தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
2 posters
Page 1 of 1

ஊழலை எதிர்த்து உண்ணாவிரதமிருக்கும் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நாடு
முழுவதும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், சமூக
ஆர்வலர்கள் என பல தரப்பட்ட மக்கள் ஊழலுக்கு எதிராக திரள ஆரம்பித்துள்ளனர்.
இந்த திடீர் எழுச்சி, மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே, மூன்றாவது நாளாக தனது
உண்ணாவிரதத்தை டில்லியில் தொடர்ந்து வருகிறார். ஜந்தர் மந்தர் பகுதியில்
மேடை அமைக்கப்பட்டு, அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில்,
அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு
வருகிறது. இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் உள்ள
இந்தியர்களும் அவர் போராட்டத்துக்கு ஆதரவு தருகின்றனர். ஹசாரேக்கு குவிகிற
ஆதரவை கண்டு, நேற்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் அரசு சார்பில்
பேச முன்வந்தார். ஹசாரே சார்பில் சுவாமி அக்னிவேஷ், அமைச்சர் கபில் சிபலை
சந்தித்து பேசினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
"லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம்
பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சதவீதம் பேர் இருக்க
வேண்டும். அரசில் நடக்கும் ஊழல்கள் பெருகி விட்டன.எனவே, மசோதா தயாரிப்பு
குழுவில் 50 சதவீதம் பேர், பொதுமக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்'
என்பது ஹசாரே தரப்பு கோரிக்கை. இதற்கு மத்திய அரசு சார்பில் பேசிய அமைச்சர்
கபில் சிபல் மறுப்பு தெரிவிக்கவில்லை. காரணம் திரும்ப திரும்ப
அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் சட்டவரையறை மற்றும் முடிவுகள் குறிப்பிட்ட
விஷயத்தை முன்னிறுத்தாமல் அதை நீர்த்து போக செய்யும் என்ற கருத்தில் பேச்சு
நடத்திய அக்னிவேஷ் உறுதிபட தெரிவித்தார்.
அடுத்து, இந்த மசோதா தயாரிப்பு குழுவுக்கு, நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி தலைவராக இருப்பார் என்று அரசு தரப்பு கூறியது. அதற்கு, கூடவே
கூடாது என, மக்கள் சார்பில் உள்ள பொதுக்குழு மறுப்பு தெரிவித்தது. மேலும்,
ஹசாரே தான் அந்த குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டுமென்றும் பொதுக்குழு
வலியுறுத்தியது. ஆனால், ஹசாரே கூட லோக்பால் வரைவு மசோதா உருவாக்கும்
குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி இருக்கலாம் என்று கருத்து
தெரிவித்தார். பிறகு லோக்பால் மசோதாவை, வரும் ஜூன் 20ம் தேதிக்கு முன்பாக
தயாரித்து முடித்து, வரும் மழைக்கால கூட்டத்தொடரிலேயே பார்லிமென்டில்
தாக்கல் செய்திட வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு
கபில் சிபல், "மே மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. அதனால்,
கால அவகாசம் இல்லை என்றும், மே 13ம் தேதி வரை லோக்பால் மசோதாவை தொடவே
முடியாது' என்றார்.
இதற்கு பதிலாக அக்னிவேஷ் "சட்டசபை தேர்தலை காட்டி லோக்பால் மசோதாவை
தள்ளிப்போட அரசு முயற்சிக்கிறது. அதற்கு இடம் தர முடியாது. லோக்பால்
மசோதாவை விரைந்து தயாரித்து தாக்கல் செய்தால் தான் ஆதரவு தருவோம். ஓட்டுப்
போடுவோம் என, இம்மாநில மக்கள் உறுதியுடன் கிளர்ந்து எழுந்து நிற்க
வேண்டும். அப்போது தான் அரசியல்வாதிகளுக்கு அறிவு வரும்' என கூற,
பொதுக்குழு அதை ஆமோதித்தது. அதேபோல ஹசாரே தான் தலைவராக இருக்க வேண்டும் என,
இந்த இயக்கத்தின் பொதுக்குழு வலியுறுத்தியது. ஹசாரே உண்ணாவிரதப் பந்தலில்
உள்ளவர்களே பொதுக்குழுவாக கருதப்படுவதால், அரசு அதை ஏற்கவில்லை என்றும்,
மீண்டும் அக்னிவேஷுடன் பேச கபில் சிபல் காத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இறுதியாக பேசிய அன்னா ஹசாரே, "நமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்
கொள்ளப்படாதவரையில் நான் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன். உறுதியுடன்
தொடருவேன்' என்று மட்டும் கூறினார்.
"அர்த்தமில்லாத பேச்சுக்கள் பயனில்லை': அன்னா ஹசாரே உண்ணாவிரதம்
இருக்கும் ஜந்தர் மந்தர் பகுதி முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கடந்த இருநாட்களில் அவர் எடை 1.5 கிலோ குறைந்திருக்கிறது. சிறிது ரத்த
அழுத்தம் கூடியிருக்கிறது. ஆனால், அழுத்தம் திருத்தமாக அரசிடம் மக்கள்
எதிர்பார்ப்பது என்ன என்பதை அவர் நிருபர்களிடம் கூறினார்.
ஹசாரே கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். அதை தட்டிக்
கழிக்கவில்லை. அதேசமயம் அதிகார மையத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்
சோனியா அல்லது பிரதமர் மன்மோகன் சிங் என்றால் சரி. முக்கிய முடிவுகளை
எடுக்க முடியாத கமிட்டிகளிடம் பேசி என்ன பயன்? அமைச்சரவைக் குழு
என்கிறார்கள். அவர்களா முடிவு எடுக்கின்றனர்? லோக்பால் மசோதா கொண்டு
வரவில்லை என்றால், அது மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க வழியாகும். நான்
ஒன்றும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தூண்டுதலில் இதை மேற்கொள்ளவில்லை.
சமுதாயத்திற்கு, கடந்த 35 ஆண்டுகளாக நான் தொண்டாற்றுகிறேன். நான் என்
வீட்டிற்கே சென்றது கிடையாது. எனக்கு மூன்று சகோதரர்கள். அவர்கள்
குழந்தைகளின் பெயரும் எனக்கு தெரியாது. எனக்கு வங்கியில் பணம் ஏதும்
கிடையாது. நான் பக்கத்தில் வைத்திருக்கும் ஜோல்னா பையில், ஏதாவது ஐந்து
அல்லது 10 ரூபாயை போடச் சொல்லி மக்களிடம் கேட்பேன். அது தான் என் செலவுக்கு
பணம். காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் எனக்கு என்ன வேலை? அவர்கள் இந்த
நாட்டுக்கு அதிகம் பணியாற்றியதாக கூறினால், ஏன் நாட்டில் இன்று இவ்வளவு
பிரச்னை? எல்லா கதவையும் அடைக்கும் போது சத்யாகிரகம் தவிர வேறு வழி இல்லை.
பொதுவாக என் மேடையில் அரசியல்வாதிகளை ஏற்றுவதில்லை. காரணம் அதில் அவர்கள்
பயன் பெற முயற்சிப்பர். இவ்வாறு ஹசாரே கூறினார். ஹசாரேயின் உடல்நிலையை,
டாக்டர்கள் அவ்வப்போது கண்காணித்த வண்ணம் உள்ளனர்.
பிரதமர் அவசர ஆலோசனை: ஹசாரே உண்ணாவிரதம் குறித்து பிரதமர்
மன்மோகன் சிங், அமைச்சரவை சகாக்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் கபில்சிபல் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து
கொண்டனர்.
- நமது டில்லி நிருபர் -
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
வெற்றி நமதே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?
» சிதம்பரம் : மருத்துவ மாணவர்களின் போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை
» மன்மோகன் அல்லது ராகுல் வர வேண்டும் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு கெடு
» ஹசாரே போராட்டத்துக்கு அனுமதி ரத்து! டெல்லியில் திக் திக்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|