தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்தியா இளம் விஞ்ஞானிகள்

2 posters

Go down

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Empty இந்தியா இளம் விஞ்ஞானிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 08, 2013 6:04 pm

கொசுக்களின் பெருக்கத்தை இயற்கை முறையில் தடுக்கும், புது முறையை கண்டுபிடித்த 
பள்ளி மாணவன் காஸ்ட்ரோ சொல்கிறார் ;
 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Img_96444g


Last edited by கே இனியவன் on Sun Sep 08, 2013 6:16 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Empty Re: இந்தியா இளம் விஞ்ஞானிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 08, 2013 6:05 pm

நான், புதுச்சேரியை சேர்ந்தவன். பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலை பள்ளியில் 
பிளஸ் 1 படிக்கிறேன்.  மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பது, 
இன்றளவும் சவாலாகவே உள்ளது.


மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக அமைகிறது.  
இதனால் பள்ளங்களில் தேங்கி இருக்கும் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த,
 ஆசிரியர் மங்கையர்கரசி உதவியுடன் முயற்சித்தேன்.  செயற்கையான வேதியல் 
மருந்துகளை பயன் படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை தேடிய போது, 
சப்பாத்திகள்ளி உதவியது.

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Img_0973472726uiyel
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Empty Re: இந்தியா இளம் விஞ்ஞானிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 08, 2013 6:07 pm

கொசுவின் முட்டைகள், லார்வா, பியூபா, அடல்ட் என
 இந்த படிநிலைகளை தாண்டித்தான் கொசுக்களாக 
உருவம் பெருகின்றன. சப்பாத்திக் கள்ளியில் உள்ள 
முட்களை அகற்றி, மேல் தோலை நீக்கி, தண்டு 
பகுதியை நன்றாக அரைத்தேன்.  அதிலிருந்து, 
"மீயூசிலே ஐஸ்" என்னும் வழுவழுப்பான திரவம் கிடைத்தது.
 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Sappaththi_98736372
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Empty Re: இந்தியா இளம் விஞ்ஞானிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 08, 2013 6:08 pm

பின், நிறைய கொசு முட்டைகள் தேங்கியுள்ள நீரை, சோதனை குழாயில் நிரப்பி அதில் சப்பாத்திக் கள்ளியின் திரவத்தை கலந்தேன்.  கொசுவின் "லார்வா' " க்களுக்கு உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல், கலந்த இரண்டே நாட்களில் இறந்தன.  இச்சோதனையில் கொசுவின் கூட்டுப் புழுக்கள் முற்றிலும் அழிந்ததை நிரூபித்தேன்.

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் IMG_201308264
இது இயற்கை முறையிலானது என்பதால் தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணியிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கொசுக்களின் பெருக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.  புதுச்சேரி சயின்ஸ் போரமும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலை கழகமும்இணைந்து நடத்திய அறிவியலை  "மேக் சயின்ஸ்"  (அறிவியல் உருவாக்கம்) போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அதோடு 300 யூரோ  பரிசும் பெற்றேன்.

இளம் அறிவியல் விஞ்ஞானியாக ! உருவெடுக்கும் இவரை பாராட்டுவோம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Empty Re: இந்தியா இளம் விஞ்ஞானிகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 08, 2013 6:30 pm

கின்னஸ் சாதனை புரிந்த புதுவை இளைஞர்
 இந்தியா இளம் விஞ்ஞானிகள் News1
சாதனை புரிய முதலில் எங்காவது தொடங்கு என்பார்கள் இந்த இளைஞர் பென்சில் முனையில் இருந்து தொடங்கி உள்ளார். எந்த ஒரு சாதனையும் எளிதாக கிடைப்பதில்லை கடினமான முயற்சி தான் வெற்றியை கொடுக்கிறது. இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இவரைப்பற்றி இதோ தெரிந்து கொள்ளலாம்."
கின்னஸ் சாதனை படைத்த புதுவை அண்ணாமலையின் படத்தை இளைஞர் மலரில் (தேதி : 3.3.2012 ) அட்டையில் வெளியிட்டு பாராட்டியுள்ளது " தினத்தந்தி"

பேச்சு, மூச்செல்லாம் ஓவியம்...ஓவியம் என்றிருக்கிறார் அண்ணாமலை. அந்த அதீத மோகம்தான் இந்தக் கல்லூரி மாணவரை ' கின்னஸ் சாதனை' என்ற சிகரம் ஏற வைத்திருகிறது.

சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்சி. விஸ்காம் (காட்சித் தொடர்பியல்) முதலாமாண்டு பயிலும் அண்ணாமலையை அண்மையில் சந்தித்தோம். தூரிகை போலவே ஒல்லியாக இருந்த அந்த இளங்கலைஞர் பேசினார்...

சின்னவயதில் சுவற்றில் கரி கொண்டு கிறுக்குவதில் தொடங்கியது எனது கலை ஆர்வம். படிப்பையும் தான்டி எனது ஓவிய விருப்பம் இருந்தது. எனவே வீட்டில் இருந்து படித்தால் சரிவராது என்று புதுவையில் உள்ள ஆச்சாரியா சிக்‌ஷா மந்திர் பள்ளிக்கு எனது பெற்றோர் அனுப்பினர். அப்போது பிறர் குறைசொல்லாத அளவுக்குப் படித்த நான், ஓவிய ஆர்வத்தையும் விட்டு விடவில்லை.

முதல் வெற்றி : 6ம் வகுப்பில் படிக்கும் போது பிரபல தொலைக்காட்சி ஒன்று மாநில அளவில் நடத்திய காந்தியடிகள் ஓவியப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. பெற்றோர் உள்ளிட்ட பிறரும் எனது ஓவிய ஆர்வத்தை அங்கீகரித்தது அப்போதுதான்.

ஆசிரியர் வழிகாட்டுதல் : 8ம் வகுப்பில் படிக்கும் போது ஓவிய ஆசிரியர் முத்துகுமரன் எனது ஓவிய தாகத்தை ஊக்குவிப்பவராகவும், வழிகாட்டியாகவும் வந்து அமைந்தார். பள்ளி நேரம் முடிந்ததும் அவரிடம் சென்று முனைப்போடு கற்றுக்கொண்டேன். எனது ஆர்வத்தை செதுக்கி சீர்திருத்தி தொழில் நுட்ப ரீதியாக மேம்படுதியவர்கள் அவரைத்தவிர செந்தில்குமரன், அச்சுதன், செல்வகுமார் போன்ற ஓவிய ஆசிரியர்கள்.

கவனிக்க வைத்த வெற்றிகள் : 10ம் வகுப்பில் புதுவை அரசு சார்பில் நடத்தப்பட்ட 'பிளாஸ்டிக்கை தவிர்போம்' என்ற கருத்தின் அடிப்படையிலான போஸ்டர் உருவாக்கும் போட்டியில் புதுவை அளவில் முதலிடத்தையும், மண்டல அளவில் இரண்டாம் இடமும் பெற்றது.

கின்னஸ் போட்டியில் முயற்சி மற்றும் வெற்றி : ஆச்சார்யா சிக்‌ஷா மந்திர் (நிர்வாக இயக்குநர் அரவிந்த், முதல்வர். மணி விஜயராகவன்) சார்பில் கின்னஸ் சாதனை முயற்சி மேற்க்கொள்ள திட்டமிடப்பட்டது. அதற்குரிய தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நீளமான கார்டூன் தொடர் என்ற பிரிவில் சாதனை புரிய முடிவெடுக்கப்பட்டது.

இச்சாதனைக்கான நிபந்தனைகள் 40 மீட்டர் தாளில் 4 நாட்களுக்குள் வரைந்து முடிக்க வேண்டும். இருகையில் அமர்ந்த படியே வரைய வேண்டும். அப்படி இப்படி அசையக்கூடாது பிறருடன் பேசக்கூடாது, வேகம், நேர்த்தியுடன், ஸ்ட்ரோக் மாறக் கூடாது, 3 மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிட இடைவேளை எடுத்துக்கொள்ளலாம் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள்.

அனைவரது பாராட்டு மற்றும் உபச்சாரம் என்னை பெருமையில் மிதக்க வைத்தாலும் பொறுப்புச் சுமையும் உணர்ந்தேன். எனக்கு ஒருமாத கால விடுப்பு கொடுத்தார்கள் அப்போது உணவுக் கட்டுப்பாடு, கார்ட்டூன் பயிற்சி, பிசியோதெரபி என சவாலுக்குத் தயார்படுத்திக் கொண்டேன்.

குறிப்பிட்ட நாளன்று காலை 5 மணிக்கு சாதனைப்பயணம் தொடங்கியது.
பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள், நிர்வாகிகள், மாணவர்களும் திரண்டு நின்று வாழ்த்த தொடர்ச்சியான தாளில் கார்ட்டூன் கதைகளை பென்சில் கொண்டு தீட்டினேன். டுவிங்கிள் ஸ்டார் என்ற தலைப்பில் 10 கதைகளை தொடராக வரைந்தேன். ஒவ்வொரு கதையும் முடிவில் ஒரு நீதியைக் கொண்டிருக்கும். சும்மா கிறுக்கித்தள்ளவோ, நிறைய இடம் விடவொ முடியாது. ஸ்ட்ரோக் ஓரே மாதிரியாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட வி.ஐ.பி கள் வந்து வாழ்த்தினர். முன்னால் கின்னஸ் சாதனையாளர் பிரதீப்குமார் கின்னஸ் நிறுவனம் சார்பில் பார்வையாளராக வந்திருந்தார். 5 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே ஓய்வு எடுத்துக்கொண்டேன். பழச்சாறு மட்டும் அருந்தினேன்.

நேரம் செல்ல செல்ல கைவிரல்கள், மூட்டு, தோள்பட்டை எல்லாம் வலி பின்னியெடுக்க அரம்பித்தது. இருந்தாலும் எந்திர வேகத்தில், ஆனால் தரம் குறையாமல் வரைந்து கொண்டிருந்தேன்.
இரவு 11 மணி வரை வரைந்த நான், மறுநாள் 4 மணிக்கு எழுந்து பென்சில் பிடித்தேன். நேரம் செல்ல செல்ல என்னால் தாக்குப்பிடிக்க ரொம்ப கடினமாக இருந்தது. ஏ.சி அரங்கம் என்பதால் ஜலதோசமும் அவஸ்தைப்படுத்தியது. எனவே முயற்சியை முடித்துக்கொள்ளும்படி அனைவரும் கூற நான் முற்றும் போட்டேன்.

கின்னஸின் வரையறையையும் தாண்டி ஒன்றரை நாளில் 163. 17 மீட்டர் தூரத்திற்கு கார்ட்டூன் தீட்டிவிட்டேன். கின்னஸ் சான்றிதழைப் பெற்ற போது நான் பட்ட கஷ்டம் வலி எல்லாம் பறந்து விட்டது.
அடுத்த இலக்கு : விஸ்காம் படிப்பை முடித்து விட்டு திரைப்பட கலை இயக்கத்தில் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன். எனக்கு பிடித்த திரைப்பட கலை இயக்குநர் சாபு சிரில்.

எந்த விதமான ஓவியங்கள் பிடிக்கும் : கார்ட்டூன் தவிர காரிகேச்சர், உருவப்படங்கள் வரைதல், ரியலிச பாணி ஓவியங்கள், நிலப்பரப்பு ஓவியங்கள் எனக்கு இஷ்டமானவை. தடகளத்தில் மாநில அளவில் பல வெற்றிகளை பெற்றிருக்கிறேன்.

குடும்பம் குறித்து : நாவண்ணன் தனியார் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர். அம்மா விஜயலட்சுமி, தங்கை ராதிகா.

ஓவியம் இல்லாத வாழ்வை என்னால் கற்பனை செய்ய முடியாது. ஓவியமே என்னை உலகுக்கு காட்டியது.

" மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துவோம் "

நான்றி இனியவை கூறல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Empty Re: இந்தியா இளம் விஞ்ஞானிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 6:56 pm

நம்ம ஊர் இளம் விஞ்ஞானிகள்


 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Fc_aniபுயல் காற்றிலோ அல்லது விபத்திலோ எதிர்பாராமல் அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை நிறுத்தும் தானியங்கிக் கருவியை உருவாக்கியுள்ளனர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள VRS பொறியியல் கல்லூரி  மாணவர்கள் ஹரிஷங்கர், மணிவண்ணன் மற்றும் தீனதயாளன் ஆகியோர். 


எதிர்பாராமல் மின்கம்பி அறுந்து விழும்போது, உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன.  இதற்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கிலே நாங்கள் இக்கருவியை உருவாக்கியுள்ளோம்" என்கிறார் தீனதயாளன்.


டிரான்ஸ்பார்மரில் மைக்ரோ கண்ட்ரோலரை பொருத்தியுள்ளோம். அதற்கு உதவும் நோக்கில், ட்ரான்ஸ்பார்மரிலிருந்து செல்லும் ஒவ்வொரு மின் கம்பியிலும் சென்சார்களை இணைத்துள்ளோம். இதன் மூலம் மின்கம்பிகளில் ஏதேனும் பழுது/அறுபட்ட நிலையிலிருந்தால் உடனடியாக சென்சார்கள் மூலம் கண்டறியப்பட்டு மைக்ரோ கண்ட்ரோலருக்கு தகவலை அனுப்பும். அதன் பின் மைக்ரோ கண்ட்ரோலர் தானாக செயல்பட்டு அதன் கட்டுப்பாட்டிலுள்ள  ரிலே சுவிட்ச்சை அணைத்து விடும். இதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு இடையே பாயும் மின்சாரம் தானாக நிறுத்தப்படுகிறது. எப்படி தெரு விளக்குகள் தானாக ஒளிர்ந்து மீண்டும் அணைகின்றதோ அதே போல்தான் இக்கருவியும் செயல்படுகிறது. மேலும் மைக்ரோ கண்ட்ரோலர் செயல்பட வெறும் 3.3 வோல்ட்ஸ் மின்சாரம் மட்டுமே தேவை"  என்கிறார் மற்றொரு மாணவர் மணிவண்ணன்.

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் 221c665628
ஹரிஷங்கர் கூறும்போது, அனைத்து நேரங்களிலும் இக்கருவி தானாகச் செயல்படும் தன்மை  உடையது.  மைக்ரோ கண்ட்ரோலருடன்  GSM மோடமும் பொருத்தியுள்ளதால் மின்கம்பி அறுபட்டுள்ளதை உடனடியாக சம்பந்தப்பட்ட லைன்மேனுக்கும் மற்ற உயர் அதிகாரிகளின் மொபைல் போனுக்கும் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து குறுந்தகவல் அனுப்பிவிடும்.  எங்கள் கருவியை டிரான்ஸ்பார்மரில் பொருத்த சுமார் 60,000 ரூபாய் வரை செலவு ஆகிறது. தற்போது மாதிரிக் கருவியை உருவாக்கியுள்ள எங்களுக்கு அரசு உதவினால் இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பெரும் விபத்துக்களைத் தவிர்க்கலாம்" என்கிறார்.   


தொடர்புக்கு : 96590 95472  

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Empty Re: இந்தியா இளம் விஞ்ஞானிகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 7:04 pm

குஜராத்திடம் இருந்து தமிழ்நாட்டு கிராமம் கற்றுக்கொண்ட பாடம்

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Sa
ந்து நிமிடம் மின்சாரம் தடைபட்டாலும் வியர்த்து ஒழுகிப் பொங்கியெழுகிறோம். ஆனால், ஒரு கிராம மக்கள் இந்த தொழில்நுட்ப யுகத்திலும் மின்சார வசதியின்றி இருட்டுக்குள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர்களது வாழ்வில் வெளிச்சம் பிறந்திருக்கிறது சூரிய சக்தி மின்சாரம் மூலம். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ளது சிற்றருவிப்பட்டி என்னும் கிராமம். 25 குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 150 ஆகும்.  சிற்றருவிப்பட்டி தோன்றி பல வருடங்கள் ஆனாலும்கூட இங்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை. இரவுகளில் சிம்னி விளக்கோடும் இரவு நேர பூச்சி, பொட்டுகளோடும் போராடிக் கொண்டிருந்தனர் மக்கள். அரசிடம் மின்சாரம் கேட்டு விண்ணப்பித்தபோதும் இந்தக் கிராமம் கண்டு கொள்ளப்படவில்லை. மின்சாரத்துக்கு விண்ணப்பம் போட்டு அலையாய் அலைந்து ஓய்ந்து போன நிலையில், இவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளது சூரிய சக்தி.  

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு, ஒருமுறை கேரளாவிற்குச் சென்றிருந்தபோது,  சோலார் மூலம் எரியும் விளக்கைப் பார்த்திருக்கிறார்.  மின்சாரம் இல்லாமல் சூரிய  சக்தியில் அந்த விளக்கு எரிவதாக அங்கு கூறியபோது, அய்யாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.  உடனே அவர்களிடம் அதுபற்றி ஆர்வத்துடன் விசாரித்திருக்கிறார்.  அவர்கள் அதன் விலை அதிகம் என்று கூறியுள்ளனர். என்றாலும் பழுதடைந்த ஒரு சோலார் பேனலை அய்யாவுவிடம் கொடுத்திருக்கிறார்கள்.
 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Wee

அந்த சோலார் பேனலை ஊருக்கு எடுத்து வந்த அய்யாவு, அதனைக்கொஞ்சம் சரிசெய்து செல்போன் சார்ஜ் போட பயன்படுத்தியுள்ளார், பின்னர் ரேடியோ, வாட்ஸ் குறைவான பல்பு போன்றவற்றுக்கு சோலார் சக்தியைப் பயன்படுத்தத் தொடங்கினார். இவையெல்லாம் சோதனையாக அவர் மேற்கொண்ட முயற்சிகள். அந்த முயற்சிகள் பயனளித்தால், மலிவான சோலார் பேனல்கள் தமிழகத்தில் எங்கு கிடைக்கும் என்ற தேடலில் இறங்கி உள்ளார் அய்யாவு. இறுதியாக தெய்வம் போல் வந்து உதவிக்கரம் நீட்டியது நபார்டு வங்கி. கிராமத்து மக்கள் வீடுகளில் சோலர் பேனல் அமைத்துக் கொள்ள, 40 சதவிகிதம் மானியம் வழங்கியது நபார்டு வங்கி. இதுதவிர 50 சதவிகிதம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  (அ.வல்லாளப்பட்டி கிளை) கடனாக வழங்கியது.  மீதமுள்ள 10 சதவிகிதத் தொகையை கிராம மக்கள் தங்கள் பங்காக அளித்துள்ளனர். இடைவிடாத  மக்களின்  முயற்சியினால் இந்தக் கிராமம்  இன்று சோலார் சக்தியால் மின்னுகிறது.

கிராமத்துக்கு சோலார் சக்தி வர ஆரம்பத்திலிருந்தே முயன்று கொண்டிருந்த அய்யாவு கூறியதாவது, பல கம்பெனிகளிடம் இந்த சோலார் லைட்டுக்காக  மானியம்  கேட்டும் ஒன்றும் நடக்கவில்லை. இவ்வூர் நீர்வடிப் பகுதி என்பதால் நபார்டு ஊழியர்கள் அடிக்கடி இங்கு வந்து செல்வார்கள். அதனால் அவர்கள் எங்கள் சிரமங்களை அறிந்து எங்களுக்கு உதவ முன்வந்தனர்.   
 இந்தியா இளம் விஞ்ஞானிகள் S
இவ்வூரில் வாழை, நெல், மாங்காய்  போன்ற விளைபொருட்கள் நன்முறையில் விளைந்தாலும், அதனை சந்தைக்குக் கொண்டுசெல்ல சரியான சாலை வசதி இங்கில்லை. அதனால் மக்களே ஒன்று சேர்ந்து,  ஒன்றரை கிலோ மீட்டர்வரை கரடு முரடாக இருந்த பாதையை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தி உள்ளனர். அரசாங்கம் எங்களுக்குப் போதிய வசதி செய்து தந்தால் மக்கள் நிம்மதியாக இருப்பாங்க..." என்கிறார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறியதாவது, எங்கள் வாழ்கை  இருட்டிலே முடிந்து விடும் என்று நினைத்த நேரத்தில், ஒளியாக வந்ததுதான் இந்த சோலார் பேனல். இதன் மூலம் 3 லைட்டுகள் மற்றும் 1 காற்றாடி (மின்விசிறி) ஒரே நேரத்தில் பயன்ப்படுத்திக் கொள்ளலாம். வங்கிக் கடனாக மாதம் 510 ரூபாய் திருப்பிச் செலுத்தி வருகிறோம்...." என்கிறார்.
 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Index

பள்ளி மாணவி சிவரஞ்சனி கூறியதாவது, பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டுத் திரும்பி வர சாயந்திரம் 6 மணி ஆயிரும். அதுக்கு அப்புறம்தான் படிக்கணும். முன்னாடி எல்லாம் லைட் இல்லாம படிக்க  ரொம்பக் கஷ்டமா இருக்கும். இப்ப இந்த சோலார் லைட் இருக்கிறதால  நன்றாகப் படிக்க முடிகிறது..." என்கிறாள் சந்தோஷமாக.



நன்றி மேல் உள்ள தளம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Empty Re: இந்தியா இளம் விஞ்ஞானிகள்

Post by Muthumohamed Tue Sep 10, 2013 1:33 am

நல்ல பதிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

 இந்தியா இளம் விஞ்ஞானிகள் Empty Re: இந்தியா இளம் விஞ்ஞானிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum