தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
வைகை ஆறு!
கவிஞர் இரா. இரவி.
உலகின் முதல் மனிதன் தமிழன் !
உலகின் முதல் மொழி தமிழ் !
தமிழ்மொழியை சங்கம் வைத்து வளர்த்தது மதுரை நாகரிகத் தொட்டில் ஆற்றங்கரை என்பார்கள். மதுரையின் பெருமைகளில் ஒன்றானது வைகை. உலகில் முதல் மனிதன் நாகரிகம் பெற்றதும் மதுரை வைகையில் தான்.
வைகையின் பெருமையை சங்க இலக்கியப் பாடல்கள் பறைசாற்றுகின்றன. பல புலவர்கள் வைகை ஆற்றை புகழ்ந்து பல பாடல்கள் பாடி உள்ளனர்.
மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்
யானை கட்டி போரடித்த மதுரை.
வைகையில் ஆற்றில் தண்ணீர் எப்போதும் ஓடிக் கொண்டே இருந்தால் தான் விவசாயம் செழிப்பாக நடந்துள்ளது.
இவ்வளவு பெருமை மிக்க வைகை ஆற்றின் இன்றைய நிலையை நினைத்தால் கண்களில் கண்ணீர் வரும். ஆனால் வைகை ஆற்றில் தண்ணீர் வரவில்லை.
சென்னையில் கனமழை, பெருமழை வந்தபோதும் வைகை வறண்டே உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆறுகளையாவது இணைப்பதற்கு முன்வர வேண்டும்.
தண்ணீர வராத காரணத்தால் தாராளமாக நடக்கும் மணல் கொள்ளை.
எந்த ஒரு ஆற்றிலும் காண முடியாத காட்சிகளை வைகை ஆற்றில் காணலாம்.
முதுமக்கள் தாழி போன்ற மிகப்பெரிய குப்பைத் தொட்டிகள் ஆற்றின் உள்ளே பல இடங்களில் வைத்து உள்ளனர். ஆனால் யாரும் அதில் குப்பையைக் கொட்டுவதில்லை. அதன் அருகிலேயே குப்பையைக் கொட்டி வரலாற்று சிறப்புமிக்க வைகை ஆற்றை குப்பைத் தொட்டி ஆக்கி விட்டனர். பெரிய மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுக் குப்பைகளை ஆற்றிலேயே கொட்டுகின்றனர். எலெக்டிரானிக் பொருட்களின் குப்பையையும் கொட்டி வருகின்றனர். கேள்வி கேட்க நாதியின்றி ஆற்றை, குப்பைத் தொட்டி ஆக்கி விட்டனர்.
ஆற்றுக்குள்ளேயே மாட்டுக் கொட்டம் அமைத்து, மாடுகள் வளர்த்து வருகின்றனர். இன்னும் சிலர் குதிரைகள் வளர்த்து வருகின்றனர். வாகனங்கள் நிறுத்துமிடமாக்கி பணம் வாங்கி வாகனக் காப்பகம் ஆக்கி விட்டனர். ஆக்கிரமிப்பு என்பது அளவின்றி நடந்துள்ளது, இன்னும் கொஞ்ச நாளில் ஆற்றை பட்டா போட்டு விலைக்கு விற்ரு கட்டிடம் கட்டும் பணி கூட நடந்து விடும். அந்த அளவிற்கு வைகை ஆற்று கரையோரங்கள் முழுவதும் ஆற்றுக்குள்ளும் ஆக்கிரமிப்பு நடந்து உள்ளது.
ஆற்றை ஒட்டி குடிசைகளும் போட்டு விடுகின்றனர். இன்னும் சிலர் சாயக்கழிவுகளை துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை வைகை ஆற்றில் சத்தமின்றி கலந்து வருகின்றனர்.
மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் வெவேறு மாதங்களில் நடந்த சித்திரைத் திருவிழாவை ஒன்றாக்கி சித்திரையில் நடக்க வைத்தார் .வைகை ஆற்றில் அழகர் கடவுளை இறங்க வைத்து விழா வைத்து மக்களைக் கூட வைத்தார் .அதனாலும் வைகை பெருமை பெற்றது .
அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா நடக்கும் இடத்தில் செயற்கையாக தண்ணீர் நிரப்பி அதில் அழகர் இறங்கும் அவல நிலை. வரலாற்ரி சிறப்புமிக்க வைகை ஆற்றை காக்க அணிவகுப்போம். ஆக்கிரமிப்பை அகற்றுவோம். சுத்தப்படுத்துவோம், சுகம் பெறுவோம்.
டெங்கு ஒழிக்கிறோம் என்ற பெயரில் வீட்டினுள் பிடித்து வைத்துள்ள தண்ணீரை கீழே கொட்டி விட்டு கொசு உற்பத்தி ஆகும் என்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தண்டத்தொகையும் வசூலிக்கின்றனர்.
ஆனால் இன்று டெங்கு கொசு உற்பத்தியாகும் தொழிற்சாலையாக வைகை ஆறு உள்ளது. வைகை ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை. தேங்கி நிற்கும் குட்டைத் தண்ணீர் பாசம் பிடித்து பச்சையாக உள்ளது. அதை எந்த மூடி போட்டு மூடி வைப்பது.
குப்பைகள் மலை போல குவிந்து உள்ளன. இன்னும் சில இடங்களில் ஆற்றின் உள்ளேயே கபடி போட்டிகளும் நடத்துகின்றன. பொதுக்கூட்டங்களும் போடுகின்றன. நம் கண் முன்னே புகழ்மிக்க ஆறு புகழ் கெட்டு விடுகின்றது. விழிப்புணர்வு விதைப்போம், முடிவு கட்டுவோம்.
வைகை என்பது காரணப் பெயர் வைகை ஆற்றின் ஓரம் நின்று கையை வைத்தல் தண்ணீர் ஓடுவது தெரியும். அப்படிப்பட்ட வைகை இன்று பொலிவிழந்து சீர் இழந்து சிதைக்கப்பட்டு வருவது தடுத்து நிறுத்துவோம். மண் காப்போம். மண்வளம் காப்போம். வைகை ஆற்றை காப்பாற்றி வருங்கால சந்ததிகளுக்கு வழங்குவோம். ஆறு இல்லாத ஊரு உண்டு. ஆறு உள்ள வரை போற்ற வேண்டாமா? வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் கழிவு நீரை ஆற்றிலேயே கலந்து விடுகின்றனர்.
வைகை ஆற்றில் கரையோரம் திறந்தவெளி கழிவறையாக மாறி விட்டது. இந்த நிலை மாற வேண்டும். இதனால் தான் நோய்கள் பரவுகின்றன.
டெங்கு நோயை ஒழிக்க முடியவில்லை, டெங்கு கொசுவை ஒழிக்க முடியவில்லை, காரணம் சுகாதாரமின்மை. உடல்நலம் கருதியாவது வைகை ஆற்றில் மலம் சலம் கழிக்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ள மதுரை மக்கள் உதவ வேண்டும். விழிப்புணர்வு வேண்டும். விவேகமாகச் சிந்திக்க வேண்டும்.
முன்னொரு காலத்தில் சங்க இலக்கிய காலத்தில் வைகை ஆற்றில் ஓடியது போன்று தண்ணீர் ஓட வேண்டும். வைகையில் தண்ணீர் ஓடினால் தான் வைகையை நம்பி உள்ள பல கிராமங்களில் விவசாயம் செழிக்கும்.
வைகை ஆற்றின் அருமை, பெருமை அறிந்து வைகையைச் சுத்தமாக்குவோம். மாசற்ற வைகையாக மாற்றுவோம். வைகை ஆற்றை சீரும் சிறப்புமிக்க ஆறாக மாற்றுவதற்கு துணை நிற்போம். கடலைச் சேராத ஒரே ஒரு ஆறு வைகை ஆறு. பெருமைமிக்க ஆறு நம்ம வைகை ஆறு.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» வைகை காற்று ! நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வைகை மீன்கள் நூல் ஆசிரியர்: கவிஞர் வெ.இறையன்பு இஆப நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வைகை மீன்கள் நூல் ஆசிரியர்: கவிஞர் வெ.இறையன்பு இஆப நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum