தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
2 posters
Page 1 of 1
மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
9.சிந்தாமணி தெரு ,ஐயப்பன் கணபதி அடுக்ககம் ,செந்தில் நகர், திருமுல்லைவாயில் ,சென்னை . 600062. விலை ரூபாய் 45.
இந்த நூல் 3 வருடங்களுக்கு முன்பு சென்னை சென்ற போது இனிய நண்பர் கவிஞர் வசீகரன் கொடுத்து அனுப்பினார்கள் .விமர்சனம் எழுதலாம் என்று எடுத்துப் படித்த போது இன்ப அதிர்ச்சி .இந்த நூலை எனக்கு காணிக்கை ஆக்கி இருந்தார்கள் நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்கள் .நூல் காணிக்கை ஆக்கும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல சிறியவன்தான் .இருந்தபோதும் அன்பில் மிகுதியால் காணிக்கை ஆக்கி உள்ளார்கள் . நன்றி . எனக்கு காணிக்கையான முதல் நூல் இது .தாமதமான பதிவிற்கு மன்னிக்க வேண்டுகிறேன் .
" ஹைக்கூப் பூக்களாய் தன் இதயத்தை அலங்கரித்து வரும் சகோதரர் இரா .இரவி அவர்களுக்கு ." என்று எழுதி உள்ளார்கள் .
ஹைக்கூ கவிதை எழுதுவது ஒரு வகை நுட்பம் .அதையும் தாண்டிய நுட்பம் லிமரைக்கூ கவிதை எழுதுவது .மூன்று வரிகளில் முதல் வரியின் இறுதி எழுத்தும் மூன்றாவது வரியின் இறுதி எழுத்தும் ஒன்றி வருதல் .இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபு நயம் நல்குவது லிமரைக்கூ.
மனிதநேயமற்ற பெண் சிசுக் கொலையை மையக் கருவாகக் கொண்டு மிகச் சிறப்பாக லிமரைக்கூ.வடித்துள்ளார்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்களுக்கு இந்த நூல் 29 வது நூல். தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .பல்வேறு இதழ்களில் எழுதி வரும் உழைப்பாளி .
பாவலர் மணிமேகலை குப்புசாமி ,முனைவர் சு .மணி இருவரின் அணிந்துரை மிக நன்று .பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களின் பதிப்புரையும் மிக நன்று .
பெண்களின் பிறப்பு விகிதம் வருடா வருடம் குறைந்து வருகின்றது. இதற்கு மூல காரணம் பெண் சிசுக் கொலைதான் .இந்தக் குறைவு இயற்கை அல்ல செயற்கை .மனிதநேய மாண்பாளர்கள் அனைவரும் உரக்கக் குரல் கொடுத்து பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறையாமல் காக்க வேண்டும் . அவசர அவசியமாகும் .
பிறந்த பெண் குழந்தையின் வாயில் நெல் போட்டுக் கொள்ளும் அவலம் இன்றும் நடைபெற்று வருவது இழுக்கு .அதனை உணர்த்தும் லிமரைக்கூ .
உணவாகி வாழ வைக்கும் நெல்
உனது உயிரையே பறிக்க பயன்படுத்துகிறாய்
நியாயமா இது சொல் !
மனிதநேயமற்ற மிருகத்தனமான செயலை கண்டிக்கும் அல்ல அல்ல மிருகங்கள் கூட தன் குட்டியைக் கொல்வது இல்லை . எனவே மிருகத்திற்கும் கீழான செயல் செய்வோர் மனிதர்களா ? மறுபரிசீலனை செய்ய வேண்டும் .
குழந்தை என்பது புனிதம்
பெற்ற குழந்தையைக் கொல்வதா - ஐயோ
எங்கே செல்கிறது மனிதம் !
.
பெண் குழந்தையை செலவு என்றும் துன்பம் என்றும் மூட நம்பிக்கைக்கு முடிவு கட்டுவோம் .
பெண் என்றால் பாரம்
கருத்தை மாற்றுதல் அதி அவசியம்
பெண்தானே புவிக்கு ஆதாரம் !
அயல் நாட்டில் பிறந்து, இந்திய நாட்டில் சிறந்து, உலகப் புகழ் நோபல் பரிசு வென்ற அன்னை தெரசாவின் பெயரை தன் பெயரில் வைத்து இருப்பதால் ,நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்கள் அன்புள்ளத்துடன் லிமரைக்கூ வடித்துள்ளார்கள். பாராட்டுக்கள்
பெண் குழந்தைகள் பாசம் மிக்கவர்கள் .நேசம் மிக்கவர்கள் .அறிவு மிக்கவர்கள் .ஆற்றல் மிக்கவர்கள் .மனித சமுதாயம் இதனை உணர்ந்திட வேண்டும் .
பெண் ஒரு தேன்கூடு
இதனை அறியாமல் நீ உடன்
அனுப்பி வைக்கிறாய் சுடுகாடு !
ஆணாதிக்க சிந்தனை அகற்றப்பட வேண்டும் .பெண்ணிய சிந்தனை விதைக்கப்பட வேண்டும் .பெண்ணை சக மனுசியாக மதிக்க வேண்டும் .அவளுக்கும் மனசு உள்ளது . அவள் கருத்துக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் .
பெண் ஒரு குல விளக்கு
பெண்ணால் கஷ்டம் நஷ்டம் என்ற
மூட நம்பிக்கையை உடன் விலக்கு !
படைப்பாளிகள் அனைவருமே பெண் சிசுக் கொலைக்கு எதிராக படைப்புகள் படைக்க வேண்டும் எண்டு வலியுறுத்தும் விதமான லிமரைக்கூ .
பெண்சிசுக் கொலை என்பது மடமை
இதை மாற்றிட பாடுபடுதல் ஒவ்வொரு
எழுத்தாளனின் தலையாய கடமை !
பிறந்த பெண் குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை .ஆனால் அதற்கு தண்டனை தருவது முறையோ ? இது தகுமோ ? என்பதை உணர்த்தும் லிமரைக்கூ .
பெண் செய்தது என்ன பழி ?
பிறந்த உடன் சமுதாயம் அவளுக்கு
ஏன் காண்பிக்கிறது குழி ?
அறிவியல் வளர்ச்சியை மனித சமுதாயம் ஆக்க வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்து வேண்டும் .அறிவியல் வளர்ச்சியை அழிவுக்குப் பயன்படுத்துவது மடமை .இன்று கருவில் இருப்பது ஆணா ? பெண்ணா ? என்பதை அறிந்து பெண் என்று தெரிந்ததும் கருவிலேயே கதை முடிக்கும் அவலம் நகரங்களில் நடந்து வருகின்றது .அந்த அவலத்தையும் சாடி உள்ளார் .
கள்ளிப்பாலும் நெல்லும் உயிர் குடிக்கும்
பிறப்பதற்கு முன்பே ஸ்கேன் கருவி
பெண் குழைந்தையின் உயிர் முடிக்கும் !
சொல் விளையாட்டு விளையாடி லிமரைக்கூ .வடித்துள்ளார். தாய்மை உள்ளத்தையும் படம் பிடித்துக் காட்டி உள்ளார் .
பாட இயலாது தாலாட்டு
தாய்மனம் சோர்ந்து துவண்டு
இசைக்கிறது துயர் பாட்டு !
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்களுக்கு பாராட்டுக்கள் .ஓய்வின்றி தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி இன்னும் இன்னும் படைக்க வாழ்த்துக்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» குடிமகனுக்கு ஒரு கடிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா.. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» சோகச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» குழந்தை வரைந்த காகிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இளவல் ஹரிஹரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum