தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாகன் திரும்பும் வரை! நூல் ஆசிரியர் : வலங்கைமான் நூர்தீன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
பாகன் திரும்பும் வரை! நூல் ஆசிரியர் : வலங்கைமான் நூர்தீன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
பாகன் திரும்பும் வரை!
நூல் ஆசிரியர் : வலங்கைமான் நூர்தீன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம்,
காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202.
பக்கம் : 112, விலை : ரூ. 80
******
நூலாசிரியர் கவிஞர் வலங்கைமான் நூர்தீன் அவர்களின் இரண்டாவது நூல் இது. முகநூலில் தொடர்ந்து எழுதி வருபவர். முகநூலில் படித்த கவிதைகளை மொத்தமாக நூலாகப் படித்ததில் மகிழ்ச்சி.
உள்ளத்தில் உள்ளது கவிதை. உணர்ச்சிப் பெருக்கு கவிதை என்று மனதில் பட்டதை துணிச்சலுடன் உரத்த சிந்தனையுடன் வடித்த கவிதைகள் நன்று.
இனிய நண்பர் பதிப்பாளர் வதிலை பிரபா அவர்களின் பதிப்புரை நன்று. திரைப்படப் பாடலாசிரியர் பழனிபாரதி அவர்களின் அணிந்துரை நன்று.
நூலை காணிக்கையாக்கியதில் வித்தியாசப்படுகிறார் கவிஞர். பேரன்புகளின் அக்கா, பிரியங்களின் மச்சான், மகிழ்வின் ரோஸ்லின் சமிக்ஷா இவர்களுக்கு” பாசமிக்க குடும்பத்திற்கு காணிக்கையாக்கியது சிறப்பு.
முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.
[size=17]அவளின் ஞாயிற்றுக்கிழமை!
ஒரு ஞாயிற்றுக்கிழமை
என்ன தந்துவிடப் போகிறது?
உங்களுக்கு விடுமுறை என்கிற ஆனந்தமும்
அவனுக்கு முழு குடிதினம் என்பதையும் தவிர!
[/size]
பொதுவாக வீட்டில் உள்ள பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வு இல்லை. ஆனால் சில ஆண்களோ ஓய்வெடுப்பது மட்டுமன்றி குடித்து உடல்நலம் கெடுத்துக்கொள்ளும் அவலத்தைச் சுட்டி உள்ளார்.
இலவசமாய் மரணங்கள்!
[size]ஓட்டு கேட்க வரும் போது
இலவச வாக்குறுதிகளில் உறுதி செய்துவிடுங்கள்
விவசாயிகளின் துர்மரணங்களையும்.
[/size]
காந்தியடிகள் விவசாயம் இந்த நாட்டின் முதுகெலும்பு என்றார். ஆனால் இன்று முதுகெலும்பை முறிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.
[size]நடிகைகளை சந்திக்கும் நாடோள்வோருக்கு [size=17]உழவனை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை.
உழவர்களின் தற்கொலை தொடர்கதையாகத் தொடர்வதை வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.[/size]
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது
பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தவளை ஆச்சரியமாகப் பார்த்தவனை
கண்களால் கொன்று விட்டு சென்றாள்
தண்டவாளத்தில் செத்துக் கிடக்கிறாள்.
[/size]
கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிகள் போல சிந்திக்கும் பெற்றோர் குழந்தைகளின் காதலை வெறுத்து ஆணவக் கொலைகள் நிகழ்த்தும் நாட்டு நடப்பை கவிதையில் பதிவு செய்துள்ளார். சிறப்பு.
[size]கெயில் எரிவாயுக் குழாய்களை
எங்கள் விவசாயிகளின் வயிற்றில்
புதைத்துச் செல்லுங்கள்
எங்கெங்கெல்லாமோ சென்று
பற்றி எரியட்டும்
அவர்களின் உயிர்மூச்சு!
[/size]
திட்டமிட்டு தமிழகத்தை பாலைவனமாக்கும் எண்ணத்துடன் தமிழகத்தைப் பாதிக்கும் பல திட்டங்களை நிறைவேற்றிட துடித்து வருகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்கார நண்பர்களின் பண ஆசைக்காக தமிழகத்தையும் தமிழக மக்களையும் அல்லல்படுத்தி வருவதை அழகாக கவிதையில் பதிவு செய்துள்ளார்.
'
நாளைய சிம்மாசனங்கள்!
[size]நதிகள் இணைப்புத் திட்டம்
முழுமனதோடு ஆர்வம் காட்டிய நடிகர் தான்
பன்னாட்டு குளிர்பான நிறுவனத்தின்
இந்திய பங்குதாரர்!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
மதுக்கடைகளை இழுத்து மூடுவோம்
மேடைக்கு மேடை கொக்கரிக்கும்
மாநில கட்சித் தலைவர்
கள்ளசாராய அதிபதி!
[/size]
தமிழ்நாட்டில் நடிக்கும் நடிகர்கள் அனைவருக்குக்ம் தமிழகத்தின் முதல்வராக வேண்டுமேன்ற ஆசை வந்து விட்டது. அரசியல்வாதி-களோ கோடிகளைக் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். நாட்டு நடப்பை தமிழகத்தின் அவல நிலை பல கவிதைகளில் படம்பிடித்துக் காட்டி உள்ளார். பாராட்டுக்கள்
[size]மயிலிடமிருந்து
வலிக்க வலிக்க
பிடுங்கிய சிறகுகளால்
ஒதுக்கி விட்டு
நடக்கிறாள்
எறும்புகளை!
[/size]
எறும்புகளை மிதித்து விடக்கூடாது என்று மயிலிறகால் ஒதுக்கிவிட்டு நடப்பவர்கள் மயிலிறகு மயிலுக்கு வலிக்க வலிக்க பறிக்கப்பட்டது என்பதை உணருவதில்லை.
ஈழத்தில் தமிழர்களைப் படுகொலை செய்ததை கண்டுகொள்ளாத, கண்டிக்காத புத்தப்பிட்சுகளைக் குறிப்பிடும் குறியீடாகவும் இக்கவிதையைக் கண்டேன்.
[size]புல்லாங்குழல் விற்பவனின்
சவத்தைத் தாங்கிச் செல்லும்
அந்த மூங்கில் பாடையிலிருந்து
மௌனமாய கசியும்
மரணத்தின் இசை!
[/size]
புல்லாங்குழல் விற்றவன் மரணத்திற்காக மூங்கிலும் அழகின்றது என்பது நல்ல கற்பனை. இக்கவிதையை முகநூலிலும் வாசித்து விட்டு விருப்பம் தெரிவித்து இருந்தேன்.
[size]நீண்ட சவமாய்
இறந்து கிடக்க்கும் நதியொன்றில்
ஆங்காங்கே தென்படும்
மீன்களின் எலும்புக்கூடுகள்
கரையின் ஒருபுறம் தற்போது
எரிந்து கொண்டிருக்கும்
சடலம்
மணல் விற்பவனுடையது.
[/size]
இன்றைய தமிழகத்தின் ஆறுகள் எல்லாம் வறண்டு, மணல் கொள்ளையர்களின் பாலைவனமாக மாறிவிட்ட அவல நிலையை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.
பளார்!
[size]கல்வியின் தந்தையே வருக வருக!
கல்லூரி திறப்பு விழாவிற்க்கு
வருகை தரும் கல்வியமைச்சரை
வரவேற்கும் சுவரொட்டிகளை
பசைதடவி ஒட்டிக் கொண்டிருந்தான்
நள்ளிரவில் அந்தப் பட்டதாரி இளைஞன்
தனது கையொப்பம் கூட
இடத்தெரியாத கைநாட்டுக்காரர்
சிரித்துக் கொண்டிருந்தார் பசையொழுக !
[/size]
அரசுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக் கொண்ட மனிதர், புதுவையின் கல்வி அமைச்சராக இருந்த கதையெல்லாம் நினைவிற்கு வந்தது.
குறிப்பாக இளைஞர்கள் படித்து முடித்து விட்டு படிப்பிற்கு ஏற்ற வேலையின்றி பரிதவித்து வருகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய கவலை ஏதுமின்றி ஆள்வோர் பழம் தின்று கொட்டைப் போட்ட அதிகார்களுக்கு ஓய்விற்குப் பின்னும் பதவி நீட்டிப்பு வழங்கி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வருகின்றனர். சமுதாய சீர்கேடுகளை உணர்த்திடும் அற்புத நூல்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம் நூல்ஆசிரியர் : கவிஞர் வலங்கைமான் நூர்தீன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum