தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை

Go down

கட்டுரைக் களஞ்சியம்!   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை Empty கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை

Post by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

கட்டுரைக் களஞ்சியம்!


நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!


நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு
(ஆ.முத்துக்கிருட்டினன்)
எழுத்தாளன்.
திருப்பாலை,மதுரை.
இருப்பு சென்னை.

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017. பக்கங்கள் : 206 விலை : ரூ.200 தொலைபேசி 044-24342810, 24310769. மின்னஞ்சல் Vanathipathippakam@gmail.com


. கட்டுரைக் களஞ்சியம் குறும்பா கவிஞர் இரா.இரவியின் 31 வது நூல். இந்நூல் தமிழ் செம்மல் விருதாளர் இரா.இரவி அவர்களின் முதல் கட்டுரை நூல். வானதி பதிப்பகம் கவிஞரின் படைப்புகளின் பதிப்புபணியை 12இல் தொடங்கி 31வது இந்நூல் வரை நீள்வது சிறப்பு. இந் நீட்பின் நன்றியாக கட்டுரை களஞ்சியத்தில் “வானதி பதிப்பகமும்” கட்டுரையாக்கி கெளரவப் படுத்தியுள்ளார் நூலாசிரியர். புத்தகத்தில் 192 பக்கங்களில் 38 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழக முன்னாள் தலைமைச் செயலர் திருமிகு வெ.இறையனப்பு அவர்களின் வாழ்த்துரை, திரு. பழனிக்குமார் இ.ஆ.ப. அவர்களது மதிப்புரை, திரைப்பட பாடல் ஆசிரியர் திரு பா.விஜயின் வாழத்துமடல், நூலாசிரியரின் என்னுரை இவைகள் பொருளடக்கத்திற்கு முன்பு இடம் பெற அணிந்துரை இல்லாமல் நவம்பர் 2023இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. கவிஞரது “அம்மாவைப் போற்றுவோம்” கவிதை வரிகளுக்கு செளராஷ்ட்ரா பள்ளியில் நடந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு” காலகேந்திரா நாட்டியப் பள்ளி இயக்குநர் திருமதி.வம்சினி மகாதேவன் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ் ஒளி நகலும், நூலாசிரியரது படைப்பு பட்டியலும் பின் பக்கத்தில் இடம்பெற நூல் நிறைவு கண்டுள்ளது.

திரு.கக்கன் அவர்களது நேர்மையை எடுத்துரைக்கும் கட்டுரை,கவிஞர் கவிதை என இரண்டு கக்கனார்ஜி பற்றியது..அய்யா அப்துல் கலாம் பற்றி இரண்டுகட்டுரைகள்(6&7 )
பகிர்கின்றன். கட்டுரை 14 கவிஞர் பா.விஜய்யின் தொடர்பான செய்தியும் கட்டுரை 18 பா.விஜய் அவர்களுக்கு தேசிய விருது பெற்றுதந்த “ஓவ்வொரு பூக்கள்” திரைப்பாடல் ஆய்வாகவும் உள்ளது. பொய்யா மொழிப் புலவனின் அறக் கருத்துக்களை கட்டுரை 5,12,20,21,25,26 ஆக ஆறு கட்டுரைகள் சொல்கின்றன.தமிழின் பெருமையை 18,19,22,23,24 என அய்ந்து கட்டுரைகள் பேசுகின்றன. இதில் கட்டுரை 23 தமிழ் வளர்ச்சிக்கு “ஹைக்கூ” பங்களிப்பு பற்றியது.திருவாளர்கள் திரு.வி.க.வின் சீடர் மு.வ., குன்றக்குடி 45 வது சன்னிதானம் குன்றக்குடி அடிகளார்,தமிழ்த் தேனீ  பேரா.இரா.மோகன், உலக திருக்குறள் பேரவை நிறுவனர் கல்லூரி விடுதி உரிமையாளர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்,குரோலைசையால் திரை உலகில் கோலோட்சிய மதுரைக்கார டி.எம்.எஸ்.,ஆட்சிப்பணியில் இலக்கியச் சிந்தனையில் தோய்ந்து படைப்பாளியாக வலம்வரும் முதுமுனைவர்.வெ.இறையன்பு , மதுரை நகைச்சுவை மன்ற பொறுப்பாளர் பேரா.கு.ஞானம்பந்தன் , நடன நங்கையான மதுரை திருநங்கை நர்த்நகி நடராஜ், தமிழ்நாட்டில் தொன்மை நகரங்களில் அழியாது உயிர் துடிப்போடு இயங்கும் தூங்காநகரமென சிறப்புபெயர்கொண்ட மதுரையின் பெருமையைக் கூவுதல், முண்டாசுக் கவிஞனது தமிழ் கனவு நனவாக ஆசை கொண்டு விவரித்தல், திரைப்பட பாடல்களில் விஞ்சி நிற்பது விழிப்புணர்வு பாடல்கள் அணியில் பேசிய தொகுப்பு, சாலவும் நன்று நூலகம் செல்வது என அறிவுக் கோயிலாக நூலகத்தை போற்றிடல்,
நகைச்சுவை தொகுப்பாக சிரித்து வாழ வேண்டுதல், நாட்டின் விடுதலை களத்தின் ஆனந்த சுதந்திர அடைந்து விட்டாதாக பாடிய பாரதியாரின் பாடல் பற்றிய நோக்கு, நம்பிக்கை வாழ்வின் வெற்றிக்கான கருவி அதற்கு ஆதாரமாக இருக்க மனவளம் தேவையென தெரிவித்தல், நான் எனும் அகந்தையை ஒழித்திட தனி மனிதர்களுக்கு நல்வழி காட்டல், பிரமச்சாரியாக உள்ளோர், திருமணத்திற்கு முன்பு அரைமனிதர்களாக உள்ளோர் மணசெய்து கொண்டால் முழு மனிதர் ஆகுதல் எனும் கருத்து,வானதி பதிப்பாக உரிமையாளர் இராமநாதன் பற்றி இயம்புதல், ஒன்பது ஆத்திச்சூடியின் ஒற்றை வரிகளின் வாயிலாக தன்னம்பிக்கை பெற இயலுமென தெளிவு படுத்தல் போன்று தனிக்கட்டுரைகள் 21 என மொத்தம் 37 கட்டுரைகளும் ஒரு கவிதையும் இந்நூலில் மணம் பரப்புகின்றது.

மதிப்புரைக்காக நூலினை படித்ததில் சுவைத்த தேன் துளிகளில் ஒன்றிரண்டை கூறி கேட்போர் முழுமையாக படித்திட,நூலினைத் தேடி வாங்கினால் அது எனது நூல் மதிப்புரைக்கு கிடைத்த அங்கீகாரம். இதோ  சில ......

வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு தேனீர் தேவைக்கு பால் மாடு வாங்கி வந்த நண்பரிடம் ஒப்புகைச் சீட்டு வாங்கி அவர் அனுப்பியது, சீட்டு வாங்கி வந்த நணபரை வருவாய்தலை ஒட்டி வர அலையவிட்டது, பணமுடை போக்கிட வைப்புத் தொகையில் போட தந்த நிதியில் கொடுத்ததைக் கேட்காத தேர்தல் செலவு கைமாத்துத் தொகையைத் தேடிச் சென்று நண்பரிடம் கொடுத்திடல், உடன் பிறந்தவர் விபத்தில் கை விரல் ஊனம் பெற்றவர் என உண்மையை கேட்காமல் சொல்லி பெற்ற காவல்பணியை தம்பிக்கு வேண்டாமென்று தடுத்து நிறுத்தியது இவைகள் கக்கன் அய்யாவின் நேர்மைக்கான பதிவுகள். அப்துல் காலம் அய்யாவிற்கு  வாழ்த்துக் கடிதம் அனுப்பி 11 ஆண்டுகளுக்குப் பின் இராமேஸ்வரம் வந்தபோது  மடல் பெற்றதும் நன்றி பதிலுரைத்தது, முதல் குடிமகன் சாப்பிட்ட உணவில் உப்பு இல்லாத்குறையை உணர்ந்து வருத்திய சமையல் பணியாளரை திட்டாத பெருந்தன்மை, குளிர் நடுங்கிய மாளிகைப் பணியாளர்களுக்கு குளிர் தடுப்பு ஆடை வழங்கியது, தனக்கு காலணி அணிய காலுறை மாட்டும் பணியாளரை அப்பணி செய்ய விடாமல் மாற்றுப் பணி வழங்கிய மனிதாபிமான மனதுக்குச் சொந்தக்காரர் அப்பதுல் கலாம் அய்யாவின் சிறப்பினை கூறும் செய்திகள்.
 தனது குரு துப்பிய விதையில் முளைத்த மாதுளை மரத்தை வெட்டவிடாமல் நிறுத்திய குரு மரியாதை, முதல் நாவலின் பெயர் முருங்கை மரம் என தான் இட்ட பெயரை செந்தாமரை என்பதே சரியான தலைப்பு என உரைத்த தன் மாணவனின் கருத்துக்கு செவிமடுத்து சூட்டிய பரந்த மனதுக்காராக மு.வ. அவர்களைப் பற்றிய தகவல்கள். இலக்கிய உலகில் இரா.இரவியின் ஞானத் தந்தை மனித தேனீ பேராசியரின் சுறுசுறுப்பினை மகிழ்வோடு நினைவுகூறி வந்து, தன் குரு தனது கண்முன்னே மரணமுற்ற நொடிகளை சொல்லி நெக்குரும் நெகிழ்வு பதிவுகள்.

சன்னிதானங்கள் கடல் கடந்த செல்லக் கூடாது எனும் பழமைக் கருத்தியலை தூக்கி எறிந்து பயணித்த துணிவு, பல்லக்கில் பயணிக்க மாட்டேன் என மனிதனை மனிதன் சுமக்கும் துயரம் போக்கிய பெரிய மனதுக்கு சொந்தக்காரராக குன்றக்குடி அடிகளார் பற்றிய தகவல்கள். மணி மெழியனாரின் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க எடுத்த முன்முனைப்பு, வளரும் கலைஞர் விருது வழங்கி கெளரவித்த பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் , எளிய குடும்பத்தில் மதுரையில் பிறந்து தமிழ் நெஞ்சங்கங்களை கவர்ந்த பிண்ணனிப் பாடகர் டி.எம.எஸ். க்கு பிறந்த மண்ணில் வெண்கல சிலை  வைத்து பெருமைப்படுத்தியுள்ளதை சொல்லியுள்ளது. கலைமாமணி திருநங்கை மதுரை நடராஜ் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினராக உள்ளார் எனும் பெருமை பேசும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது.
நூலாசிரியர் “புலிப்பால் இரவி” பட்டம் சூட்டி சிறப்பித்தவர் முது முனைவர் திருமிகு. வெ.இறையன்பு அவர்கள். அய்யா அப்துல்கலாம் சென்னையில் இறையன்பு அவர்களின் படைப்புலகம விழாவில் பங்கேற்க விழா நடைபெற ஒருவாரம் இடைவெளி இருந்த போது ஒப்புதல் வந்தது. இறையன்பு அவர்களின் நூல்களை கலாம் அவர்களுக்கு  கவிஞர் இரவி சேர்த்திட்டார். இரா் இரவியின் இத்தீவிர முயற்சி கண்டு அகமகிழ்ந்து இந்திய ஆட்சிப் பணி ஆளுமை இறையன்பு சுற்றுலாத்துறை உதவி அலுவராக பணியாளர் குறும்பா கவிஞருக்கு கூட்டிய மகுடமே “புலிப்பால் இரவி”.
தகவல்,செய்தி களஞ்சியமாக உள்ள கட்டுரை களஞ்சிய நூலினை மதிப்புரை செய்திட வாய்ப்பு நல்கிய மதுரை வாசகர் வட்டத்துக்கு, கூடி உரையாட இடமளித்து உதவியை அல்அமீன் பள்ளி நிர்வாகத்திற்கும், மதிப்புரை நிகழ்வில் பங்கேற்று வாழத்துரை வழங்குவதோடு புகைப்படத்துடன் செய்தி நாளிதழ்களில் வெளியிட்டு பங்கேற்பாளர்களை சிறப்பிக்கின்ற பெருமனதுக்கார் தலைமை ஆசிரியர் ஷேக் நபி அவர்களையும், பங்கேற்று கருத்துரை வழங்கிய வாசகர் வட்ட தோழர்கள், கலந்து கொண்டு வாசகர் வட்ட மொட்டுக்களான மாணவமணிகளை ஆகிய அனைவருக்கும்  நன்றி கூறி மகிழும்.....
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum