தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் கீத கோவிந்தம்!
Page 1 of 1
தமிழ் கீத கோவிந்தம்!
-
--
இறைவனிடம் பக்தி செலுத்தும் முறைகளில்
நாயக-நாயகி பாவத்தில் பரமாத்மாவை நாயகனாகவும்,
ஜீவாத்மாவாகிய தன்னை நாயகியாகவும் கருதி பக்தி
செலுத்துவது "மாதுர்ய பக்தி' என்று கூறப்படும்.
-
இந்த பக்தி முறையைக் கடைப்பிடித்தவர் தனது
பெயரிலேயே "நாயகி' எனும் சொல்லைக்
கொண்டவர்தான் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமி.
-
ஆழ்வார்களில் நம்மாழ்வார், குலசேகராழ்வார்,
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த
பாவனையில் பாசுரங்களைப் பாடியுள்ளனர்.
அதுபோன்று "செüராஷ்டிர ஆழ்வார்' என்று போற்றப்படும்
நடனகோபால நாயகி சுவாமி, 265 கண்ணிகளாக
(ஈரடிச் செய்யுள்) 530 அடிகளில் நாயகி பாவத்தில்
பாசுரங்களைப் பாடியுள்ளார். ஒவ்வொரு பத்து செய்யுளும்
புன்னாகவராளி முதல், மோகனம் வரை 26 ராகங்களில்
பாடுமாறு அமைந்துள்ளன.
இதனால், இத்தொகுப்பு ஓர் இசை நூலாகவே விளங்குகிறது.
-
இராதையின் பால் கண்ணன் கொண்ட காதலை
வெளிப்படுத்தும் இசை நூல்தான் ஜெயதேவர் என்பவர்
12-ஆம் நூற்றாண்டில் வடமொழியில் பாடி அருளிய
"அஷ்டபதி' எனும் "கீத கோவிந்தம்'. கண்ணன் மீது
கொண்ட காதலைப் பற்றிய பாடல்கள்தாம் கீதகோவிந்தம்.
-
பிரிவு எனும் விரகதாப நிலையில் துடிக்கும்
ஜீவாத்மாவாகிய ராதை, பரமாத்மாவாகிய கண்ணனுடன்
இணையத்துடிக்கும் - இரண்டறக்கலக்கும் முறையில்
அமைந்த பாடல்கள்தான் ஜெயதேவர் அருளிய
கீதகோவிந்தம். தமிழ் அகத்துறை பாடல்களுடன் இது
ஒப்பு நோக்கத்தக்கது.
-
வடமொழியில் கண்ணன் மயங்கிய - கண்ணனை மயக்கிய
காதல் கீதமான "கீதகோவிந்தம்' போன்று தமிழில் பல்வேறு
ராகங்களில் இசையோடு பாடக்கூடியதாக, இனிய தமிழில்
அமைந்ததுதான் நடனகோபால நாயகிசுவாமி 19-ஆம்
நூற்றாண்டில் பாடியுள்ள
இக்கண்ணி வகை செய்யுள் தொகுப்பு. இதை,
"தமிழ் கீத கோவிந்தம்' எனக் குறிப்பிடுவது முற்றிலும்
பொருந்தும்.
-
ஜெயதேவரின் கீதகோவிந்த காவியத்தில் கண்ணன்,
ராதை, தோழி எனும் மூன்று பாத்திரங்கள்
அமைந்திருப்பதுடன் மூன்று பாத்திரங்களும் பேசுவதாக
அமைந்துள்ளன. அதேபோல் நாயகி சுவாமிகளின்
தமிழ் கீத கோவிந்தத்தில் நாயகி, தோழி, கண்ணன்
எனும் மூன்று பாத்திரங்கள் இருப்பினும், பேசுவது
நாயகி பாத்திரம் மட்டுமே.
-
ஆழ்வார்கள் பெண்மை நிலையில் இருந்துகொண்டு
பகவானை அனுபவிக்கும்பொழுது அவர்கள்
பாசுரங்கள் தாய் சொல்வதுபோல் இருப்பின்,
"தாய் பாசுரம்' எனவும், தோழி சொல்வதுபோல் இருப்பின்
"தோழி பாசுரம்' எனவும், தலைவி பேசுவதுபோல்
அமையின் அது "மகள் பாசுரம்' எனவும் பெயர்பெறும்.
நாயகி சுவாமிகள் பாடியுள்ள இத் தமிழ் கீதகோவிந்தம்
தலைவி (நாயகி சுவாமி), தலைவனான கண்ணனைப்
பிரிந்த விரகதாப நிலையில் பாடுவதாக அமைந்துள்ளதால்
இப்பாடல்களை "மகள் பாசுரம்' என்றே சொல்லலாம்.
-
மேலும், ஆழ்வார்கள் ஞானத்தில் தம் பேச்சு, பிரேமத்தில்
பெண் பேச்சு பேசுவர் என்ற "ஆசார்ய ஹிருதயம்' எனும்
வைணவ கிரந்தக் கூற்றின்படி இவை விளங்குகின்றன.
-
ஜெயதேவரின் கீதகோவிந்தம், ராதை - கண்ணனை
இணைவதுடன் முடிவுறுகிறது. தமிழ் கீதகோவிந்தத்தில்,
கண்ணன் இறுதியில் நாயகிக்கு தரிசனம் தருகிறார்.
கண்ணன் வரவில் மகிழ்ந்து நாயகி, நாயகனாம்
கண்ணனை உபசரிப்பதுடன் இக்காவியம் நிறைவடைகிறது.
-
""பரிகொடுத்தவர்போலப் பரிதவிக்குதே என்நெஞ்சம்
கரிய திருமேனியின் கமலப்பதம் தஞ்சம்'' (கண்ணி-82)
""நாயகனைப் பிரிந்த நங்கைமார் இருக்கலாமோ
காயமதை விட்டுவிட்டால் காணக் கிடைக்குமோ'' (கண்ணி-101)
-
இவ்வாறு பாடியுள்ள நாயகி சுவாமிகள், ஸ்ரீகிருஷ்ணரின்
கல்யாண குணங்களை,
""அண்டமெல்லாம் உண்டுபண்ணும் ஆதிமூலனேடி
அண்டர் நின்று தண்டமிடும் அடியைப் பணிபோடி!
பத்தியெனும் வலையிலகப்படும் பரமனேடி
அத்தியின்பால் வந்திடரை அகற்றினவன் போடி!''
-
எனப் பாடியுள்ளார். படிக்கப் படிக்கச் சுவைக்கும் நாயகி
சுவாமியின் இப்பாடல்களைப் படித்து கண்ணனின்
காதலின்பம் பெறுவோமாக!
-
------------------------------------
கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி (வார இதழ் - தமிழ்மணி)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum