தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby அ.இராமநாதன் Yesterday at 5:37 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
மணல் நதியும் சில கூழாங்கற்களும்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
மணல் நதியும் சில கூழாங்கற்களும்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மணல் நதியும் சில கூழாங்கற்களும்!
ஹைக்கூ கவிதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை – 600 011. பக்கம் : 88, விலை : ரூ.90.
*****
நூல் ஆசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு கூட்டுத் தொகுப்புகளும் சேர்த்து இது 10வது ஹைக்கூ கவிதை நூல். 1998ஆம் ஆண்டு தொடங்கிய ஹைக்கூ பயணம் 2020 வரை தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது.
தாய் தந்தையருக்கும் தமிழை நேசிக்கும் வாசிக்கும் அனைவருக்கும் நூலை காணிக்கையாக்கி இருப்பது சிறப்பு. கவிஞர் சென்னிமலை தண்டபாணி, கவிஞர் க. அம்சப்ரியா மற்றும் இந்த நூலை வடிவமைத்த கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர்.
மூங்கில் தவம்
கலைந்தது
வழியும் குழலின் இசை!
கவித்துவம் சப்பானிய கவிஞர்களை மிஞ்சும் வண்ணம் இயற்கையை ரசித்து ருசித்து வடித்த ஹைக்கூ நன்று.
அமாவாசை இரவு
நிலவின் தரிசனம்
அவள் கடந்த கணம்!
இந்த ஹைக்கூ பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஹைக்கூவை நினைவூட்டும் விதமாக இருந்தது.
அமாவாசையன்று
நிலவு
எதிர்வீட்டு சன்னலில்! ( கவிஞர் இரா .இரவி )
ஒத்த சிந்தனையாக சில நேரங்களில் அமைவது உண்டு.
நான் சிலையாக
என்னை செதுக்கியது
காலம்!
உண்மை தான். தேவையற்ற பகுதிகளை நீக்கிட கிடைக்கும் சிலை தேவையற்ற சொற்களை நீக்கிட பிறக்கும் ஹைக்கூ கவிதை! பக்குவப்பட்ட மனிதனாக நம்மை மாற்றி விடும் காலம்!
ஊதுபத்தி விற்ற பணம்
வாசம் வீசுகின்றது
விழியற்றோர் உழைப்பு!
பார்வையற்றோர் பலர் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தொழில் செய்து பிழைத்து வருவது கண்கூடு.
உதிரும் இலைகளில்
பறக்கும் சில இலைகள்
அட பச்சைக்கிளி!
இலைகளை பச்சைக்கிளி என்கிறாரா? பச்சைக்கிளிகளை இலைகள் என்கிறாரா? கண்ட காட்சியை காட்சிப்படுத்தி, இயற்கை ரசனையை ஹைக்கூ கவிதையாக்கி உள்ளார். நம் மனக்கண் முன்னே பச்சை இலைகளும் பச்சைக் கிளிகளும் வந்து போவது உறுதி!
ஒரே கருத்தை மையப்படுத்தி இரண்டு ஹைக்கூ வந்துள்ளன. அடுத்த பதிப்பில் தவித்திடுங்கள்.
சாலை விரிவாக்கம் நெடுஞ்சாலை விரிவாக்கம்
வெட்டுண்ட மரங்கள் கூடிழந்த பறவைகள்
கூடு இழந்த பறவைகள் உருமாறிய ஊர்!
சிந்திக்க வைக்கும் பல நல்ல ஹைக்கூ கவிதைகள் நூலில் இடம்பெற்றுள்ளன பாராட்டுக்கள்.
கூண்டுக்குள் சிங்கம்
சில சமயம் வாலாட்டுகிறது
வீசப்படும் இறைச்சிக்கு!
கம்பீரமான சிங்கம் கூட சிறையில் அடைபட்டதும், போடப்படும் இறைச்சிக்காக சிங்கம் என்பதை மறந்து நாயாக மாறி வாலாட்டுகின்றதாம். சூழ்நிலைக் கைதியாக மாறிவிட்ட சுயநல மனிதர்களையும் குறியீடாகக் கொள்ளலாம்.
மாதக் கடைசி
யாரிடம் கையேந்துவது
சில்லறையோடு பிச்சைக்காரர்!
உலகமயம் தாராளமயம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்-களுக்கு நம் நாட்டை தாரை வார்த்து மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர். மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வலுக்கட்டாயமாக தள்ளி வருகின்றது. இன்றைய சூழ்நிலை ஏழ்மையை மிக அழகாக படம்பிடித்துக் காட்டி உள்ளார். பாராட்டுக்கள்.
இலையில் கை வைக்கையில்
காதில் ஒலிக்கிறது
கிடாவின் கடைசி கதறல்!
கிராமங்களில் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட கிடா என்று வீட்டில், செல்லமாக வளர்ப்பார்கள். கோயில் திருவிழா வந்து விட்டால் வளர்த்த கிடாவை, அந்த ஆட்டை பலிகொடுத்து விடுவார்கள். அப்படி கறி விருந்து சாப்பிடும் போது வெட்டப்பட்ட ஆட்டின் கடைசி சத்தம் காதில் ஒலிப்பதாக உள்ளத்து உணர்வுகளை ஹைக்கூவாக வடித்தது சிறப்பு.
பற்றி எரியும் மூங்கில் காடு
சாம்பலானது
எத்தனை புல்லாங்குழல்!
நல்ல கற்பனை. இந்த ஹைக்கூ புகழ்பெற்ற அமுதபாரதி அவர்களின் ஹைக்கூவை நினைவூட்டியது.
இந்த காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்! (அமுதபாரதி)
பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கோணங்களில் சிந்தித்து ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூலாசிரியர் நிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுகள். பெயரிலேயே நிலா இருப்பதால் ஹைக்கூ கவிதைகளிலும் நிறைய நிலாக்கள் வந்துள்ளன.
விற்கப்பட்டு விட்டது குதிரை
மனதிற்குள்
குளம்படி ஓசைகள்!
குதிரையை விற்றவனின் மனநிலையிலிருந்து சிந்தித்து வடித்த ஹைக்கூ சிறப்பு.
குடல் வெந்து இறந்தவன்
படையல்
மீண்டும் சாராயம்!
குடியால் குடல் வெந்து செத்தவனுக்கு படையலாக குடியை வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் சிலர். அதனைக் காட்சிப்படுத்தி உள்ளார்.
நாய்களின் கூட்டத்தில்
கலவரம்
வீசியெறிந்த எலும்புத் துண்டுகளால்!
நாய்களை மட்டுமல்ல, இன்றைய சில மனிதர்களையும் குறிப்பிடுவதாகவே தோன்றுகிறது. பாராட்டுக்கள்.
குறிப்பு : சில இடங்களில் எழுத்துப்பிழை உள்ளன. அடுத்த பதிப்பில் பிழை நீக்கி விடுங்கள்.
--
.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2642
Points : 6362
Join date : 18/06/2010
Similar topics
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கண்ணஞ்சல் (ஹைக்கூ கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் மல்லிகை தாசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» எரிதழல்! ஹைக்கூ கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் நாகை ஆசைத்தம்பி . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வான்மழை ஹைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கார்முகிலோன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum