தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 6:22 pm

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!


Enlarge this image
உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  1175594_525904377477335_1961130818_n

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி....

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

* ஞாபக சக்தியை தூண்டும்

* சரும பளபளப்பைக் கொடுக்கும்

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.

நன்றி ;செந்தில் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 10:43 pm

மருத்துவ டிப்ஸ்

* உலர் திராட்சையை தோசைக் கல்லில் வாட்டி, அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி சாப்பிட்டு வந்தால், வறட்டு இருமல் குணமாகும்.
******************************************
தினமும் சிறிது எலுமிச்சைச் சாறு அருந்தினால், அஜீரணக் கோளாறுகள் வராது. பல், எலும்பு இவைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
*******************************************

இஞ்சி, பசியை தூண்டும். உணவில் அவ்வப்போது இஞ்சியை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, ஞாபகசக்தியை வளர்க்கும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். இஞ்சியையும், வெல்லத்தையும் சம பாகமாக சேர்த்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும். அதுமட்டு மல்லாமல், உள்ளங்கையில், உள்ளங்காலில் தோல் உரிவதும் நின்று விடும்.

நன்றி: தினமலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 10:44 pm

வாய் நாற்றமுள்ளவர்கள், சிறிது கொத்தமல்லி தழையை தினமும் காலை, மாலை வேளையில் மென்று சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் அகன்று, வாய் மணக்கும்.
***********************************************
துளசி இலையும், நான்கைந்து மிளகும் சேர்த்து, வாயில் போட்டு, மென்று சாப்பிட்டால், தீராத ஒற்றை தலைவலி நீங்கும்
***********************************************
ஓமத்தை பொடி செய்து, தணலில் போட்டு, அதிலிருந்து வரும் புகையைப் பிடித்தால், ஜலதோஷம் குணமாகும்

நன்றி தினமலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 10:44 pm

கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.
*********************************
அகத்திக் கீரையை ஆய்ந்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அதை மூடி வைத்து விடவும். சிறிது நேரம் சென்றதும், கீரையை பிழிந்தெடுத்து, சாற்றை மட்டும் அருந்தி வந்தால், பித்தம் குறையும்.
**********************************
எழுமிச்சை சாற்றை, வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து, அதில், சிறிது உப்பு சேர்த்து குடித்தாலும், பித்தம் நீங்கும். பித்தத்தினால் வரக்கூடிய வாந்தியை நிறுத்த, எலுமிச்சைப் பழத்தை துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து, மென்று சாப்பிடவும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 10:44 pm

வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக்கி, வெந்நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும். ஆறாத வயிற்று புண்ணும் ஆறும்.
*********************************
*விக்கல் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தால், பிரண்டையைத் தணலில் வாட்டி எடுத்து, அதைப் பிழிந்து சாறு எடுக்கவும். அத்துடன் அரைத் தேக்கரண்டி தேனை விட்டு கலந்து சாப்பிட்டால், விக்கல் நின்று விடும்.

* விக்கல் நிற்க, ஒரு காகிதப் பையினுள் மூச்சை இழுத்து விடுங்கள்.

* சர்க்கரையை எடுத்து, சிறிது சிறிதாக வாயில் போட்டு சுவைத்தால் விக்கல் நிற்கும்.

* எலுமிச்சை சாற்றுடன், சிறிது சர்க்கரையை கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

* சிறிது தேனை தனியாக சாப்பிட்டாலும் விக்கல் நிற்கும்.

* கொத்தமல்லி விதையை கஷாயம் போட்டு, சிறிது உட்கொண்டாலும் விக்கல் நிற்கும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 10:44 pm

தொடர்ந்து இருமலால் பாதிக்கப் பட்டிருக்கிறீர்களா...தினம் ஒரு விளாம் பழம் சாப்பிட்டால் இருமல் போய்விடும்.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் புடலங்காயின் உட்பகுதியில் இருக்கும் விதை உட்பட அனைத்தையும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். இரத்த விருத்தி உண்டாகும்.

சாமந்திப் பூக்களை வாணலியில் போட்டு சூடாக்கி, துணியில் கட்டி, வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குணமாகும்.
****************************
ஆரஞ்சுப் பழத்தோலை அழுத்தினால் ஒருவிதச் சாறு கசியும். அதை ஓர் இறகினால் காதுகளில் தடவினால் தலைவலி குறையும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 10:45 pm

* மஞ்சள் தூளையும், தேனையும் கலந்து சேற்றுப் புண்ணில் தினமும் தடவினால் எளிதில் ஆறிவிடும்.

* தேங்காய், கடுக்காய், மஞ்சள் இந்த மூன்றையும் பட்டுப்போல் அரைத்துப் போட்டால், சிறியது முதல் பெரிதான சிரங்குகள் வரை முற்றிலும் நீங்கிவிடும்.
*************************
ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உருளைக் கிழங்கை அவித்து தோலுடன் சாப்பிட்டு வரவும். தினமும் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் துண்டுகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறாகச் சாப்பிடுவதைவிட இது எளிதாக இருக்கும்.

பீட்ரூட் சூப்பை இரவு படுக்கைக்குச் செல்லும்போது அருந்திவிட்டுப்படுத்தால் நாள்பட்ட மலச்சிக்கலும் அகலும். தலைவலி, பல்வலி என்றாலும் பீட்ரூட் சூப்பை பீட்ரூட்டுடன் சேர்த்தே அருந்தலாம்.

தொண்டைப்புண் ஏற்பட்டிருந்தால் மஞ்சள் பொடியை போட்டுக் கொதிக்க வைத்த நீரை வாயில் ஊற்றிக்கொண்டு, தொண்டையில் படும்படி சற்று நேரம் வைத்திருந்த பிறகு கொப்பளித்துவிடவும். சில வேளைகள் செய்தால் போதும். தொண்டைப்புண் பறந்தோடும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 10:45 pm

வாரம் ஒரு முறை பிரண்டையை சமையல் செய்து சாப்பிட்டால், தலையிலிருந்து கால்வரை உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகும். ஆரோக்கியம் உண்டாகும். அஜீரணம் வராது.
பாகல் இலையை கசக்கி, சொத்தைப் பல்லின் மீது வைத்தால், பல்வலி பறந்து விடும்.
வாரத்திற்கு இரண்டு விளாம்பழம் சாப்பிட்டால், கால்சியம் சத்து கிடைக்கும்.
பாசிப் பருப்பை வறுத்து, வேக வைத்து, பால் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டால், வயிற்றில் புண் வராமல் காக்கும்.
வாழைப்பூ சாறுடன், சிறிது பனங்கற்கண்டு சேர்த்தால், வெள்ளை நோய், வயிற்றுக் கடுப்பு, சீதபேதி குணமாகும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 10:45 pm

* ஆரஞ்சுப் பழச்சாறில் மிளகுத்தூள் மற்றும் தேன் கலந்து குடித்தால், இருமல், சளியில் இருந்து விடுபடலாம்.
* இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, அகத்திக்கீரையையும் அதன் பூவையும் சமைத்துச் சாப்பிட, கண் பார்வை தெளிவு பெறும்.
* கண்பார்வை தெளிவடைய, இரவில், துளசியை நீரில் ஊற வைத்து, காலையில் குடிக்க, கண்பார்வை தெளிவடையும்.
* நொச்சி இலையை நீரில் போட்டு, நன்றாக காய்ச்சி, அந்நீரில் குளித்து வர, வாதத்தினால் ஏற்படும் உடல்வலி நீங்கும்.

நன்றி: தினமலர் 
நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 10:54 pm

• வயது அதிகமாகும்போது மனிதர்களின் உடலில் குரோமியம் உப்பின் அளவு குறையும். இதை ஈடுகட்ட, பாதாம் பருப்பு சாப்பிட்டுவந்தால் சர்க்கரை எரிக்கப்படுவது தொடர்ந்து நடந்து நீரிழிவு நோய் குணமாகும். தடுக்கப்படும். ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

• மாவுச் சத்து குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு பாதாம் பருப்பு.

• பாதாம் பருப்பில் உள்ள லோனோலிக் அமிலம் ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

• பாதாம் பால் அனைத்து வயதினரின் மூளைத் திறனை அதிகரிக்கிறது. ஆறுமுதல் எழுபது வயதுக்காரர்களும் தினமும் ஐந்து, ஆறு பாதாம் பருப்புகளை நன்கு மென்று சாப்பிடும் பழக்கம் கொள்வது நல்லது.


நன்றி தினமணி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum