தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
எனது ஹைக்கூ...
நூல் ஆசிரியர் :
நூல் ஆசிரியர் :
கவிஞர் முனைவர் ச. தமிழரசன்
நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
*****
நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
*****
‘எனது ஹைக்கூ’ நூலின் பெயரே மிகவும் பிடித்தது, காரணம் எனக்கு மிகவும் பிடித்தது ஹைக்கூ. நூலாசிரியர் முனைவர் கவிஞர் ச. தமிழரசன் அவர்கள் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் பயின்று பட்டம் பல பெற்று தகுதிகள் வளர்த்து அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர். அறப்பணியான ஆசிரியப்பணிக்கு இடையை இலக்கியப் பணியும் செய்து வருபவர். காலந்தோறும் மதுரை என்ற முதல் நூலின் மூலம் பரவலான பாராட்டைப் பெற்றவரின் இரண்டாவது நூல் இது.
ஹைக்கூ என்ற சொல் சப்பானியச் சொல்லாக இருந்தாலும் அந்த வடிவம் அனைவரையும் ஈர்த்த வடிவமானது. நூலாசிரியரின் முதல் ஹைக்கூ நூல் இது. தான் உணர்ந்த உணர்வை வாசகர்களையும் உணர வைத்துள்ளார். பாராட்டுகள்.
பதச்சோறாக நூலை வாசிக்கும் முன் எனக்குப் பிடித்த ஹைக்கூ கவிதைகளை மேற்கோள் காட்டுவது அணிந்துரையில் எழுதும் மரபு.
நெஞ்சம் நிமிர்த்தும்நித்தியப் புகழ் தரும்
நேர்மை!
முதல் ஹைக்கூ கவிதையிலேயே முத்தாய்ப்பாக எடுத்து இயம்பி நேர்மைக்கு மகுடம் சூட்டி நிமிர வைத்துள்ளார், பாராட்டுகள். நேர்மைக்கும் என்றும் மரியாதை மதிப்பு உண்டு, தேசப்பிதா காந்தியடிகள் இன்றும் உலகம் முழுவதும் போற்றிடக் காரணமாக அமைந்தது அவரது நேர்மையே. இப்படி பல நினைவுகளை மலர்வித்தது.
எட்டி உதைக்கின்றனஎழுத்துக்கள்
எதை நீர் கடைபிடித்தீர்!
உண்மை தான். படித்தவற்றை படித்தவர்கள் கடைபிடிக்கவில்லை. மனசாட்சியோடு நடந்து கொள்வதில்லை. படித்தவர்களும் அறம் மறந்து சிலர் ஊழல் புரிகின்றனர். அவர்களைப் பார்த்து எழுத்துக்கள் எட்டி உதைத்து புத்தி புகட்டுவதாக வடித்த ஹைக்கூ நன்று.
முகச் சவரம் செய்தோம்அழகானோம்
அகச்சவரம் செய்தோமா?
‘புறத்தூய்மை நீரால் அமையும்’ என்ற திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து புறம் அழகாக இருந்தால் போதுமா? அகம் அழகாக இருக்க வேண்டாமா? என்று உணர்த்தியது சிறப்பு.
நிலம் விற்பனைக்குநீர் விற்பனைக்க்கு
காற்றும் விரைவில்!
சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் விலைக்கு வாங்கும் வழக்கம் இல்லை. ஆனால் இன்று விலைக்கு வாங்குகிறோம். விரைவில் சுவாசக் காற்றையும் விலைக்கு வாங்கும் நிலை வரும் என்று தொலைநோக்கு சிந்தனையுடன் எச்சரிக்கை செய்துள்ளார். காற்று மாசுபடாமல் தவிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஒப்புக் கொள்ளுங்கள்எனக்குத் தெரியாதென்று
உயரும் அறிவு!
இது தான் அறிவு நாணயம். தெரியாததை தெரியாது என்று சொன்னால் தெரிந்து கொள்ள வாய்ப்பு வரும். தெரியும் என்று பொய் சொன்னால் தெரியாமலே போய் விடும். இன்னும் சில வாய்ச்சொல் வீரர்கள் எல்லாம் எனக்குத் தெரியும் என்று அள்ளி விடுவார்கள். அவர்களைப் பார்த்து சமுதாயம் எள்ளி நகைக்கும்.
கரைந்த யாப்புசுருங்கிய புதுக்கவிதை
ஹைக்கூ!
ஆம், மரபுக்கவிதையான யாப்பு கரைந்து விட்டது. பல வரிகளில் வந்த புதுக்கவிதை மூன்று வரியாக சுருங்கிய வடிவம் ஹைக்கூ. ஹைக்கூ விளக்கம் சுருக்கம் நன்று.
உரையாற்ற அழைப்புஊழல் பேர்வழிக்கு
தலைப்பு அறம்!
இன்றைய அரசியல்வாதிகளை நினைவூட்டியது. அறம் பற்றி மேடையில் வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால் ஊழல்புரிவதில் மன்னராக இருப்பார்கள். அவர்களை நினைவூட்டியது,ம நாட்டு நடப்பைச் சுட்டியது.
துடிக்கிறது மனதுகர்ப்பிணிகளை நினைத்து
குண்டும் குழியுமான சாலை!
உண்மை தான். கர்ப்பிணிப் பெண் சாலையில் சென்றால் மருத்துவமனை செல்லுமுன் பிரசவம் நடந்துவிடும். தானியீல் எழுதி வைத்திருப்பார்கள். பிரசவத்திற்கு இலவசம் என்று, இனி சாலையிலும் எழுதி வைக்கலாம், பிரசவம் இலவசம் என்று. அந்த அளவிற்கு தமிழகத்தின் சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளன. அதனை காட்சிப்படுத்தி உள்ளார் ஹைக்கூவின் மூலம்.
இருண்ட மனம்ஒளியேற்றும்
புத்தகம்!
மனித குலத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பான புத்தகத்தின் பயனை குறைவான சொற்களின் மூலம் நிறைவாக உணர்த்தி உள்ளார்.
வாழ்நாள் நீட்டிப்பு!மனதிற்கோர் மாமருந்து
சிரிப்பு!
தேசப்பிதா காந்தியடிகள் ‘நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லை என்றால் நான் எப்போதே தற்கொலை செய்து இருப்பேன்’ என்றார். இயந்திரமயமான உலகில் மனதிற்கு இதம் தருவது சிரிப்பு. நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நூலாசிரியர் கவிஞர் முனைவர் ச. தமிழரசன் எழுதியுள்ள எல்லா ஹைக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன். நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். ஹைக்கூ உலகிற்கு ஒரு புதிய வரவு நல்வரவாகட்டும். இலக்கிய உலகம் இனிதே வரவேற்கும். அன்பான வேண்டுகோள். இனிவரும் காலங்களில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்திடுங்கள்
- .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[url=https://tamil.pratilipi.com/search?q=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE .%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF]https://tamil.pratilipi.com/search?q=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%20.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF[/url]
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum