தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பகவான் சத்ய சாய் பாபா ஸித்தியடைந்தார் இன்று மாலை முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு

2 posters

Go down

பகவான் சத்ய சாய் பாபா ஸித்தியடைந்தார் இன்று மாலை முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு Empty பகவான் சத்ய சாய் பாபா ஸித்தியடைந்தார் இன்று மாலை முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 24, 2011 8:06 pm

புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம்
ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை
தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30
மணிக்கு ஸித்தியடைந்தார் . இவருக்கு வயது 85 . பாபாவின் உடலை இன்று மாலை 6
மணியிலிருந்து குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வரும்
புதன்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறும்.
கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு
காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும்
இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில்
கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய்
மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை
அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து
வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும்
பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.
பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல்
இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர்
கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது.
இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி
கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள்
புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு : வரும் புதன்கிழமை
பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா
உடல் அடக்கம் செய்யபப்டும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும்.
சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம்
அனுஷ்டிக்கிறது அனந்தபூர் மாவட்டம் முழுவதும் இந்நாளில் விடுமுறை
அளிக்கப்படுகிறது. என மாநில அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில்
தெரிவித்துள்ளது.



சாய்பாபாவின் சரித்திரம்: சத்ய
சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில்
பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ
ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே
பார்க்கின்றனர்.
ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக்
கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது
வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும், இது ஒரு அதிசய
நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல்
இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி
தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது.
இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து
சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர்
நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள்
உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர்.
1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து
கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்''
என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான்
சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி
சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம்
வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு
முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை
உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு
அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம்
100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக
விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல்
சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச
மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின்
கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர்
சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை
ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும்
வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி
நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது.
இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல்
சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில்
சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா,
நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான்,
சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப
மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், நானி
பல்கிவாலா, டி.என்.சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும்
இவரது பக்தர்களாக உள்ளனர்.

1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த முயற்சி சர்வதேச செய்தியானது.
இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால்
சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும்
உயர்த்தியுள்ளன.

சமூகத்தொண்டு: ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய
கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு
வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர்.
இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர
குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று
நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன.
இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா
மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள்
மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114
நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின்
தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை
தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.
பொன் மொழிகள்
* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.

* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.

* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற
வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.
பாபாவின் சேவைகள்...
* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக
விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு
தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள்
உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும்
வசூலிக்கப்படுகின்றன.

* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி
மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்தி வந்தார்.

* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும்
இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்
மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில்
இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை
சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள்
உள்ளன.


தலைவர்கள் இரங்கல்: சத்ய சாய்பாபா மறைவிற்கு ஜனாதிபதி பிரதீபா
பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, தமிழக முதல்வர்
கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய , மாநில
அமைச்சர்கள் , அ.தி.மு.க.., பொதுசெயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள்
உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் கருணாநிதி தனது
இரங்கல் செய்தியில்; சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர்
சாய்பாபா. இதன் மூலம் தமிழக மக்களின் இதயத்தில் சாய்பாபா இடம் பிடித்து
விட்டார் என்று கூறியுள்ளார். ‌ஜெ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
சாய்பாபாவின் இழப்பு மனித குலத்திற்கு பேரிழப்பாகும் என கூறியுள்ளார்.
தமிழக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் பாபாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக
சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டு சென்றார்.

ஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர
முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு,
பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்த
புறப்பட்டு சென்றனர்.

“ வழிகாட்டுதலாக இருந்த சாய்பாபா ” அத்வானி ; தெய்வீகத்தன்மையும்,
போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின்மனதில் வாழ்ந்தவர்
என பிரதமர் மன்மோகன்சிங் புகழாராம் சூட்டியுள்ளார். பாபா மறைவு நாடே
கவலையில் ஆழ்ந்துள்ளது என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பாபாவின் இழப்பு
குறித்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; சாய்பாபாவை நான் பல
முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல
நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது. இந்தியா முன்னேற்றம் கண்டிட உழைத்த
தலைவர்களில் இவரும் ஒருவர். இவரது மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பு இவ்வாறு
அத்வானி கூறியுள்ளார்.
நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பகவான் சத்ய சாய் பாபா ஸித்தியடைந்தார் இன்று மாலை முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு Empty Re: பகவான் சத்ய சாய் பாபா ஸித்தியடைந்தார் இன்று மாலை முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு

Post by அ.இராமநாதன் Sun Apr 24, 2011 8:15 pm

[You must be registered and logged in to see this image.]
--
கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்ட ஆன்மீக குரு சாய்பாபா இயற்கை எய்தியதையொட்டி, குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது இரங்கல் செய்தியில், "உலகின் மிகச் சிறந்த ஆன்மீகத் தலைவர், சமூக சேவகரை இழந்தது இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு," என்று கூறியுள்ளார்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics
» பொன் மொழிகள் – பகவான் சத்ய சாய் பாபா
» இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
» இன்று துபாயில் சித்திரைத் திருவிழா: துபாய் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு
» முதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் விசிறி தாலுகா அலுவலகம் மூலம் வழங்க ஏற்பாடு
» இன்று முதல் நாளை வரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum