தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

2 posters

Go down

ஜெயிப்பது நிஜம் !  நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங்  இளங்கோ !  ( பார்வையற்றவர் )  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Apr 18, 2014 6:17 pm

ஜெயிப்பது நிஜம் !

நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங்  இளங்கோ !  md@acea2z.com

( பார்வையற்றவர் )

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கிழக்கு பதிப்பகம் 177/103, முதல் தளம் 
அம்பாள் கட்டிடம் ,லாயட்ஷ்சாலை ,ராயப்பேட்டை , சென்னை .6000014. விலை ரூபாய் 100.

இந்த நூலில் 17 கட்டுரைகள் உள்ளன.படிக்கும் வாசகர் மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் நூல் .நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங்  இளங்கோ அவர்கள் புறப்  பார்வையற்ற மாற்றுத் திறனாளி  அல்ல அவரது மொழியில் சிறப்புத் திறனாளி  ஆனால் அவருக்கு அகப் பார்வை ஆயிரம் உள்ளன என்பதை மெய்பிக்கும் நூல் இது . குறை ஒன்றும் இல்லை ,நூற்றுக்கு நூறு ,காலின் பலம், வானமே எல்லை, நினைத்தது நிறைவேறும் ,தட்டுங்கள் திறக்கப்படும் ,மனமிருந்தால் மார்க்கமுண்டு இப்படி கட்டுரைகளின் தலைப்புகளே  தன்னம்பிக்கை தரும் விதமாக , சிந்திக்க வைக்கும் விதமாக , நேர்மை சிந்தனை விதைக்கும் விதமாக ,  உடன்பாட்டு சிந்தனை வளர்க்கும் விதமாக  உள்ளன .பாராட்டுக்கள் .

.நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங்  இளங்கோ  பற்றி சில வரிகள் .ACE PANACEA SOFTSKILLS ( www.acea2z.com) என்ற நிறுவனத்தின்  மேலாண்மை  இயக்குனர் ,ஆங்கிலத்தில்  முனைவர் பட்டம் பெற்றவர்  ,பன்முகஆற்றல் மிக்கவர்  ,புகழ்பெற்ற பல விளம்பரங்களில் இவர் குரல் ஒலித்துள்ளது   ,சிறந்த பேச்சாளர்  ,பல்வேறு விருதுகள் பெற்றுளார் .நல்ல நடை அறிவுரை  போல இல்லாமலும் ,வாழ்க்கை வரலாறு போல இல்லாமலும் இயல்பான நடையில்  உள்ளது .படிக்க விறுவிறுப்பாக உள்ளது . தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது . 

ஆசிரியர் முன்னுரையில்  உள்ள அறிஞர் அண்ணா சொன்ன கருத்து சிந்திக்க  வைத்தது .

அறிஞர் சொன்ன மேற்கோள் , "பாருங்கள் உலகத்தில் எல்லா இடங்களிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் .மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் " .அப்படித்தான் வாழ்தல் வேறு ,இருத்தல் வேறு . 

 உலகில் ஒப்பற்ற உறவு அன்னை .அந்த அன்னை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார் .

 "என் வாழ்க்கையில் என்னைப் படிக்க வைத்து இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்  சமீபத்தில்  மறைந்த என் தாயார் .எனக்கு எப்போதும் எல்லா நிலையிலும் உறுதுணையாக இருந்தவர் .அவருடைய போராட்ட குணம்தான் எனக்கும் வாய்த்திருக்கிறது .அதற்க்கு அவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும் " .வரிகளைப் படிக்கும்போது வாசகர்களுக்கு அவரவர் அன்னை நினைவு வந்து விடும் . 

.கல்லூரியில் படித்த காலத்தில் ராபர்ட் என்ற மாணவனால் ராக்கிங் என்ற பெயரில்   அவமானப்படுத்தப்பட்டக்   காட்சி நெகிழ்ச்சி .நூல் ஆசிரியர் இளங்கோ  பிறந்ததில் இருந்து பார்வை இல்லாதவர் .அவரை  நீ அம்மாவை பார்த்து இருக்கிறாயா? அப்பாவை  பார்த்து இருக்கிறாயா? உன்னை   பார்த்து இருக்கிறாயா? சூரியன் ,சந்திரன் ,நட்சத்திரம் ,மலை ,அருவி ,நதி பார்த்து இருக்கிறாயா?  இப்படி கேள்விகளால் காயப் படுத்த , அமைதியாக இருந்து இளங்கோவிடம் பேசாம தற்கொலை செய்து சாகலாம் என்று எண்ணுகிறாயா ? என்றபோது அவனிடம் ,
 "உனக்கு நன்றி சொல்கிறேன் .இதுக்கு முன்னாடி இரண்டு மூன்று தடவை தற்கொலை எண்ணம் வந்தது .ஆனா ,உன்னைப் பார்த்ததும் ,இந்த நிமிடத்தில் இருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன் .நான் வாழ்ந்து காட்டுகிறேன் .உன்னை மாதிரி மிருகங்களே வாழும்  போது நான் ஏன் சாக வேண்டும் ." 
 
திட்டமிட்டே சிலர் அவமானப் படுத்துவார்கள் .அதற்காக நாம் உடைந்து விடக் கூடாது என்பதை நன்கு உணர்த்தி  உள்ளார் .
நூலில் உள்ளவற்றில் பதச் சோறாக இதைக் குறிப்பிட்டு உள்ளேன். நூல் முழுவதும் வாழ்தலின் அவசியத்தை சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தரும் நல்ல நூல் .
 
ஒவ்வொரு கட்டுரையின் முடிவுரை போல சில வரிகள் உள்ளன .சிந்துக்க வைக்கின்றன .

" ஒரு காரியத்தை உங்களால் செய்ய முடியாது என்று யாராவது சொன்னால் ,சொன்னவர்கள் மீது கோபப்படாமல் ,அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ? ஏன் நம்மால் முடியாது ? நம்மிடம் இருக்கும் பலவீனம் என்ன ? என்றெல்லாம் யோசித்து .. மைனசை   பிளசாக மாற்றுவதற்கு முயற்சி செய்தால் வாழ்க்கையே சுவாரஸ்யமாகி விடும் ."

இந்த நூல் படித்தபோது மதுரையில் புதூரில் அகவிழி பார்வையற்றோர் விடுதி நடத்தும் இனிய நண்பர் பார்வையற்ற மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் எம் .எ . அவர்கள் என் நினைவிற்கு வந்தார் . அவருக்கு பார்வை இருந்தது சிறு வயதில் காய்ச்சல் வந்து பார்வை பறிபோனது .பார்வை இழந்தோரின் துன்பம் உணர்ந்து துன்பம் போக்க விடுதி நடத்தி வருகிறார் .வருடா வருடம் ரத்த தானம் முகாம் நடத்தி வருகிறார் .கண் தான விழிப்புணர்வு   முகாம் நடத்தி வருகிறார் .மருத்துவ முகாம் நடத்தி வருகிறார் .இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் .பார்வையற்ற மாணவர்களுக்கு தொழில் பயிற்சியும் அளித்து வருகிறார் . 

உலகத்திலேயே மகிழ்ச்சியான மனிதன் நான் என்கிறார் நூல் ஆசிரியர் இளங்கோ .இந்த மன நிலையை ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும் .பிறந்ததில் இருந்து பார்வை இல்லாத ஒருவர் போராடி படித்து, ஆங்கில மொழி சரளமாக பேசக் கற்று , பல கலைகள் கற்று ,பாடல்கள் பாடி ,விளம்பரத்திற்கு குரல் கொடுத்து, பிறருக்கு தன்னம்பிக்கை தரும் பயிற்சி நிறுவனம் நடத்தி சாதித்து வரும்போது இந்தக் குறையும் இல்லாத மனிதன் மனக் குறையோடு காலம் கழிப்பது முறையா ? இப்படி பல கேள்விகளை வாசகர் மனதில் எழுப்பி நூல் வெற்றி பெறுகின்றது .பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை .பிறந்தோம் சாதித்தோம் என்று உணர்த்தும் நூல் இது .

சொல்வது யாராக இருந்தாலும் கேளுங்கள் சரி என்றால் எடுத்து கொள்ளுங்கள் .அது விடுத்து எல்லாம் நமக்கு தெரியும் என்ற எண்ணத்தில் இருக்காதீர்கள் என்று  உணர்த்தும் நூல் ..


சென்னை செல்லும்போது நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங்  இளங்கோ அவர்களை   சந்திக்க வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற உணர்வு வந்தது .அதுதான் படைப்பாளியின் வெற்றி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

ஜெயிப்பது நிஜம் !  நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங்  இளங்கோ !  ( பார்வையற்றவர் )  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 22, 2014 5:00 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஜெயிப்பது நிஜம் !  நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங்  இளங்கோ !  ( பார்வையற்றவர் )  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Aug 16, 2014 10:16 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

ஜெயிப்பது நிஜம் !  நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங்  இளங்கோ !  ( பார்வையற்றவர் )  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதல் வங்கி காதலிக்கச் சொல்லும் வள்ளுவர் நூல் ஆசிரியர் : கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum