தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நான் என்பதே நீயல்லவா

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் என்பதே நீயல்லவா Empty நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Tue Dec 27, 2011 12:06 pm

தோழர்களே, தோழிகளே இது எனது முதல் கதை படித்து தங்களின் மேலான கருத்துகளை பதிவிடவும். நன்றி!




நான் என்பதே நீயல்லவா

கோவை மாநகரம் காலை வேலையில் கடிகாரம் தன் செல்ல சினுங்களை வெளிப்படுத்த
அதனை தட்டி அமைதிபடுத்திவிட்டு திரும்பி படுத்தான்.தன் செல்ல மகனின் செயலை
புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த லட்சுமியம்மாள்,
"டேய் கும்பகர்ணா எழுந்திரி" என்றார்.
கண்விழித்து தன் தாயின் முகம் பார்த்தான் ரிஷி(கைத்தட்டுங்க பா hero
கோவிச்சுக்க போறாரு) அவரின் புன்னகை அவனையும் தொற்றிக்கொள்ள எழுந்தமர்ந்து
"Good morning darling"என்றான்.
"darling கூப்பிடாதனு உனக்கு எத்தனை தடவ சொல்லறது "
"நீ எனக்கு darling தான darling"
"டேய் போக்கிரி உன்ன திருத்தவே முடியாது, சரி சரி சீக்கரம் கிளம்பு officeல முக்கியமான வேலை இருக்குனு சொன்னல"
"அட ஆமா darling மறந்துட்டேன்" என்று கன்னத்தை தட்டிவிட்டு செல்பவனை நினைத்து சிரித்து கொண்டே தன் வேலைகளை பார்க்க சென்றார்.

ரிஷியை பற்றின சின்ன அறிமுகம் வயது 27.சராசரிக்கும் சிறிதே அதிகமான உயரம்
காந்த கண்கள் அளவான உடல் என எல்லாரும் விரும்படியான
தோற்றம்.குருமுர்த்தி-லட்சுமியம்மாளின் ஓரே மகன், IT கம்பனியில்
பணிபுரியும் அக்மார்க் youth.குருமுர்த்தி ஒரு ரிடைர்டு பாங்க்
ஆபிசர்.மேல்தட்டு நடுத்தர குடும்பம் ரிஷியுடையது.ரிஷியை பொறுத்தவரை
குருமுர்த்தியும்,லட்சுமியம்மாளும் தனது நண்பர்கள்.ஒரே பையன் என்பதால்
கொஞ்சம் செல்லம் அதிகம் ஆனால் அதில் கண்டிப்பும் இருக்கும்.

குளித்து தயாராகி வந்த தன் மகனை பார்த்த சிரித்தபடியே
"good morning டா"என்றார் குருமுர்த்தி.
பதிலுக்கு அவனும் கூறிவிட்டு கண்களில் குறும்புடன்
"ஆமா அப்பா நேத்தே கேக்கனும்னு நினைச்சேன் அந்த அன்ட்டி யாரு?"
"எந்த அன்ட்டி"
"அதான் பா நேத்து பைக்ல கூட்டிட்டு வந்தீங்களே?"
"மகனே வேண்டாம் டா , உங்க அம்மா காதுல விழுந்ததுனா அவ்வளவு தான் தயவு காட்டு பா"
"உங்கள பார்த்தா பாவமா இருக்கு பொழச்சு போங்க"
"எல்லாம் நேரம் டா" என்று தலையில் அடித்து கொள்ள சிரித்து கொண்டே சாப்பிட்டனர் இருவரும்.
நேரமாகவே சீக்கரம் கிளம்பினான்.

--------------------------------------------------------------------------------------------------------
திருப்பூர் மாநகரம் காலையில் குளித்து மங்களகரமாக வரும் தனது மகளை
பார்த்து கொண்டிருந்தார் சரஸ்வதி.அவருக்கு தன் மகளை பார்க்கும் போதெல்லாம்
பெருமையாகவும்,ஆச்சரியமாகவும் இருக்கும்.தங்களுக்கு ஆலோசனை சொல்லும் போது
பெரியவளாகவும், சின்ன விஷயங்களுக்கு அடம்பிடித்து கொஞ்சும் போது
குழந்தையாகவும் தெரிபவளை பார்த்து ஆச்சரியபடாமல் அவரால் இருக்க
முடியவில்லை.தன் நினைவுலகத்தில் பயணித்து கொண்டிருந்தவரை உலுக்கி
நிகழ்வுலகத்துக்கு கொண்டுவந்தாள் உத்ரா.
"என்ன மா காலையிலையே கனவா? அப்பா எங்க?"
"கோவில் போயிருக்காரு"
"ஆமா நம்ம வீட்டு மகாராணி எழுந்திருக்கலையா?"
"இதோ வந்துட்டேன்" என்று சொல்லிக்கொண்டே வந்தாள் கிருத்திகா.
"மகாராணிக்கு இப்ப தான் விடிஞ்சுதோ?"
"ஆமாம் சேவகியே தற்போது தான் எனக்கு பொழுது புலர்ந்திருக்கிறது"
"சேவகியா?நானா?"
"நான் மகாராணி என்றால் நீ சேவகிதானே"
"பிசாசே காலையே கடுப்பேத்தாதடி சொல்லிட்டேன்"
"என்ன மொழி பேசுகிறாய் நீ ! உன்னை....யாரங்கே இவளை சிறையில் அடையுங்கள்"
"உன்ன என்ன பண்ணறேன் பாரு........" என்று இருவரும் தங்கள் காலை சண்டையை ஆரம்பிக்க
"ரெண்டு பேரும் ஆரமிச்சுடீங்களா? உத்தி வெளில போகனும்னு சொன்னல போ
கிளம்பு,கீர்த்தி காலேஜ் போகலையா மணி என்னனு பாரு" என்று அடக்கினார்
சரஸ்வதி.
"உன்னை அப்பறம் பாத்துகறேன்" என்றுவிட்டு தன் தோழி விஜியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றாள் உத்ரா.
"வேவ்வ வேவ்வ " என பழிப்புகாட்டி விட்டு சென்றாள் கீர்த்தி.

உத்ரா கோதுமை நிறம் உயரத்திற்கேற உடல்வாகு என பார்ப்பவரை மறுமுறை பார்க்க
வைக்கும் அமைதியான அழகு.இப்போது தான் படித்து முடித்து வேலைக்கு
விண்ணப்பித்து இருக்கிறாள்.அவளின் தங்கை கிருத்திகா சட்ட கல்லூரியில்
இரண்டாம் ஆண்டில் கால்பத்திருக்கிறாள்.நல்ல உயரம் மாநிறம் பார்க்கும்
அனைவரின் மனதிலும் ஒட்டிகொள்பவள்.இரட்டை வால் குறும்பு.அப்பா
மல்லிகார்ஜுன் ஒரு பனியன் கம்பனியில் production planner ஆக வேலை
பார்ப்பவர்.அம்மா சரஸ்வதி குடும்பதலைவி.நடுதர
குடும்பம்.மல்லிகார்ஜுன்-சரஸ்வதி இருவருக்கும் மகள்கள் தான்
உலகம்.இவர்களுக்கும் அப்படியே.

விஜியின் தொலைபேசி பிஸி என வர இருமுறை முயற்சி செய்துவிட்டு அவள் விட்டிற்கு செல்ல தயாரனாள்.
விஜி சரணிடம் பேசிக்கொண்டிருந்ததால் உத்ராவின் அழைப்பை கவனிக்கவில்லை.

விஜி சிகப்பு நிறம் சராசரி உயரதோடு சிலிம்மாக அழகாக
இருப்பாள்.கண்ணன்-பிரபாவதியின் சிமந்த புத்திரி.வீட்டிற்கு ஒரே பிள்ளை
என்பதால் செல்லம் அதிகம்.இவளும் படித்து விட்டு வேலைக்கு விண்ணப்பித்து
இருக்கிறாள்.கண்ணன் பனியன் கம்பனியில் வேலை பார்கிறார்.பிரபாவதி
வீட்டரசி.விஜி,உத்ராவின் நட்பின் வயது இரண்டு மாதங்களே ஆனால் இருநூறு
ஆண்டுகள் போல் தோன்றியது இருவருக்கும்.

சரண் விஜியின் பெரியப்பா பையன்(ரிஷிக்கு மட்டும் தான்
கைதட்டுவீங்களானு....... சரண் கேட்கறான் பா நான்
இல்ல).பெருமாள்-ராஜாத்தியின் செல்ல மகன்.உடன்பிறந்தவர்கள் இல்லையேன்பதால்
சரண்-விஜி இருவருக்குள்ளும் பாசம் அதிகம்.சரண் சென்னையில் வேலை செய்கிறான்.

உத்ரா விஜியின் வீட்டுக்கு வந்து ஹாரன் செய்ய உள்ளிருந்து அவரமாக வெளியே வந்தனர் விஜியும்,பிரபாவதியும்.
"உத்ரா உள்ள வந்து காபி சாப்பிட்டு போ மா ...."
"இல்ல அன்ட்டி டைம் ஆச்சு"
"எப்பவும் வெளியிலையே வந்துட்டு போயிடறையே,எங்க வீட்டுகுள்ள வரமாட்டியா?"
"அப்படியேல்லாம் இல்ல அன்ட்டி evening கண்டிப்பா வரேன்,நல்ல டிபன் செஞ்சு வைங்க வந்து ஒரு பிடி பிடிச்சுடரேன்"
"கண்டிப்பா வரணும்"
"கண்டிப்பா அன்ட்டி"
"வரோம் அன்ட்டி"
"வரோம் மா" இருவரும் கிளம்பி சென்றனர்.

அறிமுக படலம் முடிந்தது...........


Last edited by Theanmozhi on Tue Dec 27, 2011 12:12 pm; edited 1 time in total
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 27, 2011 12:10 pm

சிறப்பாக உள்ளது கதை பாராட்டுக்கள் தொடர்ந்து உங்களின் நறுமணப் படைப்புகளை நமது தோட்டத்தில் பூக்க விடுங்கள் தேன்மொழி [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by thaliranna Tue Dec 27, 2011 9:14 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by pakee Tue Dec 27, 2011 9:39 pm

சூப்பர் ஆரம்பிங்க நண்பரே வாழ்த்துக்கள் அன்பு மலர்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Sat Dec 31, 2011 12:00 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது கதை பாராட்டுக்கள் தொடர்ந்து உங்களின் நறுமணப் படைப்புகளை நமது தோட்டத்தில் பூக்க விடுங்கள் தேன்மொழி [You must be registered and logged in to see this image.]
நன்றி தோழரே
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Sat Dec 31, 2011 12:01 pm

thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி தோழரே
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Sat Dec 31, 2011 12:01 pm

[quote="pakee"]சூப்பர் ஆரம்பிங்க நண்பரே வாழ்த்துக்கள் குஓட்டே

நன்றி தோழரே
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Sat Dec 31, 2011 12:03 pm

நான் என்பதே நீயல்லவா - 2


அலுவலகம் சென்றவனை வரவேற்றது அளவுகதிகமான வேலைகளே வேலையில் மூழ்கியவனுக்கு
மூச்சுவிடவும் நேரமில்லை ஒரு வழியாக மாலை 5 மணிக்கு தன் அன்றாட அலுவலை
முடித்து வீடு செல்ல பயணமானான்.

------------------------------------------------------------------------------
வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது உத்ரா கேட்டாள்
"காலைல போன் பண்னேனே யார்கிட்ட டி கடலை வறுத்த?"

"சரண் கிட்ட பேசிகிட்டு இருந்தேன்டி"

"சரணா யாருடி அது எனக்கு தெரியாம?" என்றாள் குறும்போடு

"ஏய் லூசு சொன்னேல பெரிப்பா பையன் டி" என்று முதுகில் ஒன்று வைக்க

"ஆமா சொன்னேல மறந்துட்டேன் Sorry Pa..."

அதற்கு மேல் சரணை பற்றி அவளும் கேட்கவில்லை இவளும் சொல்லவில்லை .


உத்ராவும் விஜியும் சென்ற இடம் "ROTARY CLUB OF TIRUPUR". அதன் நுழைவாயிலை
அடைந்தவுடன் இருவருக்கும் தங்களின் முதல் சந்திப்பு நினைவு வர இருவரும்
அதை அசைபோட்டனர்.


ROTARY CLUB அந்த ஊரில் பல நல்ல காரியங்களை
சமுகநலனுக்காகவும்,மக்கள்நலனுக்காகவும் பல்வேறு பள்ளிகளையும்,சமுக
அமைப்புகளையும் தன்னுள் இணைத்து கொண்டு செயல்பட்டு வருகிறது.இருவரும்
பள்ளியில் NSSல் இருந்ததால் நிறைய சமுகப்பணிகளை இந்த நிறுவனத்துடன்
இணைந்து செய்துள்ளனர் அதுவே பழக்கமாக இப்போதும் தங்களால் இயன்றதை அவ்வபோது
செய்து வருகின்றனர்.


அன்று இரத்த தான முகாம் இருந்தது அதற்கு தங்களால் இயன்றதை செய்து
கொண்டிருந்தனர் இருவரும் முகாம் முடிந்து மாலை 5 மணிக்கு அனைவரும்
கிளம்பியிருக்க அந்த இடமே காலியாகியிருந்தது தன் வண்டியை எடுத்து கொண்டு
வெளிவந்த உத்ரா,வண்டி பஞ்சர் ஆன நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்து கொண்டிருந்த விஜியை பார்த்தாள்.

"என்னாச்சு?"

"வண்டி பஞ்சர் அதான் என்ன பண்றதுனே தெரியல"

"எங்க போகனும்?"

"காலேஜ் ரோடு"

"வாங்க நானும் அந்த பக்கம் தான் போறேன்"

இப்படித்தான் தொடங்கியது இவர்களின் நட்பு.இருவருக்கும் முதல் நாளே
நெடுநாள் பழக்கம் போல் தோன்ற ஒருவரை ஒருவர் உயிர்தோழியாய் ஏற்று உன்னத
நட்பில் அங்கமானார்கள்.அந்த நினைவில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து
சிரித்து கொண்டனர்.

இன்று அவர்கள் செல்லவிருந்தது கோவை மாநகரில் இருக்கும் ஒர் அனாதை
இல்லத்திற்க்கு தங்களின் குழுவோடு இணைந்து பயணப்பட்டனர்.அங்கு சென்று
அங்குள்ளவர்களுக்கு உதவியாய் தங்களால் இயன்றதை செய்துவிட்டு மாலை 5
மணிக்கு மனதிருப்தியுடன் கிளம்பினர் இருவரும்.

காலையிலிருந்து வேலை செய்த களைப்பால் ரிஷியால் சாலையில் கவனம் செலுத்த
முடியவில்லை.இவர்கள் இருவரும் தங்கள் பேச்சில் முழ்கியிருந்ததாள் சாலையை
கவனிக்கவில்லை.ஒரு திருப்பத்தில் இரு வண்டிகளும் நேருக்கு நேர்
சந்தித்தன............


கடைசி நேரத்தில் முன்னால் வண்டி வருவதை பார்த்த ரிஷியும்,உத்ராவும் பிரெக்
போட இருவண்டிகளும் லேசாக உராய்ந்து முட்டி நின்றன.இரு பெண்களின்
கண்களிலும் அப்பட்டமான அதிர்ச்சி, விபத்து கடைசி நேரத்தில்
தடுக்கப்பட்டதால் பெருமூச்சு ஒன்றை சொறிந்தவன் அந்த இருவரின் பக்கம்
பார்வயை திருப்பினான் தன் மேல் உண்டான கோபத்தையும் அவர்களிடம் காட்டலானான்.


"வண்டி ஒட்டறிங்களா இல்ல ,ப்ளைட் ஒட்டறீங்களா? பெரிய ரதினு நினைப்பு
ரெண்டுபேருக்கும் முன்னாடி பாக்காம வரிங்க, திருப்பத்துல ஹாரன் பண்ணும்னு
தெரியாத உங்களுக்கெல்லாம் யாரு லைசன்ஸ் கொடுத்தா?" என்று அவன் போக்கில்
பொரிந்து தள்ள



கூட்டம் கூடிவிட்ட படியாலும்,தங்களின் மேலும் தவறுள்ள படியாலும் இருவரும்
ஒன்றும் பேசாமல் வண்டியை திருப்பிகொண்டு வந்துவிட்டனர்.வரும் வழியில்
இருவரும் ஏதும் பேசவில்லை.விஜியின் வீட்டை அடையும் போது இருவரின் மனமும்
ஒரளவு சமன்பட்டிருந்தது.உத்ரா விஜி வீட்டில் காபி அருந்திவிட்டு
பிரபாவதியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றாள்.

உத்ரா வீட்டினுள் நுழைந்ததும் தங்கையின் சீண்டலிலும்,தந்தையின் பேச்சிலும் இந்த சம்பவத்தை மறந்தே போனாள்.


ஆனால் விஜியால் தான் மறக்க முடியவில்லை தன் மேலும் தவறு இருக்கும் போது
அவர்களை மட்டும் குற்றம் சொல்லியதை அவளால் ஏற்றுகொள்ள முடியவில்லை அவன்
கூறிய அதே வார்த்தைகளால் அவனையும் காயபடுத்த வேண்டும் என்று
எண்ணினாள்.அவன் முகமும் ,அவன் பேசியதுமே அவள் மனதிரையில் ஒடிக்கொண்டே
இருந்தன.அவன் மேல் உள்ள வெறுப்பு தான் அதற்கு காரணம் என்று
நினைத்தாள்.ஆனால் அது வெறுப்பு தானா?.........

--------------------------------------------------------------------------------------------------------

வீட்டிற்கு வந்த ரிஷியோ என்னென்று அறியாத உணர்வுகளில்
சிக்கித்தவித்தான்.என்றும் வாய் ஒயாமல் பேசுபவன் இன்று ஒன்று பேசாமல்
சாப்பிடுவதை ஆச்சரியமாக பார்த்தனர் குருமூர்த்தியும்
லட்சுமியம்மாளும்.ஆனாலும் எதுவும் கேட்கவில்லை.


கண்களில் இப்பவோ அப்பவோ என்று கொட்ட காத்திருந்த கண்ணீருடன் பார்த்த அந்த
பெண்ணின் முகமே மனதில் தோன்றி ரிஷியை இம்சித்தது.அவள் கண்ணீரை துடைத்து
தன்னோடு சேர்த்தணைத்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது தன் எண்ணப்போக்கை
அறிந்தவன் அதிர்ந்தான்.

முதல் முறை பார்க்கும் பெண்ணை நான் ஏன் இப்படி நினைத்தேன்? யார் அவள்?
இவள் தான் என்னவளா? எனக்குள் காதல் வந்து விட்டதா? அதனால் தான்
இப்படியெல்லாம் தோன்றுகிறதா? என பல கேள்விகளை தனக்குள் கேட்டு
கொண்டான்.அவள் தன்னை ரொம்பவும் பாதிக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது
மற்ற எதுக்கும் அவனிடம் பதில் இல்லை.

அவளைப்பற்றி எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும்,
ஆனால் எப்படி?அவள் இந்த ஊர் தானா? என்ன செய்கிறாள்?அவளுடன் ஒருத்தி
இருந்தாலே யார் அவள்? இப்படி அவளை பற்றி சிந்தித்த படியே அவனறியாமல்
கண்ணயர்ந்தாள்.

இவன் எண்ணம் பலிக்குமா பொறுதிருந்து பார்ப்போம்...........................
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Sat Dec 31, 2011 12:04 pm

நான் என்பதே நீயல்லவா-3


காலையில் கண்விழித்த ரிஷிக்கு உற்சாகம் கரைபுரண்டது , எழுந்ததிலிருந்து
ஒரு வித துள்ளலுடன் கிளம்பியவனை தொடர்ந்தன நான்கு விழிகள்.தயாராகி
சாப்பாடு மேடைக்கு வந்தான்.
குருமுர்த்தியும்,லட்சுமியம்மாளும் இவனுக்காக காத்திருந்தனர்.

"good morning பா , good morning மா" என்றான் இருவரும் பதிலுக்கு கூறினர்.

"இன்னைக்கு என்ன ஸ்பெஷல் darling"

"ம்.... இட்லி"

"ஒ சரி சரி " என்று சாப்பிட ஆரம்பித்தான்.குருமுர்த்தி மெதுவாக கேட்டார்.

"யாரு டா அந்த பொண்ணு?"

"தெரியல பா....... என்..ன எ..எந்த பொண்ணு?"

"நீ எந்த பொண்ண சொன்னீயோ அந்த பொண்ணு" என்றார் லட்சுமியம்மாள்

"அம்மா அது...... வந்து..."

"ம் சொல்லுடா நாங்க போய் பேசட்டுமா?" என்று ஆர்வமானார் லட்சுமியம்மாள்

"ஆமா சொல்லுடா சீக்கரம் பேசிடலாம்" (இப்படியல்லவா parents இருக்கனும்)

"எனக்கே யாருனு தெரியாது"

" என்னடா சொல்லற" என்றனர் இருவரும் ஒரே குரலில்

அவனும் இரவு நடந்ததை முழுவதுமாக கூறினான் அதை கேட்டு பெற்றவர்
சோர்ந்துவிட்டனர் . கல்யாணம் என்ற பேச்சை கேட்டவுடன் நழுவுபவனை இப்போதாவது
திருமண கோலத்தில் பார்க்கலாம் என்று கனவு கண்டனர் அதில் இப்படி ஒரு
சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை இருவரும்.இருப்பினும் ஏதோ ஒரு
நம்பிகையில் அவனுக்கு அவளை மணமுடித்து வைப்பதாக கூறினர்.


சாலையில் செல்லும் பெண்களை ஒரு முறை உற்று அவள் தானா என்று பார்த்து
விட்டு செல்லும் தன்னை நினைத்தால் ரிஷிக்கு ஆச்சரியமாகவும்,சிரிப்பாகவும்
இருந்தது.இப்படியே ஒரு வாரம் ஒடிவிட்டது.அவனுள் அவள் நினைவுகள் வளர்ந்து
கொண்டே சென்றதே தவிர குறையவும் இல்லை.


ஒரு நாள் காலையில் உத்ராவிற்கு கோவையில் உள்ள ஓர் வளர்ந்து வரும் IT
கம்பனியில் இருந்து பணிநியமன கடிதம் வந்திருந்தது.அதை கொண்டுவந்து
பூஜையறையில் வைத்தவள் அனைவரையும் தேடினாள் சரஸ்வதி மட்டுமே
விட்டீலிருந்தார்.மல்லிகார்ஜுன் வேலைக்கு சென்றிருந்தார்,கீர்த்தி காலேஜ்
கு சென்றிருந்தாள்.ஒடிவந்தவள் அன்னையிடம் கூறி அவரை கட்டியணைத்து தன்
மகிழ்ச்சியை வெளிபடுத்தினாள்.இரவு தந்தையிடமும்,தங்கையிடமும்
கூறினாள்.தாய் தந்தை காலில் விழுந்து ஆசியும் பெற்றாள்.மற்றவர்களை பொறுத்த
வரையில் இது அவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம் ஆனால் அன்றாட தேவைக்கே
கஷ்டபட்ட இவர்களுக்கு இது மிக பெரியதாக தோன்றியது.

"ரொம்ப சந்தோஷமா இருக்குடா, நீ இன்னும் மேன்மேலும் வளரனும் டா" என்று
தழுதழுத்த குரலில் கூறினார் மல்லிகார்ஜுன்.உத்ரா அவரை கட்டிக்கொண்டாள் இதை
பார்த்த சரஸ்வதிக்கும்,கீர்த்திக்கும் கண்ணீர் எட்டி பார்த்தது சூழ்நிலையை
மாற்றவேண்டி தமக்கை சீண்டினாள் கீர்த்தி.

"அழாதீங்க மா நாம என்ன பண்ண முடியும் அந்த கம்பனியொட தலையெழுத்து " இவள்
இப்படி சொல்லவும் முவரும் முழித்தனர்.கீர்த்தியோ தள்ளி நின்று தொடர்ந்தாள்.

"இவள்ளாம் அங்க வேலை செய்யனும்ங்கறது" என்று விட்டு உத்ரா முறைப்பதை பார்த்து ஓட தொடங்கினாள்.

"ஏய் நில்லுடி பிசாசே நீ என்கிட்ட அடிவாங்கிட்டு தான் தூங்கபோற பாரு"
என்று அவளை துரத்த ஆரமித்தாள் உத்ரா சிறிது நேரம் துரத்திவிட்டு முடியாமல்
கோபத்தொடு அமர அருகில் வந்து கைகொடுத்து"congrates அக்கா" என்று அவளை
அணைத்து தன் மகிழ்ச்சியையும் வெளிபடித்தினாள் கீர்த்தி.பொதுவாக கீர்த்தி
உத்ராவை அக்கா என்று அழைக்க மாட்டாள் நெகிழ்ச்சியான நேரத்தை தவிர, அதனால்
அவள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பது உத்ராவுக்கு புரிந்தது.இதை
பார்த்த பெற்றவர்கள் மனமோ "கடவுளே இவர்களை என்றும் இப்படியே மகிழ்ச்சியாக
வைத்திருப்பா" என்று வேண்டிக்கொண்டது.

பின் விஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறினாள் பதிலுக்கு அவள் தனக்கும்
வேலை கிடைத்திருக்கிறது என்ற நல்ல விஷயத்தை கூறினாள்.இருவரின்
மகிழ்ச்சியில் தத்தளித்தது ஒரே வருத்தம் என்னவென்றால் இருவருக்கும்
வெவ்வேறு கம்பனியில் வேலை கிடைத்திருந்தது.சரி பரவாயில்லை என்று
விட்டுவிட்டனர்.

விபத்து சம்பவத்தை இருவரும் வீட்டில் சொல்லி இருந்ததால் கண்டிப்பாக
வண்டியில் செல்லகூடாது என்று இருவிட்டினரும் கண்டிப்பாக கூறிவிட்டனர்
அதனால் கீர்த்தியுடன் train ல் செல்வது என்று முடிவானது.

உத்ராவின் வீடும்,விஜியின் வீடும் கொஞ்சம் பக்கம் என்பதால் ஒன்றாக முதல்
நாள் காலையில் எழுந்து கோவில் சென்று "கடவுளே இதற்கு பிறகு எங்களின்
குடும்பமும் , நாங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்று
வேண்டிகொண்டு புறப்பட்டனர்.

கடவுளுக்கு இவர்களின் வேண்டுதல் கேட்டிருக்குமா? வேண்டுதல் பலிக்குமா பொறுத்திருந்து பார்போம்................
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 31, 2011 6:56 pm

கதை அழகாக எழுதியிருக்கீங்க பாராட்டுகள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Mon Jan 02, 2012 12:36 pm

நன்றி
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Mon Jan 02, 2012 12:41 pm

நான் என்பதே நீயல்லவா - 4


திருப்பூர் ரயில்நிலையத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தனர் முவரும்.
ரயிலில் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர்.தங்களை நோக்கி தெரிந்த முகமாக ஒருவன்
வருவதை பார்த்தாள் உத்ரா.யாரிவன் என்று யோசித்த படியே அமர்ந்திருக்க,
அருகில் வந்த விக்னேஷ்

"நீங்க உத்ரா தானே?"

"ஆமா, நீங்க?" என்றாள் குழம்பியபடியே

"என்ன மறந்துட்டியா? விக்னேஷ் schoolல நாம ஒன்னா படிச்சோமே?"

"அட ஆமா sorry da சட்டுனு ஞாபகம் வரல, எப்படி இருக்க? அம்மா அப்பா எப்படி இருக்காங்க?"

"இல்ல இப்போ....... 1 year ஆச்சு...... விபத்துல" கண்களில் வலியுடன்

"sorry da, உக்காரு" பக்கதிலிருந்த சீட்டை காண்பித்தாள்.

"பரவால்ல என்ன மறந்துட்ட இல்ல"

"இல்ல டா முகம் பார்த்த மாதிரி இருந்தது ஆனா,ஞாபகம் வரல"

"ம்ம் இருக்கட்டும்" என்றபடி கீர்த்தியையும் விஜியையும் பார்த்தவன் கல்லாக
சமைந்தான்.என்ன ஒரு அழகு? என்னை என்னவோ செய்கிறாள் என்று எண்ணமிட்டபடியே
கீர்த்தியை கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தான்.

"விக்கி ...விக்கி" உத்ரா இரண்டு முறை உலுக்கிய பின்பே நிலைக்கு வந்தவன்.

"என்ன ஆச்சு?" என்றவளுக்குஎன்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து பின்

"ஓன்னுமில்லை" என்றான்.

"இது கீர்த்தி என் தங்கை, இது விஜி என் ப்ரண்ட்" என்று அறிமுகம் செய்தாள்.

"hai" என்றான் இருவரையும் பார்த்து (முக்கியமாக கீர்த்தியிடம் தான் பார்வை இருந்தது ஆனால் யாரும் அறியாத படி)

இருவரும் பதிலுக்கு கூறினர். பேச்சும் வளர்ந்தது,அனைவரை பற்றியும்
தெரிந்து கொண்டான்(கீர்த்தியை பற்றி தான் முழுவதும்).தன்னை பற்றியும்
கூறினான்.விஜிக்கு வேலை கிடைத்த இடத்தில் தான் விக்கியும்
வேலைப்பார்கிறான் என்பது தெரிந்ததும் விஜியை பாதுகாப்பாக தான் பார்த்து
கொள்வதாக உறுதி கூறினான்.அதற்குள் ரயில் நிற்கவும்,நால்வரும் இறங்கி
பேசியபடியே வாயிலை வந்தடைந்தனர்.நால்வரும் முன்று திசையில்
செல்லவேண்டியதால் விடைபெற்றனர்.

விக்னேஷ் சராசரிக்கும் அதிகமான உயரம் அதற்கேற உடல் வாகு,மாநிறமும் இல்லாத
வெள்ளையும் இல்லாத நிறம்.சிரித்தால் கன்னத்தில் குழிவிழும் அழகுடன்
இருப்பான்.
தந்தையும், தாயும் விபத்தில் சிக்கி இறந்துவிட்டனர். தனக்கு தானே துணை
என்று இதுவரையில்,அவர்கள் வைத்துவிட்டு சென்ற பணத்தை கொண்டு கடைசி வருட
படிப்பை முடித்து ஒரு வேலையையும் தேடிகொண்டான்.தனியாக இருப்பது நரகம் தான்
என்றாலும் பழகிகொண்டான். தனிமையை போக்க சிரித்து பழகினான்.கீர்த்தியை
பார்த்தவுடன் ஏனோ அவள் தனக்கு எல்லாமாய் இருப்பாள் என்று தோன்றியது
அவனுக்கு.உத்ராவை கண்டதில் மிக்க மகிழ்ச்சி அவனுக்கு.(இருக்காதா பின்ன)



கீர்த்திக்கோ தன் உணர்வுகளை என்னென்று அறிய முடியவில்லை.அவன் தனக்கென்று
யாருமில்லை என்று கூறியதும் "ஏன் நான் இல்லையா?" என்று கேட்க வேண்டும்
போல் இருந்தது.தனக்கு ஏன் அப்படி தோன்றியது? என்று குழம்பியபடியே
கல்லூரிக்கு சென்றாள்.


முதலில் அவன் அப்படி சொன்னதும் உத்ராவின் கண்களில் கண்ணீர் எட்டி
பார்த்தது, தன் நண்பனுக்காய் அடக்கிகொண்டாள்.உத்ராவும் அவனும் பள்ளியில்
ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்புவரை ஒன்றாக படித்தனர்.அவளை
பொறுத்த வரை விக்கி ஒரு நல்ல மனிதன், உன்னதமான நண்பன்.அவனின் தாயை
அவளுக்கும்,சரஸ்வதிக்கும் நன்றாக தெரியும் பள்ளி பார்த்து
பழக்கம்.சரஸ்வதியும் அவரும் நல்ல நண்பர்கள்.பள்ளி படிப்பு முடிந்த பின்
உத்ரா, விக்கி இருவருக்குள்ளும் தொடர்பு இல்லாமல் போனது.இனி அவனும் தங்கள்
குடும்பத்தில் ஒருவன் என்று நினைத்துக்கொண்டாள்.அவனுக்கும் இந்த நினைப்பை
வரவைக்க வேண்டும் என்றும் எண்ணினாள். விஜி அந்த நிமிடத்திலிருந்து தன்
நண்பனாய் ஏற்றுகொண்டாள்.அவனும் அப்படியே.


விக்கியின் துணை இருந்ததால் விஜிக்கு கொஞ்சம் தைரியம் கூடி, அன்றய பொழுது நன்றாக சென்றது.

உத்ரா படபடப்புடன் சென்று மேலாரை பார்த்து ஆசிபெற்று தன் இடத்தில் அமர்ந்தாள்

அலுவலகத்தில் நுழைந்த ரிஷி தன் வேலைகளை கவனிக்கலானான் தன் நண்பனிடம்
சந்தேகம் கேட்க வந்தவன் அனைவரும் கூட்டமாக இருப்பதை பார்த்து என்ன என்று
பார்க்க சென்றான் கூட்டத்தின் நடுவில் உத்ரா அமர்ந்திருந்தாள்.அவளை
கேள்விகளால் துளைத்து கொண்டிருந்தனர் அனைவரும்.

உத்ராவை கண்ட ரிஷிக்கு கையும் ஒடவில்லை காலும் ஒடவில்லை என்ன செய்வதென்று அறியாத நிலை.தன் காதலே வென்றுவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு.

உத்ராவின் அருகில் சென்றான். அவனை கண்டதும் உத்ரா முகம் திருப்பினால்
சோர்ந்தாலும் வலிய சென்று தன்னை அறிமுகபடுத்திகொண்டான்.அன்று நடந்து
கொண்டதுக்கு மன்னிப்பும் கேட்டு கொண்டான்.


Last edited by Theanmozhi on Mon Jan 02, 2012 12:44 pm; edited 2 times in total
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Mon Jan 02, 2012 12:42 pm

நான் என்பதே நீயல்லவா - 5.




உத்ரா முதலில் முகம் திருப்பியது கோபத்தில் அல்ல ஏதாவது கேலியாக சொல்லிவிடுவானோ எதற்கு வம்பு என்று தான்,அவனே வந்து மன்னிப்பு கேட்கவும் தான் அதை மறந்துவிட்டதாக கூறினாள்.
"ஐ ம் ரிஷி"

"ஐ ம் உத்ரா" கைகுலுக்கி கொண்டனர்.

"sorry,அன்னைக்கு கொஞ்சம் டென்ஷன் அதான் "

"ஐயோ விடுங்க அத நான் மறந்துட்டேன், சரி......... அப்பறம் பார்கலாமா?"

"ம் சரி வேலைய பாருங்க"

ரிஷிக்கு அவள் அதை மறந்துவிட்டதாக கூறவும் சந்தோஷம் தாங்கவில்லை, அப்பறம்
பார்கலாம் என்றவுடன் இன்னும் கொஞ்சம் பேசவேண்டும் என்ற ஆவலை அடக்கி தன்
இடத்திற்கு சென்றான். எப்படியும் இங்கு தானே இருக்க போகிறாள்
பேசிகொள்ளலாம் என்று சமாதானமடைந்தான்.

மாலை விக்கி,விஜி,உத்ரா முவரும் ரயில் நிலையத்தில் சந்தித்தனர். முவரும்
அன்றைய நடப்புகளை பற்றி பகிர்ந்து கொண்டனர். அப்போது உத்ரா ரிஷியை
பார்த்தையும் , அவன் மன்னிப்பு கேட்டுகொண்டதையும் சொன்னாள்.விஜிக்கு
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"நீ ஏன் டி அவன்கிட்ட பேசுன?"

"தானா வந்து பேசுரவன் கிட்ட பேசாம எப்படி டி இருக்க முடியும்?"

"அவன் அன்னைக்கு பேசினது எல்லாம் மறந்து போச்சா?"

"இல்ல டி கோவத்துலனு சொன்னான் டி"

" சொன்னா? கோவத்துல என்ன வேனும்னாலும் பேசலாமா?"

".........."

" என் கிட்ட பேசாத போடி"

"ஏய் என்ன டி"

"பேசாதனா பேசாதா" தன் தோழியின் கோபம் தன்னிடம் கொஞ்ச நேரத்திற்கு மேல்
நில்லாது என்று தெரிந்ததால் அமைதியானாள்.விக்கியிடம் திரும்பினாள்.

"என்ன டி இதெல்லாம்"

மெல்லிய குரலில் "அவளே வந்து பேசுவா பாரு"

"சரி வீட்டுக்கு வந்துட்டு போடா"

"ம்ம்ம்....... காலைல வரேனே"

"இப்பவே வாயேன் டா"

"ம் ........ இல்ல ஆன்ட்டி .. அங்கிள்?"

"ஓன்னும் சொல்ல மாட்டாங்க"

"அப்ப சரி....." சந்தோஷமாக (கீர்த்தி ய பாக்கலாம் ல அதான் முகத்துல பல்பு எரியுது)

"நீயும் வாயேன் விஜி அம்மா பாக்கனும்னு சொன்னாங்க"

"அத்தைகாக வரேன்" முறுக்கிக் கொண்டாள்.

வண்டி நின்ற பின் பேசியபடியே வீடு நோக்கி பயணமானார்கள். வீட்டில்
கீர்த்தியும்,சரஸ்வதியும் மட்டுமே இருந்தனர்.மல்லிகார்ஜுன் இன்னும்
வந்திருக்கவில்லை.

"அம்மா இது விக்கி என் கூட படிச்சானே? ஞாபகம் இருக்கா?"

"ம் ஆமாம், வா பா,எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன் ஆன்ட்டி , நீங்க எப்படி இருக்கீங்க?"

"ம் நல்லா இருக்கேன் பா, விஜி நீ ஏன் மா அங்க நிக்குற வா"

"ஒன்னுமில்ல அத்த"

"உக்காரு பா காபி கொண்டு வரேன்"

"சரி ஆன்ட்டி"

முவரும் சமையலறையினுள் நுழைந்தனர். விக்கியின் கண்கள் கீர்த்தியை
தேடின.வீட்டிற்குள் நுழைந்தபோது வந்து "வாங்க" என்று அழைத்தவள் பின்
கண்களுக்கு அகப்படவில்லை.அவளை காணவே வந்திருந்தவனுக்கு தான் ஏமாற்றமாய்
போனது.உத்ரா அன்னையிடம் அனைத்தையும் கூறி அவனிடம் பெற்றோரை பற்றி
கேட்கவேண்டாம் என்று எச்சரிக்கை செய்தாள்.காபியோடு வந்தார்கள்.
"எடுத்துக்க பா"

"தாங்கஸ் ஆன்ட்டி, காபி ரொம்ப நல்லா இருக்கு"

"விக்கி உனக்கு பெருந்தன்மை ஜாஸ்தி பா"

"ஏன் ஆன்ட்டி அப்படி சொல்லறிங்க"

"பின்ன உத்தி போட்ட காபிய கூட நல்லா இருக்குனு சொல்லறியே"

முவரும் நகைக்க உத்ரா "அம்மா உங்கள.......... அப்பா வரட்டும் சொல்லி தரேன்"

"யார சொல்லி தரபோற செல்லம்" என்று கேட்ட படி உள்ளே வந்தார் மல்லிகார்ஜுன்.

"அப்பா.........அம்மாவ பாருங்க பா நான் போட்ட காபி நல்லாவே இருக்காதுனு
சொல்லறாங்க, நீங்க குடிச்சு பார்த்து சொல்லுங்க பா"என்றாள் சினுங்கியபடியே

"அய்யயோ செல்லம் அப்பா பாவம் ல விட்டுடுமா, நான் நாளைக்கு ஒரு எலிவாங்கிட்டு வரேன் அத வைச்சு டெஸ்ட் பண்ணலாம், என்ன விட்டுடு மா"

"அப்பா நீங்களும்................பேசாதீங்க போங்க பா"

இருவரையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருந்தான் விக்கி.அதை பார்த்த சரஸ்வதி

"சரி சரி அப்பாவும் மகளும் கொஞ்சினது போதும்" என்றும் மகளிடம் கண்களால் சைகை செய்தார்.

அப்போது தான் விக்கியை பார்த்த மல்லிகார்ஜுன் கண்களால் யார் என்று மகளிடம் வினவ அனைத்தையும் காதில் கிசுகிசுத்தாள் மகள்.

" வா பா நல்லா இருக்கியா?, வா மா விஜி"

"நல்லா இருக்கேன் அங்கிள்"

"ஆமா , நம்ம சின்ன வாண்டு எங்க ?"

"அவளுக்கு தல வலியாம் பா அதான் இல்லனா அவதான என்ன வம்பிழுக்கறதுல முதல்ல நிப்பா"

"அப்படியா, நீ ஏன் மா silenta இருக்க ,என்ன சண்ட ரெண்டு பேருக்குள்ள"

"அப்படியேல்லாம் இல்ல மாமா"

"சரி சரி ரெண்டு பேரும் சாப்பிட்டு தான் போகனும்"

"அம்மாவும் அப்பாவும் தேடுவாங்க மாமா"

"கண்ணன் கிட்ட நான் சொல்லறேன்"

"சரி மாமா"

வீடே கல கல வென்றிருந்தது.இளையவர்கள் முவரின் கிண்டல்களும் பெரியவர்களின்
சிரிப்பு வீட்டை நிறைத்தது.கீர்த்திக்கு தான் எதுவும் ரசிக்கவில்லை.பிறர் அறியாமல் அவனின் அவனை பார்த்து கொண்டிருந்தாள் அவள்.ஏனோ
தன் மனம் அவன் முன்பு மட்டும் தடுமாறுகிறது ,இது வரை இல்லாத மாற்றங்கள்
என்னிடம் ஏன்? அவனை பார்த்து கொண்டே இருக்க சொல்கிறதே மனம் ஏன்? அவனின்
ஏக்க பார்வைகண்டு உத்தி மேலும், அப்பா மேலும் தான் கோபம் கொண்டது ஏன்?
மனதினுள் எழுந்த எண்ணங்களோடு போராடி கொண்டிருந்தாள் அவள்.

உணவு முடிந்து அவரவர் வீட்டிற்கு சென்றனர் இருவரும் .போகும் போது விக்கியை
அழைத்து சரஸ்வதியும்,மல்லிகார்ஜுனனும் "உனக்கு யாருமில்லைனு நினச்சுகாத
நாங்க இருக்கோம், நீயும் இந்த வீட்டுல ஒருத்தன் தான் சரியா?" என்றனர்.
அவனால் பதில் கூற முடியவில்லை. அமைதியாய் கிளம்பி சென்றான்.அப்போதும் அவள் வெளி வரவில்லை.

இப்படியே ஒரு வாரம் ஒடிற்று. முதல் நாள் அவனை நிமிர்ந்து பார்த்தோடு சரி
அதன் பின், அவனோடு பயணிக்கும் நேரத்திலும் புத்தகத்தை முகத்திற்கு முன்
விரித்து வைத்து கொள்வாள், விஜியோ,உத்ராவோ எதாவது கேட்டால் பரிட்சை
என்பாள். விட்டிலும் முன் போல் அவள் தன்னிடமும் தாயிடமும்
வம்பிழுப்பதோ,பேசுவதோ கூட கிடையாது உண்மையாகவே பரிட்சை தான் காரணமாக
இருக்கும், தேர்வு முடிந்த பின் சரியாகி விடுவாள் என சமாதானம் அடைந்தாள்
உத்ரா. விக்கி அவளை பிறர் அறியாமல் பார்பதே போதும் என்று நிம்மதியடைந்தான்.

உத்ரா ரிஷியை பற்றி சொன்னதிலிருந்து அவனின் நினைவு அதிகமாய் தாக்கியது
விஜிக்கு அவனை எப்படியாவது பார்த்து திட்ட வேண்டும் என்று துடித்தாள்.விஜி
அன்று அப்படி சொன்னதிலிருந்து ரிஷி தவிர்க்க ஆரம்பித்தாள் உத்ரா. ரிஷியும்
தினமும் அவளிடம் பேச எத்தனையோ முயன்றும் அவனால் முடியவில்லை.எப்படியாவது
அவளிடம் சீக்கரம் பேச வேண்டும் என்று முடிவுசெய்தான்.

தானாக அந்த வாய்ப்பு அமையும் என்று அவன் நினைக்கவில்லை. ஆனால் அவன் நினைத்தது நடந்ததா பார்போம்...................


Last edited by Theanmozhi on Mon Jan 02, 2012 12:48 pm; edited 2 times in total
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 02, 2012 12:45 pm

கதை மிகவும் சிறப்பாக இருக்கிறது... பாராட்டுகள்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

உத்ராவை கண்ட ரிஷிக்கு கையும் ஒடவில்லை காலும் ஒடவில்லை என்ன செய்வதென்று அறியாத நிலை.தன் காதலே வென்றுவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு.

- காதல் கதையிலாவது வெற்றி பெறுமா என்று பார்க்க ஆவலாக உள்ளது... அடுத்தடுத்தப் பகுதியில் என்ன நடக்குமோ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Mon Jan 02, 2012 12:52 pm

நன்றி ...
என்ன நடக்க போகிறது பார்போம்.....
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Thu Jan 05, 2012 12:21 pm

நான் என்பதே நீயல்லவா - 6.


அன்று உத்ராவிற்கு பிறந்த நாள் , காலையில் எழுந்தவள் பிரம்மித்து போனாள்.
அறை முழுக்க வண்ண காகிதங்களால்
அலங்கரிக்கபட்டிருந்தது.கீர்த்தி,சரஸ்வதி,மல்லிகார்ஜ ுன் முவரும் குளித்து
தயாராகி அவள் முன் நின்றிருந்தனர்.முவரும் ஒரே குரலில்


"HAPPY BIRTHDAY " என
அவளால் பேசமுடியவில்லை அந்தளவு இன்ப அதிர்ச்சி புரிந்துகொண்ட அவர்கள்
சிரித்தனர்.மல்லிகார்ஜுன் அவள் அருகில் வந்து தலையை மிருதுவாக தடவி



"சீக்கரம் கிளம்பு டா , கோவிலுக்கு போய்டு நான் ஆபிஸ் போகனும்"


"இன்னைக்கு Sunday தான பா"


"ஆமா மா ஆனா ஒரு பெட்டி போகவேண்டியது இருக்கு டா"


"என்ன பா நீங்க " சினுங்கினாள்


"செல்லம் ல "


"சரி சீக்கரம் வந்துடனும்"


"ம் .... நீ ஹொம் ல இருந்து வரதுகுள்ள வந்துடுவேன், அப்புறம் சினிமா போலாம் சரியா?"


"ம் சரி" குளிக்க சென்றாள். தயாராகி வந்தவளை பார்த்து முகம் மலர்ந்தனர்
பெற்றோர்.அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவள் புது
துணியையும் பெற்றுகொண்டாள். உத்ராவிடம் இது ஒரு பழக்கம் பிறந்தநாளுக்கு
எடுக்கும் துணியை மட்டும் அன்றுதான் பார்ப்பாள் பிடிக்காவிட்டாலும்
சந்தோஷமாக அணிந்து கொள்வாள். அன்று அவர்கள் கொடுத்தது ஒரு புடவை இளம் நீல
நிறத்தில் பிங்க் நிற பூக்களோடு கூடிய டிசைனர் புடவை. அணிந்து வந்து
காண்பித்தாள்.
கீர்த்தி ஒடி வந்து கட்டிகொண்டாள்.


"உத்தி ரொம்ப அழகா இருக்கே டி ,இன்னைக்கு உன்ன பாக்கறவன் கதி அவ்வளவு தான்"


"ஏய் சும்மா இருடி , அம்மா அப்பா காதுல விழுந்துட போகுது"


"அதுக்கு தான சொல்லறது , ஏய் உண்மைய சொல்லு டி யாரையாவது select பண்ணிடியா"


"அடிவாங்க போறடி" ஒரு விரல் நீட்டி மிரட்ட



"ஆனா பாவம்டி அவன்"


" உன்ன...."


"ஆ... அடிக்காதடி வலிக்குது "

"அந்த பயம் இருக்கட்டும்"

கீர்த்தி சிரித்து கொண்டே மேஜை மேலிருந்த பரிசை எடுத்து வந்து"HAPPY BIRTHDAY உத்தி" என்றாள்.


"THANKS செல்லம்" என்றபடி பிரித்தாள் அதில் ஒரு பெண் அளவில்லா மகிழ்ச்சியோடு கைநிறைய கோப்பைகளுடன் இருந்தாள்.



"இது மாதிரி நீயும் எல்லாதிலையும் வெற்றி பெற்று, அளவில்லா சந்தோஷத்தோட இருக்கனும் கா"


"தாங்கஸ் டா குட்டிமா" என்று அணைத்து கொண்டாள்.


அனைவரும் பக்கதிலுள்ள கோவில் சென்று வந்தனர்.மல்லிகார்ஜுன் கம்பனிக்கு கிளம்பினார். உத்ரா விஜி வீட்டிற்கு செல்ல தயாரானாள்.



"நீயும் வாயேன் கீர்த்தி"


"இல்லடி நீ விஜியக்கா கூட போ,நான் அம்மாவுக்கு Help பண்ணறேன்"


"சரி அம்மா , கீர்த்தி பை " வண்டி எடுத்துகொண்டு புறப்பட்டாள்.

விஜியின் வீட்டிற்கு வந்து கதவை தட்டியவள் திறக்காமல் போகவே மறுமுறை
தட்டிவிட்டு கைபிடியை பிடித்துகொண்டு திரும்பி சாலையை
பார்த்துகொண்டிருந்தாள்.அந்த பக்கத்திலுருந்து கதவு வேகமாக திறக்கபட
தடுமாறி திறந்தவரின் மேல் பின்பக்கமாய் சாய்ந்தாள். தன்னை தாங்கியது ஒரு
ஆண் என்று மட்டும் தெரிந்தது , விஜியின் அப்பாவாய் தான் இருக்கும் என்று
நினைத்துகொண்டு நின்று

"சாரி மாமா" என்று திரும்பினாள். ஆனால் அங்கு நின்றிருந்தது கண்ணன் இல்லை
சரண். உத்ராவை பார்த்தவுடன் ரசிக்க ஆரம்பித்திருந்தான்.அவளோ யாரிவன் ?
எப்படி இங்கு வந்தான்? அய்யோ இவன் மேல் விழுந்து விட்டேனே , இதில் சாரி
மாமா வேறு உத்தி உனக்கு அறிவே இல்லடி என்று தன்னையே திட்டி
கொண்டிருந்தாள்.அத்தனை எண்ணங்களையும் அவள்முகம் பளிங்காய் காண்பிக்க அதனை
ஒரு புன்னகையுடன் ரசித்து கொண்டிருந்தான் சரண்.தடுமாற்றதுடன் அவனை பார்த்து

"யாரு நீங்க"

"என் வீட்டுக்கு வந்து என்னையே யாருனு கேட்கறீங்களே நீங்க யாரு?"

"உங்க வீடா? ........... விஜி இருக்காளா?"

"அவளா ம்........ வெளில போய்டா"

"எங்கனு தெரியுமா"

"இருங்க வந்ததும் கேட்டு சொல்லறேன்"

அவனை முறைத்து கொண்டே விஜியின் செல்லிற்கு தொடர்பு கொண்டாள். கொஞ்சமாய்
முடிஎடுத்து center clip இட்டிருந்தாள் , நெற்றியில் சின்ன பொட்டிட்டு
சந்தன கிற்றுடன் அழகாய் புடவையில் இருந்தவளை கண் இமைக்காமல் பார்த்தான்
சரண். செல்லின் சினுங்கள் உள்ளிருந்து வர அவனை எரித்துவிடுவது போல்
முறைத்து கொண்டே "விஜி" அழைத்தாள். அதே சமயம் செல்லின் சினுங்கள் கேட்டு
விஜியும் வர

" ஏ ஏன் டி அங்கயே நிக்குற உள்ள வா"

"வழிய விடறீங்களா?" என்றாள் சரணிடம்.

ஒரு புன்னகையோடு வழிவிட்டான். விஜியின் அருகே வந்தவள்

"யாருடி இவரு நீ இல்லனு பொய் சொல்லறாரு"

"சரண் டி என் அண்ணன், சும்மா சொல்லிருப்பான் வா" என்று அழைத்து சென்றாள்.

"என்னடி இன்னும் கிளம்பாம இருக்க?"

"sorry டி, சரண், பெரிப்பா , பெரிம்மா எல்லோரும் காலைல தான் வந்தாங்களா
அதான் பேசிட்டு இருந்தேன் , ரெண்டு நிமிஷத்துல கிளம்பிடரேன் டி , அப்பறம்
அம்மா கிச்சன்ல இருக்காங்க போய் பாரு , அம்மா கேட்டாங்க"

" சரி நீ சீக்கரம் கிளம்பு டி" என்று கிச்சனை நோக்கி நடந்தாள்.

"என்ன அத்த என்ன ஸ்பெஷல் வாசன தூக்குது"

"ம் கேசரி டா உனக்கு பிடிக்கும்னு விஜி சொன்னா அதான் செய்யறேன், HAPPY BIRTHDAY மா"

"THANKS அத்த" என்று காலில் விழுந்தாள்.

"சித்தி இதெல்லாம் அநியாயம், எனக்காக செய்யறேனு தான சொன்னீங்க இப்ப இவங்க
கிட்ட அவுங்களுக்குனு சொல்லறீங்க" என்ற படி பிரபாவதியின் அருகில் வந்து
நின்றான் சரண்.

"சரண் உனக்கு பாதி , உத்ராவுக்கு பாதி"

"எனக்கு முழுசா தான் வேணும்"

அவன் பேசியதை காதிலையே வாங்காமல் "அத்த மாமா எங்க?" என்றாள்.

"மேல இருப்பாரு மா"

"சரி அத்த, நான் மாமாவ பார்த்துட்டு வரேன்"

"சரி "என்று சரணிடம் திரும்பியவர்"என்ன கேட்ட முழுசா வேனுமா?"

"சும்மா கேட்டேன் சித்தி விளையாட்டுக்கு"

"என்ன விளையாட்டோ போ" சரணை பற்றி தெரியுமாதலால் ஏதும் சொல்லவில்லை.

கண்ணனை தேடி சென்றவள் அங்கு அவருடன் பெருமாளும் ராஜாத்தியும் இருப்பதை கண்டு தயங்கி நின்றாள்.அவளை பார்த்த ராஜாத்தி

"யாரு மா நீ?" என அவளை பார்த்தனர் மற்ற இருவரும். கண்ணன்

"உத்ரா வா மா , இவ விஜி friend" இருவருக்கும் வணக்கம் தெரிவித்தவள்

"மாமா கூப்டீங்களாம் விஜி சொன்னா"

"ஆமா அங்க shelf ல ஒரு box இருக்கும் எடுத்துட்டு வா"

"ம்" சென்று பக்கத்து அறையில் இருந்ததை எடுத்து வந்து கொடுத்தாள்.

"இந்தா இது உனக்கு தான் பிரிச்சு பாரு "பிறந்தநாள் வாழ்த்துகள் டா"

"எதுக்கு மாமா இதெல்லாம் உங்க wishesஎ எனக்கு போதும்"

"ஏன் நான் கொடுத்தா வாங்க மாட்டியா?"

"ஐயோ !அப்படியேல்லாம் இல்ல மாமா" பிரித்தாள் அது ஒரு பேனா அழகாயிருந்தது.

"ரொம்ப நல்லா இருக்கு மாமா thanks"

பெருமாளும் ராஜாத்தியும் தம் பங்கிற்கு வாழ்த்து சொன்னார்கள்.அவர்களுக்கு
நன்றி சொன்னாள். கீழே வந்து பிரபாவதியிடம் சொல்லிவிட்டு, விஜியை கூப்பிட
சென்றாள்.விஜி தயாராகி கையில் பரிசுடன் நின்றிருந்தாள்.

"MANY MORE HAPPY RETURNS OF THE DAY உத்தி" பரிசை கொடுத்தாள். அதை வாங்கியவள்

"Thanks விஜி" என்று பிரித்தாள் அதில் இரு பெண்கள் ஒன்றாய் சிரித்து கொண்டிருந்தனர்.

"இது மாதிரி நாம பிரியவே கூடாது டா"என்று நெகிழ்ச்சியுடன் சொன்னவளை அணைத்து

"கண்டிப்பா பிரிய மாட்டோம் டா" என்றாள்.

சரண் இவர்களின் பின்னாலில் இருந்து"sentiment தாங்கல பா சாமி"என்றான்.

"டேய் போடா சும்மா வம்பிழுத்துகிட்டு"சரண் உத்ராவிடம் வந்து

"MANY MORE HAPPY RETURNS OF THE DAY" என்றான்

"thanks"

"அத சிரிச்சுக்கிட்டே சொல்லலாமே"

அவனை முறைத்து கொண்டே விஜியை அழைத்துகொண்டு கிளம்பினாள்.அவள் போவதை
பார்த்து ரசித்து கொண்டிருந்தான் சரண்.ஹொம் சென்றுவிட்டு வந்து
கீர்த்தி,சரஸ்வதி,உத்ரா,மல்லிகார்ஜுன் அனைவரும் சினிமா சென்று
வந்தனர்.விஜி சரண் குடும்பத்தினர் வந்திருப்பதால் தான் வரவில்லை என்று
சொல்லிவிட்டாள்.விக்கி காலையில் வந்து உத்ராவிற்கு வாழ்த்துசொல்லிவிட்டு
சென்றுவிட்டான்.

அடுத்த நாள் காலையில் உத்ராவின் அலுவலகத்தில் ஒருவர் அலுவலகத்திலிருந்து
விடைபெறவிருப்பதால் அவருக்கு send off பார்ட்டி ஏற்பாடு செய்ய
பட்டிருந்தது.அதில் அனைவரும் கலந்து கொண்டனர். அங்கு தனியாக அமர்ந்திருந்த
உத்ராவிடம் சென்றான் ரிஷி.
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Thu Jan 05, 2012 12:22 pm

நான் என்பதே நீயல்லவா - 7


மாலை நேரம்.

உத்ராவுடன் ரிஷியும் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தான்.தூரத்திலையே
ரிஷியை பார்த்துவிட்ட விஜி அவனிடமிருந்து கண்களை அகற்றவில்லை.வந்தவன்
பெயருக்கு அவளிடம் "hai யும் , sorryயும்" சொல்லிவிட்டு உத்ராவிடம் தான்
பேசி கொண்டிருந்தான்அலுவலக விஷயமாக தான். வாய் தான் பேசிகொண்டிருந்ததே
தவிர இருவரின் கண்களும் விஜியின் மேல் தான் இருந்ததது ஆனால் வேறு வேறு
சிந்தனையில். ரிஷி அவளை அனுஅனுவாக ரசித்து கொண்டிருந்தான் என்றால் உத்ரா
அவளை அளவிட்டு கொண்டிருந்தாள்.விஜியின் முகம் கோபத்தில்
சிவந்திருந்தாலும், கண்ணில் வலி தெரிந்ததை காண தவறவில்லை அவள்.

ரயில் கிளம்ப ரிஷி இருவரிடமும் விடைபெற்றுகொண்டு புறப்பட்டான்.ரயிலில் ஏறி
அமர்ந்த இருவரும் சிறிது நேரம் பேசி கொள்ளவில்லை. அவளின் மனநிலையை அறிந்து
கொள்ள மெதுவாக பேச்சுகொடுத்தாள் உத்ரா.


"விஜி ரிஷி நல்லவர் இல்ல டி"

"அதுக்கென்ன இப்போ?"

"இல்ல அவரு நல்லவருனு சொன்னேன்"

"இருந்துட்டு போகட்டும்"

"ஏய் ஏன் டி இப்படி பேசுற?"

"பின்ன எப்படி பேச சொல்லுற?"

"ஏதுக்கு கோவப்படற?"

"எனக்கென்ன கோவம்"

" நான் ரிஷிகிட்ட பேசினது தான் உனக்கு கோவமா?"

".................."

"பதில் பேசு டி"

"................"

"நான் அவர்கிட்ட பேசுனா உனக்கேன்னடி?" அவள் கேட்டது குறும்பாக தான் ஆனால் விஜி வேறு விதமாக எடுத்துகொண்டாள்.

"எனகென்னவா? சரி......எனகென்ன நீ எப்புடியோ போ....., எவங்கூட வேணா பேசு ,
என்ன வேண்ணா செய், எனக்கென்ன வந்தது" கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பதே
தெரியாமல் பேசி கொண்டிருந்தாள்.

"ஏதுக்கு இப்ப கத்தற"

"நா ஏன் கத்தனும்? நீ என்ன வேண்ணா செய் நான் ஏன் கேட்கனும்?நான் யார் கேக்கறதுக்கு?"

"என்ன பேசுறனு தெரிஞ்சுதான் பேசறியா?"

"தெரிஞ்சு தான் பேசுறேன்"

"நீ எனக்கு யாரும் இல்லையா?"

"இல்ல"

அதற்குள் வண்டி நிற்க விடுவிடுவென வீட்டிற்கு நடந்தாள்.அவளின் மனம்
உலைகளமாக கொதித்து கொண்டிருந்தது.ரிஷி எப்படி அவளுடன் சிரித்து பேசலாம்?
அவன் தான் பேசினான் என்றால் இவளுக்கு அறிவு எங்கே போயிற்று?என்னை
கண்டுகொள்ளாமல் அப்படி என்ன சிரித்து பேச்சு? என்று சுற்றி சுற்றி அவர்கள்
இருவரும் சிரித்து பேசியது தவறு என்ற வழியிலேயே யோசித்தாள் இல்லை காதல்
அவளை அப்படி யோசிக்க வைத்தது.யோசிக்க யோசிக்க அவளுக்கு அழுகையே
வந்தது.வீட்டிற்கு வந்தவள் யாரிடமும் பேசாமல் அவளுடய அறைக்கு சென்று கதவை
சாத்திகொண்டாள்.


உத்ராவின் மனநிலையோ பாதி சந்தோஷமாகவும் பாதி வருத்தமாகவும் இருந்தது.ரிஷி
இன்று அவளிடம் பேசிய காட்சியை மனதில் ஓட்டினாள். தன்னை நோக்கி வந்த ரிஷி
பார்த்து புன்னகைத்தாள் உத்ரா.

"உட்காரலாமா?"

"உட்காருங்க" எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

"என்ன உங்கள பாக்கவே முடியல?"

"ம் கொஞ்சம் work அதான்"

"உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்"

"கேளுங்க"

"தப்பா நினைச்சுக்க மாட்டீங்கள்ள"

"கேளுங்க"

"உங்க ப்ரண்ட பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..........." இதை கேட்ட உத்ரா
சிரிக்கலானாள் அவன் பீடிகையிட்டதில் என்னமோ என்று நினைத்திருந்தவள் அவன்
விஜியை பற்றி கேட்கவும் சிரித்துவிட்டாள்.

"ஏன் சிரிக்கறீங்க?"

"வாங்க போங்க வேண்டாம் சும்மா வா போனே கூப்பிடுங்க"

"சரி ஏன் சிரிக்கற?"

"ஒன்னும் இல்ல எந்த ப்ரண்ட பத்தி?" அவன் விஜியை தான் கேட்டான் என்று
தெரியும் ஏனெனில் அலுவலகத்தில் அவ்வளவு புதியவர் யாருமில்லை அதோடு
அவளுக்கு நெருங்கிய பழக்கமும் இல்லை ஆனாலும் வேண்டுமென்றே கேட்டாள்.

"அதான் அன்னைக்கு உன் கூட வண்டில வந்தாங்களே"

"ஓ....... விஜியா?"

"விஜி விஜி " தனக்குள் முனு முனுத்து கொண்டான் " அவங்க தான்"

"அவள பத்தி என்ன தெரியனும்? ஏன் தெரிஞ்சுகனும்?"

ரிஷியை பற்றி அலுவலகத்தில் இருப்பவர்கள் சொல்லி கேட்டிருக்கிறாள் அவளும்
ஒரு சில சமயம் பார்த்தும் இருக்கிறாள். பெண்களை கண்ணியமாக நடத்துவதும்,
சகஜமாக பேசுவதும், அவனின் தன்மையை காட்டியது. தன்னிடம் ஒரு ஆர்வத்துடன்
அவன் பேச வருவது ஏன் பலமுறை யோசித்திருக்கிறாள். அதற்கான விடை இப்போது
தெரிந்தது அவளுக்கு. அவனது கண்களில் இருக்கும் பயம் சொல்லியது அவன் விஜியை
காதலிக்கிறான் என்று.அவனுடன் பேசிவது இல்லையே தவிர அவனிடம் மரியாதை
வைத்திருந்தாள்.அவன் விஜியை காதலிப்பது தெரிந்ததும் அன்னியம் போல்
தோன்றாமல் நன்றாக பேசினாள்.

"இல்ல ......அது.........வந்து......"

"ம் சொல்லுங்க"

"நான்........அவள ........."

"காதலிக்கறீங்களா, love at the first site இல்லையா?"

"எப்படி தெரியும்?" அதித ஆச்சரியதோடு

"உங்க கண்ணு தான் சொல்லுச்சு" வெட்கசிரிப்பு சிரித்தான் அவன்.

உத்ராவுக்கு சந்தோஷமாக இருந்தது விஜிக்கு ஏத்த ஜோடி தான் ஆனால் விஜி என்ன
நினைக்கிறாள் என்று தெரியவில்லையே அன்று ரிஷியை பற்றி சொன்ன போதுகூட
கோபட்டாளே ஆனாலும் அன்று அவள் சந்தோஷமாக தான் இருந்தாள். அவள் என்ன
நினக்கிறாள் என்பதை தெரிந்துகொள்ள தான் இப்படி ஒரு திட்டத்தையும்
போட்டாள். அதன் படி தான் அனைத்தும் நடந்தது. ஆனால் இப்படி பேசுவாள் என்று
அவள் நினைக்கவில்லை. கோபத்தில் என்று எவ்வளவு தான் சமாதான படுத்த
முயன்றாலும் ஏதோ ஒன்று உறுத்தியது.அதை ஒதுக்கி விட்டு வீடு வந்து
சேர்ந்தாள்.

சரஸ்வதி இவள் வரவை எதிர்பார்த்துகொண்டிருந்தார். உத்ரா வேலைக்கு செல்ல
ஆரம்பித்திலிருந்து தன் சிறிய மகளிடம் மாற்றங்களை உணர்ந்தவர் அவளிடம்
கேட்க அவள் பரிட்சை என்று காரணம் கூறினாள்,அவரும் அதை அப்படியே நம்பினார்.
ஆனால் தேர்வு முடிந்து வாரம் ஒன்றாகியும் அவள் அப்படியே இருக்க காரணம்
கேட்ட போது மறுத்தாள் ஆனால் அதில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை அவருக்கு
தெரியாதா அவரது மகளைபற்றி இதை குறித்து பேச தான் உத்ராவை
எதிர்நோக்கிகொண்டிருக்கிறார். அவருக்கு தன் பெரிய மகளின் முடிவு எந்த
காரியத்திலும் சரியாக தான் இருக்கும் என்பதில் நம்பிகை உண்டு. அதே நம்பிகை
எந்த ஒரு விஷயத்தையும் சரியாக கையாளுவாள் என்பதிலும் இருந்தது.அதோடு
பெரியவர்கள் பேசுவதை காட்டிலும் சிறிவர்கள் இருவரும் தங்களுக்குள்
பேசினால் தயக்கமில்லாமலும் இருக்கும்,தெளிவும் பிறக்கும் என்று தோன்றியது
அவருக்கு.
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 05, 2012 12:30 pm

[You must be registered and logged in to see this image.]நல்லா இருக்கு தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Mon Jan 09, 2012 12:36 pm

நன்றி
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Mon Jan 09, 2012 12:39 pm

நான் என்பதே நீயல்லவா - 8



உத்ராவின் முகம் சரியில்லை என்பதை பார்த்தவுடனே
தெரிந்து கொண்ட சரஸ்வதி இவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்று
யோசித்துகொண்டே காபி கலந்து வந்து கொடுத்தார். குடித்தவள் அவரை
கட்டிகொண்டாள். தினமும் தன்னை கட்டிகொண்டு கதை பல அளக்கும் தன் மகள் இன்று
ஆறுதலுக்காய் தலைசாய்ந்தது போல் இருந்தது அவருக்கு. ஆதரவாய் தலைவருடி


"என்ன டா முகமே சரியில்ல?"


"அதெல்லாம் ஒன்னும் இல்ல மா கொஞ்சம் டையட்"


"இல்ல சொல்லுமா"என்று அவர் தூண்ட



"விஜி கூட சண்ட மா" என்றாள் வருத்துடன்


"ஏன் சண்ட போட்டீங்க?"


"சும்மா விளையாட்டுக்கு பேசினத சீரியசா எடுத்துகிட்டு திட்டீடா மா"


"இதுக்கு போய் யாராவது இப்படி உம்முனு இருப்பாங்களா?...........ம்.....
அவளே நாளைக்கு வந்து பேசுவா பாரு" என்று சமாதானபடுத்திவிட்டு பெருமூச்சு
ஒன்றை வெளியிட்டார்.அவருக்கு இவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற
நிம்மதி. உத்ராவும்அதிலிருந்து வெளிவந்தவளாக



"எங்க மா கீர்த்தி? வர வர அவ இருக்குற இடமே தெரியமாடேங்குது?"


"அவள பத்தி தான் உன் கிட்ட பேசனும்னு இருந்தேன் டி"


"ஏன் மா? என்னாச்சு?


அவளைப்பற்றிய அவரது எண்ணங்களை முழுவதுமாக கூறியவர் கவலையில் ஆழ்ந்தார்.


" அம்மா கவலைபடாதீங்க நான் பாத்துகறேன், ஒன்னும் இருக்காது மா எதாவது டென்ஷனா இருக்கும் "


"அவளுக்கு என்ன டென்ஷன்?"


"ஏன் exams நல்லா எழுதலையேங்கற டென்ஷனா கூட இருக்கலாம் இல்ல மா"


"என்னமோ டி , எனக்கு மனசே சரியில்ல"


"அம்மா கவலைபடாதீங்க நான் பாத்துகறேன்" என்று உறுதிகூறி அவரை அமைதி படுத்திவிட்டு கீர்த்தியின் அறைக்கு சென்றாள்.

கீர்த்தியோ இது ஏதும் அறியாதவளாக தன்னுள் போராடிக்கொண்டிருந்தாள்."அவனை
பார்த்தால் தான் மனம் தடுமாறுகிறது இந்த செமஸ்டர் லீவில் பார்க்காமல்
இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று எண்ணியிருந்தவளுக்கு இந்த
ஒருவாரம் போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.


எங்கு திரும்பினாலும் அவனே வந்து நின்றான், எப்போதும் அவள் நினைவை அவனே
ஆக்ரமித்திருந்தான். தான் இந்தளவுக்கு அவனை காதலிக்கிறேனா? என்று அவளுக்கே
ஆச்சரியமாக இருந்தது.அவனும் என்னை காதலிக்கிறானா? என்று குழப்பமாகவும்
இருந்தது. இன்னொரு பக்கம் தனக்கு முழு சுதந்திரம் அளித்த பெற்றோருக்கும்,
தன் மேல் நம்பிக்கை வைத்து அவனுடன் பழகவிட்ட தமக்கைக்கும் துரோகம்
செய்கிறோமோ என்ற உறுத்தலாகவும் இருந்தது. இப்படி அவனை தைரியமாக
காதலிக்கவும் முடியாமல், காதலே வேண்டாம் என்று தூக்கி எறியவும் முடியாமல்
தவித்து கொண்டிருந்தவளுக்கு தன்னை சுற்றி நடப்பதை பார்க்க நேரம் எங்கே?.

கீர்த்தியை தேடி வந்தவள் நடப்பதேதும் அறியாமல் எங்கோ வெறித்துகொண்டிருந்தவளை பார்க்க மனம் வலித்தது காட்டிகொள்ளாமல் அவளருகில் வந்து

"ஏய் என்னடி நீ இருந்தும் வீடு அமைதியா இருக்கு?"

அப்போது தான் அவளை கவனித்தவள் " ம் என்ன சொன்ன?"

"சரியா போச்சு, என்னடி ஆச்சு உனக்கு வீட்டையே ரெண்டு பண்றவ கொஞ்ச நாளா
ரொம்ப அமைதியா இருக்க" என்ன முயன்றும் குரலில் கவலைஇழையோடுவதை தடுக்க
முடியவில்லை

அவள் கண்களில் தெரிந்த பாசமும் குரலில் இருந்த கவலையும் அவளை என்னவோ செய்ய அமைதியாக இருந்தாள். உத்ரா அவள் தலை வருடி

" என்ன டா?"

"உத்தி நீயும் அம்மாவும் வீணா கவலபடுறீங்க ஒன்னும் இல்ல டி"

"கீர்த்தி எங்களுக்கு தெரியாதா நீ எப்படி இருப்பனு பொய் சொல்லாத டி"

"இல்ல உத்தி exam சரியா எழுதல டி அதான் பயமா இருக்கு"

அவள் சொல்வது பொயென்று தெரிந்தும் சமாதானபடுத்தி அவளை இப்போதய கவலையிலிருந்து மீட்டெடுக்க முயன்றாள்.

"அதனால என்ன கீர்த்தி அடுத்த செமஸ்டர்ல எழுதிட்டா போச்சு cheer up baby"

அவளும் இவளுக்காக சகஜமானாள்(அல்லது நடித்தாள்). சிரித்தபடியே

"office எல்லாம் எப்படி இருக்கு?"

"ம் நல்லா இருக்கே"

"எதாவது சொன்னாங்களா?"

"இல்ல" குழப்பத்துடன்

"அந்த company ரொம்ப strong டி"

"ஏன் அப்படி சொல்லற?"

"இல்ல நீ போய் கூட அந்த company இன்னும் close ஆகாம இருக்கே அதான் சொன்னேன்"

"ஏய் உன்ன............... நில்லுடி ஒடாத......."

சரஸ்வதியிடம் வந்து சரணடைந்தவள் " அம்மா காப்பாத்துங்க மா....."

"அம்மா விடுங்க மா அவள......"

"என்னடி பண்ண ?"

"உண்மைய தான் மா சொன்னேன்......"

"என்ன உண்மை?"

"அத நான் சொல்லரேன்... நான் போய் கூட அந்த COMPANY முடலையாம் அதனால அந்த கம்பனி ரொம்ப STRONGனு சொல்லறா மா"

"விடு உத்தி அவளுக்கே தெரியாம உண்மைய சொல்லிட்டா தெரியாம தான விடு"

"அம்மா........."

அன்று முழுவதும் இருவரும் அவளை வாரிகொண்டே இருந்தனர் இருந்தும் அவள்
சந்தோஷமாகவே உணர்ந்தாள் அவளின் கவலையை நினைக்க நேரமில்லாமல் இருந்தாள்.
மல்லிகார்ஜுனும் வந்து விட அவரும் இவர்களுடன் சேர்ந்து உத்ராவை வார
ஆரம்பித்துவிட்டார் குடும்பமே சந்தோஷமாக இருந்தனர். ஆனால் அது எத்தனை
நாளுக்கு நீடிக்கும் என்று தான் தெரியவில்லை.
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Mon Jan 09, 2012 12:40 pm


நான் என்பதே நீயல்லவா - 9






காலையில் விஜியின்
அறைக்கு வந்த பிரபாவதி பயந்து போனார்.கண்கள் ரத்தமென சிவந்திருக்க தரையில்
எங்கோ பார்த்தபடி பிரமை பிடித்தவளை போல் அமர்ந்திருந்தவளை காண அவருக்கு
உள்ளுக்குள் உதறியது.வேகமாய் அவளருகில் வந்து

"விஜி விஜி" அவளை உலுக்கினார்.

அப்போது தான் நடப்புலகத்துக்கு வந்தவளாய்" என்ன மா"

"ஏன் டி இப்படி உட்காதிருக்க? என்னடி ஆச்சு?"

"ஒ.....ஒன்னுமில்ல மா"

"ஒன்னுமில்ல னா ஏன் இப்படி இருக்க? ராத்திரியும் யார்கிட்டயும் பேசாம
சாப்பிடாம வந்து படுத்துட்ட இப்ப என்னடா னா இப்படி பிரமை பிடிச்ச மாதிரி
உட்காதிருக்க? என்னடி ஆச்சு?" கண்களில் கவலை அப்பட்டமாய் தெரிந்தது.

ஒரு நிமிடம் என்ன சொல்லவதேன்று யோசித்தவள் பின்" ஒன்னுமில்லமா ஒரு
software ல பிரச்சனை night fullஅ try பண்ணியும் சரியாகல அதான் எப்படி சரி
பண்ணறதுனு யோசிச்சிகிட்டு இருந்தேன் வேற ஒன்னுமில்ல மா நீங்க சும்மா மனச
போட்டு குழப்பிகாதீங்க மா"

"........."

"அப்பறம் மா நான் இன்னைக்கு ஆபிஸ் போகல"

"ஆபிஸ்ல எதாவது பிரச்சனையா?"

"அதெல்லாம் இல்லமா night சரியா தூங்காம softwareஅ பார்த்திட்டு இருந்தேனா அதான் tiredஅ இருக்கு மா....."

"சரி டி , காப்பிய குடிச்சுட்டு தூங்கு"

"ம்"

அவரை சமாதான படுத்தி அனுப்பிவிட்டு தன்னை சீர் செய்துகொள்ள குளியலறையில் நுழைந்தாள்.

இரவெல்லாம் அவள் தூங்கவில்லை என்னென்னவோ எண்ணங்கள் அவளை
அலைகழித்தது.விட்டிற்கு வந்து ஒரு முச்சு அழுது முடித்தவள் பின்
யோசித்தாள் தான் ஏன் அழுகிறேன்? தனக்கேன் அவ்வளவு கோபம் வந்தது?
தேவையில்லாமல் தான் ஏன் அவளை திட்டினோம்?ரிஷியுடன் அவள் பேசினால் என்ன?
இப்படி தனக்குள் தோன்றிய எண்ணற்ற கேள்விகளுக்கு பதில்
தேடினாள்.அதிலிருந்து அவள் இரண்டு தெளிவான(அவளே அப்படி நினைச்சுகிட்டா)
முடிவுக்கு வந்தாள். ஒன்று அவள் ரிஷியை உயிராய் நேசிக்கிறாள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றய நாளிதழை உற்சாகதோடு படித்து கொண்டிருந்தவனை நோக்கி வந்தனர் குருமூர்த்தியும், லட்சுமியம்மாலும் .

"என்னடா முகத்துல சந்தோஷம் தாண்டவமாடுது"

"பின்ன உங்க மருமகள பார்த்ததுகப்பறமும் என்ன சோகமா இருக்க சொல்லறீங்களா பா?"

"என்ன என் மருமகள பார்த்தியா?"

"ஆமாம் மா பார்த்தேன், உங்க மருமக பேரு என்ன தெரியுமா?"

"என்னடா?சொல்லுடா"

"விஜி மா "

"எங்க நல்லா இருக்குல ரிஷி-விஜி நல்லா இருக்குல" என குழந்தை போல் குதுகலிக்கும் மனைவியை பார்த்து சிரித்தவர் ரிஷியிடம்

"பேசுனியா டா? எப்ப பொண்ணு பாக்க போலாம்?"

"அப்பா அதுகுள்ள அவசரபடாதீங்க நானும் அவளும் கொஞ்ச நாள் காதலிக்கனும் அப்பறம் தான் கல்யாணம்"

"கல்யாணத்துக்கப்பறம் காதலிக்களேன்"

"ம் இல்ல பா அது சரி வராது"

"சரி அப்ப முதல்ல நிச்சயம் பண்ணிக்குவோம் அப்பறம் ஒரு ஆறு மாசமோ, ஒரு வருஷமோ கழிச்சு கல்யாணத்த வைச்சுகுவோம் என்ன சொல்லற"

" ஏதெது விட்டா இப்பவே கிளம்பிடுவீங்க போல"

"பின்ன"

"அதில்ல பா இன்னும் அவ எதுவும் சொல்லல பா"

"என்னடா சொல்லற கொஞ்சம் புரியற மாதிரி தான் சொல்லேன்"

நடந்தது அனைத்தையும் சொல்லிமுடித்தான்.இருவருக்கும் அவன்
சொல்லியதிலிருந்தே தெரிந்தது விஜி ரிஷி காதலிக்கிறாள் என்று அதையே அவனிடம்
கூறினர்.

"எங்களுக்கென்னமோ விஜி உன்ன காதலிக்கறானு தான் தோன்னுது"

"அப்படி தான் பா நானும் நினைக்கறேன் நேத்து மட்டும் இன்னும் கொஞ்ச நேரம்
அங்க நின்னு உத்ரா கிட்ட பேசிருந்தேனு வைங்க எங்க ரெண்டு பேரையும் காளி
மாதிரி வதம் பண்ணிருப்பா"

"ஏய் என் மருமகள காளினா சொல்லுற இரு அவ வரட்டும் சொல்லி தரேன்"

"darling என்ன திடீர்னு அந்த பக்கம் சாஞ்சுட்ட darling"

"நீ இப்படியே கூப்பிட்டு இரு விஜி நல்லா நானு வைக்க போறா"

"ஹா ஹா ஹா அத அப்ப பாக்கலாம் darling இப்ப டைம் ஆச்சு உத்ரா வந்திடுவா நான் போய் என்னாச்சுனு தெரிஞ்சுகனும் bye....."

"டேய் நல்ல செய்தியோட வாடா"

"கண்டிப்பா பா bye..." சிட்டாய் பறந்து சென்றான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உத்ரா இரவு இருந்த மன நிலை அப்படியே தொடர சந்தோஷத்தோடே
கிளம்பினாள்.கீர்த்தியை கேட்டக வேண்டுமா சந்தோஷத்திற்கு அளவே இல்லை(பின்ன
ஹீரோவ பாக்க போறாள்ள).மெல்லிய குரலில் தனக்கு பிடித்த பாடலை
முனுமுனுத்தபடி உத்ராவையும் சரஸ்வதியையும் வம்பிழுத்து கொண்டு
வலையவந்தாள்.சரஸ்வதிக்கு ஆறுதலாய் இருந்தது நேற்றிலிருந்து சகஜமாக வளம்
வருவது சந்தோமாக இருந்தது அவருக்கு.அவள் சரியாகி விட்டதாய் நம்பினார்(இந்த
பயபுள்ளய பத்தி தெரியல).
அவசரமாய் இருவரும் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரபாவதிக்கு அவள் சொல்லவது நம்பும்படியாக இருந்தாலும் எதோ ஒன்று
உறுத்தியது.சரண் விட்டிற்கு வந்துவிட்டால் இருவருமாய் சேர்ந்துகொண்டு
அடிக்கும் கொட்டத்திற்கு அளவே கிடையாது எந்த பிரச்சனை என்றாலும் முதலில்
தன்னிடமும் அவனிடம் தான் கொண்டு செல்லுவாள் ஆனால் இப்போது அப்படி இல்லாமல்
தனியாய் தவிப்பது புதிதாய் இருந்தது மட்டுமில்லாமல் பயமாகவும் இருந்தது
என்ன செய்வது என்று யோசித்தவர் சரணை அழைத்து விபரம் சொல்லி பேசுமாறு
அனுப்பிவைத்தார்.
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Mon Jan 09, 2012 12:40 pm


நான் என்பதே நீயல்லவா - 10







ரயில்
நிலையத்திற்கு வந்தவர்களை நோக்கி கையாட்டி தான் அங்கிருப்பதை தெரிவித்தான்
விக்கி.கீர்த்தியும் உத்ராவும் அதை பார்த்துவிட்டு அவன் அருகில் வந்தனர்.

விக்கி கீர்த்தியை பார்த்தவுடன் தன்னை மறந்தான், சுற்றத்தை மறந்தான்.
விக்கி பல சமயங்களில் நினைப்பதுண்டு தான் தவறு செய்கிறோமோ என்று ஆனாலும்
அவனால் கீர்த்தியை பார்காமல் இருக்கவோ நினைக்காமல் இருக்கவோ
முடியவில்லை.அவள் தனக்கு எல்லாமாய் இருப்பாள் அவளாய் ஏன் நான் இழக்க
வேண்டும்? அத்தையிடமும் மாமாவிடமும் நான் எடுத்து சொல்லுவேன் அவர்கள்
புரிந்துகொள்வார்கள் என்று சமாதானமாவான். ஆனால் கீர்த்தி தான் அவனது
மனைவி, சரஸ்வதி - மல்லிகார்ஜுன், உத்ரா சம்மததோடுதான் அவர்களது கல்யாணம்
என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.அதேபோல் கீர்த்தியின் கண்களில் காதல்
வழிவது தெரிந்தாலும் அவள் படிப்பு முடிந்த பின் தான் தன் காதலை வெளிபடுத்த
வேண்டும் என்றிருந்தான்.

உத்ரா " விஜி வரலயா ?" என்றபின் தான் சுய உணர்வுக்கு வந்தவன்

"என்ன கேக்கற உங்க கூட தான வருவா?"

"ஆமா, ஆனா இன்னைக்கு வரல டா நேரா இங்க வந்துருப்பாலோ னு நினைச்சேன்"

"ஏன் உத்தி உனக்கும் விஜியக்காவுக்கும் சண்டயா?" கீர்த்தி கேட்டாள்

"ஆமா டி விளையாட்டுக்கு பேசினத சீரியசா எடுத்துக்கிட்டு திட்டிடா டி"

"அப்படி என்ன பேசின?" ரயில் வர ஏறி அமர்ந்தனர்.

"எப்பவும் போல தான் பேசினேன்"

"சரி நீ விஜியக்காவுக்கு கூப்பிடு"

"இல்ல நான் மாட்டேன், விக்கி நீ கூப்பிடேன்"

"சரி" விஜியை மொபைலில் அழைத்தான் எடுத்தவள்

"சொல்லு விக்கி"

"எங்க இருக்க விஜி?"

"விட்டுல, நான் இன்னைக்கு ஆபிஸ் வரல விக்கி"

"ஏன் ?"

"உடம்பு சரி இல்ல விக்கி கொஞ்சம் fever"

"அச்சசோ இப்ப எப்படி இருக்கு?"

"கொஞ்சம் rest எடுத்தா சரியாகிடும்"

"சரி நல்லா ரெஸ்ட் எடு, ஏன் உத்ராகிட்ட சொல்லல"

"சொல்லல" பாதி குரல் உள்ளே போக

"சரி நல்லா ரெஸ்ட் எடு bye அப்பறம் பேசறேன்"

"ம்" போனை வைத்தவன் உத்ராவிடம் விஜி ஏன் வரவில்லை என்பதை சொன்னான்.

உத்ராவிற்கு குழப்பமாக இருந்தது அந்த குழப்பதோடு திரும்பியவளின் கண்ணில்
யாரும் அறியாதவாறு விக்கியை பார்த்து கொண்டிருந்த
கீர்த்திப்பட்டாள்.ரிஷியின் கண்களை பார்த்து கண்டுபிடிக்க தெரிந்தவளுக்கு
தங்கையின் கண்களில் இருப்பது என்ன என்று தெரியாதா? ஆனால் விக்கி? என்ற
கேள்வியோடு அவனை பார்த்தால் அவனும் கீர்த்தியை தான் பார்த்து
கொண்டிருந்தான்.அவன் கண்களில் கள்ளமோ, கல்மிஷமோ இல்லை உரிமையும் காதலும்
தான் மேலோங்கியது. ஒரு நிமிடம் இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று
சந்தித்துவிட்டு வேறு இடம் திரும்பின. உத்ராவிற்கு அதிர்ச்சி மேல்
அதிர்ச்சி பல்வேறு உணர்ச்சியின் பிடியில் இருந்தாள்.

எப்போது ரயில் நின்றது, எப்போது விடைபெற்றாள், எப்போது அலுவலகம் வந்தாள்
என்று அவளுக்கே தெரியாது . அந்தளவு யோசனைகள் அவளை
ஆக்ரமித்திருந்தது.சிறிது நேரத்தில் அவளை தேடிவந்த ரிஷி

"என்னாச்சு ? அவ என்ன சொன்னா?"

"ஒன்னும் சொல்லல ரெண்டு பேரும் பார்த்தாங்க பார்த்துட்டு திரும்பிடாங்க" என்றாள் தன் யோசனையிலிருந்து மீளாமல்

"என்ன? ரெண்டு பேரா?"

"ம்" என்று அவன் முகம் பார்க்க தான் உளறியது புரிந்தது அவளுக்கு அசடுவழிந்தபடியே

"இல்ல எதோ யோசனைல சொல்லிடேன் என்ன கேட்ட?"

"ம் சரியா போச்சு, விஜி என்ன சொன்னா நு கேட்டேன்"

"நல்லா திட்டினா"

"எதுக்கு?"

"யாருக்கு தெரியும்"

"திட்டு மட்டும் தான் வாங்கினேன் எதுக்கு கேக்கறதுகுள்ள ஓடிட்டா, இன்னைக்கு வரல , பேசவும் இல்ல, feverநு சொன்னா விக்கிட்ட"

"என்னால தான திட்டு வாங்கின?"

"அப்படி எல்லாம் இல்ல, நீ அவக்கிட்ட சீக்கரம் பேசு அப்பதான் எங்கிட்ட பேசுவா"

"விஜி நம்பர் குடு , பேசுறேன்"

"இல்ல நேர்ல பேசு ரிஷி இல்லனா அவ convince ஆகமாட்டா" என்றாள் தனக்கு தானே தீங்கு செய்வதறியாமல்

"சரி" அவனை மேலதிகாரி அழைப்பதாய் ஒருவன் வந்து சொல்ல விடைபெற்று கொண்டு சென்றான்.

அந்த பின் அவளது சிந்தனைகளை அருகே வர விடாமல் வேலைகள் அவளை
அழைத்தன.வேலையில் தன்னை ஆழ்த்திகொண்டவள் மாலையில் தான் மீண்டெழுந்தாள்
அதற்குள் அவள் அழைக்காமலே சிந்தனைகள் அவளை ஆட்கொண்டன.தான் விஜி வீட்டிற்கு
செல்வதாய் விக்கியிடம் சொன்னாள் உத்ரா.அவனும் வருவதாக சொல்ல இருவருமாய்
விஜியின் வீட்டிற்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு வித்யாசமான வரவேற்பு
காத்திருந்தது.

விஜியின் வீட்டுகதவை தட்டினாள் உத்ரா. சரண் தான் கதவை திறந்தான்.
இருவரையும் மேலும்கீழுமாக பார்த்துவிட்டு

"என்ன வேணும்?" அவன் குரலில் இருந்தது கோபமா வெறுப்பா என்று தெரியவில்லை

"விஜி எங்க இருக்கா?" உத்ரா கேட்டாள்

"ஏன் படுத்தினது போதாதா மறுபடியும் படுத்தனுமா?"

அவள் எதோ கேட்க வாய் எடுக்க அதற்கு அங்கு வந்த பிரபாவதி

" வா உத்ரா, வா பா" அவனை ஒரு உஷ்ண பார்வை பார்த்துவிட்டு சென்றாள்

"அத்த இது விக்கி விஜியோட work பண்ணறான், என் friend"

"வா பா, விஜி சொல்லிருக்கா எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன் மா"

"விஜி ரூம்ல தான் இருக்கா போய் பாருங்க, நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்"

"ம்"

இருவரும் விஜியின் அறைக்கு சென்றனர். இவர்கள் வருவதை பார்த்துவிட்டு
கண்மூடி தூங்குவதை போல் பாவனை செய்தாள்.உத்ரா அவளருகில் வந்தமர்ந்து அவளை
தொட்டு பார்த்தாள் உடல் சூடாய் இருந்தது ஆனால் அவள் தூங்குவது போல்
உத்ராவுக்கு தோன்றவில்லை. விக்கி அவளை எழுப்ப வேண்டாம் என்று விட
அமைதியாய் நின்றிருந்தனர். பிரபாவதி வரவும் முவரும் வெளியில்
சென்றனர்.விஜிக்கு தான் ஏன் அவ்வாறு செய்தோம் என்றே தெரியவில்லை ஆனால்
உத்ராவை தவிர்கிறோம் என்பது மட்டும் புரிந்தது.உத்ராவும், விக்கியும்
பிரபாவதியிடம் சிறிது நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு அவரவர் வீட்டுக்கு
சென்றனர்.அது வரையில் சரண் அங்கு வரவில்லை.

விக்கிக்கு இன்று கீர்த்தி பார்த்த பார்வையும் அதிலிருந்த காதலும் தான் நினைவில் வந்து உற்சாகப்படுத்தியது.கீர்த்தியு

ம்
அதே மனநிலையில் தானிருந்தாள் அவள் வேறேதுவும் யோசிக்கவில்லை எதுவானாலும்
விக்கி உடனிருப்பான்,அன்னையும் தந்தையும் ஆதரிப்பர் என்றே தோன்றியது
அவளுக்கு.கீர்த்தியும் விக்கியும் ஒருவருக்கொருவர் வார்தைகளால் காதலை
பகிரவில்லையே தவிர கண்களால் பகிர்ந்து தான் கொண்டிருந்தனர்.

உத்ரா தான் பாவம் அத்தனை பிரச்சனைகளையும் தன்னுள் ஏற்றிகொண்டு
இருந்தாள்.வேலையின் சோர்வோடு கவலையின் சோர்வும் சேர்ந்துகொள்ள அமைதியாய்
சென்று படுத்துகொண்டாள் தூக்கம் தான் வரவில்லை இரவெல்லாம் யோசித்தும் ஒரு
முடிவுக்கும் வரமுடியவில்லை அவளால். இது போன்ற சமயங்களில் உத்ரா
மல்லிகார்ஜுன் கையை பிடித்துகொண்டு நடந்து கொண்டே அந்த பிரச்சனைப்பற்றி
அவரிடம் சொல்லுவார் பெரும்பாலான நேரங்களில் அவரே தீர்வு சொல்லிவிடுவார்
அப்படி இல்லையேன்றாலும் இருவருமாய் ஆலோசித்து தீர்வு கண்டுபிடிப்பார்கள்.
அதையே இப்போதும் செய்யலாம் என்று முடிவு செய்தாள்
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Mon Jan 09, 2012 12:41 pm


நான் என்பதே நீயல்லவா - 11







பொழுது
முழுவதுமாக புலராத அதிகாலை நேரம் அந்த மார்கழி மாத குளிரிலும் தன்
குஞ்சுகளின் பசி மிகுந்த குரல் கேட்டு"இதோ நான் கிளம்பிவிட்டேன்" என்று
பலவிதமான பறவைகள் தத்தம் இனிய குரலில் அறிவித்தபடியே சென்றன அதை கேட்ட
மனிதர்களும் "இதோ நாங்களும் கிளம்பபோகிறோம்" என்றபடி ஆங்காங்கே வேக
நடையிட்டு சென்று கொண்டிருந்தனர்.ஈர பதத்தோடு வீசிய காற்றை தன் காதல்
தூதுவனாக்கி வண்டுகளையும், தேனீகளையும் சீக்கிரம் வர சொல்லி செய்தி
அனுப்பின பூக்கள்.அவைகளும் "செய்தி கிடைத்தது கண்ணே இதோ வந்துவிட்டேன்"
என்று ரீங்காரமிட்டபடி வந்து பூக்களிகளிடம் காதல் மொழி பேசின. இந்த இனிய
இசையை கெடுக்க முயன்று ஒலித்தது பால்காரனின் ஹாரன்.அந்த சத்தமும் இசையாய்
மாறிவிட தோற்று போய் ஒய்ந்தது. இந்த இனிய சூழலை தந்தையின் தோளில் சாய்ந்து
ரசித்தபடியே நடந்தாள் உத்ரா.

சற்றுமுன் தனக்கிருந்த மனநிலையையும் இப்போதிருக்கும் மனநிலையையும்
ஒப்பிட்டு பார்த்தாள்.இந்த மாற்றதிற்கு காரணமான தன் தந்தையை பெருமையோடு
பார்த்து புன்னகைத்தாள் அவளின் எண்ணம் புரிந்தவர் காலரை தூக்கிவிட்டு
சிரிக்க அவளும் வாய்விட்டு சிரித்தாள்.ஏதோ பேசியபடி வீடுவந்து
சேர்ந்தனர்.இருவரின் முகம் பார்த்தவரின் மனம் நிறைய புன்னகைத்தார்
சரஸ்வதி.அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அலுவலகம் கிளம்பினாள்
உத்ரா.என்றுமில்லாத அதிசயமாய் சீக்கிரம் ரயில்நிலையம் வந்திருந்தனர்
இருவரும் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தபடி கீர்த்தி கேட்டாள்.

"டைம் ஆச்சு டைம் ஆச்சுனு நான் காட்டு கத்து கத்தினா கூட கிளம்பமாட்ட
இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கரம் கிளம்பிட்ட? ஆபிஸ்ல எதாவது விசேஷமா?"

"ம் இன்னைக்கு என்ன நாள்?......... சம்பள நாள் அதான் இத்தன ஜோர்"

"ஆமா ல மறந்துட்டேன் உத்தி..... எனக்கு என்ன வாங்கி தருவ?"

"என்ன வேணும்?னு சொல்லு வாங்கி தரேன்...."

"அப்ப சரி கேட்டுகோ.........." என்று குதுகலமாய் பட்டியல் வாசித்தாள் அதை கேட்டவளுக்கு தலைசுத்த

"என்ன டி இது?"

" இது இப்ப போதும் உத்தி அப்பறம் மீதிய வாங்கிகறேன்"

"நீ சொல்லுறத பாத்த என் சம்பளமே மிஞ்சாது போலவே, இதையெல்லாம் உன்ன கட்டிகபோறவன் கிட்ட வாங்கிக்க தாயே"

"அவர்கிட்ட கேட்க இன்னும் நிறைவச்சிருக்கேன் இதமட்டும் சொல்ல சொல்லுறயே..."

"பாவம் டி அவன்" சோகமாய் சொல்ல இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.
கீர்த்திக்கு எதோ தோன்ற திரும்பினாள் கொஞ்சதூரத்தில் இவளையே பார்த்தபடி
விக்கி வந்து கொண்டிருந்தான்.உதட்டை கடித்து வெட்கத்தால் சிவந்த கன்னங்களை
சரி செய்ய முயன்று முடியாமல் தலைகுனிந்தாள். அதை பார்த்த உத்ரா அவள் கண்
சென்ற திசை பார்த்துவிட்டு பார்காதது போல் திரும்பிகொண்டாள்.அருகில் வந்த
விக்கி

"அப்படியென்ன சிரிப்பு என்கிட்ட சொன்னா நானும் சிரிப்பேன்ல"

"கீர்த்தி லிஸ்ட் கேட்டு தான் இந்த சிரிப்பு"

"என்ன லிஸ்ட்?"

"இன்னைக்கு சம்பள நாள் இல்ல அதுக்கு தான்"

"ஓ.......... உத்தி எனக்கு டிரிட் இல்லயா?"

"உங்க ரெண்டுபேருக்கும்............. ஒரு...... ஸ்பெஷல்ல்ல்ல்ல்ல் டிரிட்
இருக்கு" என்று தலைசாய்த்து கண்சிமிட்டி கள்ள சிரிப்போன்றை
உதிர்த்தாள்.அதை இருகண்கள் படமெடுத்து பத்திரபடுத்தியது.

"என்ன ட்ரிட்?"

"சாய்ந்தரம் ரெண்டுபேரும் என் ஆபிஸ் வந்துடுங்க, கீர்த்தி நான் அப்பா அம்மாகிட்ட நான் சொல்லிடேன் காலேஜ் முடிஞ்சதும் வந்திடு சரியா?"

" சரி"

"சரி" ரயில் வர ஏறியமர்ந்தனர்.ரயிலில் இன்று கூட்டம் அதிகமில்லை
முவருக்கும் அமர இடம் கிடைத்தது.உத்ரா ஜன்னலோரத்திலும் அவள் அருகில்
கீர்த்தியும், கீர்த்திக்கு நேரெதிராய் விக்கியும் அமர்ந்திருந்தனர்.
இருவரும் கண்ணோடு கண்பார்த்திருக்க இதை காணமல் கண்டுவிட்டு பார்வையை
ஜன்னலின் வெளியே திரும்பினாள் உத்ரா.சில்லேன்ற காற்று முகத்தை தழுவி
சென்றது.காலையில் தனக்கும் தன் தந்தைக்கும் நடந்த உரையாடலை
நினைவுகூர்ந்தாள்.

காலையில் குழம்பிய முகத்தோடு வந்தவளை எதிர்பார்திருந்தது போல்
தயாராயிருந்தார் மல்லிகார்ஜுன் இருவருமாய் நடக்க ஆரம்பித்தனர்.நிலவிய
அமைதியை கலைத்த மல்லிகார்ஜுன்

"என்னமா பிரச்சனை?"

சிறிது நேரம் மவுனம் காத்துவிட்டு பின் ரிஷி - விஜி விஷயத்தை முழுவதுமாய் உரைத்தாள்.

"நான் செஞ்சது சரியா பா?"

"சரிதான் . விஜி ரிஷிய லவ் பண்றது நல்லா தெரியுது , ரிஷி வந்து பேசினா விஜி சரியாகிட போறா அப்பறமென்ன? "

"இல்ல பா எனக்கென்னா அத்தையும் மாமாவும் இதுக்கு சம்மதிப்பாங்களா?னு தெரியாம நான் அவள காதலிக்க தூண்ட்டனே னு இருக்கு"

"அப்படியேல்லாம் நினைக்காத கண்ணன எனக்கு தெரியும் உங்க ப்ரண்ஷிப்
ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே கம்பனிங்கள்ள பார்த்திருக்கோம் பொண்னோட
விருப்பத்துக்கு தடை சொல்ல மாட்டாரு தவிர பையனும் நல்லவன் தானே?"

"நல்லவர் தான் பா அதுனால தான் நானும் அவங்கள மீட் பண்ண வைச்சேன்"

"இருந்தாலும் நான் எதுக்கும் விசாரிக்க சொல்லறேன், கண்ணன் கிட்டவும்
பேசறேன் சரியா? நீ மனச போட்டு குழப்பிகாத" இன்னும் அவள் முகம்
தெளிவடையாததை கண்டு

"இன்னும் வேற எதோ கூட இருக்கு போல என்னனு சொல்லு"

"என்னோட ஆபிஸ் ப்ரண்ட் ஒருத்தியோட தங்கச்சி அவளோட ப்ரண்ட் அ லவ்
பண்ணறாளாம், நல்லவனாம் ஆனா அப்பா-அம்மா சம்மதிப்பாங்களானு தெரியல இப்ப
என்ன பண்ணறது னு எங்கிட்ட கேட்டா பா"

"விக்கி னா எனக்கு சம்மதம்" விழிவிரித்து தன் தந்தையை பார்த்தாள்

"என்ன இவனுக்கு எப்படி தெரியும்னு பாக்கறீயா?"

"............."

"நானும் கீர்த்திய பார்த்துகிட்டு தானே இருக்கேன், அவ வயச கடந்து தான
வந்திருகேன் எனக்கு தெரியாதா? தவிர எங்களுக்கு தெரியாம உனக்கு அவளோட
அந்தரங்கள்ல சொல்லகூடிய அளவு deep friend யாரு இருக்க போறா அப்படி இருந்தா
நீ சொல்லிருப்பயே உன் தங்கச்சி விஷயத்தையே உன்னால மறைக்க முடியலயே,
அதவைச்சு தான் guess பண்ணேன் உன் கண்ணு கரக்டுனு சொல்லிடுச்சு"

தன் தந்தையின் புத்திகூர்மையை நினைத்து வியந்தவள்" அப்பா நான் பயந்துட்டேன் நீங்க என்ன சொல்லுவீங்களோனு"

"எதுக்கு பயம் நானும் உங்க அம்மாவும் காதலிச்சு தான் கல்யாணம்
பண்ணிகிட்டோம் எங்க பிள்ளைங்க காதலுக்கு மட்டும் தடை சொல்லிடுவோமா என்ன"

"Thanks you பா "

"இந்த thanks கீர்த்தி லவ்க்கு ஒகே சொன்னதுக்கா இல்ல உன் லவ் க்கும் ஒகே சொல்லுவேன் ங்கறதுனாலயா?"

"அப்பா...... எனக்கு அப்படி எண்ணம் இல்ல நீங்க யார சொல்லுறீங்களோ அவனுக்கு கழுத்த நீட்டிடுவேன்"

"அப்ப பாக்க ஆரம்பிச்சுட வேண்டியது தான்"

"அய்யோ அப்பா நான் இப்ப தான படிச்சு முடிச்சிருக்கேன் அதுகுள்ள எதுக்கு?"

"அதான் முடிச்சுடியே"

"கல்யாணத்துக்கு நான் இன்னும் mentally ரெடியாகல பா"

"சரி எப்ப ரெடி ஆவ?"

"அதெப்படி சொல்ல முடியும்"

"ஒன்னு செய்யலாம் இப்போ exam date fix பண்ணிடாங்கனு வை நீ உன் மனச அதுகாக
ரெடி பண்ணிகுவ இல்ல அதுமாதிரி நாங்க கல்யாண தேதி fix பண்ணறோம் அதுகாக நீ
உன் மனச ரெடி பண்ணிகோ சரியா?"

"ஆனா எப்படியும் convince பண்ணிடுவீங்க பா"

"அது தான எங்க வேல நல்லத convince பண்ணிகொடுக்கறதும் கெட்டத எப்படியாவது தடுக்கறதும் எங்க கடமை இல்ல யா"

பெருமையாக உணர்ந்தாள்.வீட்டிற்கு வந்து தன் தாயிடம் இதுபற்றி பேசினாள்
அவரும் இதற்கு சரியேன்று விட துள்ளாத குறையாய் சந்தோஷித்தாள் கூடவே
பெருமிதமும்

" I proud to be your child " என்றாள்

"நாங்க தான் பெரும படனும் எங்களுக்காக காதல மறைக்கறா ஒருத்தி, தங்கையோட
காதலகூட அப்பா அம்மாகிட்ட பகிர்ந்துகறா ஒருத்தி இப்படி ரெண்டு பிள்ளைங்கள்
பெற்றதுக்கு நாங்க தான் பெருமைபடனும் டா"என்று அணைத்து கொண்டனர்.

பாசம்தான் மனிதனை மனிதனாக இருக்க வைக்கிறது ஆனால் அது சில சமயங்களில் சிக்கலிலும் மாட்டிவிட்டுவிடுகிறது.இவர்களி

ன் பாசம் என்ன செய்ய போகிறது பார்போம்.
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Theanmozhi Mon Jan 09, 2012 12:41 pm


நான் என்பதே நீயல்லவா - 12






ன்
நினைவுகளிலிருந்து மீண்டவள் அவர்களிருவரும் இன்னும் அப்படியே இருப்பதை
பார்த்துவிட்டு இது வேலைக்காகாது(இந்த காதலிக்கறவங்க மட்டும் எப்படி தான்
இப்படி உலகத்தையே மறந்துட்டு இருக்காங்களோ) என்று நினைத்தவள் மெல்ல
விக்கியிடம் பேச்சு கொடுத்தாள்.

"விக்கி விஜி இன்னைக்கும் வரலயே உனக்கு இன்பார்ம் பண்ணாலா?"

"இல்ல எதுவும் சொல்ல டி, கூப்பிடவா?"

"ம் கூப்பிடேன்"

விக்கி அவளை செல்லில் அழைத்தான் சத்தம் பின் பக்கதிலிருந்து வர திரும்பினால் அங்கு விஜி அமர்ந்திருந்தாள்.அவளருகில் சென்ற உத்ரா

"ஏய் என்ன இது தனியா இங்க வந்து உக்காந்துட்ட?"

"இல்ல........ அது.......வந்து"

"என்ன டி இப்போ உடம்பு எப்படி இருக்கு?" என்றபடி தொட்டு பார்த்தாள்.அவளின் அக்கறை விஜியை என்னவோ செய்ய

"ம் சரியா போயிடுச்சு" என்றாள்.

"சரி வா அங்க போலாம்" அழைத்து சென்றாள்.

"சாரி டி அன்னைக்கு ............. எதோ கோவத்துல.........."

"விடு டி " அவள் காதில் ரகசியமாக

"இன்னைக்கு என் ஆபிஸ்க்கு வா டி உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு" என்றாள்.

"சரி"

விக்கி, கீர்த்தி, உத்தி முவரும் வளவளத்தபடி வந்தனர்.விஜி வாயே
திறக்கவில்லை உத்ரா இதை கவனித்தபோதும் இன்றோடு இதற்குமுடிவு வரபோகிறது,
இன்று ரிஷி இவளிடம் பேசிய பிறகு சரியாகிவிடுவாள் என்று அமைதியானாள். மாலை
ரிஷியையும் விஜியையும் சந்திக்கவைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
நினைத்ததெல்லாம் நடந்து விடுகிறதா என்ன?

விஜியின் மனநிலை வேறாக இருந்தது அவளது எண்ணம் ரிஷி உத்ராவை
காதலிக்கிறான்(லூசு லூசு). தன் தோழிக்கு தன்னால் எந்த வித இடையூறும்
வரகூடாது தனக்கு நிறைவேறாத காதல் தான் விரும்பியவனுக்காவது நிறைவேறட்டும்
என்று நினைத்தாள்(பெரிய தியாகினு நினைப்பு மனசுக்குள்ள).ரிஷியை மட்டும்
மறுபடியும் பார்க்ககூடாது என்று நினைத்திருந்தாள்.
நால்வரும் விடைபெற்று சென்றனர்.

அலுவலகத்தில் நுழைந்தவள் தன் காலை வேலைகளை முடித்துவிட்டு மணிபார்த்த போது
மதியமாகிருந்தது ரிஷியை தேடினாள் அவன் அலுவலகத்தில் இல்லையென்று
தெரிந்ததும் அவனது செல்லிற்கு அழைத்தாள். எடுத்தவன்

"சொல்லு உத்ரா"

"எங்கிருக்க ரிஷி?"

"பெங்களூர் ல"

"பெங்களூர் ல யா தீடிர்னு ஏன் அங்க போன?"

"அவசர வேலையாம் நம்ம ரமேஷ் attend பண்ணறதா இருந்தது அவனுக்கு தான் ஆக்சிடன்ட் ஆகி ஹாஸ்பிடல இருக்கானே அதான் வர வேண்டியதா போச்சு"

"ஒ ....... அப்படியா?"

"ஏன் என்னாச்சு?"

"இல்ல இன்னைக்கு உன்னையும் விஜியையும் மீட் பண்ண வைக்கலாம்னு நினைச்சேன்"

"அய்யோ போச்சா............. சரி சீக்கரம் வந்துடரேன் அவ எப்படி இருக்கா?"

"நல்லா இருக்கா பா கவல படாத"

"சரி சீக்கரம் வந்துடறேன்"

"சரி ..." இன்றோடு முடியும் என்று நினைத்தால் இப்படியாகிவிட்டதே என்று
நினைத்தபடி செல்லை அணைத்தாள் சரி சீக்கரம் சரியாகிவிடும் அதற்குள் நாம்
எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்துக்கொண்டாள்.வேலையில் கவனத்தை
திருப்பினாள்.அவளுக்கு என்னவென்றால் விஜி ரிஷியை காதலிக்கிறாளா என்று
உறுதிபடுத்தி ரிஷியிடம் சொல்லியாயிற்று இதற்கு மேல் காதலர்கள்
இருவரும்தான் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும், காதலர்களுக்கு இடையில் நாம்
செல்லகூடாது என்ற எண்ணம் அவளுக்கு.

மாலையில் விக்கி,கீர்த்தி,விஜி முவரும் உத்ராவின் அலுவலகத்துக்கு வர
நால்வருமாய் சேர்ந்து ஒரு restaurant ற்கு சென்றனர்.உத்ரா ஒரு பக்கம்
கீர்த்தியும் மறுபக்கம் விஜியையும் அமரவைத்துகொண்டாள்.விக்கி இவளுக்கு
நேர் எதிரில் அமர்ந்திருந்தான்.தங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர்
செய்துவிட்டு அன்றய தினத்தை பற்றி பேசிகொண்டிருந்தனர்.விஜி மன
தடுமாற்றத்திலிருந்தும் கவலையிலிருந்து அவளது முடிவின் விளைவால் சிறிது
தெளிந்திருந்தாள்.சிறிது தான் அதனால் முன் போல் இல்லாவிட்டாலும் சகஜமாகவே
பேசிகொண்டிருந்தாள். எப்படி ஆரம்பிப்பது என்று சிறிது யோசித்துவிட்டு பின்
மெல்ல விக்கியிடம்

"அப்பறம் எப்ப டா கல்யாணம் ?" என்றாள் உத்ரா

தீடீர் கேள்வியில் புரியாதவன் "யார் கல்யாணம்?" என்றான்.

"உன் கல்யாணம் தான் டா"

"அதுக்கு இப்ப என்ன அவசரம் ஒரு முனு வருஷம் போகடும்" கீர்த்தியை பார்த்தபடி

"அது வரைக்கும் இப்படியே நீயும் கீர்த்தியும் ஒருத்தரஒருத்தர் சைட் அடிச்சுகிட்டு இருக்க போறீங்களா?"

அவள் கேட்டதும் அங்கிருந்த முவருக்கும் அதிர்ச்சி கீர்த்திகோ பயமும்
அதிர்ச்சியும் கலந்து தோன்றியது அத்தோடு உத்ராவை பார்த்தாள்.உத்ராவின்
முகதில் என்ன இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.விஜி
தான் முதலில் தெளிந்து அவள் காதில்

"என்ன டி இது?"

"என்ன நடக்குதுனு பாரு" மெதுவாக சொல்லிவிட்டு , சத்தமாக " ரெண்டு பேரும் காதலிக்கறாங்க யாருக்கும் தெரியாம"

"உத்ரா ............... வந்து .......நீ ......... நினைக்கறமாதிரி .......இல்ல" என்றான் விக்கி

அதற்குள் கீர்த்தி அவசரமாக " அக்கா அப்படியெல்லாம் இல்ல .... கா ப்ளிஸ் கா" என்றாள்

"எப்படி இல்ல நீ விக்கிய காதலிக்கல...."கீர்த்தியிடம் கேட்டாள்.

கீர்த்தி விக்கியை பார்க்க அவன் என்னை ஏமாற்றிவிடாதே என்பது போல் கண்களால்
கெஞ்சினான். என்ன செய்வதென்று அறியாதவள் அமைதியாயிருந்தாள்.

"சொல்லு நீ இவன லவ் பண்றயா இல்லயா?" சற்று காட்டமாகவே கேட்க கீர்த்தி தலையாட்டிவிட்டு குனிந்துகொண்டாள்.

விக்கி அவளை காதலோடு பார்த்தான் பின் முடிவுக்குவந்தவனாய் உத்ராவின் கண்களை நேராய் பார்த்து

"உத்ரா இப்ப தான் அவ சொல்லுறா அவளும் என்ன லவ் பண்ணறானு, நானும் அவள
நேசிக்கறேன் உயிரா நேசிக்கறேன், இப்ப தான் நாங்க எங்க love அ
வெளிபடுத்தறோம், நீ நினைக்கற மாதிரி தெரியாம லவ் பண்ணறது எல்லாம்
கிடையாது." சிறிது இடைவெளி விட்டு பின் "ஆனா எனக்கு மனைவினா அது கீர்த்தி
மட்டும் தான் அதுவும் நீ, அத்த , மாமா சம்மதத்தோடுதான் அதுவரை நாங்க
காத்துகிட்டு இருப்போம்" என்று அழுத்ததோடும் உறுதியோடும் சொன்னான்
கீர்த்தியின் கண்களிலும் அதே உறுதி இருந்தது.
Theanmozhi
Theanmozhi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 26
Join date : 27/12/2011
Age : 32
Location : Tirupur

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 09, 2012 1:31 pm

பகிர்வுக்கு நன்றி தேன்மொழி தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நான் என்பதே நீயல்லவா Empty Re: நான் என்பதே நீயல்லவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum