தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மழைக்கால நோய்கள்

2 posters

Go down

மழைக்கால நோய்கள்  Empty மழைக்கால நோய்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 10:45 am

பருவ மழையை எதிர்கொள்ள குடை, ரெயின்கோட் மட்டுமே நம் பாதுகாப்புக் கவசங்களாக நினைக்கிறோம். ஆனால், மழை கொண்டுவரப்போகும் எண்ணிலடங்கா வியாதிகளிடமிருந்து நம்மை எப்படிக் காப்பது? 

பொதுநல சிறப்பு மருத்துவரும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான ஜி.சதீஷ்குமார், மழைக் கால நோய்களில் இருந்து மீள்வதற்கான வழிகளை விவரிக்கிறார்...

'பருவ காலங்கள் எதுவானாலும் வியாதிகளைப் பரப்புவதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாரசைட் போன்றவைதான் பிரதானம். அதிலும் மழைக் காலத்தில், சாதாரண சளியில் தொடங்கி, மூக்கடைப்பு, இருமல், காய்ச்சல் எனப் பல்வேறு நோய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றித் தாக்கலாம். இந்த உபாதைகளைத் தவிர்க்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் கவனம் வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு குறையும்போதுதான், தொற்றுக் கிருமிகளுக்கு நம் உடல் வரவேற்பு சொல்லும்.

மழைக் காலத்தில் உரிய வடிகால்கள் அமையாவிட்டாலோ அல்லது அவை அடைத்துக்கொண்டாலோ, உருவாகும் குட்டி நீர்த்தேக்கங்கள்தான் கொசுப் பட்டாளத்துக்கு கெஸ்ட் ஹவுஸ். அசுத்த நீர் மட்டுமா... குடிநீர், மழைநீர் போன்ற தூய்மையான நீர்ப்பரப்பும்கூட மலேரியா, டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களுக்கு அடைக்கலம் தந்துவிடும். எனவே, வீட்டுக்குள்ளும், வெளியேயும் நீர் தேங்காதவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். 

>> வாட்டர் டேங்கிலும்கூட கொசு ஊடுருவும் இடைவெளிகளைப் பார்த்து அடைத்துவிடுவது நல்லது. கூடுதல் உபயோகத்துக்கு அதிகப்படியாக குடிநீர் பிடித்துவைத்திருக்கும் பாத்திரங்களையும்கூட, தூய்மையான துணியால் வேடு கட்டி, அதன் மேல் வழக்கமான மூடிகளைக்கொண்டு மூடலாம்.

>> மழை நீர் பெருக்கத்தில், குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்துவிடுவது சாதாரணமாக நடக்கும். அதை உத்தேசித்து, வீட்டைச் சுற்றி அசுத்தம் அதிகமாகும் நாட்களில் ப்ளீச்சிங் பவுடரை உபயோகிக்கலாம்.

>> மழை சீஸனில் மிகவும் சாதாரணமானது, ஃப்ளூ காய்ச்சல். மூன்று முதல் ஐந்து தினங்கள் மட்டுமே அதன் பாதிப்பு இருக்கும். ஆனால், வந்திருப்பது சாதாரண காய்ச்சலா அல்லது மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற விபரீதக் காய்ச்சலா என்று உணர முடியாதபட்சத்தில், காய்ச்சல் வந்ததும் அவசரத்துக்கு கைவசமிருக்கும் 'பாராசிட்டமால்’ மாத்திரைகளைப் பயன்படுத்திக்கொள்தல் தவறில்லை. இரண்டாவது நாளும் அதன் வீரியம் குறையாதுபோனால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

>> வீட்டுக்குள்ளே துணி மூட்டைகள் மற்றும் சுத்தமில்லாத இடங்களில், கொசுக்கள் அதிகம் அடைக்கலமாகும். திரைச்சீலைகள் அலங்கார விரிப்புகளையும்கூட மழைக் காலத்துக்கான கூடுதல் கவனிப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

>> குழந்தை முதல் பெரியவர் வரை கொசுத் தொந்தரவு இல்லாத உறக்கத்துக்கு கொசுவலைதான் பெஸ்ட். பிற்காலத்திய மூச்சு தொடர்பான பக்கவிளைவுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள் புகை, லிக்யூட், மேட் என ரகம் ரகமான கொசு விரட்டிகள் பயன்படுத்தும் விஷயத்தில் கூடுதல் கவனம் வேண்டும்'' என்று பாதுகாப்பு டிப்ஸ்களை வழங்கிய டாக்டர் சதீஷ்குமார், வைரஸ் கிருமிகளைப் பற்றி விரிவாகச் சொன்னார்.

''பொதுவாக, வைரஸ் காய்ச்சல்களில் சாதாரண ஃப்ளூவில் தொடங்கி பன்றிக்காய்ச்சல் வரை சுமார் 21 ரகங்கள் அடையாளம் காணப்படுகின்றன. இதில், உடலின் உள் அவயங்களில் ரத்தப்போக்கை உண்டாக்கும் டெங்கு மற்றும் ஆப்பிரிக்க இறக்குமதியான யெல்லோ ஃபீவர் போன்ற விபரீதக் காய்ச்சல்களும் அடக்கம்.

சென்ற வருட அனுபவத்தின் அடிப்படையில், இந்த மழை சீஸனில் நாம் அதிகம் எதிர்த்துப் போரிட வேண்டியது டெங்கு கொசுவாகத்தான் இருக்கும்.

டெங்குவை வரவழைக்கும் 'ஏடிஸ் எஜிப்டி’ பெண் கொசுக்கள் கடிப்பதால், நமது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழகம், கேரள மாநிலங்களை அதிகம் பாதித்த சிக்குன்குன்யாவும் வைரஸ் காய்ச்சல்தான். வைரஸ் போலவே பாரசைட் தொற்று உண்ணிகள் பரப்பும் காய்ச்சலான மலேரியா, எல்லா சீஸனிலும் வரும். ஆனால், இவை மழைக் காலத்தில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும். 

இந்த பாரசைட்டின் மற்றொரு முகம் யானைக்கால் வியாதி. இவை தவிர, பாக்டீரியா காய்ச்சலான டைபாய்டு மழை சீஸனில் சூடு பிடிக்கும். ஐந்து நாட்களைத் தாண்டியும் காய்ச்சல் தொடர்ந்தால், ரத்தப் பரிசோதனை மூலம் டைபாய்டை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.'' என்ற டாக்டர் சதீஷ், கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை அலசினார்.

>> மழைக் காலத்தில் இயல்பாகவே உடலின் ஜீரண சக்தி குறைந்துவிடுவதால், அதிகம் காரம், எண்ணெய், மசாலா கலந்த உணவுகளை ஒதுக்கிவிடலாம்.

>> வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம். சுகாதாரமற்ற சூழலால் ஏற்படும் வாந்தி பேதியை இது தவிர்க்கும்.

>> உடல்நலக் குறைவானவர்களுக்கு இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த எளிமையான உணவுகளே உகந்தது.

>> குளிர் காலத்தில் நாம் வழக்கமாக அருந்தும் காபி, டீக்கு மாற்றாக, காய்கறி சூப் அருந்தலாம். சமையலுக்கு, கொதித்து ஆறியதை வடிகட்டி உபயோகிப்பதே உசிதமானது.

>> மழையில், பலரும் தலைக்குக் குளிப்பதைத் தவிர்த்துவிடுவது உண்டு. இதனால், தலையில் தொற்றுகள் அதிகமாகும். தலைக்குக் குளித்ததும், கேசத்தை நன்றாக உலர்த்த வேண்டும். சைனஸ், தலைப்பாரம், ஒற்றைத் தலைவலிப் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

>> சுற்றுப்புறத்தில் எலி நடமாட்டம் இருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்திவிடவேண்டும்.

>> குழந்தைகளை தேங்கிக்கிடக்கும் நீரில் விளையாடவிடுவது தவறு.

>> உலராத உடைகளை அணிவது, நனைந்த உள்ளாடைகளை மாற்றாமல் இருப்பது போன்றவை பூஞ்சைத் தொற்றுக்கு வரவேற்பு சொல்லும்.

>> வெளியே சென்றுவிட்டு வந்ததும், பாதங்களை தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். 

>> குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் என்றபோதிலும், ஓய்வுடன் கூடிய விடுமுறை அனைவருக்கும் நல்லது.

தூய்மை மற்றும் சுகாதாரம் பேணுவதை நம்மிடம் இருந்து துவக்கி, அந்த வட்டத்தை முடிந்தவரை விரிவுபடுத்துவதை மறக்க வேண்டாம்' என்று முத்தாய்ப்போடு முடித்தார் சதீஷ்குமார்.

நன்றி: டாக்டர் விகடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

மழைக்கால நோய்கள்  Empty Re: மழைக்கால நோய்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 21, 2013 11:28 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி தொடரட்டும் உங்களின் வளமையான பங்களிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum