்தாய்!
பொன்னகையை தான் மறந்து
புன்னகையை நீ அணிந்தாய்!
உன்
உதிரத்தை உயிராக்கி
எனக்கூட்டியதால்
உருக்குலைந்தாய்!
நீயோ கனிவின் ஊற்று.
உன் அன்பிற் குண்டோ மாற்று!
நீ பொறுமையின் பிறப்பிடம்.
சகிப்புத் தன்மையின் புகலிடம்!
உன் சேலைச் சோலை
காணக்கிடையா பூங்காவனம்.
சுமை தாங்கியாம் என் தாயே
நீ காணக் கிடைத்த என் தெய்வம்!
உன் உடல் காண் சுருக்கங்கள்
சுருக்கமல்ல தாயே!
நீ எனக்களித்த
ஆயுள் ரேகை!
என்ன தவம் செய்தேன்
என் தாயே!
என் தாயாய்
உனை அடைய!
இனியொரு சொர்க்கம்
தேவையில்லை;
உன் அருகாமை என்றும்
எனக்கிருக்கையிலே!
முழுமை பெற்று விட்டேன்
தாயே!
முழு மதியாய்
உன்னை பெற்றதால்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
[You must be registered and logged in to see this link.]
எந்தையிடம் தாவென்று
எனைக் கேட்டு பெற்றவள்;
யாரவள்?
என் தாய்!
என் தாயே!
கருவான நாள் முதலாய்
கவனித்தாய்;
எனை
கண்ணும் கருத்தாய்!
கருவிலே நான் வளர
உன்னுணவை எனக்கும்
தாமாகவே
பகிர்ந்தளித்தாய்!
ஈரைந்து திங்களாய்
இடுப்பு நோவுடன் எனை சுமந்து
மீளாத வலி தாங்கி
மீண்டு வந்து ஈன்றெடுத்தாய்!
கண் விழித்ததும் கண்டு
எனைக் கனிவுடனே கண்ணோக்கி
வாஞ்சையோடு
வாரியணைத்தாய்!
அனுதினமும் அன்போடு
எனை
உன் நெஞ்சணைத்து
அமுதளித்தாய்!
பஞ்சணையி லல்ல; உன்
நெஞ்சணையில் தூங்க வைத்தாய்!
உறவுகளை அறிவித்து எனக்கு
உலகையும் கற்பித்தாய்!
என் மழலை மொழி கேட்டு
உன் துன்பம் தொலைத்திருந்தாய்!
எழுந்து நான் நிற்கையிலே
என் மகனென்று மகிழ்ந்திருந்தாய்!
நோயோ எனை வருத்த
கண் விழித்து பசித்திருந்தாய்!
படைத்தவனை கடிந்து நீயும்
பத்திய உணவு புசித்திருந்தாய்!
என் பசியை நான் மறக்க
உன் பசியை நீ மறந்தாய்!
பாலகனாம் எனை நினைத்து
பகல் கனவு கண்டிருந்தாய்!
அதிகாலை துயிலெழுப்பி
அடுத்த நாளை அறிவித்தாய்!
சிறு வெற்றியை மிகப்பெரிதாய்
சிறப்பு செய்து நீ மகிழ்ந்தாய்!
வேலைக்கு எனை அனுப்ப
வேண்டாமென்று
நீ மறுத்தாய்.
நீ மறத்தாய்!
கை வளையல் தான் வைத்து
கல்லூரிக் கனுப்பி வைத்தாய்!
பொன்னகையை தான் மறந்து
புன்னகையை நீ அணிந்தாய்!
உன்
உதிரத்தை உயிராக்கி
எனக்கூட்டியதால்
உருக்குலைந்தாய்!
நீயோ கனிவின் ஊற்று.
உன் அன்பிற் குண்டோ மாற்று!
நீ பொறுமையின் பிறப்பிடம்.
சகிப்புத் தன்மையின் புகலிடம்!
உன் சேலைச் சோலை
காணக்கிடையா பூங்காவனம்.
சுமை தாங்கியாம் என் தாயே
நீ காணக் கிடைத்த என் தெய்வம்!
உன் உடல் காண் சுருக்கங்கள்
சுருக்கமல்ல தாயே!
நீ எனக்களித்த
ஆயுள் ரேகை!
என்ன தவம் செய்தேன்
என் தாயே!
என் தாயாய்
உனை அடைய!
இனியொரு சொர்க்கம்
தேவையில்லை;
உன் அருகாமை என்றும்
எனக்கிருக்கையிலே!
முழுமை பெற்று விட்டேன்
தாயே!
முழு மதியாய்
உன்னை பெற்றதால்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
[You must be registered and logged in to see this link.]
bparthasarathi- மல்லிகை
- Posts : 129
Points : 213
Join date : 29/10/2010
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
அம்மாவைப் பற்றிய உங்களின் மனதைதொடும் கவிவரிகள் மிகவும் அருமை நண்பா
வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் கவிவரிகளை
வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் கவிவரிகளை
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 41
Location : Dubai,UAE
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி!
தாயைப் போற்றுவோம்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
தாயைப் போற்றுவோம்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi- மல்லிகை
- Posts : 129
Points : 213
Join date : 29/10/2010
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
bparthasarathi wrote:தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி!
தாயைப் போற்றுவோம்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
Rikaz (Amarkkalam)- செவ்வந்தி
- Posts : 327
Points : 440
Join date : 23/11/2010
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
எல்லா உயிர்களுக்கும் தாய் என்ற ஒரு உறவு அமைவது தெய்வமே அருகில் இருப்பதுக்கு சமமாகும்.... தெய்வத்தை தொழவில்லை என்றாலும் தாய் தந்தையரை தொழுதால் போதும்...... வாழ்வின் உன்னத நிலையை நாம் அடையலாம்...
தாயின் ஒவ்வொரு செயலையும் தாயின் கருணையையும் தாயின் அன்பையும் அழகாய் வரிவரியாக விளக்கி இருப்பதை கண்டு இறுமாந்துக்கொள்கிறேன்..ஹப்பா முதியோர் இல்லத்தில் இனி ஒரு தாயின் வரவு குறையும் என்று.....
தாயின் தன்னலமற்ற அன்பை முழுமையாய் உணர்ந்தவர் கண்டிப்பாக முதியோர் இல்லத்தில் விடமாட்டார்....
தாயின் ஆசி என்றும் உங்களுக்கு கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் பார்த்தசாரதி...
தாயின் ஒவ்வொரு செயலையும் தாயின் கருணையையும் தாயின் அன்பையும் அழகாய் வரிவரியாக விளக்கி இருப்பதை கண்டு இறுமாந்துக்கொள்கிறேன்..ஹப்பா முதியோர் இல்லத்தில் இனி ஒரு தாயின் வரவு குறையும் என்று.....
தாயின் தன்னலமற்ற அன்பை முழுமையாய் உணர்ந்தவர் கண்டிப்பாக முதியோர் இல்லத்தில் விடமாட்டார்....
தாயின் ஆசி என்றும் உங்களுக்கு கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் பார்த்தசாரதி...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 54
Location : குவைத்
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நான் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நான் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
என் கவியுணர்ந்து மனமுவந்து வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி!
தாயைப் போற்றுவோம்!
நன்றியுடன்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
தாயைப் போற்றுவோம்!
நன்றியுடன்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi- மல்லிகை
- Posts : 129
Points : 213
Join date : 29/10/2010
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
அம்மாவைப் பற்றிய உங்களின் மனதைதொடும் கவிவரிகள் மிகவும் அருமை நண்பா





siva1984- மல்லிகை
- Posts : 147
Points : 221
Join date : 14/11/2010
Age : 38
Location : காரைதீவு.இலங்கை
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
மிக்க நன்றி!
தாயைப் போற்றுவோம்!
நன்றியுடன்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
தாயைப் போற்றுவோம்!
நன்றியுடன்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi- மல்லிகை
- Posts : 129
Points : 213
Join date : 29/10/2010
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
முத்தான கவிதை தோழரே .பாராட்டுக்கள் :héhé: :héhé: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
நண்பரின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
தாயைப் போற்றுவோம்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
தாயைப் போற்றுவோம்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi- மல்லிகை
- Posts : 129
Points : 213
Join date : 29/10/2010

» "உயிர் காக்கும் திட்டம் தந்த தமிழக அரசுக்கு நன்றி..."
» உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
» தாய் ! (கல்லூரி மலர் ஒன்றில் வெளியான கவிதை)
» உயிர் அச்சம் - கவிதை
» உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
» உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
» தாய் ! (கல்லூரி மலர் ஒன்றில் வெளியான கவிதை)
» உயிர் அச்சம் - கவிதை
» உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|