தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாரதி கனவை நனவாக்குவோம்- ( கவிஞர் இரா.இரவி

2 posters

Go down

பாரதி கனவை நனவாக்குவோம்- ( கவிஞர் இரா.இரவி Empty பாரதி கனவை நனவாக்குவோம்- ( கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Sat Jun 26, 2010 11:57 am


பாரதி கனவை நனவாக்குவோம்- ( கவிஞர் இரா.இரவி) editor www.kavimalar.com

எட்டயபுரத்தில் பிறந்து பாட்டுப் திறந்தால் எட்டாத உயரம் சென்றவன் மகாகவி பாரதி. அவன் இன்று இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே என மீண்டும் பாடி இருப்பான். ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அடையும் முன்னே தீர்க்க தரிசனமாக பாடினோமே, இதுவா ஆனந்த சுதந்திரம்? என்று நொந்து இருப்பான். வெள்ளையனிடமிருந்து பெறப்பட்ட இந்த நாடு அரசியல் கொள்ளையர்களிடம் அல்லவா மாட்டிக் கொண்டது என வருந்தி இருப்பான்.

இன்றைக்கும் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் ஏராளம். குடியிருக்க வீடுகள் இன்றி நடைபாதையில் வாழும் மக்கள் ஏராளம். வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. பாரதி அன்று பாடினான். ” தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஐகத்தினை அழித்திடுவோம்” என்று. ஆனால் இன்று எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடி வதங்குகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. வறுமையை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகளோ அவர்களது வறுமையை ஒழித்துக் கொண்டு கோடிகளை கொள்ளையடித்துச் சேர்த்து விடுகின்றனர். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை பல வழிகளில் இந்தியாவை சுரண்ட அனுமதித்து விட்டனர். உள்ளூர் தொழிற்சாலைகளை மூடி விட்டனர். பலர் வேலையையும், வாழ்க்கையையும் இழந்து விட்டனர். விளைநிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு விவசாயி வயிற்றில் அடித்து விட்டனர்.

அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. “சாதிகள் இல்லையடி பாப்பா” எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன் டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.

ஊழலை ஒழிக்க என்ன வழி என்று உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம் காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம். கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம். விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.

சுனாமி பேரலையின் காரணமாக பல உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம். இதற்கு என்ன காரணம்? நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக உறிஞ்சவது. பாறைகளுக்கு வெடி வைத்து தகர்ப்பது. பாலீத்தீன் பைகளை அதிகம் பயன்படுத்துவது. தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் கலப்பது. மரங்களை வெட்டி வீழ்த்துவது, இப்படி அடுக்கடுக்காக இயற்கையை அழிக்கும் பணியிணை மனிதன் செய்ததன் காரணமாக இயற்கைச் சீற்றம் வந்தது. சுனாமி வந்தது. நிலநடுக்கம் வந்தது.

மகாகவி பாரதி ஓர் இயற்கை நேசன். இயற்கையை ரசித்துப் பாடியவன். அவருக்காக விழா எடுக்கும் இந்த வேளையில் இயற்கையை நாமும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையை அழிப்பது, சிதைப்பது முதலான இது போன்ற செயல்களை அறவே நிறுத்தி விட வேண்டும். வருங்கால சந்ததிகள் வளமாக வாழ தொடர்ந்து மழை கிடைக்க முடிந்த வரை இயற்கையை பேணிக் காப்போம். புதிய மரங்கள் நடுவோம், மழை பெறுவோம்!

மனிதரில் ஏற்றத் தாழ்வு இல்லை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்வது பாவம் என்று பாடியவன் பாரதி, எனவே பாரதியின் வரிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். சாதி, மத மோதல்களுக்கு முடிவு கட்டுவோம். சக மனிதனை மனிதனாக மதிப்போம். சமதர்ம, சமத்துவ சமுதாயம் சமைப்போம். உதிரத்தின் நிறம் சிவப்பு என்பதை மோதித் தான் உணர வேண்டுமோ? பகுத்தறிவை பயன்படுத்தாமல் சாதி, மத மோதல்களின் காரணமாக விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவதை தடுப்போம். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இழந்த உயிரை திரும்பத்தர இயலுமா? முடியாது. மனித உயிரின் மகத்துவத்தை உணர்ந்து எந்த நிலையிலும் வன்முறையின்றி பேச்சுவார்த்தையின் மூலமே சமரசம் காண்போம். காட்டுமிராண்டித்தனமான மோதல்களையும், தாக்குதல்களையும் வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்.

கவிஞன் வாக்கு பொய்க்காது என்று பொன்மொழி உண்டு. அந்த பொன்மொழி பொய்க்காமல் காக்க வேண்டியது நமது கடமை. மகாகவி பாரதியின் கவிதை வரிகள் பொய்க்கவில்லை மெய் தான் என உலகிற்கு உணர்த்திட நாம் அனைவரும் ஓரணியில் சேருவோம். தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்வோம். தமிழின் பெருமையை உலகிற்கு பறை சாற்றிடுவோம். தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மனித நேயம் காப்போம். சாதி,மத வெறி மாய்ப்போம்.

சோறு பொங்க செல்லம்மா வைத்திருந்த அரிசியை, சிட்டுக்குருவிகளுக்குப் போட்டு பசியாற வைத்து மனம் மகிழ்ந்தவன் பாரதி. இன்று தொழிற்சாலை பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசுபட்டதன் காரணமாக சிட்டுக்குருவி இனமே அழிந்து வருகின்றது. நவீன யுகம் விஞ்ஞான யுகம், இயந்திர மயம் என்ற பெயரில் பெருகி வரும் தொழிற்சாலைகள் கக்கம் நச்சுப் புகை மற்றும் வெளியேறும் கழிவுகளால் வரும் தீங்க இவற்றால் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைந்து ஓசோனில் ஓட்டை விழுந்தது. அந்த ஓட்டை பெரிதாக காரணமாக அமைகின்றது. அதிக வெப்பத்தின் காரணமாக மழை பொய்த்தது. மழை பொய்த்ததின் காரணமாக விவசாயம் பொய்த்தது. அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பகிர்வில் சண்டை, தண்ணீரின் காரணமாக ஒரு உலகப் போர் வருமென்று ஆய்வுகள் சொல்கின்றன.

இன்றைக்கு பாலின் விலையை விட தண்ணீரின் விலை அதிகம் என்ற அவல நிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆற்று நீரை கொள்ளையடித்து பாட்டிலில் நிரப்பி விற்று கோடிகளை கொள்ளையடித்து செல்கின்றனர். குடிமக்களுக்கு சுத்தமான நீரை வழங்க வேண்டிய கடமை அரசிற்கு உண்டு. ஆனால் அவர்கள் செய்வதில்லை. அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்வதற்கும் பிற கட்சியினரை வசை பாடுவதற்குமே சேரம் போதவில்லை பிறகு எப்படி மக்கள் குறைகளை தீர்ப்பார்கள். குளிர்பானம் என்ற பெயரில் பூச்சி மருந்துகளைக் கலந்து மக்களுக்கு புற்று நோயை பரப்பி வரும் பணியினையும் பன்னாட்டு நிறுவனங்கள் எந்த வித தடையுமின்றி அமோகமாக செய்து வருகிறார்கள். இவர்கள் தரும் பணத்திற்கு மயங்கி நடிகர், நடிகைகள், ஊடகங்கள் மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்து மக்களை முட்டளாக்கி வருகின்றனர்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தினான் பாரதி. ஆனால் இன்று அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தரவே மறுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கினாலும் துச்சமாக மதித்து தான் தோன்றித்தனமாக நடந்து வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை இந்தியா என்பது குழந்தைகளின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் தான் உள்ளது. குழந்தைகளின் உள்ளத்தில் பதியுமளவிற்கு அண்டை மாநிலங்கள் நடந்து கொள்வதில்லை. இரண்டு நாடுகள் கூட சமரசமாக தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் தீராத சண்டை, ஏன் இந்த இழிநிலை? எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பொதுநலம் மறந்து சுயநலம் பிடித்து ஆடுவதேன். மனிதநேயம் என்பது மனித மனங்கள் மறந்து போனது ஏன்? பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல்வடிவம் தர வேண்டாமா? சிந்திக்க வேண்டும்.

என்ன வளம் இல்லை? நம் நாட்டில் வளங்களும் இருந்தும் இன்னும் நம்மால் ஏன்? வறுமையை ஒழிக்க முடியவில்லை. சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. மகாகவி பாரதியின் 125 வது ஆண்டு விழா நடக்க இருக்கும் இந்த காலத்திலாவது பாரதி கண்ட கனவை நனவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டாமா? சிந்திப்போம் செயல்படுவோம்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010

Back to top Go down

பாரதி கனவை நனவாக்குவோம்- ( கவிஞர் இரா.இரவி Empty Re: பாரதி கனவை நனவாக்குவோம்- ( கவிஞர் இரா.இரவி

Post by eeranila Mon Jun 28, 2010 1:43 pm

பாரதி சொன்ன கருத்துக்களையெல்லாம் அழகாக சொன்னீர்கள், ஆனால் ஒன்றை தவிர அது காதல், நான் திருமணத்துக்கு முந்தைய காதலை நான் சொல்லவில்லை திருமணத்துக்கு பிந்தைய காதலை சொல்லுகிறேன், பாரதி தன் மனைவி செல்லம்மாளை காதலித்தை அவரின் கவிதை வரிகளில் காணலாம். இன்றைய குடும்பங்களில் கணவன், மனைவி இடையே இத்தகைய காதலின் பற்றாக்குறையால் தான், மன உளைச்சல்களும், விவாகரத்தும் நாட்டில் பெருகிய வண்ணம் உள்ளது காதலித்து திருமணம் செய்த தம்பதியர் கூட திருமணத்துக்கு பின்பு காதலிப்பதில்லை, காதலித்தல், விட்டுக்கொடுத்தல், புரிந்துக்கொள்ளுதல், ஒன்றுபடுதல் என்பது இல்லற வாழ்க்கைக்கு இன்றியமையாத பாலமாகும், திரும
ணத்துக்கு முன்பு காதலிக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அதில் நாகரீகமும் இல்லை, ஆனால் திருமணத்துக்கு பின்பு கண்டிப்பாக காதல் மலர்ந்தே ஆக வேண்டும் தம்பதியர்களுக்கிடையில் அது தான் பூரணமான ஒரு இல்லற வாழ்வை தரும்.
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

பாரதி கனவை நனவாக்குவோம்- ( கவிஞர் இரா.இரவி Empty NANDRI

Post by eraeravi Thu Jul 01, 2010 12:09 pm

வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com :P
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010

Back to top Go down

பாரதி கனவை நனவாக்குவோம்- ( கவிஞர் இரா.இரவி Empty Re: பாரதி கனவை நனவாக்குவோம்- ( கவிஞர் இரா.இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum